பக்கங்கள்

செவ்வாய், 25 ஜூலை, 2023

ஜம்வு மற்றும் கஸ்ரு தொழுகையின் சட்டம். தமிழில்.

الجواب بعون الله الملك الوهاب 👇

قد رُوِيَ أنَّ عائشةَ زوجُ النبيِّ -عليه الصَّلاةُ والسّلام- قالت: 

(فُرِضَتِ الصّلاةُ ركعتينِ ركعتينِ، في الحضرِ والسفرِ، 

فأُقِرَّتْ صلاةُ السّفرِ، وزِيدَ في صلاةِ الحَضَرِ).

هذه الرخصة الشرعية هي من رحمة الله تعالى بالمسلمين، 

فهو يعلم ظروف السفر التي يمرّالمسافر بها، 

والتي لا يُمكن له فيها أن يصلّي الركعات الأربع كاملة أو أن يصلّي كل صلاة في وقتها 

لانشغاله بالسفر وهمومه وتعبه، 

والله عزَّ وجلّ يحب أن تؤتى رخصه كما يحب أن تؤتى عزائمه. 

طريقة الجَمْع والقَصر بينَ الصَّلَوات في السفر هناك عدد من النقاط يجب الأخذ بها لأداءِ الصّلاة جمعاً وقصراً وفق ما نصَّ عليه الفُقهاء، 


وذلك بالتّفصيل الآتي


:التَأكُّد من وجود سبب الجمع والقَصر وهو هنا السفر المباح. يَبتدِئ المُصلّي بالصلاة التي أتى وقتها؛ 


فإذا أراد أن يَجمع الظّهر مع العصر تقديماً بدأ أوّلاً بصلاة الظهر، 


وكذلك إن جمع بين المَغرب والعشاء تقديماً 

فعليه أن يبدأ بصَلاة المغرب، وعليه أن ينوي الجمع إماماً كان أو مأموماً بمُجرّد البدء بالصّلاة الأولى. 


تتمّ إقامة الصلاة الثانية مُباشرةً فور الانتهاء من الصلاة الأولى، 


ويجب أن تكون لكلّ صلاة إقامة منفردة فلا يُكتَفى بالإقامة للأولى، 


ويجب على المُصلّي أن يترك بين الصلاة الأولى والصلاة الثّانية مدّةً تزيد عن وقت أداء ركعتين خفيفتين، 


فإن كانت بينهما مدّة أكثر من ذلك بَطُلَ الجمع، 


وصلَّى كلّ صلاةٍ بوقتها وركعاتها. لا تُقصر الصلاة غير الرباعية كصلاة المغرب في الجمع بسبب السفر؛ 


بل تُصلّى كما هي على حالها فتؤدّى ثلاث ركعات كما هي، كذلك لا يوجد جمع لصلاة الفجر مع غيره من الصَّلَوات. 


يُشترط لحدوث جمع وقصر الصلاة بسبب السفر أن يُفارق المسافر العمران؛ 


فلا يجوز له الجمع والقصر إذا حان وقت الصلاة الأولى وهو ما يزال في دياره؛ 


بل يقوم بجمع الصلاة من دون قصر بشرط تحقّق نية السفر. يجوز الجمع والقصر بسبب السفر، 


وذلك إمّا أن يكون جمع تقديم أو تأخير بشرط أن يبدأ المسافر بالصّلاة الأولى؛ 


فإن كان الجمعُ جمع تقديم بدأ بصاحبة الوقت، وإن كان جمع تأخير بدأ بالصّلاة التي أخَّرها عن وقتها. 


يَجوز الجمع في حالة السفر للجماعة والمُنفَرِد. شُروط جَمْع وقَصْر الصَّلاة في السفر تُشترط لجواز الجمع في السّفر مجموعة من الشروطٍ منها: 


أن يكون السَّفر مُباحاً، فلا يجوز الجمع في سفر المعصية. 


أن يَبلُغ السفر مسافة القَصر، 


ومسافة القصر هنا تُعدّ بما يُعدَّ في العُرف سَفَراً، 


وقد اختلف الفُقهاء في تقديرها؛ 


فقال الحنفيّة: 

إنّ مسافة القَصر تُعتبر بما يساوي مسير ثلاثة أيامٍ، قياساً على قول النبي صلى الله عليه وسلم:


(لا تُسافِر المَرأَة ثلاثة أيام إلا مع ذي محرم)،



وهي عند المالكيّة أَربَعةُ بُرُد؛ أي ثمانيةٌ وَأربعونَ مِيلًا، وَحَدُّهَا بالزَّمان سَفَر يوْم وليْلة، 



وهي عند الشافعيّة مَسِيرَةُ يومين كاملين، 


وهو قول ابن عباس وابن عمر والليث، 



وعند الحنابلة مسافة القَصر مَسيرَةُ يومٍ تام.

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் இரண்டாவதாகவும் மிக முக்கியமானதாகவும் தொழுகை இருக்கிறது.


 

தொழுகையை எக்காரணத்தைக் கொண்டும் விடுவதற்கு இஸ்லாத்தில் அறவே இடமில்லை. 


பிரயாணம் போன்ற சிரமமான நேரங்களிலும் ஒருவர் தொழுகையை விடுவதற்கு அனுமதி இல்லை. 



அதே சமயம் தயாள கருணையாளனாகிய அல்லாஹ் பிரயாணிகளின் சிரமத்தை தவிர்ப்பதற்காக அவனுடைய திருத்தூதர் صلى الله عليه وسلم அவர்களின் வழிகாட்டுதலின் மூலம்


 

ஜம்வு, கஸர் என்று சொல்லப்படக் கூடிய சேர்த்து மற்றும் சுருக்கித் தொழக் கூடிய சலுகைகளை நமக்கு வழங்கியிருக்கிறான்.



சேர்த்து தொழுதல் (ஜம்வு):



பிரயாணம் செய்யும் ஒருவர் இரண்டு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்து தொழுவதற்கு “ஜம்வு” என்று பெயர். 


இந்த “ஜம்வு” தொழுகையை பின்வரும் ஏதாவது ஒருவகையில் தொழுது கொள்ளலாம்.



ஜம்வு தக்தீம் – சேர்த்து முற்படுத்தி தொழுதல்: –



பிரயாணம் செய்பவர் லுஹருடைய நேரத்தில் லுஹரையும் அஸரையும் சேர்த்து தொழுது கொள்ளலாம்.


அதாவது லுஹர் தொழுது விட்டு அதைத் தொடர்ந்து அஸரையும் சேர்த்து தொழுது கொள்ளலாம்.


அல்லது


மஃரிபுடைய நேரத்தில், மஃரிபை தொழுது விட்டு அதைத் தொடர்ந்து இஷாவையும் சேர்த்து முற்படுத்தி தொழலாம்.


இவ்வாறு அஸருடைய தொழுகையை முற்படுத்தி லுஹருடன் சேர்த்தோ அல்லது இஷாவுடைய தொழுகையை முற்படுத்தி மஃரிபுடன் சேர்த்தோ தொழுவதற்கு “ஜம்வு தக்தீம் – சேர்த்து முற்படுத்தி தொழுதல்” என்று பெயர்.



ஜம்வு தஃகீர் – சேர்த்து பிற்படுத்தி தொழுதல்: –


பிரயாணம் செய்பவர் லுஹரை பிற்படுத்தி, அஸருடைய நேரத்தில் லுஹரையும் அஸரையும் சேர்த்து தொழுது கொள்ளலாம்.


அதாவது அஸருடைய நேரத்தில் முதலில் லுஹர் தொழுது விட்டு அதைத் தொடர்ந்து அஸரையும் சேர்த்து தொழுது கொள்ளலாம்.


 

கஸ்ரு தொழுகை:



ளுஹர்,அஸா், இஷா ஆகிய தொழுகைகளை இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் குறைத்து தொழுவதற்கு கஸ்ரு என்று பெயர்.




விதிமுறைகள்:


 

1. பயணத் தொலைவு 130 கிலோ மீட்டர் (82 மைல்) அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும்.



2. பயணம் ஹலாலானதாக இருக்க வேண்டும்.



3. கஸ்ரும் ஜம்வும் தொழுது முடிக்கும் வரை அவர் பயணாளியாக இருக்க வேண்டும்.



4.ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊரை நினைத்து அவர் பயணம் செய்திருக்க வேண்டும்.



5. பயணியுடைய சொந்த ஊரின் எல்லையைக் கடந்திருக்க வேண்டும்.



6. வியாபாரம், உறவினரை சந்தித்தல் போன்று ஏதேனும் சில காரணங்களுக்காகவாவது பயணம் அமைய வேண்டும்.



7. அஸரை ளுஹர் வக்திலும், இஷாவை மக்ரிப் வக்திலும் முற்படுத்தி தொழும்போது 

ளுஹர் தொழுது முடிப்பதற்குள் அஸரை முற்படுத்தி தொழப்போவதாகவும் 


மஃரிப் தொழுது முடிப்பதற்குள் இஷாவை முற்படுத்தி தொழப்போவதாகவும் நிய்யத் செய்வது அவசியமாகும்.



இதே போன்று ளுஹரை அஸர் வக்தில் பிற்படுத்தி தொழும்போது ளுஹர் வக்து முடியும் முன் அஸருடன் ளுஹரை பிற்படுத்தி தொழுகிறேன் என்றும், 


மஃரிபை இஷா வக்தில் பிற்படுத்தி தொழும்போது மஃரிப் வக்து முடியும் முன் இஷாவுடன்; 

மஃக்ரிபை பிற்படுத்தி தொழுகிறேன் என்றும் நிய்யத் செய்து கொள்ள வேண்டும். 



இரண்டு ஃபர்ளுகளையும் ஒன்று முடிந்தவுடன் மற்றொன்று என்று தாமதமின்றித் தொழுவது அவசியமாகும்.



8. கஸ்ராகத் தொழுபவர்கள் கஸ்ரின்றி பரிபூரணமாக தொழும் இமாமை பின் தொடர்ந்து தொழுவது கூடாது.



இவைகள் அனைத்தும் ஷாஃபியீ மத்ஹபின் விதிமுறைகளாகும்... 




ஹனஃபி மத்ஹபில்



ஹலாலான வழிகளில் சிரமத்துடன் பிரயாணம் செய்பவர் 

தமது ஊரை விட்டுக் குறைந்தபட்சம் இரண்டு மூன்று நாள் நடக்கக் கூடிய தூரத்திலுள்ள ஊருக்கு (சுமார் 45 அல்லது 48 மைல்) புறப்பட்டு விட்டால்


அப்படிப்பட்ட முஸாஃபிர் மீண்டும் தமது ஊர் வந்து சேரும் வரை நான்கு ரக்அத்து ஃபர்லான தொழுகையை, 

இரண்டு ரக்அத்தாக குறைத்துத் தொழலாம்.


இதற்குப் பெயர் கஸ்ரு தொழுகை எனப்படும்.



முஸாஃபிர் தொழும்போது 'கஸ்ராக தொழுகிறேன்' என்று தக்பீருடன் நிய்யத்து செய்ய வேண்டும்.


தம்மைப்போன்ற முஸாஃபிரை இமாமாகக் கொண்டு ஜமாஅத்தாக தொழலாம். 


பூரணமாக தொழும் இமாமைப் பின் தொடர வேண்டிய அவசியமில்லை.



பிரயாணம் சென்ற ஊரில் 15 நாட்களுக்குக் குறைவாக தங்க நேரிட்டால் தான் 'கஸ்ரு' தொழ வேண்டும்.


காரியம் நாளைக்கு முடிந்து விடும் மறுநாள் புறப்படுவோம் என்று ஒவ்வொரு நாளாய் கடந்து வந்தால்


இங்ஙனம் 15 நாள் வரை தொழுகையை கஸ்ரு செய்யலாம்.


அதற்கு மேல் கூடாது. அவர் முஸாஃபிராக கருதப்பட மாட்டார்.


முஸாஃபிர் தொழுகையை குறைத்து தொழலாம். இரண்டு தொழுகைகளை சேர்த்து தொழ ஹஜ் நேரத்தில் அரஃபாவில் மட்டும்தான் அனுமதி உண்டு. 




اما الحنفية :


قال الكاساني في "بدائع الصنائع في ترتيب الشرائع" (1 / 126): 



" قال أصحابنا: إنه لا يجوز الجمع بين فرضين في وقت أحدهما ، إلا بعرفة والمزدلفة ؛ 


فيجمع بين الظهر والعصر في وقت الظهر بعرفة، وبين المغرب والعشاء في وقت العشاء بمزدلفة،




ஒரே நேரத்தில் இரண்டு தொழுகைகளை அரஃபா மற்றும் முஸ்தலிஃபாவைத் தவிர வேறு எங்கும் ஜமஃ செய்யக்கூடாது...




اتفق عليه رواة نسك رسول الله - صلى الله عليه وسلم - أنه فعله، 


ولا يجوز الجمع بعذر السفر والمطر"



பிரயாணம் மழை போன்ற எந்தவொரு தங்கத்திற்கும் ஜமஃ செய்ய முடியாது 

இதுவே ஹனஃபி மத்ஹபின் ஆய்வாகும்.... 



பிரயாணி என்பதற்கான அளவுகோல்



وقد اختلف العلماء في تحديد ضابط السفر الذي يثبت فيه الترخص على أربعة أنحاء:



பொதுவாக பிரயாண தொலைவை கணக்கிடுவதில் அறிஞர் பெருமக்களுக்கு மத்தியில் நான்கு நிலைபாடுகள் உள்ளன




 1- التحديد بالأيام



ஒன்றாம் நிலைபாடு



நாட்களை கொண்டு கணக்கிடுவது



التحديد بمسيرة ثلاثة أيام بسير الإبل ومشي الأقدام سيراً معتاداً, 



அதாவது வழமையான நடைமுறையில் மூன்று நாட்கள் நடக்கக்கூடிய தொலைதூரமளவு 



والمقصود مسافة يُسار فيها هذا السير, فلو أسرع فيها ووصل في يومين قصر,

 


அல்லது சற்று வேகமாக நடந்தால் இரண்டு நாட்கள் நடக்கும் தொலைதூரமளவு


ஒருவர் தொடர்ந்து பிரயாணம் மேற்கொண்டால் அவர் தொழுகையை சுருக்கி கஸ்ராக தொழுது கொள்ளலாம்




وهو مذهب الحنفية.

 


இதுவே ஹனஃபி மத்ஹபின் ஆய்வாகும்



பார்க்க👇



(بدائع الصنائع 1/93, 


(الدر المختار 2/123).




لما روي عن علي بن أبي طالب رضي الله عنه أنه سئل عن المسح على الخفين 


فقال: جعل رسول الله صلى الله عليه وسلم ثلاثة أيام ولياليهن للمسافر ويوما وليلة للمقيم 


(مسلم 276) 


فقد جعل النبي صلى الله عليه وسلم لكل مسافر أن يمسح ثلاثة أيام ولياليها, 


ولن يتصور أن يمسح المسافر ثلاثة أيام ولياليها ومدة السفر أقل من هذه المدة.



இதற்காக அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களானது 



நபி ஸல் அவர்கள் ஒரு பிரயாணிக்கு மூன்று நாட்கள் வரை தனது காலுறையில் மஸஹ் செய்து கொள்வதற்காக அனுமதி தந்த நபிமொழியும்.

 


وقول النبي صلى الله عليه وسلم: 


لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تسافر مسيرة ثلاث ليال إلا ومعها محرم 



மேலும் ஒரு ஈமான் கொண்ட பெண்மணி மஹரம் அல்லாத ஒருவரோடு மூன்று நாட்கள் வரை பிரயாணம் மேற்கொள்ளல் ஹலால் ஆகாது என்ற நபிமொழியும்



பார்க்க👇


(البخاري 1036,


مسلم 1338 واللفظ له).




واختلفوا في تحديد المسافة التي تقطع في الأيام الثلاثة بالسير المعتاد قديمًا ما بين 83 كيلومتر أو 100 كيلو متر 


وأعلى ما قيل في تقديرها: 120 كيلومتر تقريبًا 



ஆக இவர்களின் கூற்றின் படி சுமார் 83 கிலோ மீட்டரில் இருந்து 120 கிலோ மீட்டர் வரை பயணம் மேற்கொள்பவர் பிரயாணியாக கருதப்படுவார்




பார்க்க👇



بدائع الصنائع 1/93، 


تبيين الحقائق 1/210، 


البناية 3/4,



التحديد بمسيرة يوم تام, وهو مذهب الأوزاعي وابن المنذر. 


(الأوسط لابن المنذر 4/350).


لقول النبي صلى الله عليه وسلم: لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تسافر مسيرة يوم إلا مع ذي محرم 


(البخاري 1038,

مسلم 1339 واللفظ له).


2- التحديد باللغة




இரண்டாம் நிலை பாடு



அகராதி வழக்கத்தின்படி தொலை தூரத்தை நிர்ணயம் செய்வது




فيقصُر في أي ارتحال ُأطلِق عليه اسم السفر سواءً كان طويلاً أو قصيرًا, 



அது சிறு தூரம் ஆகவோ அல்லது நீண்ட தூரமாகவோ இருந்தாலும் சரி 


அவர் பயணம் மேற்கொண்டு விட்டால் கஸர் செய்து கொள்ளலாம்



وهو مذهب الظاهرية، 

وقول ابن قدامة من الحنابلة




இதுவே எல்லாவற்றையும் மேலோட்டமாகவே பார்வையிடும் லாஹிரிய்யாக்களின் ஆய்வாகும்




لقول الله تعالى: 


وَاِذَا ضَرَبْتُمْ فِى الْاَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَقْصُرُوْا مِنَ الصَّلٰوةِ ‌ اِنْ خِفْتُمْ اَنْ يَّفْتِنَكُمُ الَّذِيْنَ كَفَرُوْا‌ اِنَّ الْـكٰفِرِيْنَ كَانُوْا لَـكُمْ عَدُوًّا مُّبِيْنًا‏

 


(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பூமியில் பயணம் செய்யும் காலத்தில் (நீங்கள் தொழுது கொண்டிருக்கும்போது) நிராகரிப்பவர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என பயந்தால் 


நீங்கள் ("கஸர்" தொழுவது அதாவது உங்கள்) தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. 


ஏனென்றால், நிராகரிப்பவர்கள் உங்களுக்குப் பகிரங்கமான எதிரிகளாகவே இருக்கின்றனர்.


(அல்குர்ஆன் : 4:101)




فأطلق الضرب في الأرض ولم يقيد, ثم إنه لم يرد نص في تحديد المسافة فيبقى على أصل اللغة, 


والسفر في اللغة يطلق -بحسب رأي الظاهرية- على ما زاد عن الميل, 



மேற்கண்ட வசனம் பயணம் பற்றி பேசுகிறது 


ஆனால் அதில் தொலை தூரத்தை குறிப்பிடப்படவில்லை




فيقصر فيما زاد على الميل, 

ولا يقصر دونه. 



எனவே சுமார் ஒரு மைல் தொலை தூரத்தை விட அதிகமாக பயணம் மேற்கொள்பவர்கள் தாராளமாக கஸர் செய்து கொள்ளலாம்




பார்க்க👇



(المحلى 3/212-215).




3- التحديد بالعرف



மூன்றாம் நிலை பாடு




பழக்க வழக்கத்தை கொண்டு பயணத்தின் தொலை தூரத்தை நிர்ணயம் செய்வது




فيقصر فيما يسميه الناس سفرًا, وهو قول ابن تيمية رحمه الله، وفيه إعادة لقول الظاهرية بضابط آخر.


قال ابن تيمية: 


كل اسم ليس له حد في اللغة ولا في الشرع فالمرجع فيه إلى العرف، فما كان سفرًا في عرف الناس فهو السفر الذي علق به الشارع الحكم




இது இப்னு தைமிய்யா ரஹ் போன்ற அறிஞர்களின் நிலைபாடாகும்




பார்க்க👇



(مجموع الفتاوى (24/40-43).




وقال: ولهذا قال طائفة أخرى من أصحاب أحمد وغيرهم أنه يقصر في السفر الطويل والقصير؛ 


لأن النبي صلى الله عليه وسلم لم يوقت للقصر مسافة ولا وقتًا، وقد قصر خلفه أهل مكة بعرفة ومزدلفة,


وهذا قول كثير من السلف والخلف وهو أصح الأقوال في الدليل. 


ولكن لا بد أن يكون ذلك مما يعد في العرف سفرًا 




ஆக சிறு பிரயாணமோ அல்லது நீண்ட தூர பிரயாணமோ பழக்கத்தில் பிரயாணம் என்று சொல்லப்படும்படியான பயணத்தில் கஸர் செய்து கொள்ளலாம்




பார்க்க👇



(مجموع الفتاوى 24/15).





4- التحديد بمسافة محددة




நான்காம் நிலைபாடு




மார்க்கத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட தொலை தூரத்தை கடந்து விட்டால் அவர்கள் கஸ்ர் செய்து கொள்ளலாம்




وهو التقدير بأربعة برد تقريبًا, وذهب إليه الجمهور من المالكية والشافعية والحنابلة.



 

இதுவே அநேக அறிஞர் பெருமக்களின் நிலைபாடாகும்.



மார்க்கத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட தொலை தூரம் என்பது நான்கு برد ஆகும்...




பார்க்க👇



مواهب الجليل 2/140, 


نهاية المحتاج 2/257, 


كشاف القناع 1/504.




والبُرُد جمع بريد وهو مسيرة نصف يوم تقريباً.




ஒரு برد என்பது பாதி நாள் நடக்கக்கூடிய தொலை தூரத்தை சாரும்




ويدل على ذلك آثار الصحابة ومنها:



இதுவே சத்திய ஸஹாபாக்களின் நடைமுறையிலிருந்து காணக்கிடைக்கிறது 




ما روى عطاء بن أبي رباح أن ابن عمر وابن عباس كانا يصليان ركعتين ويفطران في أربعة بُرد فما فوق ذلك. 



ஹழ்ரத் இப்னு உமர் ரலி மற்றும் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி போன்றவர்கள் நான்கு بُرد தொலை தூரம் கடந்து விட்டால் 

தொழுகையை சுருக்கி தொழுது கொள்பவர்களாகவும் நோன்பை விடுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்




பார்க்க👇



(البيهقي 5603),



وقال النووي في المجموع 4/328: 


رواه البيهقي بإسناد صحيح وذكره البخاري في صحيحه تعليقا بصفة جزم فيقتضي صحته عنده كما قدمناه مرات).


وعن عطاء قال: سئل ابن عباس: أأقصر الصلاة إلى عرفة؟ 


فقال: لا ولكن إلى عسفان وإلى جدة وإلى الطائف


 

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்களிடம் மக்காவிலிருந்து அரஃபா வரை சென்றால் கஸ்ர் செய்யலாமா என்ற கேள்வியின் போது கூடாது என்றும் அதே சமயம் உஸ்ஃபான் மற்றும் ஜித்தா மற்றும் தாயிஃப் வரைச்சென்றால் கஸர் செய்து கொள்ளலாம் என பதிலளித்தார்கள்




பார்க்க👇


(البيهقي )

,

والمسافة إلى هذه الأماكن أربعة برد تقريبًا.



 ஏனெனில் மேற்கண்ட இடங்கள் 4 بردல் கட்டுப்படும்




وهذه المسافة مقدرة بالقياسات الحديثة ما بين 81 إلى 88 كيلو متر تقريبًا 



 நான்கு برد என்பது சுமார் 81 கிலோ மீட்டரில் இருந்து 88 கிலோமீட்டர் வரை உள்ள தொலை தூரத்தை குறிக்கும்




பார்க்க👇


الشرح الممتع 6/342، 


الفقه الإسلامي وأدلته 2/477, 


منحة العلام 3/465.


 



وهذا هو الراجح من أقوال أهل العلم ويدل على ذلك أمور:




ஆக தொழுகையை சுருக்கி கஸர் செய்து கொள்வதற்கு நான்காவது முறையான குறிப்பிடப்பட்ட தொலை தூரத்தை நிர்ணயம் செய்து கொள்வதே மிகமிக ஏற்றமான கூற்றாகும்




ثبوت التحديد الصريح من فعل الصحابة وقولهم ولا يعلم لهم مخالف.



இதுவே சத்திய ஸஹாபாக்களின் சொல்லாகவும் செயலாகவும் இருந்திருக்கிறது ,



இதில் எந்த விதமான முரண்பாடும் கிடையாது




25 கிலோ மீட்டர் தொலை தூரத்தை கடந்து விட்டால் கஸர் செய்து கொள்ளலாம் என்று வருகின்ற ஹதீஸின் தரம் என்ன?



روى الإمام مسلم في صحيحه بإسناده عن أنس رضي الله عنه قال: 

«كان النبي صلى الله عليه وسلم إذا خرج ثلاثة أميال أو فراسخ صلى ركعتين» 

والشك من شعبة أحد الرواة. 




கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று மைலோ, அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.


அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்


நூல்: முஸ்லிம்



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர், மூன்று மைலோ, அல்லது மூன்று ஃபர்ஸக் அளவோ என்று ஐயத்துடன் அறிவிக்கிறார். மூன்று ஃபர்ஸக் என்பது ஒன்பது மைல்களாகும்.



அன்றைய கால மூன்று ஃபர்ஸக் என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கி.மீ. ஆகும்.



ஒருவர் 25 கி.மீ. தூரமுள்ள ஊருக்குப் பயணம் செல்ல நாடி ஊர் எல்லையை அவர் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்

என மேலோட்டமாக ஹதீஸ் தெரிவிக்கிறது




وهذا الحديث ليس نصاً في المسألة عند جماهير أهل العلم، ولهم عنه إجاباتٍ عديدةٍ منها: 




இந்த ஹதீஸிற்கு ஜும்ஹூர் உலமாக்களிடத்தில் ஏராளமான பதில்கள் உண்டு




ليس في الحديث جزمٌ بأي المسافتين، ثلاثة أميال أو ثلاثة فراسخ. والفرسخ ثلاثة أميال.

 



இந்த ஹதீஸில் தொலைதூரத்தை குறிக்கும் விஷயத்தில் 3 மைலா 3 فرسخ ஹா? என உறுதித் தன்மை இல்லாத நிலை உள்ளது




قال الصنعاني: 


[فذهب الظاهرية إلى العمل بهذا الحديث، القصرُ ثلاثةُ أميال. 


இது லாஹிரிய்யாகளின் மத்ஹபாகவும் உள்ளது




وأُجيب عليهم بأنه مشكوكٌ فيه فلا يحتج به على التحديد بالثلاثة الأميال، 




சந்தேகத்திற்குரிய கூற்றை ஆதாரமாக பிடிக்க இயலாது




نعم يحتج به على التحديد بالثلاثة الفراسخ، إذ الأميالُ داخلةٌ فيها فيؤخذ بالأكثر وهو الاحتياط] 



பார்க்க👇



(سبل السلام2/39.) 




أجاب بعض أهل العلم بأن المراد بحديث أنس رضي الله عنه هو أن النبي صلى الله عليه وسلم 

كان يبدأ القصر من تلك المسافة، 



மேற்கண்ட ஹதீஸிலிருந்து நமக்கு கிடைக்கும் விளக்கமானது 


அந்த தொலைதூரத்திலிருந்து நபியவர்கள் கஸரை ஆரம்பம் செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள்




قال القرطبي: 


[وهذا لا حجة فيه، لأنه مشكوكٌ فيه، 


وعلى تقدير أحدهما، فلعله حدُّ المسافرة التي بدأ منها القصر، وكان سفراً طويلاً زائداً على ذلك] 



நீண்ட தொலைதூர பயணத்தில் கஸர் தொழுகையின் ஆரம்ப மானது 3 மைலை அல்லது 3 فرسخ யை கடக்கின்ற பொழுதும் ஆரம்பமாகிறது என எடுத்துக்கொள்ளலாம்




பார்க்க👇



(تفسير القرطبي5/333.) 





وقال ابن الجوزي: 


[كان رسول الله صلى الله عليه وسلم إذا خرج مسيرة ثلاثة أميال أو ثلاثة فراسخ صلى ركعتين، هذا شيءٌ لا يقول به أحدٌ من أرباب المذاهب الظاهرة، 




தொலைதூரத்தின் விஷயத்தில் சந்தேகத்திற்கு இடமான மேற்கண்ட ஹதீஸை எதையும் அலசி ஆராயாமல் மேலோட்டமாகப் பார்வையிடும் லாஹிரிய்யாக்களின் அறிஞர்கள் கூட ஆதாரம் பிடிப்பதில்லை

என இப்னு ஜவ்ஸீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்





وإن كان هذا الحديث مذهباً لجماعةٍ من السلف، 


فقد كان أنس يقصر فيما بينه وبين خمسة فراسخ، 

وقال ابن عمر إني لأسافر الساعة من النهار فأقصر، وإنما يحمل هذا الحديث على أحد شيئين: 


أحدهما أن يكون رسول الله صلى الله عليه وسلم خرج بنية السفر الطويل، 


فلما سار ثلاثة أميال قصر ثم عاد من سفره فحكى أنس ما رأى. 


والثاني أن يكون منسوخاً] 

كشف المشكل من حديث الصحيحين1/876. 




மேற்கண்ட ஹதீஸை இரண்டு வகையில் சுமத்தாட்டலாம் 




ஒன்று :



நபியவர்கள் நீண்ட பயணத்தை நிய்யத் செய்து மூன்று மைலை கடந்தால் கஸர் செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள்,




 இரண்டு:



அல்லது இந்த ஹதீஸின் படி அமல் செய்வது منسوخاً ஆக்கப்பட்டு விட்டது 




وقال الشيخ عطية سالم: [هناك من أخذ هذا النص وجعل ثلاثة أميال أو ثلاثة فراسخ هي مدة السفر التي تقصر فيه الصلاة، وهذا خطأ، 



والصحيح في ذلك يُؤخذ من قوله: (إذا خرج) فلم يقل: إذا سافر، ولاحظوا الدقة في التعبير، 


وكأن السفر غير الخروج. فيقول: إذا خرج في سفرٍ طويلٍ، وقطع من السفر الطويل ثلاثة أميال أو ثلاثة فراسخ -شك من الرواي- صلى ركعتين، يعني أنه يشرع في قصر الصلاة في السفر الطويل بعد أن يقطع ثلاثة أميال أو ثلاثة فراسخ -على الشك- 


ولا يشرع في قصر الصلاة من بيته؛ هذا حاصل هذا الحديث] 




மேலும் இந்த ஹதீஸில் (خرج) மூன்று மைல் வெளியேறிவிட்டால் என்ற வாசகம் இடம் பெறுகிறது 


3 மைல் (سافر ) பிரயாணம் மேற்கொண்டால் என்ற வாசகம் இடம் பெறவில்லை 



எனவே நீண்ட பயண தூரத்தில் 3 மைல் வெளியேறி விட்டால் அப்பொழுது தொழுகையை சுருக்கி நபியவர்கள் தொழுபவர்களாக இருந்திருக்கிறார்கள் என்றே மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறிய முடிகிறது




பார்க்க 👇


(شرح بلوغ المرام7/92).





மழை, பனி, குளிர் போன்றதன் காரணமாக

லுஹர், அஸர், மஃரிப், இஷாவை

ஜம்உ செய்து தொழலாமா?




இது இமாம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ள மஸ்அலா வாகும், 




اما الحنفية :



ஹனஃபி மத்ஹபின் அடிப்படையில்👇




قال الكاساني في "بدائع الصنائع في ترتيب الشرائع" (1 / 126): 



" قال أصحابنا: إنه لا يجوز الجمع بين فرضين في وقت أحدهما ، إلا بعرفة والمزدلفة ؛ 


فيجمع بين الظهر والعصر في وقت الظهر بعرفة، وبين المغرب والعشاء في وقت العشاء بمزدلفة، 



ஒரே நேரத்தில் இரண்டு தொழுகைகளை அரஃபா மற்றும் முஸ்தலிஃபாவைத் தவிர வேறு எங்கும் ஜமஃ செய்ய கூடாது...



اتفق عليه رواة نسك رسول الله - صلى الله عليه وسلم - أنه فعله، 


ولا يجوز الجمع بعذر السفر والمطر" انتهى.




பிரயாணம் மழை போன்ற எந்தவொரு தங்கடத்திற்கும் ஜமஃ செய்ய முடியாது 

இதுவே ஹனஃபி மத்ஹபின் ஆய்வாகும்.... 





மாலிகீ மத்ஹபின் ஆய்வின்படி 👇




وأما المالكية : 


فيجوز عندهم الجمع بين المغرب والعشاء خاصة لأجل الثلج ، بل هو سنة عندهم . 




பனி, மழை போன்ற காரணத்திற்காக இஷாவையும் மஃரிபையும் ஜம்உ செய்து கொள்ளலாம்




பார்க்க 👇



" الفواكه الدواني على رسالة ابن أبي زيد القيرواني " (1 / 231): 




" الجمع ليلة المطر سنة ماضية، والأصل الحقيقة، 



மழையின் இரவில் தொழுகையை ஜமஃ செய்தல் என்பது கடந்த கால நபியின் வழியாகும்..




وقد فعله - صلى الله عليه وسلم - والخلفاء - رضي الله تعالى عنهم - وفعلهم لا يطرأ عليه نسخ، وأُلحق بالمطر : الثلج والبَرَد " انتهى.


 

இது நபி மற்றும் ஸஹாபா உட்பட எல்லோரும் செய்த செயல்முறையே ஆகும், 




பார்க்க 👇



" الثمر الداني شرح رسالة ابن أبي زيد القيرواني " (1 / 190): 



" فالمطر سبب للجمع بين المغرب والعشاء ، على القول المشهور ؛ بشرط أن يكون وابلا ، أي كثيرا ، 




ஆக பலத்த கனமழையாக இருப்பின் இஷா மற்றும் மஃரிபை ஜமஃ தாராளமாக செய்யலாம்,, 




وأما الظهر والعصر فلا يجوز جمعهما عند المالكية والحنابلة بسبب المطر ونحوه، 




ஆனால் மாலிகீ மற்றும் ஹம்பளீ மத்ஹபில் மழைக்காக லுஹர் அஸரை ஜமஃ செய்ய முடியாது... 




قال الخرشي وهو مالكي: إن الجمع للمطر وما معه مخصوص بالمغرب والعشاء 




இது இஷா மஃரிபிற்கே பொருந்தும் 




ولا يجمع بين الظهر والعصر لعدم المشقة فيهما غالباً بخلاف العشائين. 


وقال المرداوي في الإنصاف: إلا أن جمع المطر يختص بالعشاءين في أصح الوجهين..



லுஹர் அஸரில் மழையின் சிறமம் என்பது மிகக்குறைவே... 




مع التنبيه على أن الجمع - عند المالكية - إنما يختص بأهل المساجد غير المقيمين فيها. 


جاء في " الفواكه الدواني على رسالة ابن أبي زيد القيرواني " (1 / 231): 



" وإنما يطلب ذلك الجمع في حق أرباب المساجد ، الساكنة بغيرها




அதேபோல் இந்த ஜமவுடைய சட்டம் பள்ளியில் தங்காத பள்ளியின் தொடர்பில் உள்ளவர்களுக்கே சொந்தமாகும்.. 






وأما الشافعية :



ஷாஃபிஈ மத்ஹபின் ஆய்வின்படி👇




فيجوز - في المعتمد عندهم - الجمع بين الصلاتين في المطر والثلج ، إذا كان الثلج يذوب ويبل الثوب ،


 

மழை பனி போன்ற தங்கடத்திற்காக தொழுகைகளை ஜமஃ செய்து தாராளமாக தொழுது கொள்ளலாம்




جاء في " المجموع شرح المهذب " (4 / 381): 


"قَالَ الشَّافِعِيُّ وَالْأَصْحَابُ: 


يَجُوزُ الْجَمْعُ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ ، وَبَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ : فِي الْمَطَرِ . 



மழையின் காரணமாக லுஹர் அஸர் மற்றும் மக்ரிப் இஷா வை ஜமஃ செய்துக்கொள்ளலாம்...




وَحَكَى إمَامُ الْحَرَمَيْنِ قَوْلًا أَنَّهُ يَجُوزُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فِي وَقْتِ الْمَغْرِبِ ،


 

மஃரிப் உடைய நேரத்தில் மஃரிபையும் இஷாவையும் ஜம்வு செய்து தொழுது கொள்ளலாம்





وأما الحنابلة : 




ஹம்பளீ மத்ஹபின் ஆய்வின்படி👇




فيجوز الجمع عندهم للثلج في المغرب والعشاء خاصة ، 


وبعضهم يجعل الظهرين في ذلك كالعشاءين في جواز الجمع ، 



மழை மற்றும் பனிக்காக லுஹர் மற்றும் அஸர் மஃரிப் மற்றும் இஷா இவைகளை தாராளமாக ஜமஉ செய்து கொள்ளலாம்..



جاء في الإ

نصاف في معرفة الراجح من الخلاف للمرداوي (2 / 337): 


" قوله (والمطر الذي يبل الثياب) ومثله: الثلج والبَرَد والجليد . 



பனி ,குளிர் ,ஐஸ் கட்டி மழை க்காகவும் ஜமஃ செய்யலாம்... 




فقد ذهب جمهور أهل العلم إلى جواز الجمع بين المغرب والعشاء بسبب المطر المبلل للثياب والثلج والبرد، 


لما روى البخاري عن ابن عباس:أن النبي صلى الله عليه وسلم صلى بالمدينة سبعاً وثمانياً الظهر والعصر والمغرب والعشاء، 


فقال أيوب: لعله في ليلة مطيرة




நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதினா வாழ்க்கையில் ஏழெட்டு நாட்களாக 4 தொழுகைகளையும் ஜமஃ செய்தார்கள்



ஆதாரம் 👇


رواه البخاري 



என்ற ஹதீஸை முன்வைத்து இமாம் பெருமக்கள் மழையின் காரணமாக இவ்வகை தொழுகைகளை தாராளமாக ஜமஃ செய்து தொழுது கொள்ளலாம் என சட்டத்தை வகுத்து தருகிறார்கள்



والله اعلم بالصواب ✍



🎀பதிவு 👇

🎁فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்



2️⃣9️⃣➖0️⃣8️⃣➖2️⃣0️⃣2️⃣0️⃣


1️⃣0️⃣➖0️⃣1️⃣➖1️⃣4️⃣4️⃣2️⃣


☪️சனிக்கிழமை☪️


عبد الرحیم انواری 2008

عفا اللہ عنہ 


دعا کی درخواست ہے

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக