பக்கங்கள்

புதன், 1 ஜனவரி, 2025

எடுத்தேன் பாரு ஓட்டம்..(கதை)

 

ஓய்வுபெற்ற வயதான கர்ணல் ஆப்பிரிக்காவில் தான் நடத்திய வீரதீர பராக்கிரமங்களை நினைவு கூர்ந்து கொண்டிருந்தார். "


ஒருதடவை ஒரு கருப்புப் பிடரிகொண்ட சிங்கத்திடம் என் உயிரே போக இருந்தது!''


''ஓ,உண்மையாகவா ஐயா?" ஆர்வமாக கேட்பதைப்போல் பாசாங்கு செய்தான் இளம் அதிகாரி, "அவசியம் அதை தாங்கள் சொல்ல வேண்டும்."


'நல்லது. கவனி தம்பி: காங்கோ வனத்தின் மிக அடர்ந்த பகுதியில் என் விசுவாச துப்பாக்கித்தூக்கி உம்பாகோவுடன் நான் எட்டி நடைபோட்டு முன்னேறிக் கொண்டிருந்தேன்.


அங்கே ஒரு சிறு வெளியில் தான் அந்த பெரிய சிங்கத்தை பார்த்தேன். அவ்வளவு பெரிய சிங்கத்தை நீ பார்த்திருக்கவே முடியாது.


நிலைகுலையாத நிதானத்துடன் உம்பாகோவிடமிருந்து என் நம்பகமான சுழல் துப்பாக்கியை வாங்கினேன். குறிபார்த்தேன். விசையை இழுத்தேன். டுமீல்... நாசமாய் போக அது உதவாமல் போய்விட்டது.


மனம் தளராமல் அதை வைத்துவிட்டு அடுத்த துப்பாக்கியை வாங்கினேன்.

டுமில்... இதுவும் பயனற்றதாயிருந்தது.


இதற்குள் துப்பாக்கி தூக்கி உம்பாகோ பறந்துவிட்டிருந்தான். நானும் ஓடிவிடுவதே உத்தமம் என நினைத்தேன்.


என்னால் முடிந்த அளவுக்கு வேகமாக ஓடினேன். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் மிருகம் என பின்னால் எட்டிவிட்டது.


என் புடனியில் அதன் மூச்சை என்னால் உணர முடிந்தது. அது பாய்ந்து குதற தயாரானதை அறிந்தேன்.


ஆனால் பாயப்போகையில் அது கால் வழுக்கி தவறியது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு என்னால் முடிந்த மட்டும் வேகமாக ஓடினேன்.


ஆனால் மறுபடியும் அது என்னை தொட்டு விட்டது - என் கழுத்தின் பின் அதன் மூச்சு பட்டது, பாய தொடங்கியது.மறுபடியும் வழுக்கி விழுந்தது.


இப்படி 3 தடவைகள் நடந்தன. மூன்றாவது தடவை எப்படியோ சமாளித்து உல்லாசமான பழைய லேண்ட் ரோவரில் ஏறி தப்பினேன்.


"எவ்வளவு வியப்புக்குரிய சம்பவம், ஐயா" என்றான் இளம் அதிகாரி."அது மட்டும் நானாயிருந்தால் உடுப்பிலேயே மலம் கழித்து உழப்பி இருப்பேன் என்பது உறுதி.''


"என்னது மலம் கழித்து உழப்பியிருப்பாயா?!" எக்காளதோடு கிழ கர்ணல் சொன்னார்"..


சிங்கம் வேறு எதில் கால்வைத்து வழுக்கியது என நினைக்கிறாய்?''


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக