பக்கங்கள்

செவ்வாய், 10 ஜூலை, 2012

புதிரான வினா தெளிவான விடை



ஓரு மனிதர் இப்னு அப்பாஸ் ரலி அவர்களிடம் வந்து, பின்வரும் கேள்விகளைக் கேட்டார்.


கேள்விகள்


1.  சதையும்  இரத்தமும்  இல்லாத இரு பொருள் பேசியது, அது என்ன..?


2. சதையும் இரத்தமும் இல்லாத ஓரு பொருள் ஓடியது அது என்ன...?


3. சதையும் இரத்தமும் இல்லாத ஓரு பொருள் மூச்சு விட்டது. அது என்ன...?


4. சதையும் இரத்தமும் இல்லாத இரண்டு பொருட்களிடம்       கட்டளையிடப்பட்டது. அவையிரண்டும் பதில் கூறின. அது என்ன..?


5. அல்லாஹ் ஓரு தூதரை உலகிற்கு அனுப்பினான். அத்தூதர் ஜின்.மனிதன் மலக்கு ஆகிய எந்த இனத்தைச் சேர்ந்தவருமல்ல. அத் தூதர் யார்..?


6. இறந்து விட்ட ஓர் உயிரின் மூலம் இறந்து விட்ட மற்றோர் உயிர் உயிர்ப் பெற்றெழுந்து சிலத் தகவல்களைச் சொல்லி மறுபடியும் இறந்து விட்டது. அவ்விரு உயிரினங்களும் எவை...?


7. மூஸா அலை அவர்கள் பிறந்த பொழுது, கடலில் போடுவதற்க்கு முன் எத்தனை தினங்கள் அவருடைய தாயார் அவருக்குப் பால் கொடுத்தார்கள்...எந்தக் கடலில் எத்தனை நாளில் போட்டார்கள்...?


8. ஆதம் அலை அவர்கள் எவ்வளவு உயரமுள்ளவர்களாக இருந்தார்கள்....? எவ்வளவு காலம் வாழ்ந்திருந்தார்கள்....? அவர்களால் இறுதி உபதேசம் செய்யப்பட்டவர் யார்...?


9.ஓரு பறவை முட்டையிடாது. ஆனால் அதற்க்கு மாதவிடாய் வரும். அது எந்தப் பறவை....?


                பதில்கள்


1. நரகம்-அது கியாமத்து நாளில்,  அதிகமாக இருக்கிறதா...என்று கேட்க்கும்.


2. மூஸா அலை அவர்களின் கைத் தடி அதனைக் கீழே போட்ட பொழுது பாம்பாக மாறி ஓடியது.


3. அதிகாலை நேரம். மூச்சி விடும் பொழுது அதிகாலை நேரத்தின் மீது சத்தியமாக.  என்று குர்ஆநில் கூறப்பட்டுள்ளது.


4. வானங்களும் பூமியும். நீங்களிருவரும் விரும்பியோ....விரும்பாமலோ...வழிப்படுங்கள். என்று கூறிய போது நாங்களிருவரும் விரும்பியே வழிப்பட்டோம். என்று அவையிரண்டும் கூறின  அல்குர்ஆன்.


5. காகம் ஆதம் அலை அவர்களுடைய மகன் காபில் ஹாபிலைக் கொலை செய்த பொழுது பிரேதத்தை எவ்வாறு புதைப்பதென்பதை விளக்குவதற்க்காக அல்லாஹ் அனுப்பி வைத்தான்.


6. சூரத்துல் பகராவில் கூறப்படுள்ளப் பசு.  அதனை அறுத்து, அதன் ஓரு பகுதியை எடுத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப் பட்ட ஓருவரின் கப்ரின் மீது அடித்த பொழுது வர் எழுந்து கொலையாளியைச் சொல்லி இறந்தார்.


7. மூஸா அலை அவர்களின் தாய் மூன்று மாதங்கள் பால் கொடுத்தார். பிறகு செங்கடலில் வெள்ளிக்கிழமையன்று போட்டார்.


8. ஆதம் அலை அவர்கள் அறுபது முழ உயரமுள்ளவர்களாக இருந்தார்கள். 960. ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்கள். அன்னாருடைய மகனார் ஷீது அலை அவர்களுக்கு இறுதி உபதேசம் செய்தார்கள்.


9. வௌவால். நபி ஈஸா அலை அதனைக் களி மண்ணால் செய்து அதில் ஊதினார்கள். அது உயிர்ப் பெற்று பறந்து சென்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக