1. கண்,
2. காது,
3. நாவு.
4. கை.
5. வெட்கஸ்தலம்.
6. கால்.
7. வயிறு.
ஆகிய ஏழு அங்கங்களைக் கொண்டு அல்லாஹ தஆலாவுக்கு மாறு செய்தவர்கள்தாம் அவ்வேழு வாசல்கள் வழியாக நுழைய நிர்ணயிக்கப்படுவார்கள் என்று பஹ்ருல் உலூம் என்னும் கிரந்தத்தில் கூறப்பட்டிருக்கிறது.
"நரகத்துக்கு ஏழு தலைவாசல்கள் இருக்கின்றன என்பதானது நன்மை தீமைகளைப் புரிய ஏவல் விலக்கல் செய்யப்பட்டுள்ள அவயவங்களின் முறைப்படி இருக்கிறது.
அவைகளாவன:-கேள்வி, பார்வை, நா, கரங்கள். கால்கள். வெட்கஸ்தலம், வயிறு ஆகியவை களாகும்.
ஆகவே. ஏழு உறுப்புகளும் நரகத்தின் ஏழு தலைவாசல்களின் அந்தஸ்துகளாகும்.
அல்லாஹுதஆலா விலக்கலாக்கி இருப்பவற்றைச் செய்யாமல் அவற்றைப் பரிபூரணமாகக் காத்துக் கொள்.
இல்லையேல். உனக்கு நன்மையாக இருப்பது தீமையாக மாறிவிடும். உனக்கு பாக்கியமாக வந்து விட்டது வேதனையாக மாறிவிடும்"
என்பதாக இமாமுல் ஆரிஃபீன் இப்னுல் அரபிய்யி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய ஃபுத்தூஹாத்து என்ற கிரந்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
தவிர."பிரிவினையால் கரிவதால் தூரமாகுதல் என்ற நரகமானது அவர்கள் யாவருக்கும் வாக்களிக்கப்பட்டதாக இருக்கிறது.
அதற்கு
1. பேராசை,
2. தீங்கு,
3. மனப்புழுக்கம்,
4. பொறாமை,
5. கோபம்,
6. இச்சை (காமம்)
7. தற்பெருமை
என்ற ஏழு தலைவாசல்கள் இருக்கின்றன.
நஃப்ஸாகிய இப்லீசைப் பின்பற்றுகிற ஆன்மாக்களிலிருந்து ஒவ்வொரு தலைவாசலுக்கும் நஃப்ஸுடைய தன்மைகளைக் கொண்டு அது தன்மையை எடுத்துக் கொள்வதற்கேற்றவாறு இருக்கிறது"
என்பதாக தாவீலாத்துன்னஜ்மிய்யா என்ற கிரந்தத்தில் கூறப்பட்டிருக்கிறது.
பாங்கு என்னும் அதானில் ஏழு வாக்கியங்களும்,
இகாமத்தில் எட்டுவாக்கியங்களும் இருக்கின்றன.
இவ்விரண்டையும் நிறைவேற்று பவருக்கு நரகின் ஏழு வாசல்களும் அடைக்கப்பட்டு சுவர்க்கத்தில் எட்டு வாசல்களும் திறக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
لَهَا سَبْعَةُ اَبْوَابٍ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ
அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்.
(அல்குர்ஆன் : 15:44)
தப்ஸீருல் ஹமீத் ஃபீ தஃப்ஸிரில் குர்ஆனில் மஜீத்
இந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
ஆசிரியர்
சன்மார்க்க முற்றிஞர், அல்லாமா, மர்ஹும் எம்.எஸ்.முஹம்மது அப்துல் காதிர் சாஹிப் பாக்கவி(ரஹ்)
பதிவு
திருப்பூர்
K அமானுல்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக