பக்கங்கள்

செவ்வாய், 7 ஜனவரி, 2025

முதன் முதலில்.

 


🌷முதன் முதலில் அல்லாஹ் படைத்த பொருள்?

👉எழுதுகோல்.


🌷மனிதனின் தக்தீரை அல்லாஹ் எப்போது எழுதினான்?

👉 வானம், பூமியை படைப்பதற்கு 50,000 வருடத்திற்கு முன்பாகவே எழுதி விட்டான்.


 🌷 இரவு,பகல் இவ்விரண்டில் முதன் முதலில் படைக்கப்பட்டது?  

👉 இரவு.


🌷 அல்லாஹ் முதன் முதலில் எந்த உயிரினத்தை படைத்தான்?

👉 தேனீ.


🌷 கஃபாவை கிப்லாவாக வைத்து தொழுத முதல் தொழகை?

👉 அஸர் தொழுகை.


🌷 கத்னா(சுன்னத்)முதன் முதலில் யாருக்கு செய்யப்பட்டது?

👉 நபி இப்ராஹீம்(அலைஹி)அவர்களுக்கு.


🌷 ஐந்து வேளை தொழுகையில் முதன் முதலில் கடமையாக்கப்பட்ட தொழுகை?

👉 பஜ்ர் தொழுகை.


🌷 உலகில் முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்?

👉 ஹழ்ரத் பிலால்(ரழி)அவர்கள்.


🌷 வாரத்தின் நாட்களில் முதன் முதலில் படைக்கப்பட்ட நாள்?

👉 ஞாயிற்றுக்கிழமை.


🌷 மலைகளில் முதன் முதலில் அல்லாஹ் எந்த மலையை படைத்தான்?

👉 மக்காவிலுள்ள ஜபலே ஹபி குபைஹ் மலை.


🌷 உலகில் முதன் முதலில் படைக்கப்பட்ட மரம்?

👉 பேரீத்தமரம்.      

 

🌷 மஸ்ஜிதுல் அக்ஸாவை முதன் முதலில் கட்டியவர் யார்?

👉 சுலைமான் நபி (அலைஹி)அவர்கள்.


🌷மஸ்ஜிதுல் அக்ஸாவை சுலைமான் நபி அவர்கள் யாரை வைத்து கட்டினார்கள்?

👉ஜின்களை வைத்து கட்டினார்கள்.


🌷முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறப்பு?

👉20/04/570 கி.பி ரபிய்யுல் அவ்வல் பிறை 12.

🌷முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்?

👉 அப்துல்லாஹ், ஆமினா.


🌷முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தை மரணம்?

👉 தன் தாய் வயிற்றில் கருவாக இருக்கும் போது தந்தை அப்துல்லாஹ் மரணம் ( இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).


🌷முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தாய் மரணம்?

👉 தனது 6 வது வயதில் ( இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).


🌷முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு நபி கிடைத்த வருடம் ?

👉தனது 40 வயதில் கி.பி610.


🌷முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு நபி பட்டம் கிடைத்த இடம் ?

👉 ஹிரா குகை.


🌷முஹம்மது நபி ( ஸல்) அவர்களின் தாவத்துடைய உழைப்பு எத்தனை வருடங்கள்?

👉13 வருடங்கள்.


🌷முஹம்மது நபி( ஸல்) அவர்களின் மெஹ்ராஜ் பயணம்?

👉நபி பட்டம் கிடைத்த 12 வது வருடம் கி.பி 622.


🌷முஹம்மது நபி( ஸல்) அவர்கள் மதினாவிற்க்கு ஹிஜ்ரத் செய்த வருடம்?

👉 நபி பட்டம் கிடைத்த 14 வது வருடம்

🌷 முஹம்மது நபி( ஸல்) மதினா வந்தடைந்த நாள்?

👉25/09/கி.பி622 வருடம்.


🌷 மதீனாவாசிகளுக்கு முதன் முதலாக தொழகை வைத்தவர் யார்?

👉 முஸ்அப் பின் உமைர் (ரலி)அவர்கள்.


🌷முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்மணி யார்?

👉👉👉👉👉 அன்னை கதீஜா (ரலி அன்ஹா) அவர்கள்.


🌷🌷 இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்தியாகம் செய்தவர் யார்? 

👉 சுமையா (ரலி)அவர்கள்.


🌷 நபி (ஸல்) அவர்களால் கட்டப்பட்ட இஸ்லாத்தின் முதல் பள்ளிவாசல் எது?

👉 நபி (ஸல்) அவர்கள் மதினாவின் அருகாமையில் குபா என்ற பகுதியில் "குபா பள்ளிவாசலை"கட்டினார்கள்.


🌷 இஸ்லாத்தில் முதன் முதலாக நடந்த போர் எது?

👉 பத்ரு போர் ரமளான் 17 கி.பி 623.


🌷ஹுதைபியா உடன்படிக்கை?

👉ஹிஜ்ரி 6 கி.பி.627


🌷மக்கா வெற்றி?

👉ஹிஜ்ரி 8 கி.பி 629.


🌷 முஹம்மது நபி ( ஸல்) அவர்களுடைய ஹஜ்?

👉ஹிஜ்ரி 10 கி.பி 631


🌷முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கடைசி பயான்?

👉அரபாவில். ஹஜ்ஜத்துல் விலாவில்


🌷முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்த நாள்?

👉ஹிஜ்ரி 11 ரபிய்யுள் அவ்வல் பிறை 12 கி.பி 632 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


🌷முஹம்மது நபி (ஸல்) அவர்களை நீராட்டியவர்கள் மற்றும் கப்ரில் வைத்தவர்கள்?

👉ஹஜ்ரத் அலி, ஹஜ்ரத் அப்பாஸ், ஹஜ்ரத் ஃபலல், ஹஜ்ரத் குஸிஉஸாமா ( ரலியல்லாஹு அன்ஹும்)


🌷முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த நாட்கள் ?

👉63 வருடங்கள் 3 மாதங்கள் 6 மணிநேரம் ( சந்திர கணக்குப்படி)


🌷முஹம்மது நபி (ஸல்) இவ்வுலகில் விட்டு சென்ற பொருட்கள்?

👉சீப்பு 1, சுர்மா கூடு 1, சுர்மா கோல் 1, தொழுகை பாய் 2, படுக்கை பாய் 2, ஊன்றுகோல் 1, ஜிப்பா, போர்வை, கீழ்ஆடை, கேத்தல், செருப்பு 1 ஜோடி.


🌷முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இருந்த நரைத்த முடிகள் எத்தனை?

👉14


*பதியப்படும் பதிவுகளை உங்கள் குடும்பத்தாரிடமும் உங்கள் நண்பர்களிடமும் உங்கள் உறவினரிடம் தெரியப்படுத்துங்கள்.*


*நீங்கள் படித்து விட்டு மற்றவர்களுக்கும் அனுப்புங்கள்*


 *நபி ( ஸல் ) அவர்கள் அவர்களை கூறினார்கள் , ' அல்லாஹ்வின் மீதாணையாக ! ' உங்கள் வாயிலாக ஒரேயொரு ' மனிதருக்கு நேர்வழி கிடைப்பது அரபுகளின் உயரிய செல்வமான | சிகப்பு ஒட்டகங்களை தர்மம் | செய்வதை விட உங்களுக்குச் ' சிறந்ததாகும் " என்றார்கள் . ' ஷஹீஹ் புகாரி 2942*


பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

மக்தப் மாணவர்கள் மேடை நிகழ்ச்சிகள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக