பக்கங்கள்

வியாழன், 28 ஜூலை, 2022

மார்க்கக் கல்வியில் பெரிதும் ஆர்வம் உடையோர் பெண்களே -3

 


அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலிஹில் முஜ்தபா வ நபிய்யிஹில் முஸ்தபா சல்லல்லாஹு அலைஹிவ வசல்லம்.. அம்மா பஃத்..

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.. சபையோர்களே.. பெரியோர்களே.. நியாயமான நடுவர் அவர்களே.. எனக்கு முன் ஆண்கள் அணி சார்பாக பேசிய ______ அவர் சின்னப்புள்ளத்தனமா இருப்பார் என்று நினைச்சு கூட பாக்கல..

நடுவர் அவர்களே..?

அவருக்கு மட்டும் தான் அற்புதமா கேள்வி கேட்கத் தெரியும் நினைத்தாரா..?

நாங்களும் கேள்வி கேட்போம்..

குர் ஆனில்ஆண்கள் னு குறிக்கும் வார்த்தை இம்ராவூன் என்பது வெறும் 6 இடங்களிலும் பெண்களை குறிக்கும் வார்த்தை இம்ரஅதுன் என்ற சொல் 26 இடத்தில் வருகிறது அது போல

ரஜுலுன்என்ற ஆண்களை குறிக்கும் வார்த்தை குர்ஆனில் வெறும் 28 இடங்களிலும் அதன் எதிர்ச்சொல்நிஸாஎன்ற வார்த்தை 56 இடங்களிலும் வருகிறது நடுவர் அவர்களே..!

ஆறு பெரிதா இல்ல 26 பெரிதா? அதே மாதிரி 28 பெரிதா இல்ல 56 பெரிதா? இன்னும் இன்னும் நிறைய பெண்களுக்கு இறைவன் வழங்கும் முக்கியத்துவத்தை சொல்லிக்கொண்டே போகலாம் இவையெல்லாம் எதைக் காட்டுகிறது சொல்லுங்க நடுவர் அவர்களே..!எதைக் காட்டுகிறது..

ஃபிர்அவ்னின் மனைவி அன்னை ஆசியா அவர்கள் ஆர்வம் மிகுந்த பெண்ணல்லவா..?

மர்யம் அலைஹி வஸல்லம் அவர்களைப் போன்ற மார்க்க ஆர்வம் மிகுந்த பெண்ணை பார்க்க முடியுமா?

அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா கல்வி ஆர்வத்தால் தானே அர்க்கம் அவர்களின் வீட்டிற்கு நபியை அழைத்துச் சென்று விளக்கம் கேட்டு வந்தார்கள் நடுவர் அவர்களே..

சமீபத்திலே ஒரு மாத இதழில் வந்த ஒரு செய்தி 2019 இலும் பெண்கள்தான் கல்வி ஆர்வத்தில் அதுவும் மார்க்க கல்வி ஆர்வத்தில் முதலிடம் என்பதைக் காட்டுகிறது..

ஆம் நடுவர் அவர்களே..! ஒரு மணப்பெண் தன் மகர் தொகையை பணமாகவோ நகையாகவோ வேண்டாம் என்று மறுத்து மார்க்க நூல்களை மஹராக கேட்டு புரட்சி செய்து செய்திருக்கிறார்.

இப்படிப்பட்ட பெண்கள் இருக்கும் சமுதாயத்தில் நாங்கள் சொல்வது தானே சரி.

எங்களுக்கு ஹஜ்ரத் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள் அவருடன் ஓதின நண்பருக்கு பணம் அதிகம் செலவழிக்கும் பழக்கமாம்.. வீட்டில் இருந்து தரும் பணத்தை மாத ஆரம்பத்திலேயே செலவழித்து விட்டு மறுபடியும் வீட்டிற்கு பணம் கேட்டு கடிதம் எழுதுவாராம்.. அவர்கள் வீட்டில் சிக்கனம் பற்றி விரிவான தபால் ஒவ்வொரு முறையும் எழுதுவார்களாம்.. அந்த தபால்களை சேர்த்து வைத்து சேர்த்து வைத்து ஒரு கட்டத்தில் அது பேப்பர் கட்டு அளவிற்கு மிகைத்துவிடும் அதை எடைக்கு போட்டு வரும் பணத்தை செலவழிப்பார்.. இப்படித்தான் ஆண்களின் மார்க்க கல்வி ஆர்வம் மிக மிகக் குறைவு..

இறுதியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன் தமிழ்நாட்டையே எடுத்துக் கொள்வோம் இங்குள்ள ஜும்ஆ பயான் முடிகிற வரை ஆண்கள் பகுதி காத்தாடுது இல்லைனா காத்தாடி Fan ஆடுது..

ஆனால் பெண்கள் பயான் அன்று கூட்டம் அலை மோதுது..

ஆண்கள் மதரஸா ஊருக்குக் ஒண்ணு இருக்கு.. ஆனா என்ன பிரயோஜனம்.. ஒரு கிளாஸ்ல ஒருத்தர் தானே இருக்காங்க.. ஆனா நிஸ்வான் மதரஸாக்கள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தாலும் இடம் இல்லை என்று திருப்பி அனுப்பி வைக்கும் நிலையில் மாணவிகளின் கூட்டம் நிறைந்து கிடக்கு..

நடுவர் அவர்களே…? சின்னத்திரையில் டெலிவிஷன் ல இஸ்லாமிய புரோகிராம் எத்தனை மணிக்கு எந்த டீவில ஒளிபரப்புகிறார்கள் என்று கேளுங்க ஆண்கள் பேன்னு முளிப்பாங்க..

காரணம் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு..

அதேசமயம் பெண்களைப் பாருங்கள் முழுசா மார்க்க நிகழ்ச்சி பார்ப்பதோடு அதிகமதிகம் கேள்வி கேட்பவர்களும் அவங்கதான்..

ஜும்ஆ தினத்தில் நிஸ்வான் மதரசாவில் தஸ்பீஹ் தொழுகை தொழுவதற்காக இன்று எவ்வளவு கூட்டம் நிறைந்து கிடக்கு என்பது நம் அனைவருக்கும் தெரியும்..!

ஆனால் ஜும்ஆ தினத்தில் பள்ளிவாசலில் பயான் முடிந்து குத்பா ஓதி முடிக்கும் போதுதான் இன்று நிறைய ஆண்கள் பள்ளிவாசலுக்கு அரைகுறை தொழுகைக்கு வருகிறார்கள் நடுவர் அவர்களே..!

நடுவர் அவர்களே…? எனக்குத் தெரிஞ்சு நர்கீஸ் என்று ஒரு மாத இதழ் தான் இருக்கு.. ஆனால் எல்லா இஸ்லாமிய மாத இதழ்களை சராசரியாக ஆய்வு செய்து பார்த்தால் கேள்வி விமர்சனம் அனைத்தும் பெண்களால் தான் எழுதப்பட்டிருக்கும்..

நடுவர் அவர்களே…! நடுநிலையாக இருக்க வேண்டிய நீங்கள் எங்கள் அணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க வேண்டிய நிர்ப்பந்த சூழல் ஏற்பட்டிருக்கு என்ன செய்ய..

நீதிக்கு பேர் போன உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயருள்ள என் அணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக