போர்த்துவதுவோ... கண்ணடைப்பதுவோ அல்ல உறக்கம், நடந்ததுவும்... நடப்பதுவும்... நடக்க இருப்பதுவும்- என நர்த்தனமாடும் மனச் சலனங்கள் ஓய்வதே... உறக்கம்! திறந்த கண்களும்... பரந்த பார்வையும்... உரத்த நோக்கும் அல்ல விழிப்பு, பிறர் வலி உணர்தலும்... உணர்ந்து நீக்கலும்... நீக்கி இருத்தலுமே விழிப்பு! காண்பதும்... கேட்பதும்... நுகர்தலும்... மூச்சிழுத்து விடுவதும் அல்ல வாழ்க்கை நினைப்பதும்... செய்வதும்... செய்ததை உலகம் நினைத்திருக்கச் செய்வதுமே வாழ்க்கை! உயிர் கழிதலும்... உணர்வழிதலும்... மெய் வீழ்தலும்... அல்ல மரணம், உயிர்களுக்கு உதவாமல்... இல்லாமலிருத்தல்போல்... இருப்பதே... மரணம்! தெரியாதவை தெரிதலும்... புரியாதவை புரிதலும்... விளங்காதவை விளங்கலும்... அல்ல ஞானம், தெரிந்ததை தெரிவித்தலும்... புரிந்ததை புரியவைத்தலும். விளங்கியதை விளக்குவதுமே... ஞானம்! மயக்கம் தெளி, யதார்த்தம் அறி! -சபீர் |
ஞாயிறு, 31 ஜூலை, 2011
யதார்த்த மயக்கம்!
சனி, 30 ஜூலை, 2011
தராவிஹ் 20 ரக்அத்கள்
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் ரமலானில் வித்ரைத் தவிர 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு
பைஹகி 2-499, ஷரஹுன்னியாயா 1-104
உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அன்னவர்கள் காலத்தில் மக்கள் 23 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர்.
யஸீத் இப்னு ரூமான்
முஅத்தா, பைஹகி 1-496, ஷரஹுன்னியாயா 1-104
ஹஸ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் மக்கள் (சஹாபாக்கள்) 20 ரகஅத்துக்கள் தொழுபவர்களாக இருந்துள்ளனர்.
சாயிப் இப்னு யஸீத்
ஸுனன் பைஹகி , பத்ஹுல் பாரி , 5 - 157, ஐனி (புகாரி விரிவுரை) 11 - 127
அமீருல் முஹ்மினீன் ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காரிகளை அழைத்து அவர்களில் ஒருவரை மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழுவிக்கும் படி பணித்தார்கள். வித்ரை ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுவித்தார்கள்.
அப்துர் ரஹ்மான் சலமி
சுனன் பைஹகி
கலீபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) , கலீபா உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு), கலீபா அலி (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோரின் காலத்தில் தராவிஹ் 20 ரகஅத்துக்களே நடைமுறையிலிருந்து இமாம் ஷாபி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) மக்காவில் தராவிஹ் இருபது ரகஅத் நடைமுறையிலிருப்பதை நான் கண்டேன் என்றும் கூறியுள்ளார்கள்.
ஜாமிஉத் திர்மிதி
வியாழன், 28 ஜூலை, 2011
தாய்மை (கவிதை)
ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு! ஒரு கவளம் சோற்றைக் கூட - அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..! ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்..! எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும் கருவறையை விடப் பாதுகாப்பான அறையை குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..? இறைவனின் வல்லமைக்கு இதனை விட சான்று வேண்டுமா..? பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..! வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் - ஆனால் இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..! குழந்தையாய்... சிறுமியாய்... குமரியாய்... மனைவியாய் வளரும் உறவு தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..! கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்…! நள்ளிரவில் குழந்தையின் அழுகை எல்லோருக்கும் எரிச்சல் தாய்மைக்குத்தான் பதட்டம்..! வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்தால் அனைவரும் சிரிப்பார்கள் - ஏன் மனைவி கூட மறைவாய் சிரிப்பாள் - ஆனால் சிரிக்காதவள் தாய் மட்டுமே...! தாய்மையின் மகத்துவத்தை எத்தனை தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம் - எல்லாவற்றையும் விட அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள் தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறதென்று...!
கவிதை: வி.அ.உவைஸ்
|
ஒரு பதிவரின் கேள்வி!
சிந்தனைகள் சேர்த்துவைத்தேன் சில்லறையாகச் சில தொடுப்புகளும் தேக்கிவைத்தேன்! வலைப்பதிவர் வரம் வாங்கி வக்கணையாய் வலம் வந்தேன் வேலைநேரம் ஓய்ந்தபின்னர் வலையினுள்ளே நான்கிடந்தேன்! காகிதத்தின் முகத்தினிலே கிறுக்கிவைத்த எண்ணங்களை காலவோட்ட சுழற்சியிலே தொலைத்துவிட்டு நின்றவன்... கல்வெட்டின் தரத்தினிலே தளம் கிடைக்கப் பதிந்துவைத்தேன் வண்ணவண்ணப் பூக்களாலும் வலைப்பூவை அலங்கரித்தேன்! கவிதையில் கட்டுரையில் கருத்துகளைச் சொல்லிவைத்தேன் இலட்சியமும் இனியவையும் இடுகைகளாய் இயம்பிநின்றேன்! பின்னூட்ட அன்பர்களால் புரத ஊட்டம் உண்டேன் பத்திரிகைப் பரவசம் ப்ளாக்குகளில் பெற்றேன்! இணையவலம் இல்லையெனில் இதயபலம் குறைந்துவிடும் ஒற்றையென உலகத்திலே ஒதுங்கியேதான் போவேன். இத்தனையும் இருந்தும் எழுகிறதொரு கேள்வி இணைய உலகே சொல்: "நீயி நல்லவனா கெட்டவனா?" கேள்வி கேட்ட பதிவரை கேலியாகப் பார்த்து இணய உலகு இயம்பியசொல் இதயத்திலே தைத்தது! "நாயனின் தீர்ப்பு நாளில் நரகமுண்டு சொர்க்கமுண்டு நானிலத்தின் காரியத்தில் நல்லதுண்டு தீயதுண்டு, நல்ல எண்ணம் கொண்டோர் நன்மை கொள்வர்; தீமை கொல்வர் வன்மை உள்ளம் கொண்டோர் தீதைத் தானே தேர்ந்து கொள்வர்! நன்மை-தீமை கலந்தியங்கும் நானிலத்தில் நான்மட்டுமென்ன விதிவிலக்கா? சொல்லு! நான் நல்லவனா கெட்டவனா? தெரியாத உன் வினாவுக்கென் தெளிவான விடையுண்டு: தெரியலையேப்பா, எனக்குத் தெரியலையே!" - சபீர் |
பயிரை ஊன்றிக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி)அவர்களைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், "அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்?" என்று கேட்டார்கள். அதற்கவர்கள், "நான் எனக்காக ஒரு கன்றை ஊன்றுகிறேன்" என்றார்கள். "இதனை விட சிறந்த பயிரை உமக்கு நான் சொல்லித் தரவா?" என்று கேட்க, "சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே!என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுவீராக!இவை ஒவ்வொன்றிற்கும் சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படும்" என்றார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :இப்னுமாஜா 3797)
என் இனிய இஸ்லாமிய உள்ளமே,
உனக்கு என் மனம் நிறைந்த சாந்திப்பூக்கள்…
அஸ்ஸலாமு அலைக்கும்.
"அல்லாஹ்வின் நினைவில் நனைந்திருக்கும் நாவுகள் பாக்கியம் பெற்றவை" என்று எங்கோ வாசித்ததாக உன் மடலில் எழுத்துக் கோர்த்திருந்தாய்.
திக்ர் என்றால் அகில உலகையும் படைத்தாளும் இரட்சகனை ஞாபகிப்பதாகும்.
அந்த இனிய திக்ர் பற்றி எனக்குத் தெரிந்த சில விடயங்களை, எனக்கும் உனக்குமாய் இங்கு ஞாபகப்படுத்த ஆசைப்படுகிறேன்.
அல்குர்ஆனின் சில வார்த்தைகளை ஓசை நயத்துடன் ஓதுவதை மட்டும் திக்ர் என்பதாய் விளங்கி வைத்திருக்கும் ஒரு சமூக அமைப்பில், திக்ரின் உண்மை வடிவமும் நோக்கமும் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது.
உதடுகளில் சிறகடிக்கும் வார்த்தைகள் உள்ளங்களைத் தட்ட முடியாமலிருக்கும் சோகம் நேர்ந்திருக்கிறது.
அல்லாஹ்வின் பார்வையில் எடை கனக்கும் திக்ர் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும்.
திக்ர் என்ற அறபுச் சொல்லின் அர்த்தம் நீ அறிவாயா?
திக்ர் என்பது அல்லாஹ்வின் சொல்லான அல்குர்ஆனையும் அதை அழகுடன் ஓதுவதையும் குறிக்கும்…
திக்ர் என்பது முழுவதுமாய் சிரம் தாழ்த்தும் தொழுகையைக் குறிக்கும்.
உளம் உருகி இருகரம் ஏந்தி அல்லாஹ்வைப் பிரார்திப்பதும் திக்ர்தான்.
இறை புகழ் பாடுவதால் ஈரமாயிருக்கும் நாவும் திக்ரில்தான் திளைத்து இருக்கிறது.
அறிவைத் தேடுவதும் அதனைத் தெளிவாகக் கற்பிப்பதும்கூட திக்ர் என இஸ்லாம் சொல்கிறது.
படைத்தாளும் இறைவனின் ஏவல்களை ஏற்று நடப்பதும் விலக்கியவை தவிர்த்தலும் திக்ரின் இன்னொரு வடிவம்தான்.
உள்ளத்தால் அல்லாஹ்வை எண்ணிப் பார்ப்பதும் திக்ர்தான்.
திக்ரின் உள்ளடக்கத்தை இப்படிச் சொல்கிறார் ஓர் இஸ்லாமிய அறிஞர்:
கண்களின் திக்ர் அல்லாஹ்வை நினைத்து அழுவதிலிருக்கிறது.
செவிகளின் திக்ர் அல்லாஹ்வின் புகழை செவிமடுப்பதிலிருக்கிறது.
நாவின் திக்ர் அல்லாஹ்வைப் புகழ்வதிலிருக்கிறது
கைகளின் திக்ர் அல்லாஹ்வாக்காய் கொடுப்பதிலிருக்கிறது.
உடலின் திக்ர் அல்லாஹ்வுக்கு நாணயமாய் நடப்பதிலிருக்கிறது.
உள்ளத்தின் திக்ர் அல்லாஹ்வின் மீது அச்சமும் நம்பிக்கையும் வைப்பதிலிருக்கிறது.
ஆன்மாவின் திக்ர் அல்லாஹ்வை முழுவதுமாய் ஏற்று அவனுக்காய் வாழ்வதிலிருக்கிறது.
மொத்ததில் ஒரு முஸ்லிமின் வாழ்க்கையே திக்ர்தான் என்ற பேருண்மையைப் புரிந்து கொள்….
உன்னை விட ஒருவன் அல்லது ஒருத்தி அழகில், செல்வத்தில், குடும்பப்பாரம்பரியத்தில் அல்லது செல்வாக்கில் உயர்ந்திருப்பதைக் கண்டால் உள்ளத்தின் ஆழத்திலிருந்து துடித்து வரட்டும் ‘மாஷா அல்லாஹ்’
பொறாமையின் மஞ்சனித்த உன் விழிகள் அமைதி கொள்ளும்.
இனியில்லை என்று அழுக்கு உடையும் பசியடைத்த கண்ணுமாய் வருகிறானே அந்தக் குருட்டுப்பிச்சைக்காரன், அவனைப் பார்….
உன் உள்ளம் அல்லாஹ்விடம் சிரம் தாழ்த்தும்.
அந்த நீலம் பூசிய வானம் பார்…
கிரணக்கரம் நீட்டும் நிலவின் புன்னகை பார்….
அந்திக் குருவியின் சிறகைப்பார்…
புதிய குழந்தையின் சிலிர்ப்பு பார்�….
சொல்!
அல்ஹம்துலில்லாஹ்!
சொல்!
அல்லாஹு அக்பர்!
உரக்கச்சொல்!
அந்த மலை முகடுகள்
அந்த மேகப்பஞ்சு…..
காற்று துளைத்துச் செல்லும் விமானம்
எல்லாம் எதிரொலிக்கட்டும்��….
உண்மையான திக்ரின் வலிமை புரியாததால்தான் இன்று வேறு விடயங்கள் எம் திக்ராகி விட்டிருக்கும் அவலம் நேர்ந்திருக்கிறது.
அல்லாஹ்வின் நினைவு பயிரிடப்பட வேண்டிய உள்ள நிலங்களில் இன்று களைகள் ஓங்கித் தளைத்திருக்கின்றன.
களைகள்தாம் பயிர்கள் என்றும் பயிர்தாம் களைகள் என்றும் சடவாத உலகம்
சத்தியம் செய்து என்னையும் உன்னையும் நம்பச் செய்வதில் வெற்றி கண்டிருக்கிறது.
அல்லாஹ்வைப் புகழ வேண்டிய நாவுகளில் ஆபாச வார்த்தைகள், விரசமான கேலிகள்…
அடுத்தவன் உயர்வில், சந்தோஷப் படாது தீப்பிடித்து எரியும் இதயங்கள்….
கொடுப்பது எப்படிப் போனாலும் சுரண்டி எடுப்பதிலேயே சந்தோசப் படுகின்ற கரங்கள்….
சுஜூதில் தலை வைத்து விட்டு, உலகம் முழுவதும் சுற்றி வரும் உள்ளம்.
இப்படி இப்படியாய்….
இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு, உதட்டில் முணுமுணுப்பாய் ஒட்டியிருக்கும்‘அல்ஹம்துலில்லாஹ்’வுக்கும் உருட்டும் தஸ்பீஹ்மணியில் தேய்ந்து போயிருக்கும் ‘சுப்ஹானல்லாஹ்’வுக்கும் என்ன பெறுமதி இருந்து விடப்போகிறது?
ஒன்று புரிந்து கொள்…..
கிழிந்து போன உடைகளுடன் அரேபியப் பாலைவனங்களிலே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மனிதர்களை ஆட்சிப் பீடத்தில் அமரச் செய்தது இந்த திக்ர்தான்….
ஹமாஸின் இதயத்துடிப்பு அஹ்மத் யாஸீனுக்கு நரைத்த வயதிலும் நரைக்காத உள்ளத்தைத் தந்தது இதே திக்ர்தான்….
கல்வியமைச்சைத் தூக்கி எறிந்து விட்டு தூக்குக்கயிற்றுக்கு கழுத்தை நீட்டும் துணிவை செய்யித் குதுபுக்கு எது கொடுத்தது?
திக்ர்��…
திக்ர் ... ஒரு வாளை விட வலிமையானது…
ஒரு பாறையின் நெஞ்சையும் ஈரப்படுத்தக் கூடியது…
என் இனிய நண்பா,
அர்ஷில் நிழல் பெறும் ஏழு பேரில் அல்லாஹ்வை நினைத்து தனிமையில் விழிநீர் சிந்திய இளைஞனை எண்ணிப்பார்…
நமக்கும் அந்தப் பாக்கியம் வேண்டாமா?
அல்லாஹ்வை எமது உள்ளங்களிலிருந்து அழித்து விடுவதற்காய் அத்தனை ஊடகங்களும் அணிசேர்ந்திருக்கின்றன.
தொடும் தூரத்தில் நீண்டிருக்கும் துப்பாக்கிக் குழலை அறியாது துள்ளி விளையாடும் குழந்தைகளாய்….நானும் நீயும் சடவாதத்தின் முன் சிரம் தாழ்த்திக் கொண்டிருக்கும் துக்கத்தை வெட்கம் விட்டுச் சொல்கிறேன்.
பொறுத்தது போதும்…
இறந்து கிடந்த உள்ளங்களை அல்லாஹ்வின் நினைவு கொண்டு உயிர்ப்பிப்போம்.
மெல்லிய பனிதூவும் அதிகாலைகளில் அல்லாஹ்வை நினைத்து உயிர் ஏங்கி அழட்டும்…
அறிவைத் தேடுவதிலும் அதனைக் கற்பிப்பதிலும் எமது உள்ளங்கள் தாகிக்கட்டும்.
அல்லாஹ்வின் தீன் இந்தப்பூமியில் நிலை நாட்டப்பட முன் எமது இதயங்களில் விதையாகி வேர் விட்டு விருட்சமாய் வளர வேண்டும்.
இனியவனே,
வா
மீண்டுமொருமுறை ஓங்கிச் சொல்வோம்
அல்லாஹு அக்பர்
- சமீலா யூசுப் அலி - இலங்கை
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)