பக்கங்கள்

திங்கள், 6 ஏப்ரல், 2020

மூஸா (அலை) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) உரையாடல்.




மாமேதை கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் ஓர் இரவு அயர்ந்த உறக்கத்தில் நபி மூஸா (அலை) அவர்களைக் கனவில் கண்டார்கள். அப்பொழுது மூஸா அலை) அவர்கள் உன்பெயரென்ன எனக் கேட்க, என் முஹம்மதிப்னு முஹம்மதிப்னு முஹம்மத் என பதிலுரைத்தார்கள்.
அதாவது, என் பெயர் முஹம்மது, என் தந்தையின் பெயரும் முஹம்மது இவ்வாறே என் பாட்டனார் பெயரும் முஹம்மதே என நபி மூஸா (அலை) அவர்களின் வினாவிற்கு பதில் கொடுத்தார்கள்

மூஸா (அலை), அவர்கள் முகம் மாறியவர்களாக கஸ்ஸாலி (ரஹ்) அவர்களைப் பார்த்து, நான் உன் பெயரை மட்டும் தானே கேட்டேன். நீ
உன் தந்தை பாட்டனார் அனைவரின் பெயரையும் சொல் கிறாயே? எனக் கேட்டார்கள்.

இதைக் கேட்ட இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் அருமை நபியே! அல்லாஹ் உங்களிடம் பேசினான். உன் கையில் இருப்பது என்னவென்று? அதற்கு தாங்கள் குச்சி என்று மட்டும் தான் பதில் சொல்லியிருக்க வேண்டும். அதுதான் நியாயம். அதை விட்டு விட்டு அதில் நான் என் ஆட்டுமந்தைகளுக்கு இலை பறித்துப் போடுவேன். வேறு சில அறிய சாதனைகளை இந்த குச்சி மூலம் நான் ஆற்று(செய்)வேன் என அதன் பிரயோஜனங்களை எல்லாம் கூறி ஒரு நீண்ட உரையாடலே ஆற்றினீர்களே அதன் காரணத்தை சொன்னால் நீங்கள் கேட்பதற்கு பதில் தருவேன் எனக் கூறுகிறார்கள்
அல்லாஹ்

நபி மூஸா (அலை) அவர்கள் நான் என்னை படைத்த நாயனிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்காதா ஏங்கி என கொண்டிருந்த தவித்துக் வேளையில் என்னிடம் பேசினான். இவ்வாறு கிடைத்திருக்கும் அறிய வாய்ப்பை ஒரே' வார்த்தையில் பதில்கூறி முடித்துக் கொள்வதா கிடைத்த வாய்ப்பில் நிறையை பேச வேண்டுமென்றே நீண்ட பதில் கூறினேன். என்றார்கள்

உடனே, இமாம் கஸ்ஸாலி (ரஹ்)அவர்கள், இதே நிலையில் தான் நானும் உள்ளேன். ஒரு நபியை இறைத்தூதரை கனவில்கண்டு அவரோடு. பேசும் வாய்ப்பை பெற்ற நான் என் பெயர் முஹம்மது என்று ஒரே வார்த்தையில் பதில் கூறி அவரோடு பேசும் சந்தர்ப்பத்தை முடித்துக் கொள்வதா? எனவே தான் என் தந்தை இன்னும் பாட்டனார் பெயரையும் என் இணைத்துச் சொன்னேன். என பதில் கொடுத்தவுடன் மூஸா (அலை) அவர்களின் முகம் மலரத் துவங்கியது

மேற்கண்ட நிகழ்ச்சியில் நபி மூஸா (அலை அவர்கள் இறைவனிடம் பேசும் பொழுது (வலிய Fபீஹா மஹாரிபு உஹ்ரா) இக்குச்சியின் மூலம் அறிய பல சாதனைகளை ஆற்றிக் கொள்கிறேன் எனக் கூறினார்களல்லவா... அந்த அற்புத சாதனைகள் என்ன என்பதை அறிய கடமைப்பட்டுள்ளோம்

இத்தித்திக்கும் திரு வசனத்திற்கு பனிரென்டு வகை சாதனைகளை இப்னு அப்பாஸ்(ரலி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அவை பின் வருமாறு

இவர்கள் செல்லும் வழியில் பெய்யத் துவங்கியதனால் தங்களுக்கு அற்புதமாக கொடுக்கப்பட்ட குச்சியை பூமியில் ஊன்றுவார்கள் அது குடை போன்று மாறிவிடும். அதற்கு கீழ் தங்கி தாங்கள் மழையிலிருந்து பெற்றுக் பாதுகாப்புகொள்வார்கள்

சூரியன் மேகத்தால் மறைக்கப்பட்டு நேரம் அறிவது சிரமமாக இருப்பின் குச்சியை தரையில் வைப்பார்கள் அது சூரிய ஒளியைப் போல் பிரகாசம் தரும். அதன் மூலம் நேரத்தை உணர்ந்து கொள்வார்கள்

ஆடுகளை தன்னோடு மேய்ப்பதற்கு அழைத்து  செல்லும் வேளையில் கடுமையான வெயிலைப் பெற்றுக்கொண்டால் பூமியில் நடுவார்கள். அக்குச்சி அடர்த்தியான இலைகள் நிறைந்த மரமாகிவிடும். அவர்கள் அந்நிழலில் அமர்ந்து சுகம் பெற்றுக் கொள்வார்கள் தாகம் அதிகரித்து தண்ணீரை தேடி பெற்றுக் கொண்டு இறைக்க வாலியும், கயிறும் இல்லையென்றால் தன் குச்சியை அக்கிணற்றில் காட்டினால் அது நீண்ட கயிறாகவும் அதன் நுனிப் பகுதி வாளியைப் போன்றும் மாறிவிடும். அதன் மூலம் தண்ணீரை இறைத்து பருகிக் கொள்வார்கள்

பாதுகாப்பின்றி பயம் நிறைந்த இடத்திற்குச் சென்றால் தன் குச்சியை கீழே போட்டு விடுவார்கள். அது பகல் காலங்களில் கர்ஜிக்கும் சிங்கமாக மாறி தன்னை பாதுகாக்கக் கூடியதாகிவிடும்

இரவு நேரங்களில் மிகப் பெரும் பாம்பாக மாறி பாதுகாக்க துவங்கி விடும். ஒர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது உணவுப் பொருள்களைப் செல்ல உணவை வைக்கும் பையைப் போன்று மாறிவிடும்

தாகம் அதிகரித்து சமீபத்தில் தண்ணீர் தலங்கள் இல்லாவிட்டால் கொண்டு அக்குச்சியின் ஓரத்திலிருந்தே தண்ணீர் ஊற்று நிரைப்போல சுவையாக பெறுக் கெடுத்து ஓடும். அதை நபி மூஸா (அலை) அவர்கள் பருகிக் கொள்வார்கள். குளிர் அதிகமானால் 'அக்குச்சியைக் கீழே வைப்பார்கள். குளிர் தாக்கா கூடாரத்தைப் போலாகி அவர்களை பாதுகாக்கும்

நபி மூஸா (அலை) அவர்களை தாக்கும் எதிரியை சந்தித்தால் மூஸா (அலை) இக்குச்சிக்கு கட்டளையிடுவார்கள். அக்குச்சி எதிரியின் முகத்தை கிழித்து விரட்டி விடும். தன் ஆடுகளுக்கு மர இலைகளை பறித்துப் போடநாடினால் அக்குச்சியின் நுனி வளைந்து காணப்படும். அதன் மூலம் இலை தலைகளை பிடுங்கிப் போடுவார்கள். தான் கொண்டு செல்லும் உணவுப்பொருட்களையும், தண்ணீரையும் பாதுகாப்பாக வைக்க நாடினால், அக்குச்சி மரத்தின் கிளைகளைப் போன்று. காட்சி தரும். அதில் தொங்க விட்டு தனது உணவுப் பொருட்களை பாதுகாத்துக் கொள்வார்கள்

ஹழ்ரத் முஸா அலை அவர்கள் இத்தகு அற்புதங்கள் நிறைந்த இத்தடியை கொடுக்கப்பட்ட முஸா' (அலை) அவர்களைப் பார்த்து இறைவன் மூஸாவே உமக்கு அற்புதங்கள் மூலம் என் அடியார்களில் எவருக்கும் அநீதியளித்து விடாதே அநீதி எனத் தெரிந்து யாருக்காவது அநீதம் செய்தால் அல்லாஹ்வான நான் நீ அறியாத வகையில் சோதனைகள் பல கொடுத்து விடுவேன் என எச்சரித்தான்

நபிமார்களுக்கே இத்தகு எச்சரிக்கை என்றால் ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு அநீதியளிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள நம் நிலை என்ன...? இறைவனின் கடுமையான பிடி நம்மை வந்தடைவதற்கு முன் இறைவன் கூறும் தித்திக்கும் திருவசனப்படி நம் வாழ்வை அமைத்துக்  கொள்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக


A. காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ மஸ்ஜித்.
அசநெல்லிக் குப்பம்.
அரக்கோணம்.
9952129706


1 கருத்து:

  1. கட்டுரை மிக அருமையாக உள்ளது சில எழுத்துப்பிழை உள்ளது அதை திருத்திக் கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு