பக்கங்கள்

ஞாயிறு, 29 மார்ச், 2020

எங்கே செல்கிறோம்.




இந்த நபி முஃமின் களுக்கு அவர்களின் உயிரைக் காண
உயர்வான வராவார் அவரின் துணைவியர்
அவர்களுக்கு தாயார் ஆவர்அல்குர் ஆன் : 33:6



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது நாம் எந்த அளவு அன்பு செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்? என்பதை இத் திருவசனம் சித்தரித்துக் காட்டுகிறது

ஆம்! நமக்கு நம் உயிரின் மீது இருக்கும் பிரியத்தைக் காண பெருமானார்
(ஸல்)அவர்கள் மீது அதிக பிரியம் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் மீது
நம் பெற்றோர்களைக் காண நாம் அதிக பாசம் வைக்க வேண்டும். ஏனெனில்
அண்ணலாரின் துணைவியர்களை நமது தாயாராகக் கருத வேண்டுமென்ற
இறை உத்தரவில் அண் ணலாரை நம் தந்தையினும் மேலா கக் கருத
வேண்டுமென்ற கருத்து தொனிக்க வில்லையா

ஒரு மனிதன் தன்னை ஒருவன் முட்டாள் என்று கூறி விட்டால் எவ்வளவு
கோபமடைகிறான். தனக்கு ஒரு தலை குனிவு ஏற்பட்டு விட்டால், எவ்வளவு
இழிந்து போய் விடுகிறான்! அதே வேளையில் தனக்கு ஒரு உயர்வு எறபட்டால்
அவன் எவ்வளவு பெருமை அடைகிறான்

அப்படியானால் தன்னை விடவும் உயர்வாகக் கருதப்பட வேண்டிய
பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட அவன் எந்தளவு பாடுபட
வேண்டும்? பெருமானாருக்கு மனக்குறை ஏற்படாதிருக்க எவ்வளவு முயல
வேண்டும்

ஹளரத் முஹ்யித்தீன் இப்னு அரபி என்ற இறை நேசரை ஒரு முஸ்லிம்
இழிச் சொற்களால் துன்பப்படுத்தி வந்தான். அவன் மரணமடைந்தபோது
அவன து மண்ணறையில் ஹளரத் இப்னு அரபி அவர்கள் நீண்ட நேரம்
பிராத்தனை புரிந்தார்கள், அவர்களுக்கு தொல்லை கொடுப்பதையே தனது
தொழிலாகக் கொண்ட அந்த மனிதனின் மண்ணறையில் அவர்கள் நீண்ட நேரம்
தாமதித்திருந்தது மக்களக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அதுபற்றி அவர்கள்
விளக்கம் கேட்டார்கள்

"மண்ணறையில் அடக்கப்பட்ட இந்த மனிதர் எனக்கு அநியாயமாக
தொல்லைகள் பல தந்தார்
அனுப்பப்படுவாரானால், பெருமானார் (ஸல்) அவர்களின் அருமை
உம்மத்துக்களில் ஒருவர் நரகம் செல்வதற்கு நான் காரணமாகியிருக்கிறேன்
என்று தானே பொருள். தனது உம்மத்துக்களில் ஒருவர் நரகத்துக்குச்
செல்லுவதைக் கண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எவ்வளவு
மனவேதனை ஏற்படும். எம்பெருமானாருக்கு மன வேதனை தரும் காரியத்தை
அதன் காரணத்தால் அவர் நரகத்துக்குநான் எப்படி அனுமதிக்க முடியும்

எனவே, நான் 70 ஆயிரம் தடவைகள் ஓதி வைத்திருந்த லா இலாஹ்
இல்லல்லாஹுஎன்ற திருக்கலிமாவின்நன்மைகளைஎன் னைஏசிக்கொண்டிருந்த மனிதருக்கு சேர்த்து, அவரின் பிழை பொறுக்க இறைவனிடம் மன்றாடினேன். எனது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர் சுவனத்திற்கு அனுப்பப்பட்டால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருப்தியடைவார்களல்லவா” என்று ஹளரத் இப்னு அரபி அவர்கள் விளக்கம்
தந்தார்கள்


அவர்கள் அப்படி! நாம் எப்படி

நபிகள் நாயகம் - (ஸல்) அவர்களின் அருமைத் தோழர்கள், பெருமானார்
(ஸல்அவர்கள் மனம் பூரிக்கும் வகையில் தமது வாழ்க்கையை அமைத்துக
கொண்டார்கள். பெருமானார்- (ஸல்) அவர்கள் இந்த உலகைப் பிரிந்த
தினத்தின் அதிகாலையில் தனது வீட்டின் திரையை நீக்கிப் பார்க்கிறார்கள்
ஸஹாபாக்கள் பஜ்ரு தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தக்
காட்சி பெருமானாரின் மனதிற்கு மகிழ்வைத் தருகிறது. அந்த மகிழ்வு
அவர்களின் வதனத்தில் சிரிப்பாக வெளிப்படுகிறது. நாம் எண்ணியதைப்
போன்றே ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கி விட்டோம். நாம் பட்ட
துன்பங்களுக்கெல்லாம் கைமேல் பலன் கிடைத்துவிட்டது. இவர்கள் நாம்
காட்டிய வழியில் வழுவாது நடந்து வருவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் திருப்தியடைந்ததையே அந்த சிரிப்பு காட்டியது

அந்த நபித் தோழர்களைப் போன்று பெருமானாருக்கு திருப்தியாக
நடப்பது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்


மறுமையில் சிறுமை

தங்களை விடவும், தங்களின் பெற்றோர்களை விடவும் பெருமானாரை
அதிகமாகப் பெருமைப்படுத்த வேண்டிய கடமை மிக்க இந்த சமுதாயம் அந்த
கடமையைச் செய்கிறதா? என்று சிந்திக்கத் தொடங்கினால் வேதனையே
மிஞ்சுகிறது. “அதிகமாகக் குழந்தைகளைப் பெறுங்கள்! உங்களைக் கொண்டு
நான் பெருமையடைவேன்” என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இந்த சமுதாயம் நடந்து கொள்ளுமாவென்ற
கேள்விக்கு கீழ்க்காணும் மறுமைக் கண்ணாடி வேதனையின் உருவகத்தையே
பதிலாகத் தருகிறது

மறுமையில் பெருமானார் - (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தவர்களை
சுற்றிப் பார்க்கிறார்கள். ஒரு பக்கம் சிலர் கண்ணொளி இழந்து தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள். வேறு சிலரின் கழுத்தில் பாம்புகள் சுற்றிக் கொண்டு
அவர்களை கடித்துத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. வேறுசிலரின்
முதுகுகளில் மாடு, ஆடு, ஒட்டகம் போன்றவை ஏறி நின்று கொண்டு முட்டித்
துன்புறுத்திக் கொண்டிருக்கின்றன. சிலர் பேய் பிடித்தவர்களைப் போன்று
கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தொழு நோயாளியாக கோரக்
காட்சியில் பவனி வருகின்றனர். சிலர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு
இழுத்துக் கொண்டு நடக்கின்றனர். குரங்கிற்கு வால் முளைத்ததைப் போன்ற
சிலருக்கு வால் முளைத்திருக்கிறது அந்த வாலில் என்னவோ எழுதப்பட்ட
கொடிகள் கட்டப்பட்டிருக்கின்றன. சில எலும்புக் கூடுகள் பயங்கரமாகக் காட்சி
தருகின்றன

ஒதுச் செய்த பரக்கத்தால் ஒளி பொருந்தியவர்களாக தன்து
சமுதாயத்தை எதிர்பார்த்த எம் பெருமானார் (ஸல்) அவர்கள் தன து
சமுதாயத்தினரின் இத்தகைய கோரக் காட்சிகளைக் காண நோந்தால்
எவ்வளவு வேதனையடைவார்கள்? மேலே வர்ணிக்கப்பட்ட காட்சிகள்
கற்பனையல்ல


காட்சி. 1

என து திருவாக்கை விட்டும் பாராமுகமாக நடந்தோருக்கு
நெருக்கடியான வாழ்க்கை அமையும். மறுமை நாளையில் நாம் அவர்களை
குருடர்களாக எழுப்புவோம், எனது இறைவா! நான் பார்வையுள்ளவனாகத்
தானே உலகில் இருந்தேன். என்னை ஏன் கண் பார்வையற்றவனாக எழச்
செய்திருக்கிறாய் என்று அவர்கள் கேட்பார்கள். நமது திருவாக்குகள் உன்னிடம்
வந்தபோது அவற்றை நீ மறந்தாய். அவ்வாறே இப்போது உன்னை
மறக்கப்படுகிறது என்று இறைவன் பதில் தருவான்"
(அல்குர் ஆன் 20: 184)

காட்சி. 2. 3.

அல்லாஹ் தங்களுக்கு தந்த செல்வங்களை தருமம் கொடுக்காது
கஞ்சத்தனம் செய்பவர்கள், அது அவாகளுக்கு நல்லதென எண்ணிக் கொள்ள
வேண்டாம். அவர்கள் கஞ்சத்தனம் செய்தவற்றை மறுமையில் மாலையாக
அணிவிக்கப்படுவார்கள்"
(அல்குர் ஆன் 3 : 180)

இந்த இறைவசனத்திற்கு தெளிவுரை சொல்லப் புகுந்த பெருமானார்
(ஸ்ல்) அவர்கள் ஜகாத் செலுத்தாத செல்வங்களை பாம்பாக உருவகம்
கொடுக்கப்பட்டு அவர்களின் கழுத்துகளில் அணிவிக்கப்படும் எனவும், ஜகாத
செலுத்தாத ஆடு, மாடு, ஒட்டகங்களை கழுத்தில் ஏற்றிவிடப்பட்டு முட்ட்ச்
செய்யப்படுமெனவும் விளக்கம் தந்தார்கள்

காட்சி. 4.

வட்டியை உண்பவர்கள் பேய் பிடித்தவர்கள் எழுவதைப் போன்றல்லாது எழமாட்டார்கள்”
(அல் குர்ஆன்2275)

காட்சி - 5-6-7-8

அடுத்தவரின் நிலத்தில் ஒரு ஜாண் அளவு மோசடி செய்தாலும், அவர்
மறுமையில் தொழு நோயாளியாக எழுப்பப்படுவார் எனவும், தன் மக்களுக்கு
மத்தியில் நீதமாக நடக்காதவர், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவராக
எழுப்பப்படுவார் எனவும், பிறரை ஏமாற்றிப் பிழைத்தவர் மறுமையில்
ஏமாற்றுக்காரர் என்று பொறிக்கப்பட்ட கொடி வாலில் கட்டப்படும் எனவும்
பிறரிடம் யாசகம் கேட்போர் எலும்புக் கூடுகளாக மறுமையில் எழுப்பப்படுவர்
எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்கள்

யாராலும் கூற முடியுமா

இந்த உருவகத்திலுள்ள குற்றங்கள் இஸ்லாமியர்களிடம் இல்லை என்று
யாராலும் கூற முடியுமா? இந்தக் குற்றங்களில் ஒன்றைக்கூட செய்யாதவர்
இஸ்லாமிய சமுதாயத்தில் பெருவாரியாக உள்ளனர் என்றாவது சொல்ல
இயலுமா? அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். இத்தகைய கோரக் காட்சிகளைக்
கண்டு பெருமானார் (ஸல்) அவர்களின் மனம் எந்தளவு வேதனைப்படும்
பெருமானாரை பெருமைப்படுத்த வேண்டிய கடமை மிக்க நாம் எங்கே
சென்று கொண்டிருக்கிறோம்? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா


இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுளள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.

ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.

ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு அல்லாஹ் எல்லா வளமும் நலமும் நிறைவாக தந்தருள்வானாக. 

BY.   A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக