பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2016

ஊருக்கு உபதேசம்!





ஒரு பால்காரி இருந்தாள்.
அவள் தினமும் ஆற்றின்
மறுகரையில் ஆஸ்ரமம்
அமைத்திருக்கும் ஒரு
குருவுக்கு பால் கொடுத்து
வந்தாள்.
தினமும் அவள்
சமயத்துக்கு ஆற்றங்கரைக்கு
வந்து விட்டாலும், ஓடக்காரன்
தாமதமாகத்தான் வருவான்.
இதனால், இவளால் உரிய
நேரத்துக்கு பால் கொண்டு
போக முடியவில்லை.
ஒருநாள் குரு
பால்காரியிடம் கடுமையாகக்
கடிந்து கொண்டார்.
நான் என்ன
செய்யட்டும் குருவே!
படகுக்காரன் தாமதமா வர்றான்.
அதனாலே தாமதமாகுது,
என்றாள். அட பைத்தியக்காரி!
சக்தி வாய்ந்த இறைவனை
மனசுல நினைச்சுகிட்டு
ஆற்றைக் கடந்து வா.
நேரத்துக்கு வந்துடுவே,
என்றார் குரு.
பால்காரிக்கு
அவள் கொண்டு வரும்
பால்போலவே கள்ளமில்லாத
வெள்ளை மனசு. மறுநாள்
அவள் இறைவனை மனதில்
நினைத்தாள்.
இறைவனே...!
என்னை அக்கறையில் சேரும்,
என்றாள்.
ஆற்றில் இறங்கினாள்.
என்ன ஆச்சரியம்! புடவை கூட
நனையாமல், அக்கரையை
அடைந்து விட்டாள். இப்படியே
தினமும் நடந்தது.
ஒருநாள் குரு, பால்காரி!
தினமும் குறிப்பிட்ட நேரத்தை
விட முன்னாலேயே
வந்துடுறே! படகையும்
காணலே. எப்படி வர்றே!
என்றார்.
நீங்க சொன்ன மாதிரி
தான் குருவே என்றவள் தண்ணீரில்
இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
குரு அசந்து விட்டார். இது
எப்படி சாத்தியம்? என
நினைத்தபடியே தண்ணீரில்
அவர் இறங்கிய போது,
தொபுக்கென உள்ளே
விழுந்தார். பின்னால்
திரும்பிய பால்காரி, குருவே!
நீங்க தண்ணிக்குள்ளே இறங்கும்
போது வேற சிந்தனையிலே
இருந்தீங்களா! நான் நீங்க சொன்ன
மாதிரி இறைவனை
நினைச்சுகிட்டே நடக்கிறேன்.
நீங்களும் அந்தக் இறைவனை
நினைச்சுகிட்டே வாங்க!
ஆற்றை கடந்துடலாம், என்றாள்!


இந்த சந்தேகம் நம்மில் யாருக்காவது வந்ததுண்டா?அவ்வாறு வருமாயின் அதற்கு பதில்,நிச்சயமாக இல்லை என்பதுதான்.  உபதேசம் என்பது  இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் பொது உடைமையே அன்றி உலமாக்களின் தனி உடைமை அல்ல.  உபதேசம செய்வது  மார்க்க அறிஞர்கள் மீது மட்டும்தான் கடமை மற்ற முஸ்லிம்கள் மீது அதைக்கேட்பது மட்டும் தான் கடமை என நினைப்பது பெரும் தவறு.மார்க்க அறிஞர்களின் உபதேசத்தை எப்போது நாம் செவிமடுத்துவிட்டோமோ அதை பிற முஸ்லிம்களுக்கு  எத்திவைப்பது நம் அனைவரின் மீதும கடமையாகிவிடுகிறது.குறிப்பாக நம் மனைவி நம் பிள்ளைகள் நம் உறவினர் அனைவருக்கும் எத்திவைக்க வேண்டும்.இப்படி தான் மார்க்கம் வளர்ந்தது.

மார்க்கமே உபதேசம்தான்.என நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் அருளினார்கள்.அல்லாஹ்வின் தூதரே யாருக்காக(உபதேசம்  செய்யவேண்டும்?)என நாங்கள் வினவினோம்.அல்லாஹ்விற்காக மேலும்அவனின் வேதத்திற்காக மேலும் அவனின் தூதருக்காக மேலும் முஸ்லிம் சமுதாயத்திற்காக மேலும்  அனைவருக்காகவும்.என நபி(ஸல்)அவர்கள் பதிலளித்தார்கள்.(அறிவிப்பாளர்அபூருகைய்யா,நூல்முஸ்லிம்)


என்னைப் பற்றி ஒரு வசனமாக இருந்தாலும்(பிறருக்கு)எத்திவைத்து விடுங்கள்.என கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.(புகாரி)   குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் அடிப்படைக் கடமைகளைக் கூட கல்லாமலிருப்பது இம்மார்க்கத்தையே தகர்ப்பதற்குச் சமம். எனவே அல்லாஹ்வின் வேதத்தையும் அவனின் தூதரின் பொன்மொழியையும் அனைத்து முஸ்லிம்களும் கற்றுப் பிற முஸ்லிம்களுக்கும்  கற்பிக்க வேண்டியது கட்டாயக் கடமை.   கற்றதையும் செவியுற்றதையும் பிறருக்குக் கூறும்முன்: படித்தவை மற்றும்  செவிமடுத்தவை இவற்றின்  நம்பகத் தன்மையை முதலில் நன்கு தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.ஏனெனில் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் மாற்றப்பட்ட  சட்டங்கள்  சில உண்டு. அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப முதலில் ஒன்றையும் பிறகு ஒன்றையும் நபி(ஸல்)சொல்லியுள்ளார்கள். மேலும் செய்து காண்பித்துள்ளார்கள். 


ஆதலால்(மாறியவை,மாற்றியவை)இரண்டையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.மேலும் தம்மை அதற்குத் தகுதியுடையவராக முதலில் தயாராக்கிக்கொள்ள  வேண்டும். தன்குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்  உபதேசம் செய்யும்முன் தம் வாழ்வில் முதலில் அதை அமல் செய்ய உறுதி ஏற்க வேண்டும்.தான் செய்யாததை பிறருக்கு உபதேசிப்பது நம்மை நரகில் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.இவ்வாறு செய்வது  பனூ இஸ்ராயீல்களின் தன்மையாகும்.
 

أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ الْكِتَابَ ۚ أَفَلَا تَعْقِلُونَ

நீங்களோ வேதத்தைப் படிப்பவர்களாக இருக்கும் நிலையில் உங்களை மறந்துவிட்டு மக்களுக்கு மட்டும் நல்லவற்றைக் கொண்டு ஏவுகின்றீர்களா?நீங்கள் விளங்கமாட்டீர்களா?(அல்பகரா-44) என பனூ இஸ்ராயீல்களை அல்லாஹ் எச்சரிக்கை செய்தான்.அவர்கள் அதை  பொற்படுத்தவில்லை.     எனவே பேரழிவிற்கு ஆளானார்கள்.
!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக