பக்கங்கள்

வெள்ளி, 6 ஜூலை, 2012

இங்கேயே இரும்





அல்லாஹ்வின் அருட்திருத்தூதர்  அஹ்மத் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ஓரு நாள் தோழர் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் சேர்ந்து வெளியில் புறப்பட்டுச் சென்றார்கள்.


மதீனாவின் வடக்குப் பகுதியில் ஏறிட்டுப் பார்த்தவுடன் உஹதுமலை கம்பீரமாக காட்ச்சியளித்தது. அதைப் பார்த்த பெருமானார் ஸல் அவர்கள் அபூதர் ரலி அவர்களை நோக்கிக் கூறினார்கள்.


இந்த உஹது மலை அப்படியே தங்கமாக மாறி என்க்குச் சொந்தமாக ஆகிவிட்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் அதிலிருந்து ஓரு தீனார் கூட என்னிடம் இருப்பதை நான் விரும்ப மாட்டேன். எனினும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்க்காக அதற்க்கு உரிமையாளரை எதிர்பார்த்து வைத்திருக்கும் சில நாணயங்களைத் தவிர.


இவ்வாறு மொழிந்த மாநபி ஸல் அவர்கள் நிச்சயமாக இவ்வுலகில் யாரிடம் செல்வம் அதிகமாக்க் குவிந்திருக்கிறதோ அவர்களே மறுமையில் மிகவும் ஏழைகளாயிருப்பார்கள். ஆனால் தங்கள் செல்வத்தை இப்படியும் அப்படியும் வலது புறமும் இடது புறமும்  முன்னாலும் பின்னாலும் அதாவது நாலா திக்குகளிலும் அள்ளி அள்ளி தானம் செய்தவர்கள் தான் அங்கும் செல்வந்தர்களாயிருப்பார்கள்.   

அவ்வாறு செய்வோர் மிகவும் சொற்ப்பமே என்று சொல்லிவிட்டு நான் உம்மிடம் திரும்பி வரும் வரை நீர் இந்த இடத்திலேயே இருங்கள் என்று கூறியவர்களாக சற்று முன் சென்று விட்டார்கள்.


நான் அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தேன். திடிரென்று நபிகளார் சென்ற திசையிலிருந்து ஓரு சப்தம் வந்த்து  என்னவோ ஏதோ என்று பயந்துபோன நான் அங்கே சென்று பார்க்க நாடினேன். எனினும் நான் வரும் வரை நீர் இவ்விடத்திலேயே இரும் என்று நபி ஸல் அவர்கள் கூறியது நினைவுக்கு வரவே அப்படியே நின்று விட்டேன்.


சற்று நேரம் கழித்து சாந்த நபி ஸல் அவர்கள் திரும்பி வந்தார்கள். யாரசூலுல்லாஹ்..... தாங்கள் சென்ற இடத்தில் சப்தம் ஓன்று கேட்டதே என்று வியப்புடன் வினவினேன்.


அதை நீங்களும் கேட்டிரா…..? என்று அவர்கள் கேட்க்க, ஆம் நாயகமே என்று பதில் அளித்தேன்.


வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்தார்கள்.
நபியே... உங்கள் உம்மத்தில் எவரேனும் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காத நிலையில் மரணிப்பார் எனில், அவர் சொர்க்கம் செல்லுவார். என்று கூறிச் சென்றார்கள் எனக் கூறினார்கள்.


இன்னின்ன பாவங்களைச் செய்திருந்தாலுமா சுவர்க்கம் செல்ல முடியும்...?  என்று நான் கேட்டேன்.  ஆம் என்று நபி ஸல் அவர்கள் பதிலளித்தார்கள்.


                                                                                        அறிவிப்பாளர் அபூதர் ரலி.
                                                                                         நூல் ஸஹிஹூல் புஹாரி.


செய்தியின் பிண்ணணியில்  


1) உஹது மலை என்பது மதினாவைச் சுற்றியுள்ள மலைகளிலேயே மிகவும் பெரியது. அந்த மலையைப் பற்றி அண்ணலார் ஸல் அவர்கள் உஹது நம்மை நேசிக்கினறது. நாமும் அதை நேசிக்கின்றோம்.. என்று கூறியுள்ளார்கள். அந்த மலை தங்கமாக மாறினாலும் அதை மூன்று நாளுக்கு மேல் வைத்திருக்க மாட்டேன். என்று கூறியது நம் சிந்தனைக்கு உரியது.


2.வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்க்காக பணத்தை வைத்திருப்பது தவறல்ல என்பது தெரிகின்றது.


3.பொதுவாக செல்வந்தர்கள் மறுமையில் மிகுந்த சோதனைக்களுக்கு ஆளாக நேரிடும். ஆனால் ஏராளமாக எல்லா நல்ல வழிகளிலும் தான தர்மங்களை தாராளமாக வழங்கியோர் அங்கும் செல்வந்தர்களாக ‍இருப்பார்கள். இத்தகையோர் மிகவும் குறைவு தான். அத்தகையோரில் நாமும் சேர முயற்ச்சிப்போம்.


4.ஏதோ திடுமென ஓரு சப்தம் கேட்க்கின்றது.  நம் உயிரினும் மேலான தாஹா நபி ஸல் அவர்கள் சென்ற இடத்திலிருந்து அந்த ஓசை வருகிறது. எனவே நபித் தோழர் அபுதர் ரலி அவர்களின் உள்ளத்தில் கவலையை உண்டாக்கினாலும் இவ்விடத்திலேயே நான் வரும் வரை இருங்கள் எனற ஏந்தல் நபியவர்களின் உத்தரவு அவர்களின் கால்களைக் கட்டிப் போட்டுவிட்டது. இது தான் ஸஹாபாக்களின் உத்தமப் பண்பாகும். உயிரே போவதாயிருந்தாலும் நபி மொழிக்கு மாறு செய்ய மாட்டார்கள்


5.) இணை வைக்காத நிலையில் மரணிப்பவர் சுவனம் செல்வார் இது வானவர் கோமான் வந்துரைத்த வாய்மையான நற்ச்செய்தியாகும். இதற்க்கு தகுதியானவர்களாக நாம் இருக்கிறோமா.....?   இணை வைத்தல் நம்மிடம் உள்ளதா...?   அதை விட்டும் நம் ஈமானைப் பாதுகாத்திட என்ன செய்துள்ளோம்.....?


6.) இன்னின்ன பாவங்களைச் செய்தாலுமா....?  என்று தோழர் அபூதர் ரலி அவர்கள் கேட்க, ஆம் என்று அண்ணலார் ஸல் அவர்கள் அளித்த பதில். ஓரு மூஃமின் பாவம் செய்து விட்டாலும் ஈமானின் பரக்கத்தால் சுவனம் செல்வது உறுதி என்பது நமக்கெல்லாம் ஆறுதலைத் தந்தாலும் செய்த பாவங்களுக்கு முறைப்படி மன்னிப்பு கேட்க்காவிட்டால் எவ்வளவு காலம்.... அந்த எரிநரகில் வேக வேண்டி வரும் என்பதை எண்ணிணால்....?


அல்லாஹ்வே.....!  இணை வைப்பதிலிருந்தும் எல்லாவகையான பாவங்களிலிருந்தும் எங்களைப் பாதுகாத்தருள்புரிவாயாக....(ஆமீன்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக