திங்கள், 20 ஜனவரி, 2025

எனக்கு மட்டும் தான் நடக்குதா..

 


அவசரமா பெட்ரோல் அடிக்க போனா...


பெட்ரோல் பங்குல நமக்கு முன்னாடி இருக்கிறவன் டேங் மூடி திறக்க முடியாம தடுமாறிட்டு இருப்பான் ..


ஏடிஎம்ல பணம் எடுக்கப் போனா


அங்க ஒருத்தன் ரொம்ப நேரம் நின்னு நோண்டிட்டு இருப்பான்.

சிக்னல் விழுந்தவுடனே எல்லாருமே போனாலும், நமக்கு முன்னாடி இருக்கிறவன் வண்டிய ஆப் பண்ணிட்டு, ஸ்டார்ட் பண்ணிட்டு இருப்பான் ..


ஹெல்மெட் போடாம மறந்துட்டு வந்த டைம்ல தப்பிச்சு போயிடலாம்னு பார்த்தா, நமக்கு முன்னாடி போறவன் பிரேக் அடிச்சு, நம்மள நிறுத்தி போலீஸ் கிட்ட புடிச்சி கொடுத்துட்டு போவான்.


டோல் கேட்ல எல்லா லைனுமே போகும். நமக்கு முன்னாடி வந்தவன் காசு தராம எதாவது ஒரு கார்டை காட்டி சண்டை பண்ணிட்டு இருப்பான் ...


ஆம்லேட் ஆர்டர் பண்ணி அரைமணி நேரம் வெயிட் பண்ணிட்டு இருப்போம். சப்ளையர் ஆள் தெரியாம பக்கத்துல இருக்கிறவனுக்கு வச்சிட்டு, சார் ஆம்லேட் கேட்டீங்களே, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இப்ப போட்றலாம்னு சொல்லுவான் ..


பேங்க் மேனேஜர பார்க்கப் போனா, ஒருத்தன் உட்கார்ந்து ஊர் கத பேசிட்டு இருப்பான்..


பஸ்ல நமக்கு பின்னாடி வந்தவன், அடுத்த ஸ்டாப்ல இறங்க வேண்டியவன் சீட்ட புடிச்சி உட்கார்ந்துக்குவான்.


டீக்கடை மாஸ்டர் தூள் மாத்தி பத்து டீக்கு அப்புறம்தா நமக்கு டீ குடுப்பான்..


சூடா வடை இருக்குன்னு பார்த்தா...


நமக்கு முன்னடி ஒருத்தன் விருந்தாடி வந்திருக்காங்கன்னு அம்பது வடையை பார்சல் வாங்குவான்.


பந்தியில எழுந்திருக்கட்டும் உட்காருவோம்னு வெயிட் பண்ணா...


மாப்ள இங்க வா நான் எந்திருக்க போறேன்னு இன்னொருத்தரை கூப்பிட்டு உட்கார வச்சிட்டு போவான்...


இதெல்லாம் எதேச்சையா நடக்குதா..!!??


இல்ல எனக்கு மட்டும் தான் நடக்குதா…


பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

மதரஸா மேடை நிகழ்ச்சிகள்.

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

நண்பா..அதை விட்டு விடு..(கதை)

 

ஆற்றில் வெள்ளம்கரை புரண்டு ஓடுகிறது.இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை.எப்படி அக்கரைக்குப்போவது?


இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும்.ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. 


இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.


அடுத்தவன் பார்த்தான்.நமக்கு ஒரு ‘வால்’கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை திணறியது 


ஒரு கட்டத்தில் நாய்,‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.விளைவு _இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் போக வேண்டிய திசை வேறுபோய்க் கொண்டிருக்கிற திசை வேறு.


கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள்.சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.


ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? 


நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்! 


ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது.உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை.நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான் கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்  


‘‘நண்பா...கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை...அதை விட்டுவிடு!’’


ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது. ஏன்னா,இது கம்பளி மூட்டை இல்லே.கரடிக் குட்டி!’’


தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள். சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள். 


தென்கச்சி கோ.சுவாமிநாதன் உரையிலிருந்து ...


ர.ரா

சனி, 18 ஜனவரி, 2025

அவதூறு பேசாதே.

 


இமாம் மாலிக் இப்னு அனஸ் ரஹிமஹுழ்ழாஹ் அவர்களின் காலத்தில் நடந்த ஒரு ஆச்சரியமான சம்பவம் மதீனாவில் ஒரு பெண் வஃபாத்தாகின்றாள். 


ஜனாஸாவை குளிப்பாட்டி, கஃபனிடுவதற்கு பெண்கள் ஒன்று கூடுகின்றனர். அப்போது அந்த இடத்திற்கு ஒரு பெண் வருகின்றாள்.


"இவள் ஒரு விபச்சாரி!" என்று ஜனாஸாவை பார்த்துக் கூறியவாறு ஜனாஸாவின் பிற்தட்டில் கையை வைக்கின்றாள்.


என்ன ஆச்சரியம்! அவளின் கை ஜனாஸாவின் பிற்தட்டுடன் பலமாக ஒட்டிக் கொள்கின்றது. அவள் எவ்வளவோ முயற்சித்தும் கையை ஜனாஸாவின் பிற்தட்டிலிருந்து எடுக்க முடியவில்லை.


ஜனாஸாவை குளிப்பாட்டி, கஃபனிட வந்த பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சிக்கின்றனர். கொஞ்சமேனும் அசைக்க முடியவில்லை.


விடயம் வெளியேப் பரவுகின்றது. அப்போதைய மதீனா கவர்னரின் காதுக்கும் செல்கின்றது. அவர் உடனடியாக ஆலிம்களை ஒன்று கூட்டி, "இதற்கு என்ன செய்வது?" என்று வினவுகின்றார்.


ஆலிம்களும் இரண்டு வெவ்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். 


1. அது ஒரு மைய்யித். உயிரற்ற ஜடம். ஆகவே, ஜனாஸாவின் பிற்தட்டிலிருந்து சிறிய ஒரு பகுதியை வெட்டி அகற்றி அந்த பெண்ணின் கரத்தைப் பாதுகாப்போம்.


2. அது ஒரு மைய்யித். அதனால் அதனை நோவினைச் செய்யக் கூடாது! அது பாவம்! அந்தப் பெண்ணின் கரத்தைத் துண்டிப்போம்.


கவர்னர் குழம்பிப் போகின்றார். "என்னதான் செய்வது?" என்று யோசிக்கின்றார்... சட்டென தெளிவு பிறக்கின்றது. "இமாமுல் மதீனா இமாம் மாலிக் ரஹிமஹுழ்ழாஹ் அவர்களிடம் போய் ஃபத்வா கேட்போம்" என்று விரைவாகப் போகின்றார். 


விடயத்தை அறிந்துக் கொண்ட இமாம் மாலிக் ரஹிமஹுழ்ழாஹ் அவர்கள்:


"ஜனாஸாவிலிருந்து எந்தவொரு பகுதியையும் வெட்டி அகற்றக் கூடாது! அதே சமயம் அந்தப் பெண்ணின் கரத்தையும் துண்டிக்கத் தேவையில்லை! அந்தப் பெண் ஜனாஸாவாக இருக்கின்ற அப்பாவிப் பெண்ணின் மீது அவதூறு சுமத்தியுள்ளாள். அதனால் அந்த மைய்யித் அதன் உரிமையைக் கேட்கின்றது. அவதூறு சுமத்தியதற்கான தண்டனையான எண்பது கசையடிகளை உடனடியாக நிறைவேற்றுங்கள். இன்ஷா அழ்ழாஹ், எல்லாம் சரியாகும்!"


என்று கூறினார்கள்.


உடனே, அந்தப் பெண் வரவழைக்கப்பட்டாள். கசையடி தண்டனை ஆரம்பமானது. எழுபத்தொன்பது கசையடிகள் வழங்கப்பட்டு விட்டன. எந்தவொரு மாற்றமும் இல்லை. எண்பதாவது கசையடி அடிக்கிறார்கள். பிற்தட்டுடன் ஒட்டிய கரம் பிரிந்து வருகின்றது. சுப்ஹானழ்ழாஹ்!


[இர்ஷாதுஸ் ஸாரி ஃபீ ஷர்ஹ் ஸஹீஹ் புஃகாரி லி இமாமி கஸ்தலானி]


அவதூறு!!! பெரும் பாவங்களில் ஒன்று. அதிலும் கற்புள்ள; பத்தினித்தனமான பெண்கள் மீது அவதூறு சுமத்துவது பாவத்தில் இன்னும் கனமானது! அவதூறு சுமத்தப்பட்டவரிடம் மன்னிப்புக் கேட்டு தௌபா செய்யா விட்டால் ஈருலகிலும் இழிவும், அழிவும், நாசமும் நிச்சயம்!


பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

சிந்திக்க தூண்டும்  சிறு நிகழ்வுகள்.

வெள்ளி, 17 ஜனவரி, 2025

தீமை எதனால் விளைகின்றது.

 


ஒரு தடவை இறைநேசச் செல்வர் மாலிக் இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் இவர்களிடம் வந்து, "மக்களுக்கு எதனால் தீமை விளைகின்றது?” 

என்று வினவினர்.


 அதற்கு இவர்கள், "அவர்களின் உள்ளம் இறந்து விடுவதால்" என்று விடையிறுத்தார்கள்.

செவ்வாய், 14 ஜனவரி, 2025

உறவினர்களே... (கருத்தரங்கம்)

 


இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது உறவினர்களே! 


நடுவரவர்களே!


ஒரு காலம் இருந்தது. அந்த காலத்திலே மனிதன் இலைகளையும், தழைகளையும் உண்டு வந்தான். ஆனால் காலத்தினுடைய சூழல்ச்சியின் காரணமாக பல அருசுவையான உணவுகளை உண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.


அதுபோன்று ஒரு காலம் இருந்தது மனிதன் இலைகளையும், தழைகளையும் ஆடைகளாக அணிந்து வாழ்ந்து கொண்டு இருந்தான். பிறகு ஒரு காலம், இப்ப இருக்கிறது. நாகரீக உடையிலே உடையணிந்து அழகாக காட்சி தரக்கூடிய நிலையிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


அதுபோன்று ஒருகாலம் இருந்தது. மனிதன்; குகைளிலே வாழ்;ந்து கொண்டு இருந்தான். ஆனால் இன்ற நாகரீகத்தின் உச்சியிலே அழகான மாளிகையிலே வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.


இதை நான் எதற்கு சொல்ல வருகிறேன் என்றால்...


ஒரு காலம் இருந்தது உறவு என்பது இன்பமாக இருந்தது; உறவு என்பது மகிழ்ச்சியாக இருந்தது; உறவு என்பது சந்தோஷத்தை வழங்க கூடியதாக இருந்தது. அதனால் தான் ஹழ்ரத் லூத் (அலை) தம் சமுதாயத்திலே மார்க்க பிரச்சாரம் செய்கிற அந்த நேரத்திலே அந்த மக்களுடைய பல இன்னல்களுக்கு ஆளான அந்நேரத்திலே அந்த நபியவர்கள் சொன்னார்கள்.


லவ் அன்னலீ பிக்கும் குவ்வத்தன் அவ்ஆவி இலா ருக்னின் ஷதீத் அவர்களை தடுக்க எனக்கு சுயமான சக்தி இருக்க வேண்டியிருந்ததே! அல்லது வலுவான ஆதரவு சொந்தபந்தங்கள் இருக்க வேண்டியிருந்ததே! என கவலைப்பட்டார்கள். ஒரு நபி தன் சேவைக்கு உறுதுணையாக ஒரு சொந்தம் கூட இல்லையே என ஒரு நபி கவலைப்பட்டார்கள்..


ஹழ்ரத் ஷுஐப் (அலை) வாழ்வை நாம் பார்க்கிறோம் ஹழ்ரத் ஷுஐப் (அலை) அவர்கள் ஒரு மிகப் பெரிய சொந்த பந்தமுடையவர்கள்.


லூத் (அலை) அவர்கள் சொந்த பந்தம் இல்லாததினால் கவலைப்பட்டார்கள் ஹழ்ரத் ஷுஐப் (இலை) அவர்கள் மிகப்பெரும் சொந்தபந்தங்களை உள்ளடக்கியவர்கள்.


அதன் காரணமாக ஏகத்துவ பிரச்சாரம் செய்கிற போது அந்த மக்கள் சொன்னார்கள். வஇன்னா லனராக்க ஃபீனா ழஈஃபா உம்மை எங்களில்


பலகீனமானவராகத்தான் பார்க்கிறோம். உம்முடைய சொந்தம் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் உம்மை கல்லால் அடித்து கொன்று இருப்போம் என்றனர்.


ஒரு நபிக்கு அந்த நல்ல சேவை செய்ய உதவியாக இருந்தது அன்றைய சொந்தபந்தம் ஆனால் இந்தகாலம் எப்படி தலைகீழாக மாறிவிட்டது தெரியுமா?


எலிவலையானாலும் தனிவலைதாங்க நல்லது.


வாழ்கிற கொஞ்ச கால நிம்மதியையும் கெடுப்பவர்களாக சொந்தபந்தங்கள் தான்


இருக்கிறார்கள்.


கணவன் மனைவி மூலம் கூட பிரச்சனை ஏற்பட்டால் தனியாக ஒரு 5நிமிடம் பேசினால் சமாதானமாகிவிடுவார்கள். ஆனால் கூட இருக்கிறான் பாருங்க சொந்தபந்தம்; விடமாட்டார்கள்.


இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து வாழக்கூடாது என்ற பிடிவாதத்திலே இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பவர்கள் சொந்தபந்தங்களே என பேச


வந்துள்ளேன்.


அன்பானவர்களே!


ஒரு இல்லற வாழ்விற்கு இடையூறாக இருப்பவர்கள் உறவினர்கள் தான்.


அவர்களில் ஒரு நான்கு நபர்களை பற்றி மட்டுமே பேச வந்துள்ளேன்.


ஏனென்று சொன்னால் ஒவ்வொருவர்களையும் பேசுவதாக இருந்தால் அது ஒரு நீண்ட விவாதமாகிவிடும். எனவே ஒரு இல்லற வாழ்விற்கு இடையூறாக இருக்கிற ஒரு 4 வில்லர்களைப் பற்றி பேச இருக்கிறேன்.


முதலாவது மாமனார்


2-வது மாமியார்


3-வது நாத்தனார்


+வது கொழுந்தனார்


இந்த 4பேர் சேர்ந்தாங்கன்னு வைய்யுங்க முடிஞ்சு போச்சு எப்படின்னா.. ஒழுவுடைய ஃபர்ளு 4 இருக்கிறது. அதில் ஏதாவது ஒன்று சரியாக செய்யாவிட்டாலும் ஒழு கூடாது.


அது மாதிரி இந்த 4பேரிலே ஒரு ஆள் இந்த சொந்தம் மகிழ்ச்சியாக இருக்ககூடாது என நினைத்து விட்டாங்கன்னு வைங்க அந்த குடும்பமே சீரழிந்து சின்னா பின்னாமாகி விடும்.


முதலாவது மாமனார் இந்த மாமனார் இந்த இனிய இல்லறத்திற்கு எவ்வாறு இடையூறாக இருக்கிறார் என்பதை நான் உங்களுக்கு முதலிலே கூற விரும்புகிறேன்.


முதலாவதாக அந்த மாமனார் எவ்வாறு இருக்கனும் தெரியுமா? ஆண்கள் தான் பெண்களை நிர்வாகம் செய்கிறார்கள் என அல்லாஹ்வே சொல்கிறான், ஆனால் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சொன்னால் முதலாவதாக பொருளாதார ரீதியிலே இல்லற வாழ்விற்கு இடையூறாக இருக்கிறார். முதலாவது குற்றச்சாட்டை நான் பதிவு செய்கிறேன்.


மாமனார் இல்லற வாழ்விற்கு பொருளாதார ரீதியிலே இடையூறாக இருக்கிறார்.


எப்படி இடையூறாக இருக்கிறார் தெரியுமா? முதலாவதாக நிக்காஹ்வுக்கு முன்னாலேயே அவரது வேலையை ஆரம்பித்து விடுகிறார். நிக்காஹ்வுக்கு முன்பே தம் மகனை பேரம் பேசக் கூடிய விஷயத்திலே மாமனார் இறங்கிவிடுகிறார்.


அதன் காரணமாகத்தான் நபியவர்களே சொன்னார்களே: ஒரு பெண் என்பவள் நான்கு காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறாள் அதில் முதல் காரணத்தை நபி சொல்கிற பொழுது பணத்திற்காகவும் வேண்டி திருமணம் செய்யப்படுகிறாள் என்று நபியவர்கள் சொன்னார்கள். எனவே முதலாவது விஷயம் இருக்கிறதே...மாமனார் பொருளாதார விஷயத்திலே சிரமத்தை ஏற்படுத்துகிறார் குடும்ப மகிழ்ச்சியை கெடுக்கிறார் எப்படி தெரியுமா? ஒரு ஜமாஅத்திலே சிலமாதத்திற்குமுன் ஒரு நிக்காஹ் நடக்கிறது. அதில்


நிச்சயதார்த்தம் அன்று அந்த மாமனார் என்ன பேசினார் தெரியுமா?


நீங்க வரதட்சணை 80 ஆயிரம் ரூபாய் தந்திடுங்க! ஏங்க என பெண்வீட்டுகாரர் கேட்டார்? வீடு வேறு கட்டியும் கட்டாமலும் இருக்கிறது. அதற்கு இன்ஜினியர் ஒரு 80 ஆயிரம் தேவை என்று சொன்னார். அதனால் 80 ஆயிரம் முதலிலே தாருங்க! என கேட்கிறாரு ஆக சிலமாமனார்கள் பணத்தை பேதம் பேசுகிறார்கள். சில மாமனார்கள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? ஆண் வாரிசே இல்லாத இடத்திலே பெண் பார்க்கனும் என நினைக்கிறார் குறியாக இருக்கிறார். என் வாழ்க்கையிலே அப்படி ஒருவரைப் பார்த்துள்ளேன். அவருக்கு 3மகன்கள உண்டு. 100பவுன், 1லட்சம் ரூபாய் கொடுப்பதாக ஒரு சம்பந்தம் வருகிறது. அவர் கூறுகிறார். அதெல்லாம் எனக்கு வேணாம். பெண் கூட பிறந்த சகோதரர்கள் இருக்கக்கூடாது.


ஆண் வாரிசு இல்லாத இடமாபாருங்க அதன் மூலமாகத்தான் அனைத்துச் சொத்துக்களையும் சூறையாட முடியும் என்ற எண்ணத்திலே பெண் பார்க்கக் கூடிய கொடுமையை என் வாழ்க்கையிலே நான் பார்த்துள்ளேன். அன்பானவர்களே! இது நிக்காஹ்விற்கு முன் நடக்கிறது நிக்காஹ்விற்கு பிறகும்



கூட மாமனார் பொருளாதாரத்திலே குறியோடு இருக்கிறார்.


எங்க ஜமாஅத்திலே சில மாதத்திற்கு முன் ஒரு பஞ்சாயத்து என்ன பஞ்சாயத்து தெரியுமா? கணவன் மனைவி இருவரும் பிரிந்துள்ளார்கள். ஆனாலும் கூட இருவரும் அளவுக்கு அதிகமாக அன்போடு இருக்கிறார்கள். தம்மை எப்படியாவது சேர்த்து வைத்து விடமாட்டார்களா என்ற ஆதங்கத்திலே இரண்டு பேரும் இருக்கிறார்கள். ஜமாஅத்திலே உள்ளவர்கள் தனித்தனியாக பேசினார்கள். இடையூறாக இருப்பது யார் தெரியுமா? மாமனார் தான் அவர் என்ன சொல்கிறார் என்றால் எம்மருமகளுடைய தாயார் பெயரிலே சொத்து இருக்கிறது. அந்த தாயார் மரணமாகிவிட்டார்கள் அப்ப என்னங்க செய்யனும் அந்த அம்மாவின் சொத்தில் இருந்து மகளுக்கு பங்கு வரனுமா? இல்லையா? பங்கை வாங்கிட்டு வந்தா அவ இங்க வரட்டும்.


எனவே மருமகள் அவளது பாகத்தின் சொத்தை பெற்று வருவதாக இருந்தால் வரட்டும் இல்லையென்றால் எங்களுக்கு தேவை இல்லை! நாங்கள் ஒன்றும் 'இழிச்சவாயன்' கிடையாது. எதைப் பற்றி கவலைப்படுகிறார்? ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்பட்டது போன்று. மருமகளுக்கு சொத்து வரவில்லை என்று கவலைப்படுகிறார்.


காரணம் அதன்மூலமாக நாம அனுபவிக்க வேண்டியது அனுபவிக்க முடியாமல் போய்விட்டதே என கவலைப்படுகிறார்.


மேலும் பொருளுக்காக வேண்டியே பொருத்தமில்லாத பெண்களை இந்த மாமனார்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள்.


இதுவெல்லாம் கதையல்ல அளவுக்கு அதிகமாகவும் சொல்லலே உண்மையிலே நடந்த விஷயம்.


எங்க ஊர்ல ஒருவர் தம்மகனுக்கு தங்கச்சி மகளை பேசி வைத்திருக்கிறார்.


பெரிய செல்வந்தர் ஒரே பையன் கோடீஸ்வரன்.


திடீர்னு பார்த்தால் அந்த தங்கச்சி மகளை வேணாம் என சொல்லிட்டு வேறு ஒரு இடத்திலே பேசி நிக்காஹ் செய்ய போகிறார் என்னவென விசாரித்து பார்த்தால்....


அந்த பெண்ணு ஏற்கனவே நிக்காஹ் செய்து விவாகரத்து செய்யப்பட்ட பெண்மணியாகும். விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையோ, அல்லது விதவை பெண்ணையோ நிக்காஹ் செய்ய இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆனால் அது எப்படி இருக்க வேண்டும். ஒரு தியாக மனதோடு இருக்கனும் நபியின் சுன்னத் என்ற அடிப்படையில் இருந்தால் மகிழ்ச்சியான விஷயம்.


ஆனால் அவர் ஏன் தெரியுமா அப்படி செய்கிறார் அந்த வீட்ல அந்த பெண் ஒரே பெண் அந்த விவாகரத்து செய்யப்பட்ட பெண் விடல ஒரே வாரிசு இவருக்கு அந்த அனைத்து சொத்துக்களையும் சூறையாட வேண்டும் என்ற எண்ணத்திலே தம் மகனுக்கு பொருத்தமில்லாத ஒரு பெண்னை திருமணம் செய்து வைக்கிறார். அன்பான நடுவரவர்களே


இப்படி திருமணம் செய்து வைத்தால் அந்த இல்லற வாழ்வு எப்படி மகிழ்ச்சியாக இருக்கும்.


இப்படி தான் முல்லாவுக்கு பொருத்தம் இல்லாத கண்ணங்கருப்பியை மணம் முடித்து வைக்கப்பட்டது.


முதல் நாள் அவள் கேட்டாள். 'அன்பு கணவரே நான் இனி யார் யார் முகத்திலே விழிக்கனும்' என்று கேட்ட போது 'என்னை தவிர எவமுகத்திலே வேண்டுமானாலும் முழி' என்றார். காரணமென்ன தன் மகனுக்கு பொருத்தமில்லாத பெண்களை பொருளாதார பேராசை காரணமாக இந்த மாமனார்கள நிக்காஹ் செய்து வைக்கிறார்கள். எப்படி இல்லறம் நல்லறமாக இருக்கும் முதல் கோணல் முற்றிலும் கோணல் தானே.


சில கணவன்மார் தம் மனைவியை பக்கத்து சீட்ல வைத்துட் போகமுடியலே ஏன்: சில பெண் இவணை விட வயது கூட இருக்கிறாள் எதற்குக் கட்டி வைத்தார்கள். சொந்தம் விட்டு போய்விட கூடாதாம் சொந்தம் விட்டு போய்விட கூடாது என்று இவணைவிட வயது முதிர்ந்த இவனுக்கு பொருத்தமில்லாத இவனைவிட வயது முதிர்ந்தவரை கல்யாணம் முடிக்கலாம். ஆனால் பொருத்தமில்லாதவளை முடித்து வைக்கின்றனர். அவள வெளியே கூட்டிட்டு போகவே சங்கடப்படுகிறான்.


சிலர் பொருளாதாரத்திற்காகவும், சிலர் தம் சொந்தம் விட்டுபோய் விட கூடாது என்றும் பொருத்த மற்ற பெண்ணை கல்யாணம் செய்து வைக்கிறார்கள் எப்படி இல்லறம் நல்லறமாக இருக்கும்.


முதல் குற்றசாட்டு மாமனார்கள் பொருளாதார ரீதியிலே துன்பத்தை ஏற்படுத்துகிறார்கள். குடும்ப மகிழ்ச்சிக்கு இடையூறாக இருக்கிறார்கள்.


2-வதாக மருமகளின் கற்புக்கு இவர்கள் கேடாக இருக்கிறார்கள் ஒரு காலம் இருந்தது மருமகளை மகளாக பார்க்க வேண்டிய மாமனார்கள் காம உணர்வோடு பார்த்த செய்திகள் நம் சமுதாயத்திலே இம்ரானாவுடைய வாழ்க்கை ஒரு சான்று மாமனார் மருமக கற்பு ரீதியிலே இடையூராக இருக்கிறார்கள்.


3-வது குற்றச்சாட்டு மனைவிக்கு ஒத்து போவதிலே மாமனார்கள் ரொம்ப கிள்ளாடியாக இருக்கிறார்கள். ஏன்னா தம் மனைவி சொல்வதை கேட்டால் மாமனார் மகிழ்ச்சியாக வாழ முடியும். அவள் சொல்வதற்கு எல்லாம் ஆடனும்  


அப்பதான் இவர் சந்தோஷமாக வாழ முடியும். ஆக தான சந்தோஷமாக வாழ மருமசு இல்லற வாழ்விற்கு இடையூறாக இருக்கிறார்.


அடுத்ததாக மாமியார் இந்தமாமியாரும் இல்லற வாழ்விற்கு இடையூறாக இருப்பது கொஞ்ச நஞ்சமல்ல.


மாமியார்னா யார் தெரியுமா? ஆதிக்கத்தின் உரைவிடமாக மாமியார் இருக்கிறாள் கொடுமையின் உரைவிடமாக அவள் இருக்கிறாள்.


ஒரு வீட்ல பிச்சைகாரன் யாசகம் கேட்டான். அப்ப மருமக 'சில்லறை இல்ல போயிட்டு வாங்க' என்க வேகமாக உள்ளே இருந்த மாமியார் ஓடி வந்தாள். பிச்சைகாரனை அழைத்து எங்குவந்தாய் என கேட்டாள். பிச்சை கேட்க வந்தேன். உங்க மருமக இல்லை என்றால் நீங்க ஏதாவது தாங்க! என்றான். அப்ப மாமியார் சொன்னாள்; 'சில்லறை இல்லை போ' என்று ஏங்க இததான் அவசொன்னாலே என அவன் கேட்க, இல்லை என்ற வார்த்தையை சொல்ல கூட அவளுக்கு அதிகாரம் இல்லை இந்த எண்ணத்திலே தான் மாமியார் இருக்கிறாள்.


மாமியார் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டை போடுகிறாள். அது போல நாத்தனார். கொழுந்தனார் போன்றவர்களும் பல விதத்திலே இடையூறாக இருக்கிறார்கள்.


'நார்' என்றாலே நரகம் தான். மாமனார், நாத்தனார், கொழுந்தனார். இந்த நரகம் போன்று இருக்கக்கூடிய இந்த நார்கள் திருந்தினாலே இல்லறம் நல்லறமாகி விடும்.


நேரத்தை கருத்தில் கொண்டு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி பெறுகிறேன் விடை தருகிறேன் ஸலாம்.



பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.


மக்தப் மாணவர்கள் மேடை நிகழ்ச்சிகள்

திங்கள், 13 ஜனவரி, 2025

மனைவியே... (கருத்தரங்கம்)



இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது மனைவியே 


கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரித்தான நடுவரவர்களே இங்கு இருக்கிற மக்களிடம் கேட்டாலே எல்லோரும் சொல்லி விடுவார்கள்.


இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது யாரென்று கேட்டு பாருங்க.


எல்லேரும் சொல்கிற பதில்


மனைவியே!


நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். மனைவி மாறு செய்வாள் என்று சொல்கிறார்கள். நரகத்திலே அதிகமான பெண்களை கண்டேன் எதற்காக என்று கேட்கிற போது பெருமானார் சொன்னார்கள்.


தக்ஸுர்னல் லஃன வதக்ஃபுரினல் அஷீர்


கணவனுக்கு மாறு செய்கிற காரணத்தினாலும், அதிகம் சாபமிடுவதினாலும் நரகத்திலே கண்டேன். இந்த நிலை எல்லா குடும்பத்திலேயும் இருக்கிறது என்ற.


முதல் குற்றச்சாட்டை இம்மன்றத்திலே நான் பதிவு செய்கிறேன். எதைச் சொன்னாலும் மாற்றிப் பேசுவது, மாறாக நடப்பது.நான்


இப்படித்தான் செய்வேன் என்று சொல்வது வரலாற்றிலே கூட ஒரு கதை சொல்வார்களே!


கணவனுக்கு மாறுபட்டே நடக்கக் கூடியவள்.


ஆற்றிலே வெள்ளம் போகிறது. அதை கடப்பதற்காக மாட்டு வாலை பிடித்து செல்கிறாள்.


வெள்ளத்தில் அடித்து சென்றுவிட கூடாதே என்று மனதால் சஞ்சலப்பட்ட கணவன் சொல்வான் மாட்டு வாலை பிடித்து செல்கிறாளே மாறு செய்யக் கூடிய மனைவியாச்சே. ஒன்றுமே சொல்ல வேண்டாம் பேசாம போகட்டும். மாட்டு வாலை விட்டு விடாதே பிடின்னா பிடிக்க மாட்டாள். பிடிக்காதேன்னா பிடிப்பாள் மாறு செய்வதே பழக்கம். அவசரப்பட்டு சொன்னான். மாட்டு வாலை விட்டு விடாதே என்று நடு ஆற்றிலே போயிட்டு இருக்கிற போது நீ சொல்லி நான் என்னய்யா கேட்கிறது. மாட்டு வாலை பிடிக்க மாட்டேன்! விட்டாள். அழிந்து போனாள். இப்படி இன்று குடும்பத்திலே எத்தனையோ பேர் நடக்கிறார்கள்.


இது தான் என் முதல் குற்றச்சாட்டு, கண்ணியத்திற்குரிய நடுவர் அவர்களே!


2-வது குற்றச்சாட்டாக இந்த மன்றத்திலே நான் சமர்ப்பிப்பது இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருக்கிற இந்த மனைவி கணவன் துன்பப்படுவதைக் கண்டு இவள் ரசிக்கிறாள். 

கணவன்,மனைவி இருவருக்கும் மத்தியிலே சில ஊடல்கள் ஏற்படும் ஏற்பட்ட பிறகு கணவன் சிலநேரம் யோசிப்பான் நாம இப்படி பேசிட்டோமே என்று' என்றைக்காவது இந்த மனைவி யோசித்து இருக்கிறாளா? இப்படி பேசி விட்டோமே என்று நான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று தான் கேட்பாள் நான் சரியாகத் தானய்யா பேசினேன் என்பாள்.


துன்பத்திலே இன்பம் காணுகிற சுவை அவளுக்கு சொந்தமானது என்று நான் சொல்வேன்.


முல்லாவினுடைய வரலாறுகளை படித்து இருக்கிறோம் முல்லாவினுடைய மனைவி கணவனை கொடுமை படுத்தனும்.


அதைப் பார்த்து ரசிக்கனுமனு முல்லாவுக்கு பிடித்தமான சூப்புஅதில் நிறைய மிளகாய் பொடி. அதுபோல மிளகு தூள் எல்லாம் சுலந்து முல்லா எடுத்து வாயிலே வைக்கனும் உடனே முளைக்கு ஏறனும். சுண்ணிலே கண்ணீர் சிந்த வேண்டும் அதைக் கண்டு நாம் ரசிக்க வேண்டும் என்று ஒரு ஆசை


மனைவி வைச்சுட்டு போயிட்டா சிறிது நேரத்துக்கு பிறகு தானே அறியாமலே அதை எடுத்து குடிக்கிறாள். மனைவி ஆரம்பத்துல குடிச்சிட்டா முளைக்கு ஏறுகிறது. கண்கள் கண்ணீரை சிந்துகிறது. முல்லா கேட்கிறார். ஏனம்மா அழுகிறே என கணவன்மார்; இப்படிதான் ரொம்ப நல்ல ஆள் ஏமா அழகிறே என்று கேட்கிற போது இவள் மாற்றுகிறாள். என் செத்துபோன அம்மா நினைப்பு வந்துடுச்சு என் அம்மாவுக்கு சூப்புன்னா ரொம்ப பிடிக்கும். இப்ப இல்லையே! அதை நினைத்து அழுகிறேன். என்றாள். முல்லா எடுத்து நம்பிக் கொண்டு வாயிலே வைக்கிறார். முளைக்கு ஏறுகிறது. கண்ணிலே கண்ணீர் சிந்துகிறார். இப்பொழுது சிரித்துக் கொண்டே கேட்கிறாள் மனைவி. துன்பத்திலே இன்பம் காணும் மனைவி நீங்கள் ஏன் அழுகிறீர்கள். அவர்; அழகாக செல்வார் உங்கம்மாவை நினைத்துதான் நானும் அழுகிறேன் என்றார் நீ ஏய்யா? எங்கம்மா நினைத்து அழனும்? முல்லா சொன்னார் போகும் போதே உன்னையும் கூட்டிட்டுப் போனான நன்றாக இருக்குமே என்று


துன்பத்திலே இன்பம் காணுகின்ற சுவை அவளுக்கு மட்டும் சொந்தமானது 3-வதாக நான் இந்த மன்றத்திலே சமர்ப்பணம் செய்கிறேன். கணவனை தீமையின் பக்கம் அழைப்பவள் மனைவி என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.


நிறைய இடங்களில் கணவனை தீமையின் பக்கம் அழைப்பது யாரு? வரதட்சனையின் பக்கம் அழைப்பது யாரு? வீட்ல தொடர் நாடகம் பார்த்தே ஆகனும் வீட்ல டிவியை வாங்கி வைத்தே ஆகனும் என அழைப்பது யார்? தாடி அழகாக வைத்திருக்க கூடிய இந்த பையனிடத்தில் இந்த மணமகனிடம் தாடியை எடுத்து விடு உன் முகத்துக்கு இது அழகை சேர்க்கவில்லை என சொல்பவள் யார்


ஒரு வீட்ல கணவன் சொல்றாரு மனைவியிடம் நம்ம வீடல பையனுக்கு பொண்ணு பார்க்கிறோம். பொண்ணு நல்ல லட்சனமாகத் தானே இருக்கு முக்கும் முழியுமா இருக்கு நாம் எதிர்ப்பார்ப்பதை விட அவர்கள் அதிகம் சீர்வரிசை செய்கிறேன் என்கிறார்கள். பிறகு ஏண்டி வேணாம் எனகிறாய் என கேட்கிறார். கணவர்.


அதற்கு அவள் என்ன பதில் சொன்னாள் தெரியுமா


மருமகள் பிளாக்பெலட் வாங்கி இருக்காளாம் கராத்தேலே அதனால வேணாம். வந்தால் அவளிடம் யார் உதை தின்பது தீமையின் பக்கம் பார்ப்பவன் அவன். இவனால் தான் சமுதாயத்திலே தீமை அதிகமானது.


அபூஹுரைரா (ரலி) ஒரு ஹதீஸை அறிவிப்பார்கள்.


ஷைத்தான் இப்லீஸ் அல்லாஹ்விடம் கேட்கிறான். யாஅல்லாஹ் எனக்கென ஒரு இடம் வேண்டும் என்று உன் இடம் தான் பாத்ரூம் அங்கு இருந்தா எல்லா சிந்தனையும் கொடுத்து விடுவான்


எனக்கென்று ஒரு சபை வேண்டும் முற்சந்தி தான் உன் சபை எனக்கென்று ஒரு பேச்சி வேண்டும் பொய் தான் உன் பேச்சு என வரிசையாக வருகிற போது


எனக்கென்று ஒரு உதவியாளர் வேண்டுமென்று இப்லீஸ் கேட்கிற பொழுது உன் உதவியாளராக பெண்ணை நான் ஆக்குகிறேன் என்கிறான். தீமையின் பிறப்பிடம் அவள் கணவனை தீமையின் பக்கம் அழைப்பவள் மனைவி என்று எனது 3வது குற்றச்சாட்டை இவ்வயிலே வைக்கிறேன்.


கண்ணியத்திற்குரிய நடுவர் அவர்களே! கணவனின் ரகசியத்தை யார் வெளிப்படுத்துகிறார்கள். மனைவியுடைய ரசகியத்தை கணவன்மார்கள் வெளிப்படுத்துகிறார்களா?


நீங்களெல்லாம் படித்திருக்கலாம்


11 மனைவிகளின் வரலாறு


அபூஸர் ஆவின் வரலாறு நீண்ட வரலாறு அதில் ஒன்றை மட்டும் மன்றத்திலே சமர்ப்பணம் செய்கிறேன்.


புருஷனைப் பற்றி அந்த அம்மா சொல்கிறது. 'இதா கரஜ ஃபகித இதா தகல அஸித பெண்களெல்லாம் 10 பேர் உட்கார்ந்தால் புருஷன்மாரை தான் கழுவுவாங்க அது இன்றைக்கு நடக்கிறது II பேர் அமர்ந்து பேசுறது உன் புருஷன் எப்படி? என் புருஷன் இப்படி? அவள் சொன்னாள்


வீட்டிற்குள்ளே வந்தால் பொட்டி பாம்பாக இருப்பார். வெளியே வந்தால் சிங்கம்


வீட்டிலே பூனை வெளியிலே புலி


இது தானே நடப்பு இப்படி மனைவிகளே தம் கணவரை சுட்டிக் காட்டினார்கள் என்று ஹதீஸ்கள் சொல்லும். அது இன்றைக்கும் நடக்கிறது என்று இம்மன்றத்தில் நான் சொல்வேன்.


எனது &வது குற்றச்சாட்டாக கணவன் உழைப்பை பொருந்தி கொள்ளாதவள் இந்த மனைவி என்று இம்மன்றத்திலே பதிவு செய்வேன்


எந்த மனைவியாவது கணவனுடைய உழைப்பை பொருந்தியுள்ளார்களா?


என்னத்தான் கொண்டு போய் கொடுங்க நீ என்னய்யா சம்பாதிக்கிறே பக்கத்து விட்டு அப்துல்காதர் எப்படி சம்பாதிக்கிறார். எடுத்த வீட்டு உபைபதுல்லாஹ் லட்சம் லட்சமாக கொண்டு போய் கொட்டுகிறான். எப்படி கொட்டுகிறான் என்பது அவளுக்கு தேவையில்லை. உழைப்பை குறை சொல்பவள் என்று இம்மன்றத்திலே என் கருத்தை பதிவு செய்கிறேன்.


உழைப்பே இல்லாத அலிக்கல்லவா ஃபாத்திமாவை அண்ணல் பெருமான் மணமுடித்து வைத்தார்கள். மார்க்கத்தை பார்த்தார்கள். நபிகளார் இன்றைக்கு இவள் பணத்தை தான் பார்க்கிறாள்.


அதனால் ஒருவன் தம் மனைவி பற்றி அழகாக சொன்னான். என் மனைவிக்கு முளை எக்ஸ்ரே மாதிரி முளை எங்கே பணம் வைத்தாலும் கண்டுபிடித்து விடுகிறாள் எக்ஸ்ரே முளை ஒளித்து வைக்கவே முடியலே என்கிறான்.


வதாக இந்த நீதிமன்றத்திலே நான் பதிவு செய்ய விரும்புவது கணவனின் பொருளாதாரத்தை வீண் விரயம் செய்து அழிப்பவள் என்று குற்றம் சாட்டுகிறேன்.


கணவன் கஷ்டப்பட்டு சம்பாதிப்பான் அதை ஊதாரியாக செலவழிப்பவள் யார்? மனைவி தானே!


வீட்ல பார்த்தா பீரோ நிறைய அவ புடவைகள் இருக்கும். ஒரு புடவை இருந்தா போதும் அந்த புடவைகளை எல்லாம் சுமப்பது எது தெரியுமா? கீழே அழுக்கு படாமலிருக்க இவன் வேட்டியை விரித்து வைத்திருப்பாள்.


குடும்பத்தையும் தாங்கி இவளது சேலையையும் தாங்குபவன் இவன் ஆனா அவ எப்படி நடக்கிறாள்.


வண்ணாங்கூட பார்த்தாள் அய்ன் பண்ணி கொண்டு வருகிற போது சேலை மடித்து கொண்டு வருவது கிடையாது. அங்கேயும் வேட்டியை போட்டு


பொட்டணம் கட்டி தான் கொண்டு வருகிறான்.


என்ன நிலை பாருங்க.! வீண் விரயம் செய்கிறாள் கணவன் கரண்டி மாதிரி சம்பாதிச்சா,மனைவி மம்மட்டியாள் செலவு செய்கிறாள் 


எத்தனை குடும்பங்களிலே கணவன் கரண்டி மாதிரி சம்பாதிச்சா,மனைவி மம்மட்டியாள் செலவு செய்கிறாள்.


எத்தனை குடும்பங்களிலே கணவன் வெளிநாடு சென்றுள்ளார்கள் அவன் அனுப்புகிற பணம் முழுகக விணாக செலவழிப்பவள் மனைவி நான் என்று இந்த அரங்கத்திலே குற்றம் சாட்டுகிறேன்.


ஒற்றுமையாக இருந்த குடும்பத்தை பிரித்த பாவி அவள் என்று சொல்வேன் திருமணத்துக்கு முன்னதாக அண்ணன் தம்பி எல்லாம் சேர்ந்து ஒன்றாக இருப்பார்கள். திருமணத்துக்கு பிறகு நடப்பது என்ன?


ஒவ்வொருத்தருக்கும் ஒரு பெயர் வைத்துள்ளான் இந்த மனைவி நாத்தனாவுக்கு பெயர் சுனாமி புருஷனைப் பார்த்து சொல்கிறாள் ஏங்க இந்த சுனாமி வருதாம். என்னடி சுனாமின்னு சொல்றே


ஆம உங்க அக்கா எப்ப வருவான்னு தெரியாது. வந்தா எல்லாதையும் சொல்லிக்காம சுருட்டிட்டு செல்வாள் பெயர் வைக்கிறாள்.


மாமியாரை மதித்துள்ளாளா? புருஷனிடம் சொல்லி தனிக்குடித்தனம் வந்துடுங்க: என்றாள் ஒருவர் நீதியை கேட்பதற்காக நடுவர் போன்று ஒருவர் கேட்கிறார்


ஏங்க அம்மாவை பிரிஞ்சு வந்துட்டிங்க! என்னாச்சு நடுநிலையாக நடப்பவங்க தானே நீங்க என அவ கேட்டாள் ஆமாம் அதிலென்ன சந்தேகம்


அம்மாகூட 30வருஷம் இருந்துட்டாக அதனால் என்கூடம் வருஷம் இருக்கணும் அது தானே சரிசமமான நியதி இந்த அறிவெல்லாம் எங்கிருந்து வந்தது.


அம்மாகாரம்மா வலிக்கி விழுது ஆஸ்பத்தரிக்கு தூக்குகிறான் புருஷன் ஏங்க கண்டாக்டரிடம் முதலில் கூட்டிட்டு போங்க காலுக்கு அப்புறம் பார்க்கலாம். என்னடி சொல்றே!


கால் போகியுள்ளது கண் தெரியாததினால் தானே கால் போச்சு. கண்ண என்ன உங்கம்மா பிடறியிலேயா வைத்தது. முதலில் கண்ணை பாருங்க என இடர் பேசுகிறாளே!


குடும்பத்தை பிரித்தவள் அவள் என்பதை குற்றமாக நான் சாட்டுகிறேன்.


கணவன்மார்கள் மீது தேவை இல்லாத சந்தேகங்களை ஏற்படுத்தி சண்டை கோழியாக இல்லை சண்டைக்காரியாக திகழ்பவள் இம்மனைவி தானே வெளியே போயிட்டு வந்தால் சண்டை


அதனால் தான் ஒருவன் அழகாக சொன்னான். நானும் என்னுடைய மனைவியும் சதாமும் ஒன்று என்றான். என்னடா சொல்றே! ஆம் அவர்களுக்கு பேச்சு வார்த்தைகளிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நேரடி அட்டாக்கு தான். 



நிறைய வீடுகளிலே பார்க்கலாம். புருஷன் பொண்டாட்டிக்கு சண்டைனா உப்பள்ளி அப்படியே போடுவது அன்றைக்கு சாப்பாடு அவ்வளவு தான் உப்பள்ளி போடுவாள், பாத்திரங்களை உடைப்பாள் நடக்கிறதா இல்லையா!


உ-வதாக கணவனுக்கு பணி செய்யாதவள் என்ற குற்றச்சாட்டை இம்மன்றத்திலே சமர்ப்பணம் செய்கிறேன்.


ஒரு காலத்துல பணி செய்தாங்க! ஆனால் இன்று மனைவி கணவனுக்கு பணி செய்வதில்லை. கணவன் தான் மனைவிக்கு பணி செய்கிறான். நம்முடைய நண்பர் வீட்ல துணி துவைத்து கொண்டு இருக்கிறார்.


அவருடைய துணியைத் தான் துவைக்கிறார். என்று போய் பார்த்தால் வீட்டுக்காரம்மா சேலையை துவைத்து கொண்டு இருக்கிறார். பார்த்தவுடன் கையும் காலும் ஓடலே அவராகவே பேசிக் கொண்டார். எல்லோருடைய வீட்லயும் நடப்பது தானங்க!


சோப்பு கம்பெனியிலிருந்து ஒருவர்வந்து ஒரு வீட்ல மேடம் உங்க துணியை துவைக்க எதை பயன்படுத்துறீங்க என கேட்க, அதற்கு அவள். 'எம்புருஷனைத் தான் என்றாளாம்.


ஒருவன் கேட்டானாம் டேய் உன் பொண்டாட்டி தான் இல்லேல்ல பிறகு ஏய்யா சமையலறையிலே போய் நீ சமையல் செய்து கொண்டிருக்கிறே ஹோட்டலில் சாப்பிட வேண்டியது தானே' என கேட்க அதற்கு அவன் 'இல்லே டச்சு விட்டுப் போய்ச்சுனா கஷ்டம் அதனால் தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். என்றானாம்.


இன்று நிறைய இடங்களில் பார்க்கிறோம். வேலை செய்யாமல் அப்படியே உட்கார்ந்து உட்கார்ந்து உடலை பெருக்கியவர்கள் எத்தனை பேர் உண்டு. பணி செய்யாதவள் என்ற குற்றச்சாட்டை இங்கு சமர்ப்பணம் செய்கிறேன்.


கண்மணி நாயகம் (ஸல்) அன்னவர்கள் சொன்னார்களே: ஒரு பெண் மணி தன் கணவனுக்கு எப்படி பணி செய்ய வேண்டும் தெரியுமா? லவ் கானத் பிஹுதிர்ஹா


அந்த கணவனுக்கு உடலிலே நோய் ஏற்பட்டு ஃபலஹஸத்ஹா அவளது நாக்கால் அவன் சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்தாலும் கூட மாஅத்தத் ஹக்கஹூ கணவருடைய உரிமைகளையும், கணவருடைய கடமைகளையும் நிறைவேற்றியவளாக ஆக மாட்டாள் என்று சொன்னார்களே! இன்று எங்கே நடக்கிறது. கணவன் கொஞ்சம் கஷ்டப்பட்டாலே பாவம் இன்று வரக்கூடிய காய்ச்சல் இருக்கிறதே இந்த காய்ச்சலில் அவன் லேசா நொண்டினால் நொண்டின்னு கூப்பிடுகிறாள். நல்லாத்தானங்க இத்தன நாள் இருந்தீங்க! என்கிறாள்.



10-ம் குற்றச்சாட்டாக நான் அந்த மனைவியின் மீது சுமத்துவது கணவனுக்கு காட்ட வேண்டிய அந்தரங்கங்களை அடுத்த ஆண்களுக்கு காட்டுகிறாள் என்பது தான் எனது 10ம் குற்றச்சாட்டு மனைவி தன் அலங்காரத்தை யாருக்கு காட்டமார்க்கம் சொல்கிறது? தன் கணவனுக்கு காட்ட சொல்கிறது. வீட்ல இருக்கிற போது ஆக பழைய சேலையைத் தான் உடுத்துவாள், கல்யாணம்னா பாருங்க! அடுத்தவர்களுக்கு காட்டுவதற்க்காக நகைகளை அணிந்து கொண்டும், ஆடம்பர ஆடைகளை அணிந்து கொண்டும், பட்டு ஆடைகளை அணிந்து கொண்டும் செல்கிறாளே இதுவா மார்க்கம்? இதையும் குற்றமாக நான் சுமத்துகிறேன். மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாக நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் சொன்னார்கள் பெண்கள் ஆடை அணிந்திருப்பார்கள். ஆனால் நிர்வாணமாக இருப்பார்கள் நடக்கிறதா? இல்லையா? லேசான ஆடைகள் முடி அலங்காரம் செய்து கொண்டிருப்பார்கள். இவர்களெல்லாம். சுவனத்திலல்ல. சுவனத்தின் வாடையை கூட நுகர முடியாது என்றார்களே! நபிகள் கோமான் அது இன்று


நடக்கிறதா இல்லையா?


1வது குற்றச்சாட்டாக இந்த மனைவி கணவனைத் திட்டுகிறாள். என்ற குற்றச்சாட்டை சமர்ப்பணம் செய்கிறேன்.


இன்று கணவன்மார்கள் திட்டிய காலமெல்லாம் போயிடுச்சு மனைவி தான் அதுவும் நாகரீக காலத்து மனைவி எப்படித் திட்டுகிறாள் தெரியுமா?


நிறைய வீட்ல நடக்கிறது. அடுத்த வீட்டுக்கு கேட்கக் கூடாது என்பதற்காக மிக்ஸியை போட்டு திட்டுகிறாள். ஏதாவது கிரைண்டரை போட்டுட்டு சப்தம் வர வர திட்டுகிறாள்.


இன்னும் சில இடங்களில் கணவன் அடிப்பதும் கூட நடக்கிறது அல்லாஹ் தன் காப்பாற்ற வேண்டும்.


அல்லாமா ஸஅதி (ரஹி) அவர்கள் சொல்வார்கள். ஒருவன் தன் மனைவி திட்டுவது தாங்க முடியாமல் தலாக் விட்டு;ட்டான். தாடி வளர்த்து கொண்டு செல்கிறான்.


போலீஸ்காரர்கள் பிடித்து சென்றனர். ஏதோ திருடன் மாதிரி தெரிகிறதென்று ஒரு நண்பர் காப்பாற்றி சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து தன் சகோதரியை மணம் முடித்து வைத்தார்.


சில நாட்களுக்கு பிறகு வந்து 'குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்கிற போது 'ஆட்டை சிங்கத்திடமிருந்து காப்பாற்றி கசாப் கடைக்கு கொண்டு சென்றது போல் இருக்கிறது' என் வாழ்க்கை


அவள் தான் திட்டினாள் என நினைத்தேன். இவள் திட்டோடு சேர்த்து


அடிக்கவும் செய்கிறாள் என்ன செய்வது?


இது தான் எனது குற்றச்சாட்டு


12-வதாக தேவை இல்லாத குழப்பங்களை இந்த சமுதாயத்திலே அரங்கேற்றுபவள் மனைவியே என்று நான் குற்றம் சாட்டுவேன். தேவை இல்லாத குழப்பங்களை ஏற்படுத்துகிறாள்.


அல்லாம ஹக்கானி கூட ஒரு வரலாற்றை எழுதுவார்கள்


ஒரு ஹஜ்ரத் விடல ஒரு அம்மா நேர்ச்சை பண்ணியது என்ன நேர்ச்சை?


தன் மகனுக்கு காய்ச்சல் குணமானால் ஜும்ஆவிலே தன் கணவரான ஹஜ்ரத் தஃப் அடிப்பாருன்னு நேர்ச்சை செய்தது. காய்ச்சல் குணமானது. சொல்லுது ஏங்க, நீங்க ஜூம்ஆவிலே தஃப் அடிக்கனுமனு நேர்ச்சை பண்ணிட்டேன். எப்படியோ செஞ்சிடுங்க. என்ன செய்வது அடிப்பாவி நிர்வாகிகளெல்லாம் சேர்ந்து விலக்கிப் போடுவாங்களே கடைசியிலே அவர் ஒரு தந்திரம் செய்தார். மிம்பருக்கடியில் தப்ஃபை வைத்தார். அன்று பயானுக்கு தலைப்பு மியூஸிக் சாதனங்கள். அதைப் பற்றி பேசிட்டு வரும் போது அது பற்றி வரும் போது உள்ளே இருந்து எடுத்து இரண்டு அடி அடித்து விட்டு இதே போல் அடிப்பது கூடாது என்றே அடித்தார். இந்த நிலைக்கு தள்ளியது யார் மனைவி தானேஇதை தான்


எனது 12வது குற்றச்சாட்டாக சமர்ப்பணம் செய்கிறேன். பவதாக வெட்கம் குறைந்தவள் என்ற குற்றச்சாட்டை சமர்ப்பணம் செய்கிறேன்.


அந்த காலத்திலே பாத்திமா(ரலி)வுக்கு இருந்த வெட்கம் இன்று யாருக்கு இருக்கிறது. தொப்பியை பார்;த்தால் வெட்கப்படுகிறாள் பால்காரனுக்கும். வண்டிக்காரனுக்கும். மார்க்கட்லயும் முகத்தை காட்டுகிறாளே இதுவா வெட்கம் வெட்கக் குறைவால்; தான் இன்று இனிய இல்லறத்திலே இடையூறு ஏற்பட்டு இருக்கிறது என்ற 13-வது குற்றச்சாட்டை இம்மன்றத்திலே வைக்கிறேன்.


கணவருடைய அனுமதி இல்லாமல் வீட்டை விட்டு வெளியே புறப்படுகிறாள். என்ற 14வது குற்றச்சாட்டை இங்கு சமர்ப்பணம் செய்கிறேன்.


எத்தனை பேர்கள் கணவருடைய அனுமதி கேட்டு வெளியே செல்கிறார்கள். பக்கத்து வீட்டுக்கு செல்வதாக இருந்தாலும் கூட நீங்கள் அனுமதி கேட்டு செல்ல வேண்டும் என்பது மார்க்கம் சொல்கிற கடமை. எத்தனை பேர்கள் சென்றிருக்கிறார்கள்.


இதை விட மேலாக 15வது குற்றச்சாட்டாக நான் சொல்வேன். அவள் ஒரு வேடக்காரி. இப்படி ஒன்ன பேசுவாள். அப்படி ஒன்ன பேசுவாள்.


தான் மருமகளாக இருக்கிற பொழுது, என் மாமியா என்னை மக மாதிரி நடத்தனும்னு நினைப்பாள் இவளே மாமியாராகி விட்டால் மாறிடுவாள்.


தன் மகனுக்கு திருமணம் முடிக்கிற பொழுது ஊரிலேயே பெரிய


வரதட்சணை நாம தான் வாங்கனும்னு நினைக்கிறாள். தம் மகளுக்கு திருமணம் முடிக்கிற பொழுது வரதட்ச்சணையே வாங்காத யாராவது கிடைப்பார்களா என்று பார்க்கிறாளே இந்த வேடக்காரி இதைத்தான் அவள் பச்சோந்தியாக இருக்கிறாள் என்ற குற்றச்சாட்டை வைக்கிறேன்.


நடுவரவர்களே! 6வது குற்றச்சாட்டாக அவள் குத்திக் காட்டுபவள் கணவனை பேசலிடமாட்டா! எதை எடுத்தாலும் குத்திப் பேசுகிற பழக்கம் அவளிடம் இருக்கிறது.


மார்க்கத்திற்கு புறம்பான பழக்கம் அதுவும் இருக்கிறது. இதன் காரணமாக இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருக்கிறாள் என்ற குற்றச்சாட்டை இந்த மன்றத்திலே வைக்கிறேன்.


எப்படி குத்திப் பேசுகிறாள் புருஷன் பாவம் காப்பி குடிப்பதற்காக உட்கார்ந்தாரு. காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். காப்பியை குடிக்கிற பொழுது அவள் வளர்க்கிற நாய் பக்கத்தில் வந்து நின்றது. அதற்கு கொஞ்சம் இவண் ஊற்றினான் உடனே அங்கிருந்து கத்தினாலோ அது நேத்து பாலிலே போட்ட காப்பி நாயுக்கு ஆகாது.


நேத்து பாலிலே போட்ட காப்பி நாய்க்கு ஆகாது ஆனா அந்த பாயுக்கு ஆகுமா? எந்த அளவுக்கு வைத்திருக்கிறார்கள்.


சென்செக்ஸ் கணக்குக்கு ஒருவன் வருகிறான். வரும் பொழுது அத்தாவுக்கும் மகனுக்கும் சண்டை அப்பனிடம் கேட்கிறான். உம்மகன் பேரு என்ன? சண்டையிலே அவன் சொன்னான் சனியன்னு உள்ளே இருந்து அவள் எடுத்து கொடுக்கிறாள். ஏங்க அவங்க உங்க பெயரை கேட்கலே! உங்க மகன் பெயரை கேட்கிறாரு


அப்ப இவ கணவனுக்கு வைத்த பெயர் சனியனா! ஆக குத்திக் காட்டுபவள் மனைவி நிறைய இடங்களில் பார்க்கிறோம்.


என்னுடைய 17ஆம் குற்றச்சாட்டாக தேவை இல்லாமல் அவசரப்பட்டு விவாகரத்து கேட்பவள் என்ற குற்றச்சாட்டை இங்கே முன் வைக்கிறேன்.


ஒன்றுமே இல்லாத காரணத்திற்காக வேண்டி விவாகரத்து கேட்கிறாள்.


சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் என் தாய் வீடு செல்கிறேன் என்கிறாளே! குடும்பத்தின் நங்கூரத்தையே கலைக்கிற அவிழ்க்கிற கொடுங்கோலி என்ற குற்றச்சாட்டை இங்கே சமர்ப்பிக்கிறேன்.


என்னுடைய 18-வது குற்றச்சாட்டாக குடும்பத்தையாவது ஒழுங்காக வளர்த்துள்ளார்களா? குழந்தைகளையாவது ஒழுங்காக வளர்த்திருக்கிறார்களார் குழந்தை வளர்ப்பிலும் இவளது பங்கு குறைவாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை கூறுகிறேன்.


இப்படி ஏராளமான குற்றச்சாட்டுகளை என்னால் சமர்ப்பணம் செய்ய முடியும் காலத்தின் சூழலை கருத்தில் கொண்டு நிறைவுக்கு வருகிறேன்

. ஆக! நடுவர் அவர்களே! எல்லா குடும்பங்களிலும் இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பவர்கள் மனைவியே மனைவியே மனைவியே என்று வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.


வஆகிரு தஃவானா அனில்ஹம்து


லில்லாஹி ரப்பில் ஆலமீன்



பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

மக்தப் மாணவர்கள் மேடை நிகழ்ச்சிகள் 



ஞாயிறு, 12 ஜனவரி, 2025

கணவனே...(கருத்தரங்கம்)



இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது கணவனே


இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது என்ற ஆய்வுக்காக அழைக்கப்பட்டு உள்ளேன். 


மனைவியின் புறத்திலே எத்தனை குறைபாடுகள் இருந்தாலும், எத்தனை குற்றச்சாட்டுகள் மனைவியின் புறத்திலே இருந்தாலும் கூட அந்த குற்றங்கள் உருவாக காரணம் யார்? எத்தனை குற்றச்சாட்டு வேண்டுமானாலும் சாட்டலாம். ஆனால் அந்த குற்றங்கள் உருவாக அடிப்படை அசல் காரணம் கணவன் தான்


கண்ணியமிகு நடுவரவர்களே


இல்லறத்தினுடைய பொறுப்பை, நிர்வாக திறனை மார்க்கம் யாரிடம் கொடுத்துள்ளது? நிர்வாகத்திறனை கணவனிடம் தான் கொடுத்துள்ளது.


ஷரீஅத் ரீதியாக நாம் பார்த்தாலும், இந்த உலக ரீதியாக பார்த்தாலும் குடும்பத்தினுடைய நிர்வாக பொறுப்பை கணவனிடம் தான் இறைவன் கொடுத்துள்ளான்.


அர்ரிஜாலு கவ்வாமுன அலன் நிஸாஇ


அல்லாஹ் அழகாக சொல்கிறான். ஆண்கள் பெண்களை, கணவன்மார். மனைவிமார்களை நிர்வகிப்பவர்கள் ஓர் இல்லறத்திலே இடையூறு ஏற்படுகிறது என்று சொன்னால் அங்கு நிர்வாகம் சரி இல்லை.


நிர்வாகத்திறனை கணவன் சரியாக கொண்டு செல்லாததினால் தான் எல்லாவிளைவுகளும் ஏற்படுகிறது என்று முதல் குற்றச்சாட்டை பதிவு செய்ய விரும்புகிறேன்.


அடுத்தப்படியாக ஒவ்வொரு குடும்பங்களிலேயும் பார்க்கிறோம். ஏதாவது ஆலோசனை கேட்டால் கொஞ்சம் பொறுங்க வீடு வரை போய் வருகிறேன். எல்லா கணவன்மார்களும் செய்து வரும் தவறு நல்ல தெளிவான விஷயமாக இருக்கும். உறுதியான விஷயமாக இருக்கும். என்னங்க எப்படி செய்யலாம் என கேட்டால் இருங்க வீட்ல கேட்டு சொல்கிறேன் என கூறுவது.


அல்லாஹ் நிர்வாகத்தை கணவனிடம் ஒப்படைத்துள்ளான். ஆனால் இந்த கணவன் தான் நிர்வாகப் பொறுப்பை தானே ஏற்காமல் மனைவியிடம் ஒப்படைத்த விளைவு தான் அத்தனை இடையூறும் ஏற்படகாரணமாகும்.


எந்த குடும்பத்திலும் எந்த பிரச்சினையும் எடுத்து பாருங்க கணவன் தன் நிர்வாக திறனை விட்டுக் கொடுத்ததினால் வந்த விளைவாக தான் அத்தனை பிரச்சினைகளும் இருக்கும்.


அடுத்தப்படியாக மனைவியை கண்டிக்க கூடிய விஷயத்திலே கணவன் தவறிவிடுவது. சுண்டிப்பிலே சலுகை காட்டுவது. மனைவி தவறு செய்யும் நேரத்திலே கணவன் கண்டிக்க வேண்டும். அதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதால் மனைவிக்கு துணிச்சல் வருகிறது. துணிச்சல் வருவதினால் தான் பலதவறுகள் உருவாகி எல்லோரின் இல்லறத்திற்கும் இடையூறாக ஆகிவிடுகிறது.


ஒரு மனைவி தங்கமான் வாங்கி கேட்டாள் கணவன் தன் சொத்தை விற்று வாங்கி கொடுத்தான். சிறிது காலம் கழிகிறது அந்த தங்கமான் காணாமல் போகிவிடுகிறது.


மறுபடியும் தங்கமான் வாங்கி கேட்க, இப்ப கணவனுக்கு கவலை ஏற்பட்டு சோகமாக இருக்கிறான். இப்ப அவனது நண்பன் வருகிறான். அவனிடம்: சோகத்திற்கான காரணம் கேட்கிறான். அவன் தங்கமான் விபரங்களை சொல்ல, உடனே இவன் கூறினான் 'டேய்! நீ ஏண்டா ஆரம்பத்திலேயே அவளை கண்டிக்காமல் தங்கமான் வாங்கி கொடுத்தாய்! நீ இப்படி சொல்லி இருக்கலாமே!.


அன்பே இதுவுமோ அந்தமான் நீயுமோ கவரிமான் வா கமான்! என்று கூறியிருக்கலாமே என்று ஏசினான்.


உனக்கேன் அந்த மான்


மனைவியை கண்டிக்கக் கூடிய நேரத்திலே கண்டிக்காத விஷயத்திலே கணவன் குற்றவாளி தான்.


இதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் அருமை மனைவிமார்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது இரு கண்களும் தெரியாத உம்முமக்தூம் என்ற நபித்தோழர் வருகிறார். இதை கண்ட நபிகளார் தம் மனைவிமார் இருவரிடமும்


உம்மு மகதூம் வருகிறார் உள்ளே போங்க என்ற போது மனைவிமார்கள் சொன்னார்கள், 'யாரஸுலல்லாஹ் அவருக்கு தான் கண் தெரியாதே' என்ற போது.


நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள் 'உங்கள் இருவருக்கும் கண் தெரியுமா? தெரியாதா? என கண்டிக்கிறார்கள் இது போன்ற ஒரு ஒப்பற்ற தலைவரை இந்த உலகம் கண்டிருக்குமா? சொல்லுங்கள்?..!


மேலும் அல்லாஹ்வும் ரஸுலும் கொடுத்த சலுகையை கணவன் தவறாக பயன்படுத்துகிறான் வேறெங்கும் தேவையில்லே நடுவர் அவர்களே


ஷரீஅத் கோர்ட்டாகட்டும். நம்முடைய நிர்வாகத்தினுடைய பஞ்சாயத்தாகட்டும். கோர்ட்களிலே சென்று பார்த்தால் குடும்ப பிரச்சினை கணவன் மனைவி பிரச்சினை தான் ரொம்ப வருகிறது.


அவைகளில் முக்கியமாக வரக்கூடியது தலாகவுடைய உரிமை கணவன் எதற்கெடுத்தாலும் தலாக் சின்னசின்ன விஷயங்களுக்கெல்;லாம் பட்டுன்னு தலாக


தலாக் யார் கொடுக்கிறா! கணவன் தான் கொடுக்கிறான். கணவன் மனைவி நல்ல முறையிலே வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த தருணத்திலே சிறிய தவறுக்காக உடனே தலாக், தலாக். தலாக்... கத்திரிக்கா மாதிரி இந்த தவறை செய்பவன் கணவன் தான்.


அந்த தலாக் என்ற வாசகத்தை பயன்படுத்துவதற்கு 8 அமைப்புக்கு பிறகு தான் தலாக் என்ற வாசகத்தை பயன்படுத்த அல்லாஹ்வும் ரஸுலும் அனுமதி கொடுத்து உள்ளனர்.


முதலில் மனைவி புறத்திலே தவறு ஏற்படுகிற போது முதலில் என்ன செய்யனும் வஸனத்தின் தொடரிலே அல்லாஹ் சொல்கிறான்.


ஃபஇழுஹுன்ன நீங்க அந்த மனைவிமார்களுக்கு உபதேசம் செய்யுங்கள் என்கிறான். கணவன் செய்ய வேண்டிய முதல் வேலை உபதேசம் செய்வது.


2வது வஹ்ஜுர்ஹுன்ன நீங்கள் படுக்கறையிலிருந்து தள்ளி வையுங்க. 3வது வழ்ரிபூஹுன்ன நீங்கள் காயம் படாதவாறு கன்னத்திலே தவிர மற்ற இடங்களிலே லேசாக தட்டுங்க!


அதிலேயும் திருந்தவில்லையெனில் 4வது உங்கள் குடும்பத்தார்களுக்குள்ளேயே ஒரு பஞ்சாயத்து மாதிரி வைத்து சரிபண்ணுங்க! அதற்கும் ஒத்து வரவில்லையெனில் ஷரீஅத் கோர்ட்டுக்கு வாங்க…


5வதாக கணவன் புறத்திலிருந்து கொஞ்ச நீதமானும், மனைவி புறத்திலிருந்து கொஞ்ச நீதவான்களும் வந்து அந்த இரண்டு பேருக்கு மத்தியில் உள்ள பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும். ஷரீஅத் கோர்ட்டை அணுக வேண்டும் அதற்கும் ஒத்து வரவில்லையெனில் அடுத்த கட்டமாகத் தான் அந்த மனைவி தொழுகை உள்ள காலகட்டத்திலே ஒரே ஒரு தலாக விட வேண்டும். அதுவும் 3மாதத்திற்குள் மீட்டிக் கொள்ள வேண்டும் அதற்கு பிறகும் அவள் திருந்தவில்லை எனில் 2வது ஒருமுறை தலாக் சொல்ல வேண்டும். அதற்கும் ஒத்துவரலேன்னு சொன்னால் அதற்கு பிறகு தான் 3வது தலாக் சொல்ல அனுமதி வழங்குகிறது.


ஆனால் இன்றைய கணவன்மார்கள் உபதேசமும் கிடையாது. ஒதுக்கி வைப்பதும் கிடையாது. ஆனால் அடிமட்டும் இருக்கிறது. ஒரு சிறிய தவறு செய்தால் உடனே படார்னு அடி, ஏதாவது எதிர்த்து பேசினால் உடனே தலாக


இந்த குற்றச்சாட்டை செய்பவன் யார் கணவன் தான்.


கணவன் மனைவியினுடைய உணர்வுகளை புரிந்து நடப்பதில்லை. தனக்கு எப்படி கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்று அந்த கணவன் விரும்புகிறானோ, தனக்கு பிரியமான கணவனாக இருக்க வேண்டும் என்று மனைவி விரும்புவாள். ஆனால் பிரியமான கணவனாக இவன் நடப்பது கிடையாது.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களிடம் எப்படி வருவார்கள் என்று கேட்கிற பொழுது அன்னை ஆயிஷா (ரலி) சொன்னார்கள் 'ரஸுலுல்லாஹி (ஸல்) இரவு காலங்களில் என்னிடம் வருகிற பொழுது மிஸ்வாக் செய்வார்கள் பல் துலக்கிக் கொண்டு வருவார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இயற்கையிலேயே சுத்தமானவர்கள நறுமணமிக்கவர்கள் அந்த நபிகளார் இரவு காலங்களிலே மனைவிமார்களின் உணர்வுகளை விளங்கி வருகிற பொழுது சுத்தமாக வருகிறார்கள்.


ஆனால் கணவன் இன்று என்ன செய்கிறான்? உள்ளே நுழைகிற போNது சிசர் குடிக்கிறான், கஞ்சா அடிப்பது அல்லது குவாட்டர் அடிப்பது இதெல்லாம் அடித்துக் கொண்டு உள்ளே நுழைகிறான்.


இங்கு எப்படி? இனிய இல்லறம் இருக்கும்? அப்ப இந்த இனிய இல்லறத்திற்கு இடையூறு விளைவிப்பவன் கணவன் தான்.


மனைவியிடம் சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டை வாங்காத மாட்டுக்கும். கறக்காத பாலுக்கும் சண்டை


கணவன் சொன்னானாம் நான் ஒரு மாடு வாங்க போறேன் மனைவி சொன்னாளாம். சீக்கிரம் வாங்குங்க வாங்கினா பால் கறக்கலாம் பால் கறந்தால் எங்கம்மாவுக்கு கொடுப்பேன் எங்கப்பாவுக்கு, என் அண்ணனுக்கு கொடுப்பேன். என் தங்கச்சிக்கு கொடுப்பேன் என அடுக்கினாள் என்னடி உங்க குடும்பத்துக்கா சொல்றே என்று பளாரனு ஒரு அறை அறைந்தானாம் இதுதான் வாங்கதாத மாட்டிற்கும், கறக்காத பாலுக்கும் சண்டை இப்படி கணவன்; இடையூறு செய்தால் நிம்மதி எப்படி இருக்கும்.


அல்லாஹ் திருமறையிலே ஃபிர்அவ்னுடைய மனைவி ஆஸியா அம்மாவை முஃமினனான பெண்களுக்கு அவர்கள் போல வாழனும் என சுட்டிக் காட்டுகிறான் ஃபிர்அவ்ன் என்ற கணவன் ஆஸியா அம்மாவுக்கு செய்த கொடுமைகளை அல்லாஹ் குர்ஆனிலே சொல்கிறான். அவனது மனைவியே துஆ செய்றாங்க யாஅல்லாஹ் இந்த ஃபிர்அவ்னுடைய கொடுமையிலிருந்தும் இவனுடைய தீய செயல்பாடுகளிலிருந்தும் என்னை பாதுகாப்பாயாக! என அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள் அல்லாஹ் காப்பாற்றினான்.


ஃபிர்அவ்ன் மனைவிக்கு செய்த கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல இன்று இருக்கிற கணவன்மார்கள் தம் மனைவிமார்களுக்கு செய்கிற கொடுமைகள் ஏராளம் ஏராளம்.


பீடி குடித்து விட்டு மனைவிக்கு சூடு வைப்பது. சிறுசிறு பிரச்சனைகளுக்கு தாய்வீடு அனுப்பி வைப்பது.


சரி செய்ய வேண்டிய விஷயங்களை சரி செய்யாமல் அதை ஊர் முழுவதும் பரப்பி மனைவி மீது சந்தேகப்படுவது. ஃபிர்அவன் இதே செயலை செய்தான் துன்புறுத்தினான். அல்லாஹ் அதை உதாரணமாகவே சொல்லி காட்டுகிறான் கணவன் கொடுமை செய்கிறான் என்ற அமைப்பிலே அல்லாஹ்வே சொல்லி காட்டுகிறான். இன்று ஃபிர்அவ்ன் இல்லாவிட்டாலும் ஃபிர்அவ்னுடைய 


குணங்கொண்டு வாழும் கணவன்மார் பலர் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நடுவரவர்களே


மேலும் நிறைய வீடுகளில் பெற்றோர்களை ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள் நிறைய பார்க்கிறோம் ஒருவன் அழகாக சொன்னான்.


'தாயுக்கு பின் தாரம் தாரம் வந்த பின் தாய் ஓரம்


இதற்கு மனைவியை குறை சொல்ல முடியாது. சரி மனைவியே சொன்னாலும் கூட இந்த கணவனுக்க அறிவு எங்கே போச்சு


ஹழ்ரத் அலி (ரலி) அவர்களிடம் ஒரு தாய் தம் மகனை அழைத்து வருகிறார்கள். அலி(ரலி) அவர்களே! என் மகனுக்கு உபதேசம் செய்யுங்கள் என் மகன் என்னை வீட்டை விட்டு துரத்துகிறான், ஒதுக்குகிறான் என்றபோது அறிவுக் கருவூலம் ஹழ்ரத் அலி(ரலி) சொன்னார்கள். தன் வயிற்றிலே இடம் கொடுத்த அன்னைக்கு வீட்டிலே இடம் கொடுக்க மறுக்கிறாயா? என கடிந்து கொண்டார்கள் ஆக பெற்றோரை ஒதுக்குவது கணவனே பெரிய காரணமாக இருக்கிறான்.


கண்ணியத்திற்குரியவர்களே! மனைவி பேச்சை கேட்டு பெற்றோரை ஒதுக்கக்கூடிய கணவன்மார் எத்தனை பேர்? பெற்றோரை உதாசீனப் படுத்தும் கணவன்மார் எத்தனை பேர்?


சொல்லலாம் திருமணத்துக்கு பிறகுதானே ஒதுக்குகிறான் என்று இருந்தாலும் அந்த நிர்வாக திறனை அல்லாஹ் யார் கையிலே கொடுத்துள்ளான்.


கணவருடைய கையிலே தான கொடுத்துள்ளான். இவன் சிந்தித்து பெற்றோரை தன் பராமரிப்பில் வைப்பது கணவரின் பொறுப்பு. எனவே அந்த குற்றத்தையும் கணவன் தான் செய்கிறான்.


மேலும் பெண்களுக்கு குவியல் குவியலாக மஹரை கொடுத்து திருமணம் செய்ய இறைவன் கூறுகிறான்.


ஆனால் கணவன் என்ன செய்கிறான்;. வெட்கமே இல்லாமல் வாங்குகிறான்.


ஒருவன் சொன்னான்


10பைசா கேட்டால் பிச்சைக்காரனாம்


10லட்சம் கேட்டால் மாப்பிள்ளையாம் இது மகா பிழையல்லவா?


ஒரு கணவனாவது ஹழ்ரத் என் மனைவிக்கு எவ்வளவு மஹர் கொடுக்க வேண்டும். அதிகமஹர் எவ்வளவு? என கேட்ட ஒரு கணவன் உண்டா? நெஞ்சிலே கைவைத்து சொல்லுங்க? வரதட்சணை பற்றி ஒரு கவிஞன் சொன்னான்.


'இஸ்லாத்தில் மட்டும்: தற்கொலை ஆகுமென்று இருந்திருந்தால் கிணறுகளெல்லாம் குமறுகளால் நிரம்பி இருக்கும்.


இஸ்லாத்திலே தற்கொலை மட்டும் செய்ய அனுமதியெனில் கிணறுகளெல்லாம் குமருகளால் மூடப்பட்டு இருக்கும். என ஒரு இஸ்லாமிய கவிஞன் பாடி காட்டுகிறான். திருமணத்திற்கு முன்பாகவும் வரதட்சணை திருமணத்திற்கு பின்பும் வரதட்சணை. காரணம் கணவனே!


மனைவியினுடைய உரிமைகளை எந்த கணவன் மதித்து செயல்படுகிறானோ அந்த இல்லறமே மகிழ்வான நல்லறமாக இருக்கும் ஆக நடுநிலை தவறாத நடுவரவர்களே!


 இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பவர்கள்..... கணவனே!.... கணவனே.... கணவனே...


என்று கூறி பெறுகிறேன் விடை தருகிறேன் ஸலாம்


பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

மக்தப் மாணவர்கள் மேடை நிகழ்ச்சிகள்