பக்கங்கள்

வியாழன், 15 பிப்ரவரி, 2024

அல்லாஹ்விடம் உனது நிலை என்ன..?

 



அருளாளன் அல்லாஹ் உம்மை வைத்திருக்கும் இடமே உமது நிலையாகும்.

அல்லாஹ்விடம் உனது மதிப்பு என்ன என்பதை அறிய விரும்பினால்
அவன் எந்த நிலையில் உன்னை வைத்திருக்கிறான் என்று கவனித்துப் பார்
தெரிந்து கொள்ளலாம்.

1)
திக்ரில் உன்னை அவன் ஈடுபடுத்தினால்

உன்னை நினைக்க அவன் விரும்புகிறான்
என விளங்கிக்கொள்.

2)
குர்ஆன் ஓதுவதில் உன்னை அவன் பிசியாக்கினால்

உன்னிடம் பேச அவன் ஆசைப்படுகிறான் எனப் புரிந்து கொள்.




3)
வணக்க வழிபாடுகளில் உனக்கு அவன் இன்பத்தை தந்து விட்டால்

அவன் உமக்கு அருகில் இருக்கிறான் என அறிந்து கொள்.

4)
வீண் கேளிக்கைகளில் உன்னை அவன் மூழ்க விட்டு விட்டால்

அவன் உம்மை தூரமாக்கி விட்டான் என
விளங்கிக்கொள்.

5)
ஜனங்களிடம் உமது தேவைகளை கேட்டுப் பெறும் நிலையை நீ அடைந்து விட்டால்

உம்மை அவன் இழிவுபடுத்துவதாக விளங்கிக்கொள்.


6)
துஆவில் உன்னை அவன் ஈடுபடுத்தினால்

அவன் உனக்குக் கொடுக்க நினைக்கிறான் என அறிந்து கொள்.


நீ எதில் பிசியாக இருக்கிறாய் என்பதைப் பொறுத்து
இறைவனிடம் உனக்கு என்ன மரியாதை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

உம்மை அவன் எந்த செயல்களில் ஈடுபடுத்துகிறானோ
அதுவே உமது நிலையாகும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக