பக்கங்கள்

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

துஆ ஏற்கப்படும் நேரங்கள்.

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு துஆ ஏற்கப்படும் நேரங்கள் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி கலந்த ஸலாத்தைக் கூறி எனது உரையை துவங்குகிறேன்.

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...

 

பிரார்த்தனை துஆ என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனாம் அல்லாஹ்வை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோடு நேரடியாக பேசும் சந்தர்ப்பத்தை அல்லாஹ் மனிதனுக்கு ஏற்ப்படுத்தி கொடுத்துள்ளான்.

பொதுவாக எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம். அதே நேரம் சில குறிப்பிட்ட இடங்கள், மற்றும் நேரங்களை நபியவர்கள் குறிப்பிட்டு இந்த நேரத்தில் உங்கள் ரப்பிடத்தில் கேளுங்கள் என்று நமக்கு வழிக் தந்துள்ளார்கள்.

அப்படி நபியவர்கள் குறிப்பிட்ட பல நேரங்களில் முக்கியமான நேரங்கள் எதுவென்றால்.

1. இரவின் நடுப்பகுதி

2. இரவில் கடைசி மூன்றாவது பகுதி

3. ஒவ்வொரு தொழுகையின் கடைசி நேரத்தில் (அதாவது அத்தஹியாத்தில் ஸலாம் கொடுப்பதற்கு முன்பு)

4. அதானுக்கும் பாங்கிற்கும் இகாமத்திற்கும் மத்தியில்

5. பர்ளான தொழுகைக்கு பாங்கு சொல்லப்படும் போது

6. மழை பொழியும் போது

7. உண்மையான (நம்பிக்கையான) எண்ணத்துடன் ஸம்ஸம் தண்ணீரைக் குடிக்கும் போது

8. (தொழுகையில்) ஸுஜூது செய்யும் போது

9. ஒரு முஸ்லிம் தன்னுடைய இன்னொரு முஸ்லிம் சகோதரருக்கு செய்யும் பிரார்த்தனை செய்யும் போது

10. அரஃபாவுடைய நாளில் செய்யும் பிரார்த்தனை செய்யும் போது

11. தந்தை பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் தந்தைக்கும் செய்யும் பிரார்த்தனை செய்யும் போது

12. பிரயாணி பயணியின் துஆ

13. பெற்றோருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பிள்ளையின் துஆ.

14. சிறிய ஜம்ராவிற்குக் கல் எறிந்த பிறகு கேட்கும் துஆ.

15. நடு ஜம்ராவிற்குக் கல் எறிந்த பிறகு கேட்கும் துஆ

16. கஃபாவிற்குள் கேட்கும் துஆ.

ஹிஜ்ருக்குள் (கஃபத்துல்லாஹ்வை ஒட்டி இருக்கும் அரைவட்ட வடிவத்திற்குள்) யார் தொழுகின்றாரோ அவர் கஃபாவிற்குள் தொழுதவரைப் போல் கணக்கிடப்படுவார்.

17. ஸஃபா மற்றும் மர்வா மலைகள் மீது கேட்கும் துஆ.

18. (முஸ்தலிஃபாவிலுள்ள) மஷ்அருள் ஹராம் என்னுமிடத்தில் கேட்கும் துஆ

19. நோன்பாளியின் துஆ.

20. நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ.

எனவே இப்படிப்பட்ட தருணங்களில் நாம் மறக்காமல் அல்லாஹ்விடம் துஆ செய்து அவனது அன்பையும் பொறுத்தம் பெற்ற நல்லோர்களில் ஒருவராக அல்லாஹ் நம் அனைவரையும் வாழச் செய்வானாக.

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் உங்கள் அனைவருக்கும் ஸலாத்தைக் கூறி விடை பெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக