பக்கங்கள்

சனி, 12 நவம்பர், 2022

துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌۖ أُجِيبُ دَعۡوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِۖ فَلۡيَسۡتَجِيبُواْ لِي وَلۡيُؤۡمِنُواْ بِي لَعَلَّهُمۡ يَرۡشُدُونَ

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...

 

பிரார்த்தனை துஆ என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனாம் அல்லாஹ்வை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோடு நேரடியாக பேசும் சந்தர்ப்பத்தை அல்லாஹ் மனிதனுக்கு ஏற்ப்படுத்தி கொடுத்துள்ளான்.

பொதுவாக எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம். அதே நேரம் சில குறிப்பிட்ட இடங்கள், மற்றும் நேரங்களை நபியவர்கள் குறிப்பிட்டு இந்த நேரத்தில் உங்கள் ரப்பிடத்தில் கேளுங்கள் என்று நமக்கு வழிக் தந்துள்ளார்கள்.

அப்படி நபியவர்கள் குறிப்பிட்ட பல நேரங்களில் முக்கியமான நேரங்கள் எதுவென்றால்.

 

லைலதுல் கத்ர் இரவு

இரவின்மூன்றாம் பகுதி.

கடமையானதொழுகைகளுக்குப்பின்,

அதான்- இகாமத்திற்கு இடைப்பட்ட நேரம்.

ஒவ்வொரு இரவிலும் ஒரு குறிப்பிட்ட நேரம்.

பாங்குசொல்லப்படும் போது.

மழை இறங்கும்போது.

அல்லாஹ்வின் பாதையில் வீரர்கள் போரைத் துவங்கும் போது.

வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம், (அந்த நேரம் மாலை நேரங்களின் இறுதி நேரமாகும் என்று பெறும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் குத்பா மற்றும் ஜும்ஆத் தொழுகையுடைய நேரமென்றும் கூறுகின்றனர்.)

உண்மையான எண்ணத்துடன் ஜம்ஜம் நீரைக் குடிக்கும்போது.

ஸஜ்தாவில் இருக்கும் போது.

இரவில் தூக்கத்தை விட்டு எழும்போது. அப்போது ஹதீஸில் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ள துஆவைக் கேட்க வேண்டும்.


உளு செய்து தூங்குகிற நிலையில், இடையில் ஏற்படும் விழிப்பின்போது.

லாயிலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினள் ளாலிமீன்- உன்னைத் தவிர வணக்கத்திற்கு உரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோஅநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்.என்று ஓதும் போது. (அல்-அன்பியா – 21:87)

மவுத்து (இறப்புச்) செய்திக்குப் பின் கேட்கும் துஆ.

தொழுகையின் கடைசி இருப்பில் அத்தஹிய்யாது, ஸலவாத்து ஓதியதற்குப் பின் கேட்கும் துஆ.

அல்லாஹ்வின் மகத்துவம் மிக்க பெயரைக் கூறி துஆ கேட்கும் போது. அந்த மகிமை மிக்க பெயரைக் கூறி அவனை அழைக்கும் போது, அவன் அதற்கு பதில் தருகிறான். அவனிடம் யாசிக்கும் போது அவன் அதை கொடுக்கின்றான்.

ஓரு முஸ்லிம் தமது முஸ்லிமான சகோதரனுக்காக மறைவில் கேட்கும் துஆ போது.

அரஃபா அன்று அரஃபா மைதானத்தில் கேட்கும் துஆ.

ரமளான் மாதத்தில் கேட்கும் துஆ.

திக்ர் மற்றும் உபதேச சபைகளில் முஸ்லிம்கள் ஒன்று கூடி இருக்கும் போது.

சோதனையான நேரங்களில், “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”, “அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபதீ வ அக்லி ஃபிலீ ஹைரம்மின்ஹா”, (நிச்சயமாக நாங்கள் அல்லாஹுவிற்கே சொந்தமானவர்கள்! அவன் பக்கமே நாங்கள் திரும்புகிறோம்! அல்லாஹுவேஎன் சோதனையில் எனக்கு நற்கூலி வழங்கு! எனக்கு சிறந்ததைப் பகரமாகத் தந்திடு!) என்று பிரார்த்திக்கும் போது.

உள்ளத்தில் அல்லாஹ்வின் தேட்டம் அதிகமாகி முழுமையாக மனத்தூய்மை ஏற்படும் போது.

அநீதியிழைக்கப்பட்டவர் தமக்கு அநீதி இழைத்தவருக்கு எதிராக கேட்கும் போது.

தந்தை தனது மகனுக்குச் சாதகமாக அல்லது பாதகமாக கேட்கும் போது.

நோன்பு வைத்திருக்கும் போது நோன்பு துறக்கும் வரை.

நோன்பாளி நோன்பு துறக்கும் போது.

நெருக்கடியான நிலையில் சிக்கிக் கொள்ளும் போது.

நீதமான அரசர் கேட்கும் துஆ போது.

பயணத்தில் இருப்பவர் கேட்கும் போது.

பெற்றோருக்கு உபகாரம் செய்யும் பிள்ளைகள் கேட்கும் போது.

பயணத்தில் இருப்பவர் துஆ கேட்கும் போது.

பெற்றோருக்கு உபகாரம் செய்யும் பிள்ளைகள் துஆ கேட்கும் போது.

உளு செய்ததற்கு பிறகு (ஹதீஸில் கூறபட்ட துஆவைக் ) கேட்கும் போது.

ஹஜ்ஜில் சிறிய ஜமராவில் கல்லெறிந்த பின்.

ஹஜ்ஜில் நடு ஜமராவில் கல்லெறிந்த பின்.

கஅபாவிற்குள் கேட்கும் போது.

(தற்போது, கஅபா கட்டிடதிற்கு வெளியில் வளைவாக கட்டப்பட்டுள்ள அரை மதிற்சுவருக்குள் தொழுவதும் துஆ கேட்பதும், கஅபாவிற்குள் தொழுவதும் துஆ கேட்பதுமாகவே ஆகும்.)

ஸஃபா மலையில்.

மர்வா மலையில்.

முஸ்தலிஃபாவில்.


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

வல்லோன் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்...

 وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌۖ أُجِيبُ دَعۡوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِۖ فَلۡيَسۡتَجِيبُواْ لِي وَلۡيُؤۡمِنُواْ بِي لَعَلَّهُمۡ يَرۡشُدُونَ

 (நபியே!) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்- நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன். ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும். என்னையே நம்பிக்கை கொள்ளட்டும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்.’) (குர்ஆன்- 2 : 186)

என்று கூறுகிறான்.

எனவே நாம் நமது தேவைகள் அனைத்தையும் அனுதினமும் அல்லாஹ்விடம் முறையிட்டு அவனது அன்பையும் பெருத்ததையும் பெற்ற நல்லோர்களில் ஒருவராக நம்மையும் நமது குடும்பத்தினர்களை அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக.

 

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் உங்கள் அனைவருக்கும் ஸலாத்தைக் கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக