பக்கங்கள்

புதன், 30 டிசம்பர், 2015

பாத்திமா நாயகியின்(ரழியல்லாஹூ அன்ஹா )





ஒரு நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தமது அருமை மகளார் பாத்திமா (ரழியல்லாஹூ அன்ஹா ) அவர்கள் வீட்டுற்கு வந்தார்கள். வீட்டில் பாத்திமா( ரழியல்லாஹூ அன்ஹா ) அவர்கள் சோகமாக காணப்பட்டார்கள். துடிதுடித்துப்போன நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் எனதருமை மகளே! ஏன்  சோகமாக உள்ளாய்?       என்ன நடந்து விட்டது? சொல்லம்மா என்று  கேட்டார்கள்.
கண்களில் கண்ணீர் வடித்தவர்களாக என தருமை தந்தையே! நாங்கள் சாப்பிட்டு 3நாட்கள் ஆகிவிட்டது. உண்ண வீட்டில் எந்த உணவும் கிடையாது உங்கள் அருமைப் பேரக் குழந்தைகளான ஹஸன் (ரழியல்லாஹூ அன்ஹூ ) ஹுஸைன் (ரழியல்லாஹூ அன்ஹூ ) வைப் பாருங்கள்பசியால் துடிதுடித்துப் போய் மயக்கமுற்று கிடக்கிறார்கள் என்று சொன்னார்கள்..

கண்கலங்கிய கருணை நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தனது மகளார் குடும்பத்திற்கு உண்வு கொண்டு வர உடனே வெளியே சென்றார்கள். மதினாவில் நமக்கு ஒரு கூலி வேலை கிடைக்காதா? என்று நினைத்தவர்களாக நடந்துச் சென்றார்கள். அப்போது வெகுதூரத்தில் ஒருவர் கிணற்றில் தண்ணீர் இரைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள், உடனே அல்லாஹ்வை புகழ்ந்தவர்களாய் அத்தோட்டம் சென்று நண்பரே! எனக்கு ஏதாவது வேலை தாருங்கள் நான் செய்கிறேன் என்று கேட்டார்கள். 


நண்பரே! நானும் வேலைக்காரன் தான், இந்தோட்டத்தின் முதலாளி அங்கு உள்ளார் சென்று வேலை கேளுங்கள் தருவார் என்று கூறினார்சரி என அந்த முதலாளியிடம் சென்று செல்வந்தரே! எனக்கு ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கேட்டார்கள், அப்படியா? நீங்கள் தண்ணீர் இறைத்து ஊற்றுங்கள் ஒரு வாளிக்கு 3பேரீச்சம் பழம் தருகிறேன்  என்றார் உடனே நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தண்ணீர் அள்ளி ஊற்றுவதற்காக கிணற்றுக்குப் போனார்கள் வாளியோ பெரியது 4பேர், 5பேர் சேர்ந்து இறைத்தால் தான் இறைக்க முடியும் என்ற அளவுக்கு  அவ்வளவு பெரிய வாளி,            


அருமை நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் உள்ளத்தில் கண்மணி மகள், பேரர்கள் பசி கண்முன் வந்து நின்றதால் எதையும் அவர்கள் பொருட்ப்டுத்தவில்லை ,உடனே முதல்  வாளி தண்ணீரை தன்னுடைய முபாரக்கான கைகளால் இறைத்தார்கள், அடுத்து இரண்டு வாளி தண்ணீரையும் இறைத்தார்கள்,       3 வது வாளி இறைக்கும் போது கயிறு அறுந்து வாளி கிண்ற்றில் விழுந்து விட்டது, இதை பார்த்துக்கொண்டு இருந்த தோட்டக்காரர் ஓடி வந்து கண்மணி நபிஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்களை தீய வார்த்தைகளால் திட்டி அவர்களின்  முபாரக்கான கன்னத்தில் ஓங்கி அறைந்து விடுகிறார்,  


பொறுமையின் தாயகம், நமது நாயகம் அவரை நோக்கி நண்பரே! உனது கோபம் தீரும் அளவுக்கு நன்றாக அடியும் என்று கூறினார்கள், அவர் மாறி மாறி நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்களின் இரு முபாரக்கான கன்னத்திலும் அறைந்தார், அடித்து அடித்து அசந்து போன பின் நான் இப்போது குற்றவாளி ,உமது வாளியை கிணற்றில் போட்டு விட்டதால் என்னை அடித்து விட்டீர்கள் ,நான் இரண்டு வாளி தண்ணீர் இறைத்து உமது தோட்டத்தில் ஊற்றினேன், அதற்கு கூலியாக வாக்குபடி  ஆறு பேரீச்சம் பழங்களை கொடுக்காமல் இருந்து விடாதீர்கள், அப்படி நீர் தராவிட்டால் இறைவனிடம் குற்றவாளியாகி விடுவீர் என்று சொன்னார்கள்


கோபத்தோடு ஆறு பேரிச்சம் பழங்களை நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்களிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார், உடனே பேரிச்சம் பழங்களை எடுத்து வந்து விடாமல் தனது முபாரக்கான கையைக் கிணற்றிண் உள்ளே நீட்டினார்கள், உடனே வாளி மிதந்து மேலே வருகிறது, வாளியை எடுத்து கீழே  வைத்துவிட்டு தனது அருமை மகளார் வீட்டுற்கு விரைந்தார்கள். அருமை பேரர்களுக்கும் ஊட்டி விட்டு மகளுக்கும் கொடுக்கிறார்கள், சிறிது நேரம் கழித்து தோட்டக்காரர் மீண்டும் தோட்டம் வந்து பார்த்தார், வாளி கிணற்றுப் பக்கத்தில் இருந்தது, ஆச்சரியம் அடைந்தார்,  


அப்போது அங்கு வந்த ஒருவர் நண்பரே! நீர் அடித்தீரே! அவர்கள் யாரென்று  தெரியுமா ? சாதாரனமானவர்கள் அல்ல.         அவர்கள் ஒரு நபி, அவர்கள்  பெயர் முஹம்மது ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம்  தெரியுமா? என்றார். கைசேதப்பட்ட அவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு  அலைஹி  வ ஸல்லம்  என்று மக்கள் புகழ்ந்து சொல்கிறார்களே! அவர்களா இவர்கள் என்று அழுது கொண்டு உடனே வீட்டிற்கு  உள்ளே சென்று வாளை எடுத்து எந்த கை அந்த கருணே நபியை அடித்ததோ அந்த கை இனி என் உடலில் இருப்பதற்கு தகுதி இல்லை எனக் கூறி தன் கையை வெட்டிக் கொண்டார்,

இரத்தம் சொட்டச் சொட்ட அழுதவராக கண்மணி நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்களை தேடி விசாரித்துக் கொண்டு பாத்திமா ரழியல்லாஹூ அன்ஹா  அவர்கள் வீட்டிற்கு வந்தார், அழுதுகொண்டே கதவைத் தட்டினார், பாத்திமா ரழியல்லாஹூ அன்ஹா  அவர்கள் கதவைத் திறந்தார்கள், அவரின்  நிலைமையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்களாக. நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்களிடம் வந்து  சொன்னார்கள், பதறிப்போன நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் உடனே வெளி வந்தார்கள், யாரசூலல்லாஹ்!  ஸல்லல்லாஹு அலைஹி  வ ஸல்லம் என்னை மன்னித்து விடுங்கள் ,         நான் உங்களை கடுமையாக அடித்து துன்பம் கொடுத்து விட்டேன், அதனால் கையை வெட்டிக் கொண்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என்று அழுதார்,  


கருணையே உருவான ஹாத்தமுன் நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் சரி, நண்பரே உங்களை மன்னித்துவிட்டேன் இறைவன் உங்கள் மீது தனது அருளை பொழியட்டும் என கூறி அவர் கொண்டு வந்த அந்த  வெட்டப்பட்ட கையை வாங்கி தங்களின் முபாரக்கான உமிழ் நீரை எடுத்து வெட்டப்பட்ட கையில் தடவி விட்டார்கள், சுபஹானல்லாஹ் மீண்டும் அந்த கை முன்பு போல ஆகிவிட்டது, உடனே கலிமா சொல்லி நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் கையைப் பிடித்து இஸ்லாத்தை தழுவினார்,

                        படிப்பினை:

தனது ஆருயிர் மகளுக்காக அருமை பேரன்களுக்காக எத்துனை துன்பங்களை நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் பொருத்துக் கொண்டார்கள் பாருங்கள் மேலும் உழைப்பின் மேன்மையையும் உணர்த்தியுள்ளார்கள். தவறுக்கு தண்டனை பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற அருமையான வழியையும் காட்டியுள்ளார்கள், இவைகள் எல்லாம் நமக்கு பெரும் படிப்பினையாகும், வாயால் பஷாரத் சொல்லப்பட்ட பாத்திமா (ரழியல்லாஹூ  அன்ஹா ) அவர்களின் இவ்வுலக வாழ்வு பெரும்பாலும் பசி வறுமை இல்லாமை அதனால் பொறுமை, இவைகளைத்தான் வாழ்க்கை முழுவதும் பார்க்க முடிகிறது. 


எனதருமை இஸ்லாமிய பெண்களே! பாத்திமா (ரழியல்லாஹூ அன்ஹா) அவர்களைப் போல வாழ்வில் பொறுமை காட்டி வாழ் முற்படுங்கள் அனைத்து தேவைகளையும் தங்கள் வீட்டு ஆண்கள் மூலம் உழைத்து வாங்கி வாழ்ந்து காட்டுங்கள்.இன்ஷாஅல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக