பக்கங்கள்

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

பூனை புகட்டும் பாடம்.



பூனையின் பற்கள் மிகக் கூர்மையானவை, எலியைக் கவ்விக் கடித்துக் குதற வசதியாக இருக்கும். எலியைக் கண்டுவிட்டால், ஒரே பாய்ச்சல், ஒரே கவ்வல். கூரிய பற்களில் குத்துண்டு சாகும் எலி

ஆனால், அதே பூனை, அதே கூரிய பற்களால், தான் போட்ட குட்டியை கவ்வித் தாக்கிச் செல்லும்போது, கடுகளவுகூட காயம் படாமல் லாவகமாய்க் கவ்விச் செல்லும். தம் குட்டிக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. அதே போலத் தான் அறிவியல் அறிவியல் கண்டு பிடிப்புகள். ஆற்றல் உள்ளவை. கூர்மையுள்ளவை. அந்த ஆற்றலையும் கூர்மையையும் ஆக்கத்திற்கு லாவகமாய்ப் பயன்படுத்த
வேண்டும்.

நீக்கத்திற்கு ஆழமாய்ப் பயன்படுத்த வேண்டும். எல்லாவற்றிலும் ஒரே கவ்வு கவ்வினால் அது அறிவிற்கு அழகல்ல அடிமுட்டாள் தனத்தின் விளைவு.

எலியை ஆழக் கவ்வுவதும், குட்டியை அன்பாய் மனிதர்களுக்கு
கவ்வுவதும் பூனைக்குத் தெரிகிறது. பல மனிதர்களுக்கு தெரிவதில்லை

சமுதாயத்தில் பலரிடம் பழகுகிறோம். ஒரே நபர் வீட்டில் மனைவிக்குக் கணவன், பெற்றோருக்குப் பிள்ளை பிள்ளைக்குத் தந்தை, அலுவலகத்தில் அதிகாரி, கடைக்குப் போனால் வாடிக்கையாளன் தோழனுக்கு நண்பன் எதிரிக்குப் பகைவன், சமுதாயதிற்குத் தொண்டன்.

எங்கெங்கு யாரிடம் எப்படி நடக்க வேண்டுமே அப்படி நடக்க வேண்டும், பழக வேண்டும், பேச வேண்டும் அதை விடுத்து அலுவலகத்தில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை வீட்டிலும் நடத்தினால் வீட்டில் விபரீதம் வெடிக்கும்.

பல ஒன்றானாலும் பக்குவம் வேறுபடுவதுபோல்
ஆள் ஒன்றானாலும் அணுகுமுறை வேறுபடவேண்டும்

பூனைபுகட்டும் பாடம் இதுதான்


மதிப்பிற்குரிய மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய சுற்றியுள்ளவை கற்றுத் தருபவை புத்தகத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு இச்செய்தியை பயன்படுத்திக் கொள்ளவும்.



மேலும் விபரங்களுக்கு...
A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக