பக்கங்கள்

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

அல்லாஹ்வை நினைவு கூருவோம்!



                                           (குட்டிக்கதை)


ஒரு கட்டுமான எஞ்சினியர்…13 வது…
மாடியிலே வேலை செய்து
கொண்டு இருந்தார்…
ஒரு
முக்கியமான வேலை…
கீழே ஐந்தாவது
மாடியில் வேலை செய்து கொண்டு
இருந்த கொத்தனாருக்கு முக்கியமான
செய்தி சொல்ல வேண்டும்…
செல் போனில் கொத்தனாரை
கூப்பிட்டார் எஞ்சினியர்..
ம்ஹும்..கொத்தனார் வேலை
மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக்
கொண்ட இருந்தார்…
போனை எடுக்க
வில்லை..


என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்..
அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே
பார்க்கவில்லை…
இவ்வளவுக்கும்…
கொத்தனார் வேலை செய்யும் இடத்தில்
இருந்து , அவரால் என்ஜினியரை
நன்றாகப் பார்க்க முடியும்…
எஞ்சினியர் என்ன செய்வதென்று
யோசித்தார்…


ஒரு பத்து ரூபாய்
நோட்டை எடுத்து, மேலே இருந்து,
கொத்தனார் அருகில் போட்டார்…
ரூபாயைப் பார்த்த கொத்தனார், அதை
எடுத்து பையில் போட்டுக்
கொண்டார்…
ஆனால்சற்றும், மேல்
நோக்கிப் பார்க்கவில்லை…


என்ஜினியருக்கு ஒரே கோபம்..
இருந்தாலும் பொறுத்துக் கொண்டு…
ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார்
மேல் போட்டார்…
அதையும்
எடுத்து சட்டைப் பையில் வைத்துக்
கொண்டு… கொத்தனார் மும்முரமாக
இருந்தார்…


எஞ்சினியர்.. பொறுமை
இழந்து ஒரு சின்ன கல்லை எடுத்து,
கொத்தனார் மீது போட்டார்…
அது அவரது தோள் மீது பட்டு நல்ல
வலியோடு, மேலே பார்த்தார்…


அப்பொழுதுதான் எஞ்சினியர் தன்னை
அழைத்தார் என்பதை உணர்ந்தார்…
மனிதனும் அப்படித்தான்…


மேலே
இருந்து இறைவன் அவனை அழைப்பது
அவனுக்கு புரிவதில்லை… உலக
மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்..
இறைவன் அவனுக்கு அருட்கடைஒகளை அளிக்கின்றான்..
அப்பொழுதும் அவன் இறைவனை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை..


ஆனால் ஒரு
துன்பம் நேரும் பொழுது தான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.
துன்பங்கள் வரும் நேரம்…இறைவன்
உன்னைத் தேடி அழைக்கும் நேரம்
என்று பொருள்...




நபி (ஸல்) கூறினார்கள்: அல்லாஹ¤த் தஆலாவின் சில மலக்குகள் திக்ர் செய்பவர்களைத் தேடியவர் களாகப் பாதையில் சுற்றுவார்கள். அல்லாஹ்வை ஞாபகம் செய்யும் ஒரு கூட்டத்தாரை அவர்கள் பெற்றுக்கொண் டால், “உங்களின் நோக்கத்தின் பால் வாருங்கள்என்று ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வார்கள்.


உடனே அனைத்து மலக்குகளும் தங்களின் இறகுகளால் முதல்வானம் வரை அவர்களைச் சூழ்ந்து கொள்கின் றனர். பிறகு அவர்களின் இரட்சகனான அல்லாஹ் அதனைப் பற்றி மிக அறிந் தவனாக இருந்தும்கூட என் அடியார் கள் என்ன கூறுகிறார்கள்?” என்று கேட்பான்.
அதற்கு மலக்குகள் உன்னைத் தூய் மைப்படுத்துகிறார்கள், உன்னைப் பெருமைப் படுத்துகிறார்கள், உன்னைப் புகழ்கிறார்கள், உன்னைக் கண்ணியப் படுத்துகிறார்கள்என்று கூறுவார்கள். அதற்கவன் என்னை அவர்கள் பார்த்துள்ளார்களா?” என்று கேட்பான். அதற் கவர்கள் இல்லை அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் கள் உன்னைப் பார்க்கவில்லைஎன்பார்கள். அதற்கவன் என்னை அவர்கள் பார்த்தி ருந்தால் எவ்வாறு இருப்பார்கள்?” என்று கேட்பான்.
அதற்கவர்கள் உன்னை அவர் கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வணங்குபவர்களாகவும், அதிக மாக உன்னைக் கண்ணியப் படுத்துபவர் களாகவும், மிக அதிகமாக உன்னைத் தூய்மைப்படுத்துபவர்களாகவும் இருப்பார் கள்எனப் பதிலளிப்பார்கள்.


பிறகு (அல்லாஹ்) அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று கேட்பான். அதற்கு மலக்குகள்சுவர்க்கத்தை உன்னிடம் அவர்கள் கேட்கிறார்கள்எனப் பதில ளிப்பார்கள். அதற்கவன்அவர்கள் அதைப் பார்த்திருக்கிறார்களா? என்பதா கக் கேட்பான். அதற்கவர்கள் இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்கள் இரட்சகனே! அவர்கள் அதனைப் பார்க்க வில்லைஎனப் பதிலளிப்பார்கள்.
அதற் கவன் அவர்கள் அதனைப் பார்த்திருந் தால் எவ்வாறு இருப்பார்கள்? என்று கேட் பான். அதற்கு மலக்குகள், அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அதில் அதிக பேராசை யுடையவர்களாகவும், அதற்கு அதிக தேட்டமுடையவர்களாகவும் அளப்பெரும் ஆவலுடையவர்களாகவும் இருப்பார்கள். எனப் பதிலளிப்பார்கள். 


எதைவிட்டும் அவர்கள் பாதுகாவல் தேடுகிறார்கள் என்று கேட்பான்.
அதற்கவர்கள் நகரத்தை விட்டும் அவர்கள் பாதுகாவல் தேடுகி றார்கள்எனப் பதிலளிப்பார்கள். அதற் கவன் அவர்கள் அதைப் பார்த்திருக்கி றார்களா?” என்று கேட்பான். அதற்கவர் கள் இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணை யாக! அதை அவர்கள் பார்க்கவில்லைஎனப் பதில ளிப்பார்கள்.
அதற்கவன் அவர் கள் அதைப் பார்த்திருந்தால் எவ்வாறிப்பார் கள்?” என்று கேட்பான் அதற்கவர்கள், “அவர்கள் அதைப் பார்த்திருந்தால் மிக அதிகமாக அதைவிட்டும் விரண்டோடுப வர்களாகவும், மிகக் கடுமையாக அதனை அஞ்சுபவர்க ளாகவும் இருப்பார்கள்என்று பதிலளிப் பார்கள்.


அதற்கு (அல்லாஹ்)நிச்சயமாக அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்என்று கூறு வான். அப்பொழுது மலக்குகளில் ஒருவர் அவர்களில் ஒருவர் அவர்களைச் சேர்ந்த வராக இருக் கவில்லை. ஏதோ ஒரு தேவைக்காக வேண்டியேதான் வந்தார்என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் “(திக்ர் செய்தவர்களாக) அங்கு அமர்ந்திருந்திருப் பவர்களுடன் சேர்ந்திருப்பவரும் துர்ப்பாக்கி யம் அடைய மாட்டார்என்று கூறுவான்.

(நூற்கள்: புஹாரி, முஸ்லிம்), அறி: அபூஹ¤ரைரா (ரலி)



இறை நினைவோடு என்றும் வாழ இறைவன் அருள் புரிவானாக....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக