பக்கங்கள்

புதன், 14 ஜனவரி, 2015

முதன் முதலாக....





நபி ஸல் அவர்களின் மறைவிற்கு பிறகு உம்மத்தே முஹம்மதிய்யாவின் முதல் கலீபா ஹழ்ரத் அமீருல் முஃமினீன் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களாகும்.


இந்த உம்மத்தின் முதல் ஹாபிழே குர்ஆன் முழுமையாக மனனம் செய்தவர் அமீருல் முஃமினீன் உஸ்மானே கனி ரலி அவர்களாகும்.


இவ்வுலகில் நடந்த முதல் இபாதத் தவ்பா என்ற பாவமன்னிப்பாகும். ஹழ்ரத் ஆதம் அலை அவர்களின் மூலம் நடந்த இபாதத்தாகும்.
முதல் ஜனாஸா தொழுகை ஹழரத் ஆஸத் ப்னு ஜரரா ரலி அவர்களுக்காக நபி ஸல் அவர்கள் தொழவைத்தார்கள்.


முதன் முறையாக அல்ஹம்து லில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே என புகழ்ந்து கூறியவர் ஹழரத் ஆதம் அலை ஆவார்கள். மண்ணால் படைக்கப்பட்ட ஆதம் அலை அவர்கள் உயிர் பெற்று எழுந்ததும் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினார்கள்.


முதன் முதலாக வெண்ணிற நரை முடி ஏற்பட்டது ஹழ்ரத் இப்ராஹிம் அலை அவர்களுக்காகும்.


சுவர்கத்தில் சுவனவாசிகளின் முதல் உணவு மீனின் ஈரலாகும்.


மறுமை நாளன்று நபி ஸல் அவர்களே முதன் முதலில் எழுப்பபடுவார்கள்.


மறுமை நாளில் முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் நபி இப்ராஹிம் அலை அவர்களாவர்.


ஹஸ்ரத் ஆதம் அலை அவர்களது மகன் காபில் என்பவன் தனது சகோதரனான  ஹாபீல் என்பவரை கொலை செய்தார். இதுவே மனித சமுதாயத்தின் முதல் கொலையாகும். இக்கொலை பெண்ணை காரணம் வைத்தே நடந்தது.


நபி ஸல் அவர்கள் ஏகத்துவ அழைப்பு விடுத்தபோது பெண்களில் முதலாவதாக அன்னை கதீஜா ரலி அவர்களும், ஆண்களில் முதலாவதாக ஹழரத் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களும், சிறு வயதினரில் முதலாவதாக ஹழரத் அலி ரலி அவர்களும் இஸ்லாத்தை ஏற்றார்கள்.


உம்மத்தே முஹம்மதியாவில் அன்னை கதீஜா ரலி அவர்களே முதன் முதலாக தொழுகையை தொழுதவர்கள்.


நபி ஸல் அவர்கள் மதீனாவிற்கு வந்த போது முதன் முதலாக ஹழ்ரத் அபூ அய்யூப் அன்சாரி ரலி அவர்களது வீட்டிலேயே தங்கினார்கள். அதுவே அண்ணலாரின் இருப்பிடமாக ஆனது.


தொழுகைக்கான அழைப்பு அதான் பாங்கை முதன் முதலில் கூறியவர் ஹழரத் பிலால் ரலி அவர்கள்.


தீனுடைய கல்வி கற்று கொடுப்பதற்காக முதலில் ஆசிரியராக நபி ஸல் அவர்களால் நியமிக்கப்பட்டு அனுப்பபட்ட ஸஹாபி ஹழ்ரத் முஸ்அப் ப்னு உமைர் ரலி அவர்கள்.


நபி ஸல் அவர்களது கரங்களால் நிர்மானம் செய்யப்பட்ட முதல் பள்ளிவாசல் மஸ்ஜிதே குபாவாகும்.


ஶஹீத் என்ற உயிர் தியாகிகளில் முதலாவதாக ஆண்களில் ஹழ்ரத் அம்மார் ப்னு யாஸிர் ரலி அவர்களும், பெண்களில் ஹழ்ரத் சுமையா ரலி அவர்களும் கொல்லப்பட்டார்கள்.


ஹிஜ்ரத்திற்கு பிறகு பிறந்த முதல் குழந்தை ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களது மகளார் அஸ்மா ரலி அவர்களும், ஹழ்ரத் ஜுபைர் ரலி அவர்களுக்கு பிறந்த அப்துல்லாஹ் ப்னு ஜுபைர் ரலி அவர்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக