பக்கங்கள்

திங்கள், 6 ஏப்ரல், 2020

இஸ்லாம் கூறும் இல்லற வாழ்க்கை




திருமணத்திற்குப் பின் நன்மைகள் அதிகம்.

மனிதன் திருமணம் செய்து கொண்ட பிறகு அல்லாஹ் அவனது இபாதத்தின் நன்மைகளை பன்மடங்காக பெருக்கி விடுகிறான். சுப்ஹானல்லாஹ்

ஒருவர் திருமணம் செய்து குடும்பவாழ்க்கையை துவங்கிய பின் அவர் ஒரு தொழுகையை நிறைவேற்றினால் அல்லாஹ் அவருக்கு 21 தொழுகைகளின் நன்மைகளை வழங்குகிறான் ஏனென்றால் இந்த அடியான் முன்பிருந்தே அல்லாஹ்வின் கடமைகளை மட்டும் நிறைவேற்றி வந்தான். இப்பொழுது அடியார்களுக்குரிய கடமைகளையும் நிறைவேற்றுவதுடன் அல்லாஹ்வின் கட்டளைகளையும் செயல்படுத்துகிறான் எனவே அல்லாஹுத ஆலா
அவனது அமல்களுக்கு மதிப்பளித்து நன்மைகளை அதிகமாக வழங்குகிறான்

நற்பாக்கியவான்

திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிடமும் பெண் வீட்டார் மாப்பிள்ளையிடமும் சில தன்மைகளை, குணங்களை எதிர்பார்க்கின்றனர். அவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்

ஒருவருக்கு நம்பிக்கையான வாழ்க்கைத் துணை கிடைத்து விட்டால் அவர்தான் உலகிலேயே நற்பேறு பெற்றவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


ஹள்ரத் அலீ (ரளி) கூறுவார்கள் "ஒரு மனிதனுக்கு ஐந்து விஷயங்கள் கிடைத்து விட்டால், உலகிலேயே நற்பாக்கியம் பெற்றவன் என்று நம்பட்டும். அந்த ஐந்தையும் கவனமாகக் கேளுங்கள்

நன்றி செலுத்தும் நாவு

இது அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்று, இன்று பெரும்பாலானோர் அல்லாஹ்வின் நிஃமத்துக்களை சாப்பிட்டு சாப்பிட்டு பற்கள் விழுந்து விட்டன. ஆனால் அவனுக்கு நன்றி செலுத்த நாவு பழகவில்லை ஒருவரின் உணவைச் சாப்பிட்டால் அவரது புகழ் பாட வேண்டும்என்பது பிரபலமான உருதுப் பழமொழி. அதற்கேற்ப நாமும் அல்லாஹு தஆலாவிற்கு நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்

திக்ரு செய்யும் உள்ளம்

ஒருவரின் உள்ளத்தில் அல்லாஹ்வின் ஞாபகம் சதாவும் இருப்பது அவனது பெரியஅருட்கொடையாகும்

கஷ்டங்களை தாங்கும் உடல்

ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான
அறிவும் இருக்கும் என்பது உருதுப் பழமொழி

சொந்த ஊரிலேயே உணவிற்கான ஏற்பாடு

இதுவும் பெரிய நிஃமத் தான் ஏனெனில் சொந்த பூமியின் பாதி, மற்ற ஊரின் முழுமைக்குச் சமம் என்கிறது பழமொழி

நல்ல மனைவி

பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொள்ள நற்குணம் கொண்ட மனைவி கிடைத்து விட்டால் வாழ்க்கையின் இன்பம்
பன்மடங்காகப் பரிமாணம் பெற்றுவிடும்

இந்த ஐந்து நிஃமத்துக்களையும் ஒருவர் பெற்றிருந்தால் உலகின் அனைத்து அருட்கொடைகளையும் அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான் என்று பெருமைப்பட வேண்டும்"

மனைவியை தேர்வு செய்தல்

ஹள்ரத் அபூஹுரைரா (ரளி அவர்கள் அறிவிப்புச் செய்ததாக இமாம் புகாரி (ரஹ் பதிவு செய்துள்ள ஒரு ஹதீஸ் "ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறாள்

முதல் காரணம் செல்வம். வசதி வாய்ப்புகள் உள்ள வீட்டில் சென்று பெண் கேட்கின்றனர். அவர்களே தொழில் செய்து கொடுப்பார்கள், வீடு கட்டித் தருவார்கள் என்று நினைத்து திருமணம் செய்கின்றனர். இதனைத் தான் அவளது செல்வத்தின் காரண மாக நிகாஹ் செய்கின்றனர் என்று கூறினார்கள்

இரண்டாவது
அவள்து குடும்ப கௌரவத்தை முன் வைத்து நல்ல கெளரவமான
குடும்பம் என்பதை மட்டும் பார்த்து நிகாஹ் செய்கின்றனர்

மூன்றாவது பெண்ணின் அழகில் நிகாஹ் மயங்கி அவளை செய்கின்றனர்

கடைசியாக அவளது மார்க்கப்பற்று, நற்குணத்தின் அடிப்படையில் நிகாஹ் செய்யப்படுகிறாள். நீங்களும் உங்களுக்கு தீனுடைய அடிப்படையில்பெண் தேட வேண்டுமென்று நான் உபதேசம் செய்கிறேன் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்

அழகை மட்டும் பார்த்தால் இந்த வெளித் தோற்றம் எத்தனை நாட்களுக்கு? கூறுங்களேன், இது சில வருடத்திற்கு இருக்கலாம். வாலிபமும், செல்வழும் நிரந்தரமானவையல்ல அஸ்திவாரமே
ஆட்டங்கண்டு விட்டால் அதன் மீது கட்டப்பட்ட வாழ்க்கைக் கட்டிடத்தை எப்படி சமாளிக்க முடியும்

ஆனால் நற்குணமும் நன்னடத்தையும் காலத்தால் அழியாதவை. இந்த அஸ்திவாரத்தின்மீது எழுப்பப்படும் கட்டிடம் நிரந்தரமாக
உறுதியுடன் மேலோங்கி நிற்கும். எனவே நற்குணம் மற்றும் மார்க்கப்பற்றை முன் வைத்து மனைவியைத் தேர்ந்தெடுங்கள்.

அழகான மனைவியைப் பார்க்கும் போது கணவனின் கண்கள் குளிர்கின்றன. ஆனால் நற்குணமுள்ளமனைவியைப் பார்க்கும் போது கணவனின் உள்ளம் குளிர்கின்றது. எனவே கண்களின் குளிர்ச்சியை விட மனதின் குளிர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

உலகமே சிறிய சுகம்தான் அந்த சிறிய சுகங்களில் சிறந்தது
நன்னடத்தையுள்ள மனைவியாவாள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்) அல்லாஹ் ஒருவனுக்கு நல்ல மனைவியை கொடுத்திருந்தால் உலகத்தின் பெரும் அருட்கொடை கிடைத்து விட்டதாக அவர் நினைக்க வேண்டும்



மூலம்.  ஹழ்ரத் மவ்லானா துல்பிகார் அஹ்தமத். நக் ஷபந்தி. தாமத் பரகாத்துஹும்.

தமிழில். மவ்லவி எஸ். கே. அப்துல்லாஹ் யூசுபி நத்வி.


A, காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ மஸ்ஜித்
அசநெல்லிக் குப்பம்.
அரக்கோணம்.
9952129706

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக