அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
நஹ்மதுஹு வநுஸல்லி அலா
ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.
ஃபகத் காலல்லாலாஹு தஆலா
ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர்
ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
يَسْأَلُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ
நமது உயிரினும் கண்மணி
நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள்
அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது / எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா
நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து
கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும்
என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.
எனது பெயர்
.................................................
நான் இங்கு துஆவின் வலிமை.தலைப்பில்
பேச வந்திருக்கிறேன்.
அல்லாஹ்வின் நல்லடியாரகளே...
துஆ செய்வது என்பது ஒரு உலகலாவிய பழக்கம். உலகில்
வாழும் ஒவ்வொரு உயிரினமும் அல்லாஹ்விடம் துஆ கேட்கின்றன.
குர்ஆனில் சூரா ரஹ்மானில் அல்லாஹ்
கூறுகிறான்.
يَسْأَلُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ
"வானங்களிலும் பூமியிலும் வாழும் ஒவ்வொன்றும் அல்லாஹ்விடம் துஆ கேட்கின்றன அல்லாஹ்விடமே உதவி கேட்கின்றன அல்லாஹ்வை துதிக்கின்றன அல்லாஹ்விடமே தன் தேவைகளை கேட்கின்றன". என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வின் நல்லடியாரகளே...
இந்த முழு உலகத்தின் நடைமுறை என்னவென்றால் எல்லா
உயிரினங்களும் அல்லாஹ்வை புகழ் பாடுவது, இபாதத் செய்வது, தொழுவது, சஜ்தா
செய்வது என்று சில குர்ஆன் சொல்கிறாது.
பறவைகள் கூட தொழுகின்றன ஆனால் அந்த தொழுகை பற்றிய அறிவு
நமக்கு கிடையாது.
ஒரு அடியான் அல்லாஹ்விடம் துஆ கேட்கும் போது
அவனுடன் எல்லாமே சேர்ந்து விடுகின்றன.
துஆ செய்யாதவர்கள் துஆ செய்யும் வாய்ப்பு
கிடைக்காதவர்கள் ஒட்டுமொத்த உலகத்தை விட்டு தங்களை தனிமைப்படுத்தி கொள்கிறார்கள். அது
மட்டுமல்ல அவர்கள் தனிமை பட்டு போவார்கள்.
ஏனென்றால் துஆ என்பது இறைவனுக்கும் நமக்கும்
இடையில் ஏற்படும் ஒரு தொடர்பாகும்.
குர்ஆனில் முன்னோர்களின் வரலாற்றை அல்லாஹ் கூறும்
போது.
هُوَ الَّذِي يُسَيِّرُكُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ ۖ حَتَّىٰ إِذَا كُنْتُمْ فِي الْفُلْكِ وَجَرَيْنَ بِهِمْ بِرِيحٍ طَيِّبَةٍ وَفَرِحُوا بِهَا جَاءَتْهَا رِيحٌ عَاصِفٌ وَجَاءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَظَنُّوا أَنَّهُمْ أُحِيطَ بِهِمْ ۙ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ لَئِنْ أَنْجَيْتَنَا مِنْ هَٰذِهِ لَنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ
"நடு கடலில் புயல் காற்று வீசும் போது தத்தளிக்கும் மக்கள் என்ன செய்தார்கள்
அல்லாஹ்வை தான் அழைத்தார்கள்".
என்பதாக சூரா யூனுஸ்.22-23. ஆயத்தில் அல்லாஹ்
கூறுகிறான்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே...
சமீபத்தில் எதொப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில்
விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த விமானத்தின் உள்ளே இருந்த மக்கள் அந்த துன்பான
நேரத்தில் என்ன செய்தார்கள். என்பதை நாம் வீடியோவாக பார்த்தோம்.
மக்கள் அல்லாஹு அக்பர் அல்லாஹுஅக்பர் அல்லாஹுஅக்பர்
லாயிலாஹ் இல்லாஹ் லாயிலாஹ் இல்லாஹ் என்று அழைத்தார்கள்.
அந்த இடத்தில் அல்லாஹ்வை மட்டும் தான் அழைத்தார்கள்
வேறு ஒன்றும் அவர்கள் செய்யவில்லை.
அல்லாஹ்வின் நல்லடியார்களே...
மனிதன் துன்பத்தில் மட்டும் தான் அல்லாஹ்வை
அழைகின்றான்.
ஆனால் துன்பத்தில் மட்டும் அல்லாஹ்வை
அழைக்காமல் அனைத்து நேரத்திலும் அல்லாஹ்வை மறக்காதவர்களாக அவனிடம் அனுதினமும்
அதிகமாக துஆ செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்
துஆ செய்யும் போது ஹிதாயத் என்னும் நேர்வழிக்காக, இறைவனுக்கும்
நமக்கும் உள்ள தொடர்புக்காக, ஆஃபியத் என்னும் ஆரோக்யத்திற்காக, நல்ல
இதயத்துகாக, நல்ல அறிவுக்காக
இப்படி அனைத்திற்கும் அல்லாஹ்விடம் நாம் கை ஏந்துபவர்களாக
இருக்க வேண்டும்.
நாம் அல்லாஹ்விடம் ஐந்து நேரம் கை
ஏந்துகிறோம். அது மட்டுமல்லாமல் நடக்கும் போது, வேலை செய்யும் போது, தூங்கும்
போது, உட்கார்ந்து இருக்கும் போது, அன்றாட வேலைகளின் நடுவில் நாம் அல்லாஹ்விடம் துஆ
கேட்க வேண்டும்.
வீதியிலோ அல்லது வீட்டுக்கு
அருகிலோ ஒரு திருமண நிகழ்ச்சியை கண்டால் "யா அல்லாஹ்! இவர்கள் மீது
அருள்புரிவாயாக! இவர்கள் இருவரையும் நன்மையில் சேர்த்து வைப்பாயாக!'' என்று துஆ செய்ய வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்ணைக் கண்டால்
"யா அல்லாஹ்! இவருக்கு நல்ல சந்ததியைக் கொடுப்பாயாக!'' என்று துஆ செய்ய வேண்டும்.
பெரும் பிரச்சினையில்
மாட்டியிருப்பவர் குறித்து ஏதாவது தகவல் அறிந்தால் "யா அல்லாஹ்! அவரது
பிரச்சினையை லேசாக்குவாயாக!'' என்று துஆ செய்ய
வேண்டும்.
மருத்துவமனைவியிலிருந்து
நலமுடன் திரும்பினால்; "யா அல்லாஹ்! எல்லா நோயாளிகளுக்கும் நிவாரணம்
வழங்குவாயாக!'' என்று துஆ செய்ய வேண்டும்.
வீட்டுக்குள் நுழையும்போது உணவு
தயாராக இருக்குமெனில்; "யா அல்லாஹ்! எனக்கு உணவளித்தது போன்று
வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் நீ உணவளிப்பாயாக!'' என்று துஆ செய்ய வேண்டும்.
ஒரு ஜனாஸா உங்களைக் கடந்து
செல்கிறது என்றால்; "யா அல்லாஹ்! இவருக்கு நீ கருணை புரிவாயாக!'' என்று துஆ செய்ய வேண்டும்.
சிரமத்துடன் கஷ்டப்பட்டு வேலை
செய்யும் ஒருவரை வீதியில் கண்டால்; "யா அல்லாஹ்! இவரது பணியை எளிதாக்குவாயாக!'' என்று துஆ செய்ய வேண்டும்.
இப்படி நாம் துஆ செய்ய அவர் நமது
உறவினராக அல்லது நமக்கு தெரிந்தவராக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
அப்படி நாம் துஆ செய்தால் நமது
பிரார்த்தனைகள் துஆக்கள் நமக்கே நன்மையாக அமையும்...
சிலநேரங்களில்...
அடுத்தவருக்காக நாம் செய்யும்
பிரார்த்தனையால் துஆவால் ஒரு சோதனையிலிருந்து நாம் விடுபடலாம்.
ஒரு நெருக்கடி நம்மை விட்டு அகன்றுவிடலாம்.
நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.
கடன் தொல்லையில் இருந்து
விடுபடலாம்.
தேடிய மன நிம்மதி கிடைக்கலாம்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே...
நமது உயிரினும் மேலான கண்மணி
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தன் கண்ணெதிரே இல்லாத தம்
சகோதரருக்காகப் பிரார்த்திக்கும்போது, அதெற்கென நியமிக்கப்பட்ட வானவர், உனக்கும் அதைப் போன்று கிடைக்கட்டும் என்று நிச்சயம் கூறுவார்''. (முஸ்லிம்) என்று நபியவர்கள் கூறினார்கள்.
எனவே அனைத்து நிலையிலும் அல்லாஹ்வை
மறக்காதவர்களாக தனக்கு மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கும் துஆ செய்யும் நற்பண்பு
கொண்டவர்களாக நம்மையும் நமது குடும்பத்தினர்களையும் நமது மஹல்லாவில் உள்ள
அனைவர்களையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக.
எனக்கு இங்கு பேச
வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் உங்கள் அனைவருக்கும்
ஸலாத்தைக் கூறி விடை பெறுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக