பக்கங்கள்

ஞாயிறு, 14 ஜூலை, 2024

தோசைக்கு சீனி கிடையாது. (காமெடி கதை)

 


அப்பாஸ் ஒரு ஓட்டல் நடத்தி வந்தார்!


அவர் கடையில் தோசைக்கு தொட்டு கொள்ள சீனி கொடுப்பார்கள்!


ஆனால் சீனி விலை ஜாஸ்தி ஆனதாலே கட்டுப்படி ஆகலே.


ஒரு போர்டு எழுதி போட்டார்!

"இன்று முதல் தோசைக்கு சீனி கிடையாது"


நியாஸ் : அந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர்!


சாப்பிடப் போனார். முதலில் ஒரு தோசை வாங்கினார்.


 இரண்டாவது ஒரு தோசை வாங்கினார். சீனி கேட்டார்.


 முதலாளி சொன்னார் "சீனி கிடையாது"!


நியாஸ் சொன்னார் "போர்டை படிங்க "முதல் தோசைக்கு மட்டும் கிடையாது"!


"இது இரண்டாவது தோசை"! 

முதலாளி தன் தலையில் அடித்தக்கொண்டே சீனி கொடுத்தார்!


அடுத்த நாள் போர்டை மாற்றி எழுதினார்

"இனிமேல் தோசைக்கு சீனி கிடையாது"


 நியாஸ் மறுநாள் வந்தார்!


இரண்டு தோசைக்கு ஆர்டர் கொடுத்தார்!


ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு தோசை வந்தது! மேலே உள்ள தோசையை சாப்பிட்டு முடித்தார்!

சீனி கேட்டார்!


முதலாளி " முடியாது போர்ட பாருங்க" !


நியாஸ் : "நீங்க பாருங்க போர்ட.  

இனி" மேல் " தோசைக்கு தானே கிடையாது?

கீழே உள்ள தோசைக்கு கொடுங்கன்னார்.


அப்பாஸ் ஹோட்டலில் தோசைபோடுவதையே நிறுத்திவிட்டார் !!!


யார்கிட்ட..!?


😁😁😁😁😁

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக