ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

உரையாடல்


 

அப்ஃராஹ் : அஸ்ஸலாமு அலைக்கும் ஹலீமா

ஹலீமா : வ அலைக்குமுஸ்ஸலாம் அப்ஃராஹ்

அப்ஃராஹ்: நீ நலமாக இருக்கிறாயா ?வீட்டில் அனைவரும் நலமா ?

ஹலீமா : அல்லாஹ்வின் கிருபையால் வீட்டில் அனைவரும் நலமே !

அப்ஃராஹ் : வெளிநாட்டிலிருந்து எப்பொழுது வந்த ?

ஹலீமா : இரண்டு நாளாச்சு

அப்ஃராஹ் : அங்கு மதரஸா நடக்குதா ?

ஹலீமா : ம்ஹ்ஹ் நடக்குமே !சீன தேசம் சென்றாலும் கல்வியை கற்றுக் கொள் என்று நபியவர்கள் சொல்லியிருக்காங்களே!



அப்ஃராஹ்: பரவாயில்லையே நல்லா பேசுற.சரி நான் சில கேள்விகளை கேட்குறேன் சொல்றியா ?

ஹலீமா : இன்ஷா அல்லாஹ் சொல்கிறேன் அப்ஃராஹ்

அப்ஃராஹ்: எந்த கலீஃபா காலத்தில் குர்ஆன் ஷரீஃப் அத்தியாயங்கள் ஒன்று சேர்க்கப்பட்டன ?

ஹலீமா : ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரழி)அவர்களின் காலத்தில்.

அப்ஃராஹ்: குர்ஆன் ஷரீஃப் அத்தியாயங்களை ஒன்று சேர்த்த ஸஹாபி யார் ?

ஹலீமா : ஹழ்ரத் ஜைத் இப்னு ஸாபித் (ரழி)அவர்கள்.

அப்ஃராஹ்: குர்ஆன் முழுவதும் எத்தனை ஆண்டுகளில் அருளப்பட்டது ?

ஹலீமா : 23 ஆண்டுகளில் அருளப்பட்டது.

அப்ஃராஹ்: தொழுகை என்றால் என்ன ?

ஹலீமா : உடல் உறுப்புகளால் அல்லாஹ்வை வணங்குவதற்கு தொழுகை என்று பெயர்.

அப்ஃராஹ்: பர்ளு என்றால் என்ன ?

ஹலீமா : வாழ்க்கையில் கட்டாயமாக செய்யவேண்டியவை.

அப்ஃராஹ்: சுன்னத் என்றால் என்ன ?

ஹலீமா : நபி (ஸல்)அவர்கள் சொல்லியவை,செய்தவை,அங்கீகரித்தவை அனைத்தும் சுன்னத்தாகும்.

அப்ஃராஹ்:வாஜிபு என்றால் என்ன ?

ஹலீமா : இதுவும் கட்டாயமாக செய்யவேண்டியவை.

அப்ஃராஹ்: முஸ்தஹப் என்றால் என்ன ?

ஹலீமா : செய்தால் நன்மை,செய்யாமல் இருந்தால் தீங்கு இல்லை.

அப்ஃராஹ்: சரி தோழியே ! நீயே கேட்டுக்கிட்டு இருக்கே,
நானும் கேக்குறேன் சொல்றியா ?

ஹலீமா : ம்ம்ஹ்ஹ் கேளு அப்ஃராஹ்

அப்ஃராஹ்: கிப்லா திசை என்றால் என்ன ?

ஹலீமா : நாம் இருக்கும் ஊரில் க ஃபா எந்த திசையில் உள்ளதோ அதுவே கிப்லா திசையாகும்.

அப்ஃராஹ்: பாங்கு இல்லாத தொழுகை எது ?

ஹலீமா : இரண்டு பெருநாள் தொழுகை.

அப்ஃராஹ்: ஸஜ்தா இல்லாத தொழுகை எது ?

ஹலீமா : ஜனாஸா தொழுகை.
அப்ஃராஹ்: தாய் வயிற்றில் பிறக்காத நபி யார் ?

ஹலீமா : நமது தந்தை ஆதம் (அலைஹி)அவர்கள்.

அப்ஃராஹ்: ஆதம் (அலைஹி)அவர்களின் மனைவி யார் ?

ஹலீமா : நமது தாயார் ஹவ்வா (அலைஹி)அவர்கள்.

அப்ஃராஹ்: நமது தாயார் ஹவ்வா (அலைஹி)எதிலிருந்து படைக்கப்பட்டார்கள் ?

ஹலீமா : ஆதம் (அலைஹி) அவர்களின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார்கள்.

அப்ஃராஹ்: நபி ஆதம் (அலைஹி)அவர்கள் முதல் முதலில் எந்த வார்த்தையை உச்சரித்தார்கள் ?

ஹலீமா : தும்மும் போது அல்ஹம்துலில்லாஹ்என்ற வார்த்தையாகும்.

அப்ஃராஹ்: அழகாய் சொன்னாய் ஹலீமா !

அஸ்ஸலாமு அலைக்கும்
ஹலீமா : வ அலைக்குமுஸ்ஸலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக