பக்கங்கள்

வியாழன், 29 டிசம்பர், 2011

நயவஞ்சகர்களின் குணங்களும் தண்டனைகளும்



நயவஞ்சகர்களின் குணங்களும் தண்டனைகளும்


இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிப்பதையும், பழகிக் கெடுக்கும் சூழ்ச்சியையும் செய்பவரை நயவஞ்சகன் என்கிறோம். அரபி மொழியில் இந்த தீய செயல்கள் உள்ளவர்களை முனாஃபிக் என்று கூறுவர். இவர்கள் வெளித்தோற்றத்தில் முஸ்லிம்களைப் போன்று நடித்துக் கொண்டு, அந்தரங்கத்தில் மறுப்பாளனாக வாழ்பவர்கள்.

சனி, 17 டிசம்பர், 2011

மாபெரும் அடையாளங்கள்


மகளின் தயவில் தாய்

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777, 50

புதன், 14 டிசம்பர், 2011

சனியனைப் பிடிச்சு பனியனுக்குள்ள போட்டா...?

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கி வேதாளத்தைத் தூக்கி இன்னோவாவில் போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய, ""நண்பா, ஒரு நல்ல டீ சாப்பிடணும்; வண்டிய நேரா "சீ மெரிடியன்' ஓட்டலுக்கு ஓட்டு, அங்க வெச்சு உனக்கு ஒரு கதை சொல்றேன்''என்றது வேதாளம். விக்கியின் இன்னோவா "சீ மெரிடியனை' நோக்கிச் சீறியது.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

அம்மார் பின் யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு



தாயார் பெயர் சுமைய்யா ரளியல்லாஹு அன்ஹா தந்தை பெயர் யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு.

யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார். மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மனமுடித்து வைக்கிறார். இவர்களின் புதல்வரே அம்மார் ரளியல்லாஹு அன்ஹு.

புதன், 7 டிசம்பர், 2011

நலிவை ஏற்படுத்தும் நகைக்கடன்!



தமிழகத்தில் அண்மைக்காலமாக புற்றீசல்கள் போல தனியார் நிதி நிறுவனங்கள் முளைத்து வருகின்றன. இதில் முன்னணியில் இருப்பவை நகைக்கடன் வழங்கும் நிறுவனங்கள்தான். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தைக் குறி வைத்து இந்நிறுவனங்கள் களம் இறங்குகின்றன. காரணம், தமிழக மக்கள் கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதாலோ என்னவோ?.
குறிப்பாக, நகைக்கடன் என்ற பெயரில் ஏழைகளையும், வறுமையில் வாடுபவர்களையும் இந்நிறுவனங்கள் பிழிந்து எடுத்து விடுகின்றன. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், தமிழகத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காத கேரளத்தைச் சேர்ந்தவர்கள்தான் நகைக்கடனில் முதலிடத்தில் உள்ளனர்.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பெருமை மிக்கவை என்ற பீடிகையுடன் இந்த வியாபாரத்தில் தந்திரமாக சில நிதி நிறுவனங்கள் கொடி நாட்டியுள்ளன. பெரும்பாலும் இந்த வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் ஒன்றும் சிரமமே கிடையாது. காரணம், அத்தனை விரைவாக கைமேல் காசு. போதாக்குறைக்கு தமிழக நடிகர்களின் விளம்பர படங்களும் இந்த வங்கிகளுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளன.
தமிழர்களுக்கு தண்ணீர் தரமுடியாது என்ற எதிரான போக்கை தொடர்ந்து கடைப்பிடிக்கிறது கேரளம். ஆனால், அம் மாநிலத்தவரின் மொத்த வர்த்தகம் தமிழகத்தை நம்பியே உள்ளது. ஏன், நம் மாநிலத்தில் இச்சேவைக்கு ஆளே கிடையாதா? அல்லது மக்கள் மீது நம்பிக்கை இல்லையா என்ற கேள்விதான் எழுகிறது. கந்துவட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என்ற பெயரில் ஏற்கெனவே இங்கு தனியாக வட்டி வழங்கும் வியாபாரம் நடந்து வருவது
தனிக்கதை.
இந்நிலையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி குறைந்தபட்சம் ஒரு சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை தங்க நகைகளின் பெயரில் பணம் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனங்களின் பின்னணி, பாதுகாப்பு போன்றவற்றை யாரும் கவனத்தில் கொள்வாரில்லை.
இதற்கு உதாரணம், அண்மையில் கரூரில் நடைபெற்ற பெரும் கொள்ளை. போலீஸôரின் கடும் நடவடிக்கைக்குப் பிறகு கொள்ளையர்கள் பிடிபட்டனர். கடைசியில் நகைகளை இழந்தவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அங்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. உண்மையில் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் இதுபோன்ற நிதி நிறுவனங்கள் ஒரு சிறிய அறையில் நடத்தப்படுகின்றன.
மேலும் ஏராளமான நகைகள் இங்கு பெறப்பட்டு பணம் வழங்கப்படுகிறது. சுலபமான நடைமுறை இருப்பதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு காரணம், நம்மூர் வங்கிகளின் சோம்பேறித்தனமும், பொறுப்பற்ற தன்மையும்தான். ஒரு விவசாயி அல்லது நடுத்தர நபர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் நகைகளை அடகு வைக்கச் சென்றால் அங்கு கேட்கப்படும் ஆவணங்கள், சான்றுகள் இதர விவரங்களைக் கேட்டதும் மயக்கம்போட்டு விழாத குறையாகப் பலர் ஓடிவந்து விடுகின்றனர்.
மதிப்புமிக்க நகையை வைத்துப் பணம் பெற இத்தனை விதிமுறைகள் தேவையா என்பதே பலரின் கேள்வி. வெறுமனே சான்றிதழ்களை வைத்து பணம் கேட்டால்தான் வங்கிகள் யோசிக்க வேண்டும். ஆனால் வங்கியில் கணக்கு இருக்க வேண்டும். மற்றொருவர் அறிமுகம், தரம்பரிசோதனை செய்பவருக்கு கட்டணம் அப்படி, இப்படி என்று கிட்டத்தட்ட அரைநாள் முழுவதும் நகையையும் கொடுத்துவிட்டு பணத்துக்குக் காத்துக்கிடக்க வேண்டும். அத்துடன் வட்டி விகிதம் குறைவு என்றாலும், கிடைக்கும் தொகையும் குறைவு என்பதால், பலரும் தனியார் நிதி நிறுவனங்களை நாட வேண்டிய நிலை உள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கியாகட்டும், கூட்டுறவு வங்கிகளாகட்டும் விதிமுறைகளில் தளர்வு, விரைவு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நகைக்கு, பாதுகாப்பு என்பதால்தான் மக்கள் வங்கிகளை நாடி வருகிறார்கள். எனவே, அதை முறையாகச் செயல்படுத்த வங்கி நிர்வாகங்கள் முன்வருவதுடன், மக்களைக் காத தொலைவுக்கு ஓட வைக்கக் கூடாது.
எனவே, தனியார் நிதி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள், குறைந்த வட்டி போன்ற நிபந்தனைகளை விதித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு வங்கிகளில் மக்கள் சுலபமாக நகைக்கடன் பெற வழி செய்ய வேண்டும்.
இல்லையேல் நகைக்கடனால் நாளுக்குநாள் மக்கள் நலிவடைய நேரிடும்.


செவ்வாய், 6 டிசம்பர், 2011

பொக்கிஷங்கள் 32



1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

நபிகளின் உள மருத்துவம்



இன்றைய உலகில் உளமருத்துவம் மிகப்பெரும் இடத்தைப் பிடித்துள்ளது. உடல் உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோயாளிகள் உளநோயாளிகள் என்று நோயாளர்கள் இரு பெரும் வகைப்பாட்டுக்குள் இன்று அடக்கப்படுகின்றனர்.

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

சீர்திருத்தம் என்பது எதுவரை?



விலங்குகளோடு சுவர்கத்துக்குள் நுழைபவர்கள்!
தினமும் சுபுஹ் தொழுகைக்குப்பிறகு ஒரு நபி மொழியை சொல்லி, அது பற்றி மட்டுமே உள்ள கருத்துக்களை ஒரு சொற்பொழிவு போல் இல்லாமல் சாதாரண பாணியல், 5 லிருந்து 7 நிமிடங்களுக்குள்ளாக சொல்லி முடித்து விடுவது நமது பள்ளிவாசலில் வழக்கம். நேற்றைய தினம் ஒரு நபிமொழியை வாசித்தேன். அதன் பொருளை கேட்டவுடன் தொழுகையாளிகளின் முகத்தில் ஒரு ஆச்சரியக் கேள்விக் குறி படர்ந்தது. அது படர்கிறதா என்பதை நான் கவனித்து காத்திருந்தேன். அப்படியே நடந்தது.

வெள்ளி, 2 டிசம்பர், 2011

தூக்கம் ஏன்-எதற்கு-எப்படி?



தூக்கம் மனிதனுக்கு அவசியத் தேவை. ஒருவருடைய ஆழ்ந்த தூக்கமே அவனை எப்போதும் விழிப்புடையவனாக இருக்கச் செய்யும். குறைந்த நேரம்  தூங்கி அதிகம் உழைப்பவர்கள் பலர் உள்ளனர்.  ஆனால் இவர்கள் குறைந்த நேரத்தில் நல்ல தூக்கம் பெறுவதால் தான் இவர்களால் நன்கு உழைக்க முடிகிறது.
அளவான தூக்கம்தான் மனிதனை ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.

வியாழன், 1 டிசம்பர், 2011

வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!



ஒரு  வாலிபன் ஒரு பெண்னை  திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்பின்னர் திருமணத்துக்காக    தயாராகின்றான்அப்போது     அவனது சகோதரன்  அப்பெண்னை  திருமணம்  முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான்.  அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை  கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்;

சனி, 5 நவம்பர், 2011

ஹஜ்ஜுப் பெருநாள் சட்டங்கள்

                  
لله أكبر الله أكبرلااله الا الله والله أكبر الله أكبر ولله الحمد






''ஈத்'' என்னும் அரபுச் சொல்லுக்கு திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும்பெருநாள் ஆண்டு தோறும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயர் பெற்றது.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

இமாம்களின் தியாக சுவடுகள்







அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றிருக்கும் நாம் அந்த மார்க்கத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அறிந்து கொள்ள வேண்டும். இந்த மார்க்கம் எவ்வாறு நம்மை வந்தடைந்ததுஇந்த மார்க்கத்திற்கும் நமக்கும் மத்தியிலுள்ள தொடர்புகள் எவ்வாறு அமையவேண்டும்என்பதையெல்லாம் நாம் புரிந்துக் கொண்டால் தான் இந்த மார்க்கத்தை முழுமையாக நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முடியும்.

மார்க்கத்தை நிலை நாட்டும் பொறுப்பு அல்லாஹ்வினுடையது:

இஸ்லாத்தை இந்த பூமியில் நிலை நாட்டுவதற்கும்இஸ்லாமிய மார்க்கத்திற்கு வரும் அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் தவிடு பொடியாக்கி மார்க்கத்தை இந்த பூமியில் மேலோங்கச் செய்வதற்கும் உரிய மாபெரும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டுள்ளான். ஆகவே அந்தப்பணிகளுக்கு ஏற்றதகுந்த மக்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் தேர்ந்தெடுத்து அனுப்பிக் கொண்டேயிருக் கின்றான்.
அவனே தன் தூதரை நேர் வழியுடனும்சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் -முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள்,இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும்எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே அவ்வாறு தன் தூதரையனுப்பினான். (அல்குர்ஆன்: 9:33) இந்த வசனத்தில் தூதர்கள் அனுப்பப்பட்டதன் உயரிய நோக்கத்தை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

இந்த உலகத்தில் உள்ள மதச்சித்தாந்தங்களுடன் பத்தோடு பதினொன்றாக இருப்பதற்காக இஸ்லாத்தை அல்லாஹ் அருளவில்லைமாறாக இந்த உலகத்தில் மதச்சித்தாந்தங்கள் என்று எத்தனை இருக்கின்றனவோ அத்தனையைவிடவும் இஸ்லாம் முதன்மையானதாக இருக்க வேண்டும். அத்தனைச் சித்தாந்தங்களையும் விஞ்சியதாக இஸ்லாம் மேலோங்கி இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை அல்லாஹ் குறிப்பிடுவதை இந்த வசனத்தின் மூலம் அறிய முடிகிறது.

அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்படும் உதவியாளர்கள்:

மேற்கூறப்பட்ட மகத்தான நோக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக அல்லாஹ் பல நிலைகளில் உதவிகளைப் புரிந்து கொண்டேயிருந்தான். ஸஹாபாக்களில் ஆரம்பித்து இன்று வரை அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட நன்மக்கள் இந்த மார்க்கத்திற்காக உழைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். தனி மனிதனோடு புறப்பட்ட இந்த மார்க்கம் மேலோங்கி மேலோங்கி அதன் இறுதி நிலை எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

எங்கெல்லாம் இரவுபகல் உதிக்கின்றனவோ அங் கெல்லாம் இந்த மார்க்கம் சென்றடையும். கண்ணி யமானவன் கண்ணியத்துடனோகேவலமானவன் இழிவைச் சுமந்தோ இந்த மார்க்கத்தைப் பெற்றேத் தீருவான். இந்த மார்க்கம் ஒவ்வோரு கிராமத்திலுள்ள வீட்டிலும் போய்க்கதவைத் தட்டும். நகரத்திலோ,கிராமத்திலோகுக்கிராமத்திலோ இருக்கக்கூடிய எந்த வீட்டிற்குள்ளும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை கொண்டுபோய் நுழைக்காமல் விடமாட்டான். இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக பிரச்சாரம் செய்யவோபோராட்டங்கள் புரியவோ அல்லாஹ் வானத்திலிருந்து மலக்குகளை அனுப்பமாட்டான். அல்லாஹ் இந்த சமுதாயத்திலி ருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை களம் இறக்குகின்றான். அவர்கள் மார்க்கத்திற்காக உழைக்கின்றார்கள்தியாகம் செய்கின்றார்கள். அவர்களுக்கு உதவியாக தனது புறத்திலிருந்து மலக்குகளை அனுப்புகிறான்,உதவிகள் புரிகிறான்பல அற்புதங்கள் நடந்தேறுகின்றன. அவர்களுக்கு அல்லாஹ் பரகத் செய்கின்றான்.

இவ்வாறு இந்த மார்க்கம் மேலோங்கிக் கொண்டிருக்கின்றது. மேலோங்கியே தீரும் என்று அல்லாஹ் முடிவெடுத்திருக்கின்றான் அது நடந்து கொண்டிருக்கின்றது. இந்த காலகட்டத்தில் இந்த மார்க்கம் நம்மை வந்தடைவதற்காக எவ்வளவு பேர் என்னென்ன தியாகங்களை செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தியாகங்களை செய்த தியாகிகளின் வரலாற்றைத் நாம் தெரிந்து கொள்ள கடமைப்பட்டி ருக்கின்றோம்.

(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது (அல்குர்ஆன் 12:111) என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருப்பது போலஇது வரலாற்றுடன் தொடர்புள்ள ஒரு தலைப்பு. இந்த வரலாறுகளின் மூலம் நாமும் படிப்பினை பெற வேண்டும்அதன் அடிப்படையில் நமது செயல்பாடுகளை அமைத்துக்க கொள்ள வேண்டும் என்பது தான் இந்த நினைவூட்டலின் நோக்கம். அப்படி அறிவதன் மூலம் நமது ஈமானிய பலம் கூடுவதற்கு வாய்ப்பாக அமைய அல்லாஹ் அருள் புரிவானாக.

நாம் குர்ஆன்சுன்னாவின் சிந்தனைக்கு வந்திலுக்கின்றோம். ஷிர்க் (இணைவைப்பு)பித்அத் போன்ற மார்க்கத்திற்கு முரணான அனாச்சாரங்களை இனம் கண்டு அவற்றிலிருந்து விலகி தவ்பா செய்தவர்களாக இருக்கின்றோம். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே! 

மார்க்கத்தின் எதார்த்த நிலையை முதன் முதலில் தமிழகம்தான் தந்திருக்கின்றதாஇதை முதன் முதலில் தமிழகத்திலிருந்து தான் உலகத்திற்கு அறிமுகப்படுத்துகின்றோமாஎன்றால் நிச்சயமாக இல்லை. இந்த மார்க்கத்திற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளக் கூடியவர்களை அல்லாஹ் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் இந்த மார்க்கத்தை புதுப்பிக்கிறான்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அல்லாஹ் ஒரு சிலரை அனுப்புகின்றான். அவர்கள் இந்த மார்க்கத்தை புதுப்பிக்கின்றார்கள். ஒரு நபரை அல்லாஹ் அனுப்புகிறான் அவர் வந்து மார்க்கத்தின் பெயரால் மலிந்து கிடக்கின்ற அனாச்சாரங்களை களையெடுக்கின்றார். குறிப்பிட்ட காலத்திற்கு பின் மார்க்கம் பழைய நிலைக்கு திரும்பி விடுகிறது. அதாவது எதார்த்த (உண்மை) நிலை நம் சமுதாயத்திற்கு உணர்த்தப்பட்ட பிறகும் திரும்பவும் அப்படியே வழி தவறி போய்விடுகிறார்கள். திரும்ப அல்லாஹ் அடுத்த நூற்றாண்டில் இன்னொரு நபரை அனுப்புகின்றான். இப்படியே அல்லாஹ் அனுப்பிக் கொண்டேயிருக்கின்றான்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய சமுதாயத்தில் ஒரு பிரிவினர் தொடந்து சத்தியத்தில் இருப்பார்கள். அல்லாஹ்வின் உதவியைப் பெற்றவர்களாக ஒரு பிரிவினர் இந்தச் சமுதாயத்தில் இருந்து கொண்டேயிருப்பார்கள். அவர்களுடைய கொள்கைக்கு யார் மாறு செய்கின் றார்களோ அவர்களை இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். இது அல்லாஹ்வின் கட்டளை மறுமைநாள் வரும் வரைக்கும் இது நீடித்துக் கொண்டே இருக்கும்.

முன்மாதிரிச் சமுதாயம்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இந்த மார்க்கத்திற்காக தியாகம் செய்தார்கள். அதற்கு பிறகு ஸஹாபாக்கள் தியாகம் செய்தார்கள். இன்றைக்கு மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் ஸஹாபாக்களின் தியாகங்கள் கூட மறுக்கப்படும் நிலைதான். இந்த மார்க்கத்திற்காக உழைத்த,உயிரைக் கொடுத்த நபித்தோழர்களின் தியாகங்களை கூட புறக்கணித்து ஒரு தவறான சாயம் பூசப்படும் நிலையை நாம் பார்க்கின்றோம். ஆனால் அல்லாஹ் முதன் முதலில் இந்த மார்க்கத்தை இந்த உலகத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என்பதற்கு முன்மாதிரிச் சமுதாயமாக அவர்களைத் தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்துகின்றான். இந்த மார்க்கத்திற்கு இப்படியெல்லாம் கூட தியாகங்களைச் செய்ய முடியும் என்று தியாகத்திற்கே உதாரணமாக அவர்கள் திகழ்ந்ததை வரலாற்றின் மூலம் நாம் அறிய முடிகிறது.

தமிழக மக்களின் நிலை

ஸஹாபாக்களுக்குப் பிறகு தியாகிகளின் நீண்ட பட்டியல் இருக்கின்றது. அந்த தியாகிகளின் வரலாற்றிற்கும் தமிழக மக்களுக்கும் மத்தியில் மிக நீண்ட இடைவெளி உள்ளது. எப்படிப்பட்ட தியாகங்கள் செய்யப்பட்டு நம் வரை இஸ்லாம் வந்துள்ளது என்ற வரலாற்றுத் தகவல்கள் தமிழக மக்களை வந்தடையவில்லை. இந்த வரலாற்றுத் தொடர் விடுப்பட்டதற்கு உர்தூஅரபி போன்ற மொழி அறியாமையின் காரணமும் ஒன்றாகும். சஹாபாக்களின் தியாகங்கள் பற்றி நாம் இங்கு அதிகம் விவரிக்க வேண்டிய அவசியமில்லை. அந்தளவிற்கு அவர்கள் மார்க்கத்திற்காக தியாகம் செய்திருக்கின்றனர்.ஸஹாபாக்களுக்குப் பின்னும்…?

ஸஹாபாக்களின் தியாகங்களைப் பற்றி நாம் அங்காங்கே ஒரு சில சம்பவங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம். அதற்குப்பிறகு அல்லாஹ் தாபிஈன்களில் சில மக்களை மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காகவே தேர்ந்தெடுக்கின்றான்.

தாபியீன்களில்
·         ஸயீத் இப்னு முஸய்யிப்(ரஹ்) (ஹிஜ்ரீ- 90 மரணம்)
·         உர்வாபின் சுபைர்(ரஹ்)
·         ஸாலிம் பின் அப்துல்லாஹ்பின் உமர்(ரலி) (உமர் (ரலி) பேரர்) (ஹிஜ்ரீ -106 மரணம்)
·         காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்கர்(ரஹ்) (ஹிஜ்ரீ-106)
·         உமர் பின் அப்துல் அஸீஸ்(ரஹ்) (ஹிஜ்ரீ-101)
இவர்களெல்லாம் குர்ஆன்சுன்னா வழியில் ஷிர்க்,பித்அத்துகளைக் களையெடுப்பதற்காக பாடுபட்டவர்களில் மிகவும் முயற்சி எடுத்தவர்கள் ஆவர்.

தபவுத் தாபியீன்களில்… இமாம் மாலிக்(ரஹ்)

தாபியீன்களுக்குப் பிறகு தபவுத் தாபியீன்களின் காலம். அதில் தலையாய இடத்திலிருப்பவர் இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள். நான்கு மத்ஹப்களின் இமாம்களில் ஒருவராக பிரபலமாகியிருக்கும் இமாம் மாலிக் பின் அனஸ்(ரஹ்) அவர்கள் இந்த பூமியில் குர்ஆன்சுன்னாவை நிலைநாட்டுவதற்காக என்னவெல்லாம் தியாகங்களை மேற்கொண்டார்கள் என்பது பற்றி நமக்குக் கூறப்பட்டதோஇல்லையோ

இமாம்களின் பெயரைச் சொல்லி விமர்சித்ததையும் அவர்களை துச்சமாகக் கருதி அவர்களைக் குறை கூறியதையும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம். மத்ஹபுகளை விமர்ச்சிப்பது வேறு,இமாம்களை விமர்ச்சிப்பது வேறுதன்னுடைய வாழ்க்கையில் ஐங்காலத் தொழுகையைப் பேணுதலாகத் தொழாதவர்களெல்லாம் இஸ்லாத்திற்காக தங்களுடைய வாழ்க்கையையே தியாகம் செய்த இமாம்கள் மீது மிக மோசமான வார்த்தைகள் துணிந்து உபயோகப்படுத்துவதை தமிழக மக்களுக்கு மத்தியில் மட்டும்தான் காணமுடிகிறது.

நம்முடைய பலவீனம்கல்வியின்மைகல்விக்கும் நமக்கும் மத்தியிலுள்ள இடைவெளி இவற்றின் காரணத்தால் இஸ்லாத்திற்காக மிகப்பெரிய தியாகங்கள் செய்திட்ட,எவர்களுடைய முயற்சியினால் இன்று நாம் குர்ஆன்,சுன்னாவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோமா அப்படிப்பட்ட தியாகிகளை புறந்தள்ளக்கூடிய ஒரு மிகப்பெரிய துணிவு சில தமிழக பேச்சாளர்கள் சிலரிடம் வந்திருக்கிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் இஸ்லாத்திற்காக எவ்வளவு பெரிய தியாகங்கள் செய்தார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை பாருங்கள்.

இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் காலத்தில் ஒரு கலீஃபா இறந்து விடஅடுத்ததாக ஜஃபர்பின் சுலைமான் என்பவருடைய ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. இவர் ஆட்சிக்கு வந்த சமயத்தில் இமாம் மாலிக் (ரஹ்)அவர்களுக்கு ஆட்சிக்கட்டிலிலிருந்து ஒரு நெருக்கடி வருகிறது. ஒரு மனிதன் நிர்ப்பந்திக்கப்பட்டு தலாக் சொன்னால் அந்த தலாக் செல்லாது என்ற ஹதீஸை மக்களுக்கு நீங்கள் அறிவிக்கக்கூடாது” என்பது தான் அந்த நெருக்கடி.காரணம்அங்கு ஆட்சித் தலைவருக்கு நிர்ப்பந்தமாக பைஅத் வாங்கப்பட்டு வந்த சமயம் அது. நிர்ப்பந்தமான தலாக் செல்லாது எனும்போது நிர்ப்பந்தமாக வாங்கப்பட்ட பைஅத்தும் செல்லாது என்றாகிவிடும் அல்லவாஆனால் இமாம் அவர்கள் நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளுங்கள் நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அந்த சுன்னாவை ஒருநாளும் மறைக்கவே மாட்டேன் என உறுதியாக சொல்லிவிட்டார்கள்.

இறுதியில் ஆட்சியில் இருந்தவர்கள் சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவரையும் ஏவி விட்டு இமாம் அவர்களை ஒரு கழுதை மேல் ஏற்றி அமர வைத்து சாட்டையாலும்கற்களாலும் அடித்து ஊர்வலமாக ஓட ஓட விரட்டுகிறார்கள். அந்த நேரத்திலும் இமாம் அவர்கள் கலங்கவில்லைகதறவில்லை அவர்களின் வாயிலிருந்து உதிர்ந்த,உதித்த வார்த்தைகள் இதோ:

என்னை யார் முன்னதாக அறிந்திருக்கின்றீர்களோ என்னை நீங்கள் அறிந்திருக்கீன்றீர்கள். என்னைப் பற்றிய அறிமுகம் எவருக்கு இல்லையோ அறிந்து கொள்ளுங்கள்அஸ்பஹீ இனத்தைச் சேர்ந்த அபூஆமிரின் பேரனான அனஸின் மகன் மாலிக் நான் தான். நான் சொல்கிறேன் நிர்ப்பந்திக்கப்பட்டு வாங்கும் தலாக் செல்லாது” என்று இரத்தம் சொட்ட சொட்ட தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கின்றார்கள். இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் மக்களுக்கு சுன்னா சென்றடைய வேண்டும் என்பதற்காக தொகுத்த நூல் தான் முஅத்தா மாலிக்என்ற பிரபலமான நூலாகும்.

அவர்கள் ஹிஜ்ரீ 179-ல் வஃபாத்தாகிறார்கள். அவர்களுக்குப் பிறகுஅவர்களுடைய மாணவர் இமாம்ஷாஃபீ(ரஹ்) அவர்கள்வருகிறார்கள்.

இமாம் ஷாஃபியீ(ரஹ்)

இவர்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடமும் வகீம் பின் ஜர்ராஹ் (ரஹ்) அவர்களிடமும் கல்வியை கற்கிறார்கள். இது தவிர பல அறிஞர்களைச் சந்திக்கச் சென்று தமது கல்வி அறிவை வளர்த்துக் கொண்டு அவர்களும் ஒரு ஹதீஸ் நூலைத் தொகுக்கின்றார்கள். அதுதான் இன்று முஸ்னத் ஷாஃபியீ என்று அறியப்படும் நூலாகும். மேலும் அர்ரிஸாலா” என்ற ஓர் அற்புதமான ஹதீஸ்கலை நூலையும் தொகுக்கின்றார்கள். அது மட்டுமல்ல ஹதீஸ் தொகுப்பிலேயே ஹதீஸ் கலையை உருவாக்கியவர்களே இமாம் ஷாஃபியீ(ரஹ்) அவர்கள் தான்.

இரண்டு ஹதீஸ்கள் முரண்படுவதுபோல் தோன்றினால்அதை எப்படி விளங்கிக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு ஹதீஸ் கிப்லாவை நோக்கி சிறுநீர் கழிக்கக்கூடாது என்றிருக்கும் பிரிதொரு ஹதீஸ் நபி(ஸல்)அவர்கள் கிப்லாவை நோக்கி சிறுநீர் கழித்தார்கள் என்றிருக்கும். இஹ்ராம் அணிந்துவிட்டால் திருமணம் தடை என்று ஒரு ஹதீஸிலும் இஹ்ராம் அணிந்து நபிகள்(ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள் என்று மற்றோர் ஹதீஸிலும் இருக்கும். இப்படி முரண்பாடாக வரக்கூடிய ஹதீஸ்களை எப்படி விளங்கிக் கொள்வது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் இக்திலாஃபில் அஹாதீஸ்” என்ற நூலைத் தொகுக்கிறார்கள். ஆழமான தீர்வை தருகிறது அந்நூல்.மேலும்கொள்கை ரீதியான பல புத்தகங்களைத் தொகுத்து இந்த சமுதாயம் குர்ஆன்சுன்னாவின் சிந்தனையிலிருந்து வெளியேறிவிடக்கூடாது என்பதற்காக அரும்பாடு பட்டிருக்கின்றார்கள் இமாம் அவர்கள். இமாம் முஹம்மது பின் இத்ரீஸ் பின் ஷாஃபியீ(ரஹ்) அவர்கள் 204-ல்வஃபாத்தாகிறார்கள்.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்):

அதற்குப் பிறகு அப்பணியை சிரமேற்கொண்டு செயல்படவும் மார்க்கத்திற்காக தம்முடைய இன்னுயிரை நீத்திடவும் தயாராகிறார்கள் இமாம் ஷாபியீ(ரஹ்) அவர்களின் மாணவர் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள்.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களின் வரலாற்றை படிக்கும் போது கல்விப்பணியில் இமாம் மாலிக்இமாம் ஷாஃபியீ(ரஹ்) இவர்களையெல்லாம் விஞ்சி நிற்பதை அறிய முடிகின்றது. தம்முடைய தந்தையிடமிருந்தும் தம்முடைய சகோதரரிடமிருந்தும் கல்வியைக் கற்றுக் கொண்ட இமாம் அவர்கள் சுமார் 30,000 ஹதீஸ்களைக் கொண்ட முஸ்னத் அஹ்மத் என்ற மிகப்பெரிய ஹதீஸ் கிரந்தத்தைத் தொகுக்கின்றார்கள். இந்த ஹதீஸ்களை மக்களுக்கு போதிக்கும்போதெல்லாம் என்னுடைய சொந்த கருத்தை எழுதாதீர்கள் என மக்களை எழுதவிடாமல் தடுத்து விடுவார்கள். இதனாலேயே இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களின் சொந்தக் கருத்துக்களடங்கிய நூல் எதுவுமே இருக்காது. எல்லாம் ஹதீஸ் நூற்களாகத்தான் இருக்கும். தமது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஹதீஸ்கள் மட்டுமே தொகுக்கப்படவேண்டும் என்று விரும்பிய இமாம் அவர்கள் அப்துல்லாஹ் என்ற தமது மகனாரிடம்அப்துல்லாஹ்வே! இந்தப் புத்தகத்தை நீ மிக மிக பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இது மக்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டி நூலாக அமையும் என நான் எதிர்பார்க்கின்றேன். காரணம்இதில் நான் தொகுத்தளித்துள்ள 30,000 ஹதீஸ்களும்7,00,000 ஹதீஸ்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும்என்று கூறுகிறார்கள்.

இமாம் அவர்கள் தேர்ந்தெடுத்துத் தொகுத்த 30,000ஹதீஸ்களைத்தான் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலாக நாம் பார்க்கிறோம். அஹ்மத் என்று வருவதெல்லாம் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களின் தொகுப்பு நூலான முஸ்னத் அஹ்மத் என்ற நூலிலிருந்து மேற்கோள் காட்டப்படும் ஹதீஸ்கள்தாம். இமாம் அவர்கள் இந்த குர்ஆன்சுன்னாவை நிலைநாட்ட எடுத்துக்கொண்ட சிரத்தை எண்ணிலடங்காதது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஃபித்னா தோன்றுவதுபோல் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களின் காலகட்டத்திலும் மிகப்பெரிய பித்அத் (ஃபித்னா) தோன்றுகிறது. மஃமூன் என்பவரின் ஆட்சிக்காலத்தில் குர்ஆன் படைக்கப்பட்ட பொருள்” எனும் கூற்று பெரும் குழப்பமாக திகழ்ந்தது. குர்ஆன் படைக்கப்பட்ட பொருள் என்று சொன்னால் படைக்கப்பட்ட பொருட்கள் அழிவதைப் போன்று குர்ஆனும் அழிந்து போய்விடும் எனும் சித்தாந்தத்தை பரப்பிக்கொண்டிருந்தார்கள். குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் அது அழிந்துவிடும் எனில் அல்லாஹ்வும் அழிந்து விடுவான் என்றாகிவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆகவே இத்தீய கொள்கையை ஒரு போதும் வளரவிடக்கூடாது என்று அக்காலத்தைய இமாம்களெல்லாம் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக் கிறார்கள்.இதில் பலரும் துன்புறுத்தப்படுகிறார்கள். மஃமூன் என்ற அரசனின் கடைசி காலத்தில் தான் (ஹிஜ்ரீ 218-ல்) இந்த ஃபித்னா தொடங்குகின்றது அவர் மரணிக்கின்றார். அவர் மரணித்தவுடன் இந்த ஃபித்னா இல்லாமல் ஆகிவிடும் என இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) எண்ணுகின்றார்கள்.

ஆனால் அதற்குப்பிறகு முஃதஸிம் என்பவர் ஆட்சிக்கு வருகிறார். இவரும் அந்தத் தீயக்கொள்கையில் உறுதியாக இருக்கின்றார். இக்கொள்கையை எதிர்க்கின்றவர்களை சிறையிடைக்கக் கட்டளையிடுகின்றார். அப்பொழுது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களும் அவர்களுடன் முஹம்மத் பின் நூஹ் என்பவர்களும் சிறை பிடிக்கப்பட்டு பக்தாதுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுகின்றார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் காரணமாக முஹம்மத் பின் நூஹ் அவர்கள் வழியிலேயே வஃபாத்தாகி விடுகிறார்கள். எஞ் சியிருப்பது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்கள் மட்டும்தான். ஒரு சிலர் ஆட்சியாளருக்கு பயந்து கொண்டு இக்கொள்கையை விட்டுக் கொடுத்தார்கள்.

ஆனால் ஃபித்னாவை ஒழிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக இமாம் அவர்கள் இறுதிவரை விட்டுக் கொடுக்கவில்லை. இமாம் அவர்கள் 30 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்தப் பிறகு அரசன் முஃதஸிம் இமாம் அவர்களை சிறையிலிருந்து விடுவித்து என்ன நினைக்கின்றீர்கள்?கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாஇல்லையாஎன்று விசாரிக்கின்றார். அதற்கு இமாம் அவர்கள் எந்த மாற்றமும் இல்லை” என துணிந்து கூறுகின்றார்கள். அப்படியா னால் அங்குள்ள 2 கம்புகளில் ஏதேனும் ஒன்றில் கைவையுங்கள்! என்று கூறுகிறான். இமாம் அவர்களுக்குக் காரணம் புரியவில்லை ஒரு கம்பில் இமாம் கைவைத்து விடுகின்றார்கள். அதற்குப்பிறகு அந்தப் பகுதியிலுள்ள கோரமுகம் கொண்ட சில சாட்டை வீரர்கள் வருகின்றார்கள். இரக்கம் என்பதையே அல்லாஹ் அவர்களின் உள்ளத்திலிருந்து எடுத்துவிட்டானோ என்னவோ இமாம் அவர்களை அடிக்க ஆரம்பிக்கின்றனர் ஒரு அடியிலேயே இமாம் அவர்கள் மயக்க முறுகிறார்கள் கொஞ்ச நேரம் கழித்து மயக்கம் தெளிகிறது. அடுத்து ஒரு அடி இப்படியே 30-க்கும் அதிகமான சாட்டையடி என்றும் சில நூல்களில் 80-க்கும் அதிகமான சாட்டையடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி உடம்பில் ஒரு இடம்கூட அடிவிழாமல் மிஞ்சவில்லை எனும் அளவிற்கு அடிக்கப் படுகிறது. இறுதியில் இமாம் அவர்களின் உடலுக்கு மருந்திடுவதற்காக மருத்துவர் வந்து அவர்களுடைய உடம்பில் சில சதைத்துண்டுகளை துண்டித்து எடுக்கின்றார். காரணம் அந்த சதைத்துண்டு களெல்லாம் செத்துப்போயிருந்தனஅதற்கு உயிர் இல்லை. அடித்துக் கொண்டிருக்கும் போதே சில சதைத்துண்டுகள் தொங்கிக் கொண்டும் இருந்திருக்கின்றது. பிறகு அதையெல்லாம் துண்டித்து எடுத்து விட்டுதான் மருத்துவம் செய்யப்படுகின்றது. பிறகு இமாம் அவர்களால் தொழக்கூட முடியாத நிலை இருந்ததை வரலாற்றில் பார்க்கின்றோம். இதுவே இமாம் அவர்களின் மரணப்படுக்கையாகி விடுகின்றது. இப்படி சத்தியத்திற்காக இமாம்கள் பட்ட கஷ்டங் களையும் யாருக்காகவும்எதற்காகவும் மார்க்கத்தில் சமரசம் செய்து கொள்ளாத நிலையையும் அவர்களின் வரலாற்றில் பார்க்கின்றோம். இமாம் அவர்கள் ஹிஜ்ரீ 241வஃபாத்தாகிறார்கள். அவர்களுக்குப் பிறகு யஹ்யா இப்னுமுயீன் (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 233) அலீ இப்னு மதீனீ (ஹிஜ்ரீ 234) என ஹிஜ்ரீ 200களில் இந்த மிகப்பெரிய அறிஞர்கள் இஸ்லாத்திற்காக தங்களுடைய தியாகத்தை பதிந்திருகின்றார்கள்.

இமாம் புகாரீ (ரஹ்):

அடுத்து இமாம்களுடைய மாணவர்களின் காலம் வருகின்றது அவர்கள்தான் குர்ஆன்சுன்னாவை நிலை நாட்டுவதற்கான அடுத்த தியாகிகள் கூட்டம். புகாரீ என்ற ஹதீஸ் நூலை நாம் பார்க்கின்றோம். அதை தொகுத்த இமாம் புகாரீ அவர்கள் மேற்கண்ட தியாகிகளின் மாணவராக இமாம்களுக்கு அடுத்த கால கட்டத்தில் வருகின்றார்கள்.
1.     இமாம் இமாம் புகாரீ (ரஹ்) ஹிஜ்ரீ : 256
2.     இமாம் முஸ்லிம் (ரஹ்) ஹிஜ்ரீ: 261
3.     இமாம் அபூதாவூத் (ரஹ்) ஹிஜ்ரீ : 275
4.     இமாம் திர்மிதீ (ரஹ்) ஹிஜ்ரீ : 279
5.     இமாம் நஸாயீ (ரஹ்) ஹிஜ்ரீ : 303
இவர்கள் அனைவரும் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களின் மாணவர்களாவர். மத்ஹபு இமாம்களின் மாணவர்கள் தான் இவர்கள். இந்த இமாம்கள் அனைவருமே இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களிடமிருந்தும் மற்ற அறிஞர்களிடமிருந்தும் ஹதீஸ்களைத் தேடிப் பெற்று மிகப்பெரும் தொகுப்பு நூல்களை நமக்குத் தந்து குர்ஆன்சுன்னாவை நிலை நாட்ட பாடுபட்டிருகின்றார்கள்.
இவர்களோடு தியாகங்கள் முடிந்து விட்டதாஎன்றால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். இவர்களுக்குப் பிறகு இவர்களுடைய மாணவர்கள் வருகின்றார்கள்.
·         இமாம் இப்னு ஹுஸைமா(ரஹ்) அவர்கள் – (ஹிஜ்ரீ 311)
·         இமாம் தாரகுத்னீ- (ஹிஜ்ரீ 385)
·         இமாம் கத்தீப் – (ஹிஜ்ரீ 463)
·         இமாம் அப்துல் கனி அல்மக்திஸீ அவர்கள்- (ஹிஜ்ரீ 600)
இப்படியாக 6-வது நூற்றாண்டு வரைக்கும் அந்தத் தொடர் நீண்டு கொண்டேபோகிறது.

மேற்கண்ட எத்தனையோ அறிஞர்கள் இவர்களது இந்தப் பெயர்களெல்லாம் நம் காதுகளில் விழுந்திருக்கின்றதா?