பக்கங்கள்

வெள்ளி, 11 நவம்பர், 2022

எது அழகு

 


எனது பெயர் .................................................

நான் இங்கு எது அழகு என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி எனது உரையை துவங்குகிறேன்.

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...

 

இந்த உலகத்தில் அழகானவர்களை நாம் அனைவரும் ரசிக்கிறோம்;

        அழகாக இருக்க நாம் ஆசைப்படுகிறோம்;

        அழகாக இல்லையென்ற ஒரே காரணத்துக்காக பலரை ஒதுக்குகிறோம்;

நீ அழகாக இல்லை என்று நம்மை பிறர் ஏற்காவிட்டால் நம்மை ஒதுக்கினால், மனம் வாடிவிடுகிறோம்.

         ஆனால் உண்மையில் எதுஅழகு ?


சிவந்த நிறமா? கூரான மூக்கா? மீன் போன்ற விழிகளா? வனப்பான உடல் அமைப்பா? வண்ண,வண்ண உடைகளா? வித விதமான சிகை அலங்காரங்களா? விலை உயர்வான நகை அலங்காரங்களா?

         அன்பானவர்களே... இவைகளெல்லாம் அழகுதான். ஆனால், இவைகள் மட்டுமே அழகல்ல.

         குழந்தைகளை அன்போடும், பண்போடும் அரவணைத்து வளர்க்கும் பெற்றோர்கள் அழகு.

           அப்பெற்றோர்களை வயதான காலத்தில் பேணிக்காக்கும் பிள்ளைகள் அழகு.

            மனைவியை மட்டம் தட்டாத கணவன் அழகு.

            கணவனை விட்டுக் கொடுக்காத மனைவி அழகு.

             பெண்களை கண்ணியமாக நடத்தும் ஆண்கள் அழகு.

      நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட  பார்வையுடன் கண்ணியம் காக்கும் பெண்கள் அழகு.

          செய்யும் தொழிலை திறமையுடன் செய்பவர்கள் அழகு.

       தொழிலில் அறத்தையும், நேர்மையையும் இரு கண்களாகப் போற்றுபவர்கள் அழகு.

     கையூட்டு லஞ்சம் வாங்காத கைகளுக்குச் சொந்தக்ககார்ர்கள் அழகு.

       பிறர் மனம் புண்படாமல் பேசும் அதரங்கள் அழகு.

       பிறரை ஊக்கப்படுத்தும் சொற்களுக்குச் சொந்தக்கார்ர்கள் அழகு.

      சாலைகளில் விபத்து நேராவண்ணம் பொறுப்புடன் வண்டி ஓட்டுபவர்கள் அழகு.

                 பிறர் துன்பம் கண்டால் கலங்கும் கண்கள் அழகு.

            அத்துன்பத்தைக் களைந்திட விரையும் கரங்கள் அழகு.

   சமுதாய மேம்பாட்டிற்கு உழைக்கும் மனிதர்கள் யாவரும் அழகு.

          பணிவாக இருக்கும் பண்பாளர்கள் யாவரும் அழகு.

                  மலர்ந்த முகமும், இனிய சொல்லும் கொண்ட மாந்தர்கள் எப்போதும் அழகு.

           இதன்படி வாழும் மாந்தர்களா நீங்கள் ?

உணர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள்தான் உண்மையிலேயே அழகு.

 

நாட்டுக்கு அழகு வளமை.

நாவிற்கு அழகு இன்சொல்.

வீட்டுக்கு அழகு வெளிச்சம்.

வீதிக்கு அழகு ஒழுங்கு.

காற்றுக்கு அழகு மென்மை

கடலுக்கு அழகு அலைகள்.

ஆற்றுதகு அழகு ஒடடம.

ஆணுக்கு அழகு வீரம்.

பெண்ணுக்கு அழகு கற்பு.

பேச்சுக்கு அழகு உறுதி.

கண்ணுக்கு அழகு கருணை.

கல்விக்கு அழகு அடக்கம்.

நீருக்கு அழகு சுத்தம்.

சங்குக்கு அழகு வெண்மை.

நிலத்திற்கு அழகு விளைவு. நெற்றிக்கு அழகு ஸஜ்தா செய்த அடையாளம்.

 

என்று கூறி உங்களிடமிருந்து ஸலாம் கூறி விடை பெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக