பக்கங்கள்

திங்கள், 13 ஏப்ரல், 2020

நினைவில் நிற்கும் நிகழ்வுகள்.



அல்லாஹ்வின் அற்புதமான பாதுகாப்பு ஹள்ரத் துன்னூன் மிஸ்ரி (ரஹ்) அவர்கள் ஒரு முறை துணி துவைக்க நைல் நதி கரைக்கு சென்றார்கள். திடீரென பார்த்தால் தேள் ஒன்று கரை ஓரமாக சென்று கொண்டிருந்தது. தேள் கரையை அடைந்ததும் ஒரு தவளை தண்ணீரிலிருந்து வெளிப்பட்டது.
பிறகு மிதக்க ஆரம்பிக்கவே தேள் அதை பார்த்ததும் அதன் முதுகின் மீது ஏறிக் கொண்டது. தவளை அதை சுமந்துக் கொண்டு அடுத்த கரையை நோக்கி புறப்பட்டது. ஹள்ரத் கூறுகிறார்கள்: நான் துணிச்சலோடு நதியில் இறங்கினேன். பிறகு கவனித்த போது அவ்விரண்டும் எதிர் கரையை அடைய தவளை மீது சவாரி செய்த தேள் முதுகிலிருந்து கீழே இறங்கி காய்ந்த பகுதியை நோக்கி செல்ல ஆரம்பித்தது. நானும் நதியிலிருந்து வெளியேறி அதை பின் தொடர்ந்தேன்

ஒரு மரத்தின் நிழலில் ஆழ்ந்து தூங்கிக் கொடிருந்த ஒரு வாலிபனை கண்டேன். அந்த தேள் இந்த வாலிபனைத் தான் கொட்டுவதற்கு இவ்வளவு நீண்ட பயணத்தை மேற்கொண்டது என நினைத்தேன். அதற்குள் ஒரு விஷப்பாம்பு தனது தலையை தூக்கிக் கொண்டு வாலிபனை நோக்கி விரைவதை கண்டு அதிர்ந்து போனேன். ஆனால் அந்த பாம்பு அந்த வாலிபனை தீண்டுவதற்கு முன்னே தேள் முன்னேறி பாம்பின் தலையை தாக்கிவிட்டது, சிறிது நேரம் கழிந்த பிறகு பாம்பு செத்துவிட்டது. அந்த தேள் தான் வந்த கரை ஓரமாக புறப்பட அங்கே தவளை எதிர்பார்த்து இருக்க அதன் முதுகின் மீது ஏறி சவாரி செய்து மீண்டும் அந்த கரைக்கே போய் சேர்ந்து விட்டது

இந்த அற்புத சம்பவத்தை பார்த்த நான் கவிதை ஒன்றை பாடினேன்.

பொருள் தூங்கக் கூடியவனே! உனது பாதுகாப்பை அளவற்ற அல்லாஹ் செய்துக் கொண்டிருக்கிறான். இங்கே இருளில் நிகழ்ந்த எல்லா பாவத்தைவிட்டு பாதுகாப்பு கிடைக்கிறது" எனது சப்தத்தை கேட்டு அந்த வாலிபன் எழுந்தான். நடந்த நிகழ்ச்சிகளை கூறினேன். இதனின் தாக்கம் வாலிபனுக்கு கடுமையாக ஏற்பட்டது. தனது வாழ்நாளை வீண் விளையாட்டில் கழித்துவிட்டேனே என்று எண்ணி வருத்தப்பட்டு அல்லாஹ்விடம் தவ்பா செய்துக் கொண்டான்
(நூல் : தப்ஸீரே கபீர், தராஷே. பக்-15)

படிப்பினை : இந்த நிகழ்வின் மூலம் அல்லாஹுதஆலா பாதுகாக்க நாடிவிட்டால் முழு உலக சக்திகள் சேர்ந்தாலும் அதை தடுக்க முடியாது என விளங்க முடிகிறது. இது அல்லாஹ்வின் அற்புதமான பாதுகாப்பிற்கு ஓர் எடுத்துக் காட்டும் அத்தாட்சியாகும்

இந்த மாளிகையில் இரு குறைகள் உள்ளன

ஒரு முறை அமீருல் முஃமினீன் மஹ்தி அவர்கள் புதியதொரு மாளிகை கட்டினார். இந்த மாளிகையை யார் வேண்டுமானாலும் சுற்றி பார்க்க அனுமதி உண்டு எந்த தடையுமில்லை என உத்தரவிட்டார். சுற்றி பார்ப்பவர் நண்பராக அல்லது விரோதியாக இருக்கலாம். நண்பராக இருப்பின் சந்தோஷம் அடைவார், எனது நண்பரின் அன்பு தான் எனது நோக்கமாகும். மேலும் விரோதியாக இருப்பின் கவலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் தனது விரோதிக்கு கவலை ஏற்படுத்தவே பிரியப்படுவான், விரோதி ஏதேனும் குறை கூறினால் அவனை வெளியேற்றிடுவேன் என்று மன்னர் மஹ்தி உரைத்தார்

ஒரு பக்கீர் (ஏழை) அந்த மாளிகையை பார்த்து விட்டு இதில் இரண்டு குறைகள் உள்ளது என்று தைரியமாக கூறினார். மன்னர் அவர்களே!
1 இந்த மாளிகையில் தாங்கள் நிரந்தரமாக இருக்க மாட்டீர்கள்.
2 இந்த மாளிகை நிரந்தரமாக இருக்காது இதுவே இதில் இருக்கும் குறைகள்

மன்னர் அவர்கள் அந்த ஏழையின் உண்மை விஷயத்தைக் கேட்டு வியந்து போனார். எனவே அந்த மாளிகையை ஏழைகள், அநாதைகளுக்கு தானமாக கொடுத்துவிட்டார். (நூல் : மக்ஜனே அக்லாக்)

படிப்பினை : உலகத்தில் எவ்வளவு பெரிய பங்களாவாக இருந்தாலும் அதை கட்டியவன் நிரந்தரமாக இருப்பதில்லை. மேலும் கட்டப்பட்ட மாளிகையும் நிரந்தரமாக இருக்காது. இரண்டிற்கும் அழிவு உண்டு

தமிழில் : ஹாபிழ் மெளலவி, அப்துல் வஹ்ஹாப் காஷிஃபி- ஒசூர்


மேலும் விபரங்களுக்கு...

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக