பக்கங்கள்

புதன், 12 பிப்ரவரி, 2025

புனிதமிக்க பராஅத் இரவு

 



நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்.

என்று அல்லாஹ் திருமறை அல் குர்ஆனிலே சூறத்துத் தவ்பா வில் கூறுகிறான்.


ஒவ்வொரு மாதங்களுக்கும் தனித்தனி சிறப்புகளையும் குறிப்பிட்ட சில மாதங்கள் ஒன்றை விட ஒன்று மிகச் சிறப்புக்குரியதாகவும் வாரத்தில் 7 நாட்களில் வெள்ளிக்கிழமை மிக சிறப்ப்புக்குரிய நாளாகவும் தன்னகத்தே பொதிந்துள்ளது என்பதை ஹதீஸ்களில் காணமுடியும்.


அவ்வகையில் ஷஃபான் மாதத்தை பார்க்கையில் இம்மாதத்தில் நோன்பு நோற்பது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏறாளமான ஹதீஸ்களில் சொல்லி இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இம்மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்பார்கள் என்பவைகளை ஹதீஸ்களில் காணமுடியும்.


பராஅத் இரவு

----+++----+-----


ஷஃபான் மாதத்தில் பராஅத் என்ற ஓர் இரவு உண்டா...??

அதற்கென்று தனிச் சிறப்புகள் உண்டா..?

அவ்விரவில் வணக்கவழிபாடுகள் செய்து அவ்விரவை உயிர்ப்பிக்க வேண்டுமா.??

பராஅத் நோன்பு என்ற ஒன்று உண்டா...?

பராஅத் இரவில் 3 யாஸீன் ஓதுதல் உண்டா..??


இவைகளே இன்று வஹ்ஹாபிய நஜ்திய கர்ணிகளால் விமர்சிக்கப்பட்டு அவர்களும் செய்யாமல் செய்பவர்களையும் செய்யவிடாமல் வலம் வந்துகொண்டிருக்கும் நரகத்தின் அழைப்பாளர்கள் ஆன தவ்ஹீத் ஜமாஅத் என்ற போர்வையில் இருக்கும் நவீன கவாரிஜியாக்கள் வாழும் இக்கடைசி காலத்தில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை சான்றோடு சீர்தூக்கவேண்டியுள்ளது.


லைலதுல் கத்ர் இரவிற்கும் ஷஃபான் நடுப்பகுதி பிறை 15 கும் இடையில் உள்ள சிறப்பு

-----++----------++--------+-------


அல்லாஹ் அல் குர்ஆனில் சூறத்துத் துகான் என்ற அத்தியாயத்தில் வசனம் 3-4 ல் சொல்கிறான் 


‎انا انزلناه في ليلة مباركة انا كنا منذرين 


நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம். நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.


‎فيها يفرق كل امر حكيم 


அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.


அல்லாஹ் சொல்லக்கூடிய அந்த பரகத் செய்யப்பட்ட இரவு எது...?


1- அந்த பரகத் செய்யப்பட்ட இரவு லைலதுல் கத்ர்

தப்ஸீர் குர்துபி 16/127 

தப்ஸீர் ரூஹுல் மஆனி 18/427


2- அந்த பரகத் செய்யப்பட்ட இரவு ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியான பிறை 15 வது இரவு (அவ்விரவையே நாம் பராஅத் உடைய இரவு என்று சொல்கிறோம்)

தப்ஸீருத் தபரி 1/22

தப்ஸீர் இப்னு அபீ ஹாதம் 12/214


எனவே தப்ஸீருடைடைய இமாம்கள் இரண்டு கருத்தை சொன்னாலும் இங்கு 

‎فيها يفرق كل امر حكيم 


அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.


என்ற வசனத்தை கவனிக்கும் போது ஷஃபான் நடுப்பகுதி பிறை 15 ல் தான் எல்லாம் புதிதாக நிர்ணயம் செய்யப்படுகிறது என்ற ஹதீஸ்களின் அடிப்படையில் அந்த பரகத் செய்யப்பட்ட இரவு ஷஃபான் பிறை 15 வது இரவு என்று நாம் சொல்கிறோம்.அதுவே பராஅத் இரவு.


ஷஃபான் பிறை 15 நடுப்பகுதி இரவின் பெயர்கள்

----++----++----++-----


1- லைலதுல் முபாறகா -(ليلة المباركة) பரகத் செய்யப்பட்ட இரவு..இதை அல்லாஹ்வே திருமறையில் சொல்கிறான்.

தப்ஸீர் குர்துபி 16/126

தப்ஸீர் ரூஹுல் மஆனி 18/425


2- லைலதுல் பராஅத்

‎ (ليلة البراءة)

3- லைலதுஸ் ஸக் 

‎(ليلة الصك)

இந்த இரவிலே தான் அல்லாஹ் முஃமினான அடியார்களை நரகத்தை விட்டும் விடுதலை செய்வதையும்,அவர்களின் பாவங்களை மன்னிப்பதையும் எழுதுகிறான்.


தப்ஸீர் ரூஹுல் மஆனி 18/423


4- லைலதுர் ரஹ்மத் 

‎(ليلة الرحمة)

இவ்விரவிலே அல்லாஹ் தன்னுடைய ரஹ்மத்தை,அருளை அடியார்களுக்கு இறக்கிறான்.

மபாதீஹுல் ஙைப் 1/14 


5- லைலதுல் மஹ்வு வல் இஸ்பாத் 

‎(ليلة المحو والاثبات)

இவ்விரவிலே தான் அல்லாஹ் அடியார்களின் ஆகாரங்களையும்,வாழ் நாளின் முடிவுகளையும்,அடியார்களின் அமல்கள் குறித்த விஷயங்களையும் எழுதுகிறான்.

எடுத்துக்காட்டாக 


‎يمحو الله ما يشاء ويثبت وعنده ام الكتاب 


(எனினும்) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது.


சூறதுர் ரஃத் 39 


தப்ஸீர் ரூஹுல் மஆனி 9/294


பராஅத் உடைய இரவில் துஆ ஏற்றுக்கொள்ளப்படும்

-----++------+++-------++--------


இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் வரக்கூடிய செய்தி 5 இரவுகளில் கேட்கப்படும் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொன்னார்கள்.

1-வெள்ளிக்கிழமை இரவு 

2- ரஜப் மாதத்தின் ஆரம்ப முதல் இரவு 

3- ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியான (இந்த பராஅத்துடைய)இரவு 

4,5- நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் இரவு 


இமாம் பைஹகீ ரஹ்மஹுல்லாஹ் ஷுஃபுல் ஈமான் 8/227 


இமாம் பைஹகீ ரஹ்மஹுல்லாஹ் ஃபழாஇலுல் அவ்காத் 1/178


முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 4/317 


இதே 5 இரவில் கேட்கப்படும் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் என்று இமாம் ஷாபிஈ ரஹ்மஹுல்லாஹ் சொன்னார்கள்.


இமாம் பைஹகீ ரஹ்மஹுல்லாஹ் ஷுஃபுல் ஈமான் 8/225 


இமாம் பைஹகீ ரஹ்மஹுல்லாஹ் அஸ் ஸுனனுல் குப்றா 3/319 


இமாம் இப்னு ஹஜருல் அஸ்கலானீ ரஹ்மஹுல்லாஹ் தல்கீஸுல் கபீர் 2/265 


பராஅத் இரவை வணக்கங்களால் உயிர்ப்பித்தல்

-----++------++--------+---


அபீ உமாமதல் பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் வரக்கூடிய செய்தி 


ஷஃபான் நடுப்பகுதியான பிறை 15 வது இரவை உயிர்ப்பித்தால் (வணக்கங்களினால்) அவருக்கு சுவனம் கட்டாயமாகும்.


இமாம் அல் ஹாபிழ் இப்னு அஸாகிர் ரஹ்மஹுல்லாஹ் 

தாரீக்ஃ திமிஷ்க் 1/275


ஷஃபான் நடுப்பகுதி பிறை 15 வது இரவு வந்துவிட்டால் மக்காவாசிகளான ஆண்களும் பெண்களும் பள்ளிவாயலுக்கு சென்று விடுவார்கள்.அல் குர்ஆனை பரிபூரணமாக ஓதி முடிப்பார்கள்.தொழுவார்கள்.ஸம்ஸம் நீரை எடுத்துக்கொள்வார்கள் அதனாலேயே வுழு செய்து அதன் மீதத் தண்ணீரை நோயாளிகளுக்கு கொடுப்பார்கள்.ஸம்ஸம் நீரை அருந்துவார்கள்.அதனால் அவ்விரவில் பரகத் தேடுவார்கள்.


அக்ஃபாரு மக்கா 5/23 


ரமழானுடைய இறுதிப் பத்து நாட்களையும்,இரு பெருநாட்களின் இரவையும்,துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப 10 நாட்களின் இரவையும்,ஷஃபான் மாதத்தின் 15 வது இரவையும் (பராஅத்துடைய இரவு) வணக்கங்களினால் உயிர்ப்பிப்பது சுன்னத்தான காரியங்களில் உள்ளதாகும்.


அல் பஹ்ருர் ராஇக் 2/56 


யார் இரு பெருநாட்களின் இரவையும் ஷஃபான் 15 வது (பராஅத்துடைய)இரவையும் உயிர்பிக்கிறாரோ அவரின் உள்ளம் மரிப்பதில்லை.


மவாஹிபுல் ஜலீல் 2/193


ஷஃபான் 15 வது (பராஅத்துடைய) இரவு குறிப்பாக்கப்பட்ட மிக சிறப்புக்குரிய இரவாகும்.அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு பரகத்தையும் நலவுகளையும் இறக்குவதால் இந்த இரவை பரகத் நிறைந்த இரவு என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.


தப்ஸீருத் தபரி 16/126 


ஷாம் தேசத்தைச் சேர்ந்த காலித் இப்னு மஃதான் ரஹ்மஹுல்லாஹ் மக்ஹூல் ரஹ்மஹுல்லாஹ் போன்ற தாபிஈன்கள் ஷஃபான் 15 வது (பராஅத்துடைய) இரவை வணக்கங்களால் உயிர்ப்பிப்பார்கள்.


இமாம் கஸ்தலானீ ரஹ்மஹுல்லாஹ் 

அல் மவாஹிபுல் லதுன்னிய்யா 2/259 


ஷஃபான் 15 வது (பராஅத்துடைய) இரவில் நின்று வணங்குவது சுன்னத்தாகும்.ஏனெனில் பாவங்களுக்கு ஒரு வருடத்திற்கு பரிகாரமாகும்.


அத் துர்ருல் முக்ஃதார் 2/27 

மராகில் பலாஹ் 1/174 


மேற்கூறப்பட்ட இரவுகளுக்கு தனிச் சிறப்பு உண்டு.அவ்விரவிலே குறிப்பாக பாவமன்னிப்பும் உண்டு.துஆவும் ஏற்றுக்கொள்ளப்படும்.


இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமி ரஹ்மஹுல்லாஹ் 

அல் பதாவா அல் பிஃக்ஹிய்யா அல் குப்ரா 3/377


 ஷஃபான் 15 வது (பராஅத்துடைய) இரவிற்கு தனிச் சிறப்பு உண்டு.அதில் ஸலபுஸ் ஸாலிஹீன்கள் தொழுதும் இருக்கிறார்கள் 


ஷரஹ் முன்தஹல் இறாதாத் 

2/80


கஷ்ஷாபுஃல் கினாஃ அன் மதனில் இக்னாஃ 3/329 


ஷஃபான் 15 வது (பராஅத்துடைய) இரவிற்கு தனிச் சிறப்பு உண்டு.நிச்சயமாக அவ்விரவை வணக்கங்களினால் உயிர்ப்பிப்பது சுன்னத்தாகும்.


அபீ ஷாமா ரஹ்மஹுல்லாஹ் 

கிதாபுல் பிதஇ வல் ஹவாதிஸி 44


பராஅத் உடைய இரவில் 3 யாஸீன் ஓதுதல்

-----++------+++-------+++------

 

வரும் ஆண்டில் நோய்கள் பலாய்கள் அகலவும் வாழ்வு றிஸ்க் விஸ்தீரனமாகவும் ஆயுள் நீடிக்கவுமாக மூன்று யாஸீன் ஓதுவது அன்றிலிருந்து நடை முறையிலிருந்து வரும் பழக்கமாகும்.


தர்மம், துஆ ஆகிய இரண்டும் கழாவைத் தட்டும் என்பது ஹதீஸ்... அது போல் யாஸீன் எதற்காக ஓதப்படுகின்றதோ அந்த நாட்டம் நிறைவேறும் என்பதும் ஹதீஸ்தான். இந்த அடிப்படையில் தான் இவை செயல் முறையில் உண்டு.....


பறாஅத் இரவன்று மூன்று யாஸீன் ஓதுவோம். அதில் முதல் யாஸீன் ஓதும் போது நீண்ட ஆயுளையும் இரண்டாவது யாஸீன் ஓதும் போது பலாய்கள் தட்டப்படுவதையும் மூன்றாவது யாஸீன் ஓதும் போது மக்களிடம் தேவையற்று இருப்பதை (விசாலமான றிஸ்க்கை)யும் நிய்யத் வைப்போம். பின் பறாஅத் இரவன்று ஓதும் துஆவை பத்து விடுத்தம் ஓத வேண்டும்.


முஜர்ரபாத்துத் தைறபி 17-18


தப்ஸீர் றூஹுல் பயான் 7/443

 

இமாம் அஸ்ஸெய்யித் முஹம்மது ஹஸன் ஸுபைதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இஹ்யா உலூமுத்தீனின் விரிவுரையான அல் இத்திஹாப் 3/427 


பறாஅத் இரவை கண்ணியப்படுத்தும் நோக்கில் அந்த இரவை ஹயாத்தாக்குவதில் ஸலபுகளான முன்னோர்கள் கவனம் செலுத்தி வந்துள்ளனர். அந்த இரவில் வாழ்வில் பறக்கத், றிஸ்கில் விஸ்தீரணம், மரணத்தில் அழகிய முடிவு ஆகிய நோக்கங்களை முன்வைத்து மூன்று யாஸீன் ஓதிய பின் அவ்விரவில் ஓதப்படும் துஆவையும் ஓதுவார்கள்.


பறாஅத் இரவில் ஓதும் துஆ

-----++------++-------+++--------


யார் இந்த துஆவை ஓதுவார்களோ அவர்களுடைய வாழ்வில் அல்லாஹ் விரித்தியை உண்டு பன்னுவான் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் சொன்னார்கள்...


துஆ 


‎اللهم ياذا المن ولا يمن عليك ياذا الجلال والاكرام 

‎ياذا الطول والانعام 

‎لا اله الا انت ظهر اللاجين وجار المستجيرين وامان الخائفين 


‎اللهم ان كنت كتبتني عندك في ام الكتاب في شقيا او محروما او مطرودا او مقترا علي من الرزق فامح 


‎اللهم بفضلك شقاوتي وحرماني وطردي واقتتار رزقي 

‎واثبتني عندك في ام الكتاب 

‎سعيدا مرزوقا موفقا للخيرات 


‎فانك قلت وقولك الحق في كتابك المنزل على لسان نبيك المرسل يمحو الله ما يشاء ويثبت وعنده ام الكتاب 


‎الهي بالتجلي الاعظم في ليلة النصف من شهر شعبان المكرم التي يفرق فيها كل امر حكيم 

‎ويبرم ان تكشف عنا من البلاء والبلواء ما نعلم وما لا نعلم وانت به اعلم انك انت الاعز الاكرم 


‎وصلى الله سيدنا محمد وعلى آله وصحبه وسلم والحمد لله رب العالمين 


என்ற துஆவை ஓத வேண்டும்....


இந்த துஆ பதிவு செய்யப்பட்டுள்ள கிரந்தம் 


முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா 

9/ 539,540 

ஹதீஸ் இலக்கம் 30128 


இமாம் அல் ஹாபிழ் ஜலாலுத்தீனுஸ் ஸுயூதீ ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய 


அத் துர்ருல் மன்தூர் பிஃத் தப்ஸீரில் மஃதூர் 4/661 


அல்லாமா ஆலூசி ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய 


தப்ஸீர் றூஹுல் மஆனி 13/169 


எனவே புனிமிக்க பறாஅத் இரவில் நல்வணக்கங்கள் செய்து அன்று பகல் நோன்பு நோற்று நன்மைகளை பெற்றுக்கொள்வோமாக!!!!


இந்திய தேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று அறியாமையில் கூக்குரலிடும் போலி தவ்ஹீத் என்ற நவீன கவாரிஜிகளின் அறியாமை குற்றச்சாட்டை தகர்த்து தவுடிபொடியாக்கி மக்களை நல் வழிப்படுத்த முயற்சிப்போமாக!!!


இன்னும் மேலதிகமாக ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் பறாஅத் இரவின் சிறப்புகள் அன்று பகல் நோன்பு நோற்பது பற்றிய உண்மை தன்மைகள் எல்லாம் அறிய குறிப்பிட்ட சில கிதாபுகளின் முகப்பை கொடுக்கிறேன்.

PDF ல் தேவையானவர்கள் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளவும்.....


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி 

ஏறாவூர்

0094774447757.


பழைய கட்டுரைகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

கட்டுரைகள்.



1 கருத்து: