பக்கங்கள்

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

அண்டை வீடு சண்டை வீடாகாமலிருக்க.

 

அண்டை வீடு சண்டை வீடாகாமலிருக்க

அன்றே அண்ணல் நபி நாயகம் ஸல் அவர்கள் நமக்கு

அறிவுறுத்திய  அழகிய 20 அறிவுரைகள்!

------------------------------------------------

01. அண்டை வீட்டார்

பொருளாதார உதவி நாடினால்,

அவருக்கு உதவிசெய்ய வேண்டும்.

 

02. அவர் ஆதரவை நாடினால்,

அவருக்கு துணை நிற்க வேண்டும்.

 

03. அவர் நோய்வாய்ப்பட்டால்,

நலம் விசாரிக்க வேண்டும்.

 

04. அவரது மகிழ்ச்சியான தருணங்களில்

அவருக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும்.

 

05. அவர் சோதனைக்குள்ளாகும்போது

அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும்.

 

06. அவரது தேவைகளை நிறைவேற்றுவதில்

உதவி ஒத்தாசை புரிய வேண்டும்.

 

07. எப்போதும் அவருக்கு முந்தி

ஸலாம் - முகமன் சொல்ல வேண்டும்.

 

08. வார்த்தைகளில்

நளினமாக பேச வேண்டும்.

 

09. அவரது குழந்தைகளிடம் பேசும்போது

அன்பை, இரக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்.

 

10. அவரது இம்மை மறுமை சார்ந்தவற்றில் எது அவருக்கு நல்லதோ அதன்பக்கம் அவருக்கு வழிகாட்ட வேண்டும்.

 

11. அவரைச் சுற்றியுள்ளவற்றை

கவனித்துப் பராமரித்துக் கொள்ள வேண்டும்.

 

12. உற்ற தோழனாய்

அவரைப் பாதுகாக்க வேண்டும்.

 

13. அவரது தவறுகளை

மறப்பது, மன்னிக்க வேண்டும்.

 

14. அவரது வீட்டுப் பெண்களை

தவறான எண்ணத்தில் பார்க்காமலிருக்க வேண்டும்.

 

15. கட்டிடம் மற்றும் நடைபாதையில்

அவருக்கு நெருக்கடி கொடுக்காமலிருக்க வேண்டும்.

 

16. மழைநீர் வெளியேறும் குழாயை

அவரது வீட்டின் மீது விழுவதுபோல வைத்து

அவருக்கு நோவினை தர கூடாது.

 

17. அழுக்குகளை, குப்பைகளை

அவரது வீட்டின் முன்பு போடாமலிருக்க வேண்டும்.

 

18. தனது வீட்டை, நிலத்தை விற்கும்போது அண்டை வீட்டார் வாங்க முன் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

 

19. அவ்வப்போது அன்பளிப்புகளை

பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

 

20. ஆணம் சால்னா காய்ச்சும் போது அதிகப்படியாக நீர் கலந்தாவது அண்டை வீட்டாருக்கும் கொடுத்தனுப்ப வேண்டும்.

----------------------------------------------------

தொகுப்பு : கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக