பக்கங்கள்

செவ்வாய், 9 டிசம்பர், 2014

ஆடை அழுக்கிலும் பாடம் அறியலாம்





ஆடைகளில் அழுக்கு படியும். சிலர் அன்றாடம் தூய்மை செய்து அணிவர் , சிலர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தூய்மை செய்வர் , சிலர் வாரம் ஒருமுறை தூய்மை செய்வர்.

 
அன்றாடம் தூய்மை செய்யும் ஆடையில் அழுக்கு எளிதில் நீங்கிவிடும் . இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சலவை செய்கிற துணியில் அழுக்கு நீங்க சற்று கூடுதல் முயற்சி செய்ய வேண்டும் , வாரம் ஒருமுறை துவைத்தால் மிகவும் சிரமப்பட்டே அழுக்கை நீக்க முடியும் அளவுக்கு மீறி முயற்சி செய்தால் ஆடை கிழி யுமே தவிர அழுக்கு நீங்காது.


 

அதுபோலத்தான் தீய பழக்கங்களும். தீய பழக்கங்கள் நம்மிடம் சேரும் போது அதை உடனே அகற்றிவிட வேண்டும் . அப்படி செய்தால் அதை உடனே நீக்க முடியும். மது அருந்துதல் , புகை பிடித்தல் , திருடுதல் , பொய் சொல்லுதல், விபச்சாரத்தில் ஈடுபடல் போன்ற தீய பழக்கங்கள் பற்றும்போதே நீக்கினால் எளிதில் நீக்கிவிடலாம் . அவ்வாறு செய்யாது நீடித்த பழக்கமாக ஒருவரிடம் படிந்து , பதிந்து விடுமே ஆனால். அதை எவ்வளவு முயன்றாலும் அகற்றுவது கடினம் . அளவுக்கு மீறி முயன்றால் ஆள் அழிவானே ஒழிய அப்பழக்கம் நீங்காது .

 

ஆக எதையும் ஆரம்பத்திலேயே கட்டுப் படுத்துவது அறிவார்ந்த செயல் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக