பக்கங்கள்

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

ரயிலில் ஜன்னல் ஓரத்தில்......






ஒரு பெரியவரும், அவருடைய 16 வயது மகனும் ரயிலில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
இருவரின் உரையாடல் இப்படியாக இருந்தது...


"அப்பா, அப்பா... அங்க பாருங்க கொக்குகள் மொத்தமா பறக்குது....

"ஆமாடா கண்ணா...ரொம்ப அழகா இருக்குள்ள...."

"அப்பா...இங்க பாருங்க...இந்த ஆறு சூப்பரா ஓடுது..."

"ஆமா தங்கம் அருமையா இருக்குல்ல...."

"அப்பா...இந்த வயல் பச்சையா எவ்ளோ அழகா இருக்கு....

"ஆமாடா ராசா.... ரொம்ப அழகா இருக்கு...."
- இப்படியே இவர்கள் உரையாடல் நீண்டு கொண்டே போனது.


மேல் பெர்த்தில் அமர்ந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்தவர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்....

இந்த அப்பா- 16 வயது மகனின் உரையாடல் இப்படியே அரை மணி நேரத்திற்கும் மேலாய் நீண்டு கொண்டே போனது....
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவராய்.... "என்னப்பா இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....16 வயசுப் பையன் பேசுர பேச்சா இது...."- என்று எரிச்சலும் நக்கலுமாய் கேட்டார்.


கீழே அமர்ந்திருந்த பெரியவர், மெதுவாக தலை நிமிர்ந்து மேல் பெர்த் காரரைப் பார்த்தார்
" இவனுக்கு பத்து வருசத்துக்கு முன்னாடி ஒரு ஆக்ஸிடென்ட்ல ரெண்டு கண்ணுலயுமே பார்வை போயிடுச்சு.... அதுக்கப்புறம் நீண்ட சிகிட்சைக்குப் பிறகு இப்போதான் கண்கள் பொருத்தி வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டு இருக்கேன்...."- என்று பதில் சொன்னார்.


இப்படித்தான் நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்களும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் செயல்படுவதற்கு பின்னணியில் நமக்குத் தெரியாத நிறைய காயங்கள், கட்டுப்பாடுகள் இருக்கு.
எல்லாரும் நம்மைப் போன்ற சூழலில் இருந்து வருபவர்கள் அல்ல.
பார்வை இழந்தவர்கள் யானையைத் தடவிப்பார்ப்பது போல ஒவ்வொருவரும் நமக்கான அனுபவங்களை மட்டும் வைத்து அடுத்தவர்களை எடை போடுகிறோம்...
எனவே முறமாக, சுவராக, கயிராக, உலக்கையாக மட்டுமே நமக்கெல்லாம் தெரிகிறது யானை...


நமக்குத் தெரியும் இந்தக் காட்சிளுக்குப் பின்னால் நம் கண்ணுக்குத் தட்டுப்படாமல் இருக்கும் உண்மையும், யானையும் பிரம்மாண்டமானது. 



புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள்.
அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து
காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. அதை பார்த்த மனைவி கணவனிடம் அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்குஅப்படின்னு சொன்னா.

ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல.
பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு.

திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா.
அதுக்கு அந்த கணவன்அது வேற ஒன்னும் இல்ல.
இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சான்.

இதனால் நான் சொல்ல வர்ற மெசேஜ் என்னானா: அடுத்தவனோட குறைகளா நாம நெனைக்கிறது சில நேரங்களில் நம்மளோட பார்வை பிரச்சினையா கூட இருக்கலாம்.

2 கருத்துகள்: