பக்கங்கள்

திங்கள், 13 ஏப்ரல், 2020

உறுதியான நம்பிக்கை வேண்டும்.



சமீம் அக்தர் என்ற சூஃபி மகான் மக்கா நகர் நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தார். நீண்ட தொலைவு நடந்ததால் அவருக்கு தாகம் ஏற்பட்டது  அது ஒரு வறண்ட காட்டுப்பகுதி.
எங்கேனும் தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தார். ஓரிடத்தில் பெரிய கிணறு இருந்தது ஆவலுடன் சென்று கிணற்றினுள் எட்டிப் பார்த்தார். தண்ணீரில் வெகு ஆழத்தில் இருந்தது.

இப்போது கயிறும் வாளியும் இருந்தால் தண்ணீரை இறைத்து பார்க்கலாமே என்ற எண்ணம் வந்தது. அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். அங்கே கயிறு வாளி எதுவுமே அங்கே இல்லை. தண்ணீரை எப்படி எடுப்பது என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு புள்ளி மான் அங்கே துள்ளிக் குதித்து ஓடி வந்தது.

மானும் வெயிலில் நடந்து வந்ததால் அதற்கு தாகம் அது கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கிணற்றின்அடி ஆழத்திலிருந்த  தண்ணீர் அப்படியே எழும்பி மேலெழுந்து வந்து கிணற்றின் விளிம்பு வரை வந்து நின்றது. மான் தாகம் தீர தண்ணீர் பருகிவிட்டு தன் இருப்பிடம் நோக்கிச் சென்று திரும்பியதும் கிணற்றிலிருந்து தண்ணீர் மீண்டும் பழைய நிலைக்கே ஆழத்திற்கு சென்று விட்டது.

இந்த காட்சியை கண்டு திகைத்துப் போய்விட்டார் அவர். தன் இரு கைகளையும் உயர்த்தி இறைவா என்னை விட அந்தமான் எந்த விதத்தில் உயர்ந்தது மானுக்கு நீர் கொடுத்து உதவிய நீர் எண்ணை கை விட்டு விட்டாயே என்ன காரணம் என்று கேட்டால் அப்போது வானிலிருந்து அசரீரி ஒன்று கேட்டது.

உம்மை விட அந்த மான் உயர்ந்ததுதான். காரணம் நீர் கயிறையும் வாளியையும் நம்பினீர். ஆனால் அந்த மானோ என்னை மட்டுமே நம்பியது. இறைவன் மீதான தன் அவநம்பிக்கையை உணர்ந்த சூஃபி இறைவனிடம் மன்னிப்பு கேட்டார்.



மேலும் விபரங்களுக்கு...

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக