பக்கங்கள்

புதன், 23 நவம்பர், 2022

மக்கத்து மலரே...

 


 மக்கத்து மலரே மாணிக்கச் சுடரே யாரசூரல்லாஹ

  உயர்மறையாம் புர்க்கான் வாங்கித்தந்தோரே யாரசூலலா 

மனித வாழ்க்கையில் இனிமை சேர்த்தோரே யாரசூலல்லா

 உங்கள் மகிமை சொல்லி அடங்குவதில்லை யாரசூலல்லா

 

அல் அமான் யாரசூலல்லா

 அஷ்ஷபா அத்த யாரசூலல்லா

 

1.ஆமினா அப்துல்லா அருந்தவப்புதல்வர் யாரசூலல்லா - இந்த 

அகிலத்தின் இருளை ஓட்டிட வந்தவர் யாரசூலல்லா 

அன்பின் வடிவாய் ஆகி நின்றவர் யாரசூலல்லா - என்றும் 

அழியா புகழை அடைந்து சென்றவர் யாரசூலல்லா

 

(அல் - அமான்)

 

2 அன்னை கதீஜா ஆயிஷா மணாளர் யாரசூலல்லா 

அருமை பாத்திமாவின் ஆருயிர்த்தந்தை யாரசூலல்லா 

ஹஸன் ஹுசைனார் அருமை பாட்டனார் யாரசூலல்லா 

அகிலம் போற்றும் வீரர் அலியின் மாமனார் யாரசூலல்லா 

(அல்-அமான்)

 

3. அபுபக்கர் உமர் உதுமான் போன்றோர் யாரசூலல்லா - நீங்கள் 

ஆக்கிய தீனின் சோலை மலர்கள் யாரசூலல்லா 

ஆயிரம் ஆயிரம் அருமை ஸஹாபாக்கள் யாரசூலல்லா - உங்கள் 

ஆணைக்கு முன்னால் அனைத்தையும் துறந்தார் யாரசூலல்லா 

(அல்-அமான்)

 

4. கருணைக் கடலாம் காவலன் தூதே யாரசூலல்லா உயர்

 கதி பெற வானில் துணைபுரிவார் யாரசூலல்லா 

கற்கண்டு மொழியில் சொற்கண்டு வந்தீர் யாரசூலல்லா அதைக் 

காசினி முழுவதும் ஏற்றிடச் செய்தீர் யாரசூலல்லா

(அல் - அமான்)

 

5. அன்னியன் ஒருவன் கழித்திட மலத்தை யாரசூலல்லா 

உங்கள் அழகு கரங்களால் கழுவிட செய்தீர் யாரசூலல்லா 

அண்ணல் எங்கள் ஆருயிர் நபியே யாரசூலல்லா- உங்கள் 

ஆயுள் முழுவதும் அதிசய வாழ்வோ யாரசூலல்லா (அல் - அமான்)

 

6. சொல்லடி யேற்றும் சோர்ந்திடவில்லை யாரசூலல்லா 

பெரும் கல்லடி கண்டும் கலங்கிடவில்லை யாரசூலல்லா வல்லவன் அருளை வேண்டி நின்று நீர் யாரசூலல்லா 

உயர் வல்லமையோடு வாழ்ந்திடச் செய்தீர் யாரசூலல்லா

 

- (அல் - அமான்)

 

7. தாயிப் நகர மக்கள் தந்த கொடுமையினை யாரசூலல்லா - நீங்கள்

 தாங்கி நின்ற விதம் என்னென்று சொல்வேன் யாரசூலல்லா 

விண்ணும் அழுதது மண்ணும் அழுதது யாரசூலல்லா 

வடித்த கண்ணும் அழுதழுது கண்ணீர் வடித்ததே யாரசூலல்லா 

(அல் - அமான்)

 

8. எண்ணற்ற வசதிகள் இருந்தும் வாழ்க்கையில் யாரசூலல்லா 

நீங்கள் ஏழையாகவே வாழ்ந்ததும் ஏனோ யாரசூலல்லா

ஹிந்தாவை மன்னித்த எம்பெருமானே யாரசூலல்லா 

உங்கள் இணையற்ற கருணையை என்னென்று சொல்வேன் யாரசூலல்லா (அல் - அமான்)

 

9. சொர்க்கத்தில் வாழும் மக்கத்து நிலவே யாரசூலல்லா 

உங்கள் சுந்தர வதனம் எப்படி இருக்குமோ யாரசூலல்லா 

சொல்லாலே அதனை சொல்ல முடியுமோ யாரசூலல்லா 

இந்த கண்ணாலே அதனைக் காணமுடியுமோ யாரசூலல்லா

 

அல் அமான் யாரசூலல்லா 

அஷ்ஷபா அத்த யாரசூலல்லா 

அற் றாஹத்த யாரசூலல்லா...

அல் ஹலாஸ் யாரசூலல்லா

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக