பக்கங்கள்

திங்கள், 8 ஜூலை, 2024

என்னைப் பார்த்து ஏன்..? (கதை)

 

ஒரு காட்டில் பறவை ஒன்று தானியங்களை சாப்பிட்டு கொண்டு இருந்தது. 

அந்த வழியே சிங்கம், புலி, சிறுத்தை சென்றன. பின்பு நரி சென்றது. பின்பு மாடு, ஆடு சென்றது. அதன் பிறகு நாய் சென்றது. இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டே பறவை தானியங்களை சாப்பிட்டு கொண்டு இருந்தது.


அப்போது அந்த வழியே மனிதன் ஒருவன் நடந்து வந்தான். பறவை உடனே பறந்து சென்றது.


இது தினமும் நடந்து கொண்டு இருந்தது


ஒரு நாள் மனிதன் பறவையிடம் கேட்டான். அனைத்து மிருகங்கள் செல்லும் போது தானியங்களை சாப்பிட்டு கொண்டு இருக்கிறாய்! என்னை பார்த்தவுடன் ஏன் பறந்து செல்கிறாய் என்று.


அதற்கு பறவை சிங்கம் புலி சிறுத்தை இவைகளின் குணம் கொல்வது- 

நரியின் குணம் ஏமாற்றுவது, 

மாடு ஆடுகளின் குணம் முட்டுவது. 

நாயின் குணம் கடிப்பது.

அவைகள் அவைகளின் குணத்தில் இருந்து மாறாது.


ஆனால்! நீயோ மனிதன். எப்போது எப்படி உன் குணத்தை மாற்றுவாய் என்பது தெரியாது. அதனால் உன்னை பார்த்து பயந்து பறக்கிறேன் என்றது! 

அன்பானகுணம் கொள்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக