செவ்வாய், 19 நவம்பர், 2024

இவர்களை அல்லாஹ் பார்க்கமாட்டான்.


அல்லாஹ் மறுமை நாளில் இவர்களையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்று நபி அவர்கள் கொடுக்கும் பட்டியல் இதோ.


1. கணவனுக்கு நன்றி செலுத்தாத மனைவியை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.


(நூல்: பைஹகீ 7:294)


2. 

மறுமை நாளில் மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான். 

1) பெற் றோர்களுக்கு மாறு செய்பவன். 

2. மது அருந்துபவன், 

3) கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன். 

(நூல்: ஹாகீம் 7344)


3. 

சொந்தத்தை முறித்து வாழ்பவன். மோசமான அண்டை வீட்டுக்காரன் ஆகிய இருவரை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான்.

(நூல்: கன்ஜுல் உம்மால் 6975)


4. 

முடிகளுக்கு கருப்பு நிறத்தில் சாயம் பூசுபவர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான்.

(நூல்: மஜ்மவுஸ் ஸவாயிது 8793)


5. 

மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்கவும் மாட்டான் அவர்களை பரி சுத்தப் படுத்தவும் மாட்டான். அவர்க ளுக்கு கடுமையான வேதனையுமுண்டு.

1 அநாதையை சக்தி மீறி கஷ்டப் படுத்தும் ஆசிரியர்


2) யாசகம் கேட்பதை விட்டும் தேவையற்றிருந்தும் யாசகம் கேட்பவன்


3) அரசனிடம் அமர்ந்து அரசனின் மனோ இச்சைக்கு தோதுவாக பேசுபவன். 

(நூல் கன்ஜுல் உம்மால் 43938)


6. 

ஜகாத்தை தர மறுப்பவன், 

எதீமின் பொருளை அனுபவிப்பவன், சூனியக் காரன் ஏமாற்றுபவன் ஆகியோரை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். 

(நூல்: கன்ஜுல் உம்மால் 44001


7. 

உடலுடன் உள்ளமும் சேராகாத தொழுகையின் பக்கம் அல்லாஹ் பார்க் கமாட்டான். 

(நூல்: இஹ்யாஉலூமித்தீன்)


8. 

பெருமைக்காக ஆடையை தரையில் இழுத்துக் கொண்டு செல்பவனை பக்கம் அல்லாஹ் பார்க்க மாட்டான்.

(நூல்: புகாரி 5446)


 9. 

1. பெற்றோருக்கு மாறு செய்பவன்

 2) ஆண்களைப் போன்று அலங்கரித்துக் கொள்ளும் பெண், 

3) மனைவியை கூட்டிக் கொடுப்பவன் ஆகியோரின் பக்கம் அல்லாஹ் பார்க்க மாட்டான்.

(நூல்: முஸ்னது அஹ்மது 6180)


10. 

ருகூவுக்கும். சுஜூதுக்கும் மத்தியில் (இஃதிதாலில்) முதுகை நேராக நிப் பாட்டாதவனின் தொழுகையின் பால் அல்லாஹ் பார்க்க மாட்டான்.

(நூல்: முஸ்னது அஹ்மது)


இவை நமது வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் காரியங்கள். ஆனால் அதன் விளைவுகள் மிகக் கடுமையா னவை 


அல்லாஹ் நம்மை இறைப்பார்வையையும், இறை நெருக்கத்தையும் பெற்ற மக்களாக ஆக்கி வைப்பானாக!


ஆமின்.


பாளையம் யூசுஃபி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக