பக்கங்கள்

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

ஆஃபியா.

 


நபி (ஸல்) அவர்களிடம் அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டார்கள்;


யா ரஸுலுல்லாஹ் எனக்கு ஒரு துஆவை கற்பியுங்கள் என்றார்கள்.


அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் 


اللهم اني اسالك العافية


"அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக அல் ஆஃபியா"


(யா அல்லாஹ்! நான் உன்னிடம் ஆஃபியாவைக் கேட்கிறேன்)


ஆஃபியா என்றால் என்ன என வினவினார்கள்


ஆஃபியாவின் பொருளானது,   

யா அல்லாஹ் எல்லாவித தொந்தரவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்று"


நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் ஆஃபியாவில் இருக்கின்றீர்கள் என்பதாகும்.


வாழ்வதற்கு போதிய பணம் இருக்குமானால் நீங்கள் ஆஃபியாவில்" இருக்கிறீர்கள்


உங்களது குழந்தைகள் பாதுகாக்கப்பட்டதாக இருந்தால் நீங்கள் ஆஃபியாவில் இருக்கிறீர்கள்

.

மேலும் நீங்கள் தண்டிக்கப்படாமல் மன்னிகப்பட்டவரானால் நீங்கள் ஆஃபியாவில் இருக்கிறீர்கள்


  *ஆஃபியாவின்* பொருள்*


யா அல்லாஹ்! என்னை வேதனையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் பாதுகாப்பாயாக. இது துன்யாவையும் ஆஃகிராவையும் சேர்த்தே குறிக்கும்.


அப்பாஸ் (ரலி) அவர்கள் இதைப்பற்றி சிந்தித்துவிட்டு, சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்து கூறினார்கள்:


"யா ரஸூலுல்லாஹ்! இந்த துஆ பார்ப்பதற்கு கொஞ்சம் சுருக்கமாக தெரிகிறது. எனக்கு வேறு ஏதாவது பெரியதாக வேண்டும்.


இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:


என்னுடைய நேசத்திற்குரிய சிறிய தந்தையே, அல்லாஹ்விடம் ஆஃபியாவை கேளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆஃபியாவைவிட சிறந்ததாக நீங்கள் எதையும் பெறமாட்டீர்கள்.


இது மிகவும் எளிமையான துஆ. நீங்கள் கூறுவதன் உண்மையான பொருளானது


யா அல்லாஹ் நான் உன்னிடம் சகல விதமான துன்பத்தைவிட்டும்,கேடுகளை விட்டும், ஆழ்ந்த துக்கத்தைவிட்டும், கஷ்டத்தைவிட்டும்,பாதுகாப்பு தேடுகிறேன். என்னை சோதிக்காதே!


இதெல்லாம் "அல்லாஹும்ம இன்னி அஸ்ஆலுக அல் - ஆஃபியா என்பதில் உள்ளடங்கிவிடும். எனக் கூறினார்கள்.


பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

சிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக