பக்கங்கள்

செவ்வாய், 31 மார்ச், 2020

அரபு மொழி


மண்ணிலும் விண்ணிலும் மணக்கும் மொழி

கண்ணிலும் கருத்திலும் நிற்கும் 
மொழி 


கம்பீர ஒலி தரும் கான மொழி

நன்நபி இஸ்மாயில் நவின்ற மொழி 

நன்நெறியாளர்கள்  விளைந்த மொழி 

சொன்னயம் பொருள் நயம் நிறைந்த மொழி 

சுந்தர நபிநாதர் சொந்த மொழி

அற்புத கருத்தினை அளிக்கும் மொழி 

அருளிறை அருளிறை அழகுமொழி 

விற்பன்னர் ஆக்கிடும் விந்தை மொழி 

விழுமிய பொருள்தரும் வேதமொழி

சொற்சுவை நிறைந்திடும் சுவன மொழி 

சொல்லில் பல்வளம் உள்ள மொழி 

நற்பொருள் பற்பல நிறைந்த மொழி 

நாமெல்லாம் படித்திட நல்ல மொழி


மேலும் தகவலுக்கு A. காதிர் மீரான் மஸ்லஹி.  9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக