பக்கங்கள்
▼
செவ்வாய், 31 மார்ச், 2020
நாவடக்கம்.
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக அன்பிற்குரியவர்களே நாவடக்கம் பற்றி நான் இங்கு பேச வந்திருக்கின்றேன்.
நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது நாவடக்கத்தைப் பற்றி ஆசிரியர்கள் போதிக்கும் போது வள்ளுவர் கூறிய ஒரு குரலை நமக்கு சொல்லித் தருவார்கள். யாகவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்ற குரலை நமக்குச் சொல்லித் தருவார்கள்.
இவ்வுலகில் நாம் வாழும் போது நமது நாவை தீமையிலிருந்து காத்தால் அது நம்மை சோகத்தில் இருந்து காக்க கூடியதாக இருக்கிறது. ஒரு வார்த்தை சொல்வார்கள் பல்லக்கு ஏறுவது நாவாலே பல்லு உடைவதும் நாவாலே என்பதாக கூறுவார்கள்.
ஒவ்வொரு மனிதனும் தனது நாவை இரண்டு வகையாக அவன் கட்டுப்படுத்தவேண்டும்.
முதலாவது தேவையானவற்றை மட்டுமே பேச வேண்டும் இதனால் அவனது உடல் மட்டுமல்ல உள்ளமும் பாதுகாப்பாக இருக்கும்.
இரண்டாவது உணவை உண்ணக் கூடிய விஷயத்தில் அவன் தன் நாவை கட்டுப்படுத்தவேண்டும். நாவிற்கு சுவையாக இருப்பதையெல்லாம் அளவிற்கு அதிகமாக சாப்பிடாமல் இருந்தால் உடலும் உள்ளமும் அது சுகமாக இருக்கும்.
நமக்குத் தெரிந்த உரிய மனிதர்களை மட்டுமே நம் வீட்டு வாயிலுக்குள் வர அனுமதிப்பதை போல உரிய பேச்சுக்களை மட்டுமே நாம் பேச வேண்டும் அதனால்தான் இரண்டிற்குமே அதாவது வீட்டினுடைய வாயிலுக்கும் மனிதனுடைய வாய்க்கும் வாயில் என்பதாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் தன் நாவை காப்பவனாக இருக்கவில்லை என்றால் அது அல்லாத வேறு எதனையும் அவன் காப்பவன் ஆக இருக்க முடியாது. என்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.
நாம் பேசக்கூடிய பேச்சி 8 இலக்கணம் பொருந்தியதாக இருக்க வேண்டும்.
1. உண்மை 2.நன்மை 3.அன்பு 4.நிதானம் 5.இனிமை 6.ஆழம் 7.சமயம் 8. சபை ஆகிய எட்டு இலக்கணங்கள் பொருந்தியதாக இருக்க வேண்டும்.
1. உண்மையே பேசவேண்டும் பொய் பேசக்கூடாது
2. நன்மையான அதையே பேசவேண்டும் தீமையானது பேசக்கூடாது
3. எல்லோரிடமும் அன்பாக பேசவேண்டும் வெறுப்போடு பேசக்கூடாது
4. எதையும் நிதானமாக பேசவேண்டும் அவசரமாக பேசக்கூடாது
5. இனிமையாக பேசவேண்டும் கடுப்போடு பேசக்கூடாது
6. கருத்தாழம் உள்ளதையே பேசவேண்டும் கருந்தற்ற பேச்சுக்களை பேசக் கூடாது
7. நேரம் அறிந்து பேசவேண்டும் எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் பேசக்கூடாது
8. சபை அறிந்து பேசவேண்டும் எல்லா சபைகளிலும் எல்லாவற்றையும் பேசக்கூடாது.
பேசாத பேச்சுக்கு நீ எஜமான் பேசிய பேச்சுக்கள் உனக்கு எஜமான் என்பதாக ஒரு பழமொழி கூட சொல்வார்கள்.
நமது வாயில் பேச்சுக்கள் எவ்வாறு உருவாகிறது என்றால் நமது குரல்வளை பெட்டி போன்ற அமைப்பு கொண்டது அதனுடைய உட்புறச் சுவர் பல தசை நார்களால் பின்னப்பட்டுள்ளன இவற்றினுடைய அசைவுகளால் தான் நமது வாயில் பேச்சுக்கள் பிறக்கின்றது
மனிதனுடைய குரல்வளை வயிறு நெஞ்சு வாய் நாக்கு உதடு போன்ற 44 உறுப்புகளினுடைய உதவியினால் தான் ஒரு மனிதன் பேசுகின்றான்.
பேசக்கூடிய திறனை மனிதனுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கி இருக்கின்றான் வேறு எந்த உயிரினமும் மனிதனைப் போன்று அது பேசுவது கிடையாது எனவே மிகப்பெரிய அருளாக வழங்கப்பட்டுள்ள பேச்சை பயனுள்ள காரியத்திற்காக மட்டுமே நாம் பயன்படுத்திட வேண்டும் பயனற்ற பேச்சுகள் என்பது பல்வேறு துன்பங்களை நம் வாழ்வில் கொண்டு வந்து சேர்த்து விடும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு சஹாபி வெற்றிக்கு வழி என்ன என்பதாக கேட்டார் அப்போது நபியவர்கள் உன்னுடைய நாவை கட்டுப்படுத்தி கொள்வாயாக என்று கூறினார்கள்.
இறுதியாக ஒரு வார்த்தையை கூறி நான் விடைபெறுகிறேன்.
மனிதனின் மதிப்பு அவன் நாவில் இருக்கின்றது நாவின் மதிப்பு அவன் மனதில் இருக்கின்றது அறிவு நிறைந்திருப்பவர்கள் பேச்சை குறைப்பார்கள். ஒருமுறை பேசவேண்டும் இருமுறை கேட்க வேண்டும்.
என்று கூறி எனக்கு இங்கே பேச வாய்ப்பளித்த ஹழ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.
மேலும் தகவலுக்கு A. காதிர் மீரான் மஸ்லஹி. 9952129706
ஞாயிறு, 29 மார்ச், 2020
காலத்தை வென்றவன்.
காலத்தை
வென்றவன்.
وان
تصبهم سيئة يكبروا بموسى ومن معه
அவர்களுக்கு
துன்பம் ஏதும் நேரிட்டால்
மூஸா.
அலை
அவர்களாலும்
அவர்களுடன் இருப்பவர்களாலும்
ஏற்பட்ட
துற்சகுனம்
என்று அவர்கள் கருதுகிறாகள்-
ஆனால்
இவ்வாறு
கருதுபவர்களின் துர்சகுணம்
அவர்கள்
அல்லாஹ்வின்
பெரும் தண்டனை ஏற்க
வேண்டியுள்ளதேயாகும்.
எனினும்
அவர்களில் பெரும்பாலானோர்
இதை அறியமாட்டார்கள்
அல்குர்ஆன்
7:131
ஒவ்வொரு
பொருளையும் நல்லது,
கெட்டது
என்று தரம் பிரிப்பது மனித இயல்பு,
கண்ணுக்குப்
புலப்படாத கால நேரங்கள்,
அறிகுறிகள்.
சகுனங்கள் போன்றவற்றையும்
கூட மனிதன் நல்லது,
கெட்டது
என தரம் பிரிக்கின்றான்
நல்ல
நேரங்கள் என்று கருதும்
வேளைகளில் அவன் காரியங்களைச்
செய்வதையும்,
தீய
நேரங்கள் என்று கருதும்
வேளைகளில் காரியங்களைத் தவிர்ப்பதும்,
ஒரு
செயலாக்கத்தைத் துவங்கும்
போது தீய சகுனங்கள் ஏற்பட்டால்
அதிலிருந்து விலகிக் கொள்வதும்
அவனது வழக்கமாக இருந்து வருகிறது
அவனது
வழக்கத்திற்கு வழி காட்டும்
வண்ணம் சில மதங்கள்
காலங்களை
நல்லது,
கெட்டது
என்று பிரித்து பட்டியல்
போட்டுக் காட்டுகின்றன அதுபோன்றே
சகுனங்களையும் அவைகள்
வகைப்படுத்தத் தவறவில்லை
ஆனால்
நல்லதையே கொள்கையாகக் கொண்ட
இஸ்லாம் நல்ல
நேரங்களை
வரவேற்கிறது.
நற்குறிகள்
தோன்றுவதை செயலாக்கத்தின் தூண்டு
கோலாகக் கருதுகிறது.
ஆனால்
இஸ்லாம் தீய காலங்களை ஏற்றுக்கொள்ளுவதில்லை.
துர்
சகுனங்களை பொருட்படுத்துவதில்லை
நற்குறிகள்
நபிகள்
நாயகம் (ஸல்)
அவர்கள்
துர்குறி என்பது கிடையாது.
நற்குறி
உண்டு.
எனக்
கூறினார்கள்.
அதைச்
செவியற்ற நண்பர்கள் நற்குறி
என்றால் என்ன?
என
வினவிய போது உங்கள் ஒருவரின்
காதில் விழும் நல்ல வார்த்தை என்று
மறுமொழி பகர்ந்தார்கள்
அறிவிப்பவர்
:
ஹனரத்
அபூஹுரைரா (ரலி)
நால்
:
- புகாரிமுஸ்லிம்
நபிகள்
நாயகம் -
(ஸல்)
அவர்கள்
ஒரு தேவையைக் கருதி வீட்டை
விட்டு
வெளியேறும் போது “ராஷிது”
(நேர்மையாளரே (வெற்றியாளரே)
போன்ற
பெயர் கூறி ஒருவர் ஒருவரை
அழைப்பதைச் செவியேற்றால்
மகிழ்ச்சியடைவார்கள் நஜீஹ்"
நூல்
:
திர்மிதி.
அறிவிப்பவர்
:
ஹளரத்
அனஸ் (ரலி)
"நபிகள்
நாயகம்-
(ஸல்)
அவர்கள்
நற்குறி நிகழ்வதை விரும்புவார்கள் துர்குறி
பார்க்க மாட்டர்கள்,
நல்ல
பெயரை விரும்புவார்கள்
நூல்
:
ஏரஹுஸ்ஸுன்னா
அறிவிப்பவர்
:
ஹளரத்
இப்னு அப்பாஸ் (ரலி)
நல்ல
நேரங்கள்
சூரியன்
உதயமாகும் நாட்களிலேயே சிறந்த
நாள் வெள்ளிக்
கிழமையாகும் அதில்
தான் ஹளரத் ஆதம் (அலை)
அவர்கள்
படைக்கப்பட்டார்கள்.
அதில்தான்
உலகிற்கு அனுப்பப்பட்டார்கள்.
உலக
இறுதி நாளும் அந் நாளே
நூல்
:
முஸ்லிம்
அறிவிப்பவர் :
ஹளரத்
அபூஹுரைரா -
(ரலி)
ஆஷுரா
(முஹர்ரம்
மாதம் 10-ம்
நாள்)
தினத்தன்று
தனது
குடும்பத்தினருக்கு
தாராளமாகச் செலவு செய்பவருக்கு
ஆண்டு முழுவதும் இறைவன்
தாராளமாக வழங்குவான்
நூல்
:
பைஹகீ அறிவிப்பவர்:
இப்னு
மஸ்ஊது -
(ரலி)
நபிகள்
நாயகம் -
(ஸல்)
அவர்களிடம்
திங்கட்கிழமை நோன்பு வைப்பது பற்றி
வினப்பட்டது.
அன்று
தான் நான் பிறந்தேன்.
அன்று
தான் என்னை நபியாக்கப்பட்டது
என்று அவர்கள் பதிலுரைத்தார்கள்
நூல்
:
முஸ்லிம்,
அறிவிப்பவர்
:
ஹளரத்
அபூகதாதா -
(ரலி),
நபிகள்
நாயகம் (ஸல்)
அவர்கள்
வியாழக்கிழமை பிரயாணம் செய்வதை விரும்புவார்கள்
அறிவிப்பவர்:
ஹளரத்
கஃபுபின்மாலிக் (ரலி)
ஏன்
வேறுபாடு
நல்ல
நேரங்களையும் நற்குறிகளையும்
ஏற்றுக் கொள்ளும்போது தீய நேரங்களையும்
துர் சகுனங்களையும் ஏற்றுக்
கொள்ளத்தானே வேண்டும் என்றொரு
சந்தேகம் எழுதலாம்
காலம்
கெட்டதாக,
சகுனம்
சரியில்லாததாக இருக்கிறது
என்பதற்காக அப்போது செய்யவிருக்கும்
காரியத்தில் பின் தங்குபவர்
அல்லாஹ்வின் ஆற்றலை
குறைத்து மதிப்பிடுகிறார்.
காலம்
கெட்டதாக இருந்து விட்டால்
அதில் நிகழ்த்தும்
செயல்,
திய
விளைவையே தரும்.
அதை
யார் முயன்றாலும் மாற்றிட
இயலாது,
இறைவன்
விரும்பினாலும் கூட என்று
அவர் கருதுகிறார்.
அதனால் தான்
அக்காரியத்தில் அவர் பின்
தங்குகிறார்
ஆனால்
உண்மை அதுவல்ல.
தீய
காலத்தில் செய்யப்பட்டாலும்
அக்காரியத்துக்கு
இறைவன் உதவி இருக்குமானால்
அது நன்மையையே பயக்கும்.
எனவே
தீய நேரத்தை ஓரங்கட்ட இஸ்லாம்
அனுமதிக்கவில்லை இக்கருத்தை
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின்
பொன்மொழி தெளிவுபடுத்துகிறது
துர்
சகுனம் என்பது இறைவனுக்கு
இணை வைத்தலாகும்.
இறைவன் மீது
நம்பிக்கை கொண்டால் அதன்
தீமை அகன்றுவிடும்
நூல்
:
திர்மிதி.
அறிவிப்பவர்:
ஹனரத்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் -
(ரலி)
காலத்தை
ஏசாதீர்.
நானே
காலமாக இருக்கிறேன்"
என
அல்லாஹ்
கூறுவதாக
நபிகள் நாயகம் -
(ஸல்)
அவர்கள்
நவின்று,
காலத்தை
தீயகாலம் என்று
ஒதுக்குவது இறைவனின் சக்தியை
குறைத்து மதிப்பிடுவதாக
அமைகிறது என்பதை கோட்டிட்டுக்
காட்டியுள்ளார்கள்
கணிப்பில்
தவறு
மொகலாய
மன்னர் அக்பர் ஒரு நாள்
கண்விழித்து அந்தப்புரத்திலிருந்து வெளி
வருகிறார்.
ஒரு
வேலைக்காரன் அவர் கண்ணில்
படுகிறான்.
அந்த வேலைக்காரனை
காலையில் முதன் முதலாக பார்க்க
நேர்ந்தது அவருக்கு மனச்சங்கடத்தை
எற்படுத்துகிறது.
அன்று
அவர் நாவிதனிடம் முகச்சவரம்
செய்து கொள்ளும்போது,
எதிர்பாராமல்
அவர் முகத்தில் கத்திபட்டு
காயம் ஏற்படுகிறது உடனே,
தான்
அன்று விழித்த முகம் சரியில்லை
என்ற முடிவுக்கு வருகிறார்
எனவே அந்த வேலைக்காரனுக்கு
கடுந்தண்டனை தர அவர் உத்தரவிடுகிறார்
தான்
செய்யாக் குற்றத்திற்காக
தனக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை
உணர்ந்த அந்த வேலையாள் அரசரிடம்
நெருக்கம் பெற்ற பீர்
பாலிடம் இது பற்றி முறையிடுகின்றார்.
பீர்பால்
அரசரிடம் சென்று அரசே இன்று
முதன் முதலாக அவன் முகத்தில்
விழிக்க நேரிட்டதால் உங்கள் முகத்தில்
காயம் ஏற்பட்டதாகக் கருதிகிறீர்கள்
ஆனால்
இன்று அரசர் முகத்தில்
விழித்ததால் எனக்கு கடும்
தண்டனை கடைத்தது.
எனவே
அரசர் முகம் யோகமற்ற முகம்
என்று அந்த வேலையாள கருதமாட்டானா?
என்று
கேட்டார்.
அதைச்
செவியுற்றதும் அரசர் உண்மையை உனருகிறார்.
அந்த
வேலைக்காரனுக்கு அவர்
விதித்திருந்த தண்டனையை ரத்து
செய்கிறார்
இச்
சம்பவத்தின் மூலம் சகுனத்தைக்
கணிப்பதில் தவறு ஏற்படலாம்
என்ற உண்மை
தெளிவாகத் தெரிகிறது.
மேற்
காணும் திருவசனத்திலும் இது
போன்ற நிலை
விளக்கப்படுகிறது
ஹழரத்
(அலை)
அவர்கள்
எகிப்துக்கு விஜயம் செய்து
அந்நாட்டு
மன்னன்
பிர்அவ்னையும்,
அவன்
பிரஜைகளையும் நேர் வழியின்பால்அழைக்கிறார்கள்.
ஆனால்
அம்மக்கள் நபியின் அழைப்பிற்கு
செவிசாய்ப்பதற்கு பதிலாக
அவர்களுக்கு கொடுமைகள் பல
செய்கிறார்கள்.
நபியைத்
துன்புறுத்தியதால் தீய
விளைவுகளைச் சந்திக்க
நேரிடுகிறது.
அப்போது
அம்மக்கள் ஹளரத் மூஸா -
(அலை)
அவர்கள்
தங்கள் நாட்டிற்கு வந்ததால்
துர்சம்பவங்கள் நிகழுகின்றன
என்று தவறாகக் கூறுகிறார்கள்.
நபியின்
பரக்கத் பொருந்திய வருகை
எவ்வாறு துர்சகுனமாக அமைய
முடியும்?
உண்மையில்
துர்சம்பவங்களுக்கு காரணம்
தாங்களே என்பதை அவர்கள்
கண்டுகொள்ளவில்லை
சகுனத்தைக்
கணிப்பதில் தவறு ஏற்படுவதைப்
போன்றே காலத்தைக் கணிப்பதிலும்
தவறுகள் சாத்தியமானவையே
இமாம்
கஸ்ஸாலி (ரஹ்)
அவர்கள்
தனது இஹ்யாஇ உலூமித்தீன்
என்ற நூலில்
குறிப்பிடுகிறார்கள்
நல்ல
நேரங்கள் தீய நேரங்களை கணிக்கப்
பயன்படும் நட்சத்திர
கஞ்சாரத்தை
அறியும் கலை என்பது எந்த
ஆதாரப் பூர்வமான அடிப்படையிலும் அமைக்கப்பட்டதல்ல.
அது
வெறும் அனுமானமே தவிர வேறில்லை
வானத்தில்
கருநிற மேகத்தைக் காணபவன்
இன்று மழை பொழியும் என்று நம்புகிறான்.
ஆனால்
எத்தனையோ காரணங்களால் அம்மேகம்
மழை பொழியாமல்
வேற்றிடம் சென்றுவிடலாம்.
கப்பலைச்
செலுத்தும் மாலுமி இன்று
கடலை
நோக்கி புயல்வரும் என்று
கணிக்கலாம்.
ஆனால்
எத்தனையோ காரணங்களால்
அந்தப்புயல் திசைமாறி விடலாம்.
அந்தக்
காரணங்கள் அனைத்தையும்
அறியாமல் மழை வருமென்றும்,
காற்று
வீகமென்றும் கூறுவதுஅனுமானமே!
வாய்த்தாலும்
வாய்க்கலாம் பொய்த்தாலும்
பொய்க்கலாம்.
கிரக
சஞ்சாரங்களை
வைத்து நன்மை நடக்கும்,
தீமை
நடக்கும் என்று கூறுவதும்
அது போன்றதே
அனுபவம்
சிறந்த ஆதாரம்
காலங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு
சகுனங்கள் சரிபார்க்கப்பட்டு
பொறுத்தங்கள்
பல பார்க்கப்பட்டு முடிக்கப்பட்ட
திருமணங்கள் அனைத்தும் தோல்வியைத்
தழுவவில்லை என்று கூறிட
முடியாது,
பொறுத்தம்
பார்ப்பவர் சிலர்
வீட்டிலும்,
வாழ்வை
இழந்த கன்னிகள் இருக்கின்றனர்.
இது
போன்ற நிலைகள்
வியாபாரத்தலங்களிலும்,
விளைச்சல்
நிலங்களிலும்,
புதுவீடு புகுதலிலும்,
புதுத்தொழில்
துவங்கலிலும் ஏற்பட்டிருப்பது
கண் கூடானதே
பிஸ்மில்லாஹ்
கூறுவதின் சிறப்பு
ஒரு
செயலை செய்யத் துவங்கும்போது,
பிஸ்மில்லாஹி
தவக்கல்த்து அலல்லாஹி,
லா
ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹி
(அல்லாஹ்வின்
பெயர் கூறி செய்யத் துவங்குகிறேன்.
வெற்றியளிக்கும்
பொறுப்பை அவன் மீதே சாட்டுகிறேன்
நன்மை செய்ய ஆற்றலும்,
தீமையை
விட்டும் விலகலும் அல்லாஹ்வின்
துணையன்றி நடவாது)
என்பன
போன்ற வார்த்தைகளைக் கூறவேண்டும்.
அப்போது
தீய நோரமாக இருந்தாலும் சர்வ
வல்லமைபெற்ற அல்லாஹ்
அதை நன்மையாக மாற்றித் தருவான்.
இதனாற்றான்
பிஸ்மில்லாஹ் கூறித்
துவங்கப்படாத ஒவ்வொரு காரியமும்
பரக்கத்து அற்றதே!
என
நபிகள்நாயகம்
(ஸல்)
அவர்கள்
கூறியுள்ளார்கள்
காலங்களை
வெல்லும் மாயம் முஸ்லிம்களிடம்
இருக்கும்போது காலத்தைக்
கண்டு அஞ்சவானேன்.
இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுளள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.
ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.
ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு அல்லாஹ் எல்லா வளமும் நலமும் நிறைவாக தந்தருள்வானாக.
BY. A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.