பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2024

நான் வாக்கு தவற மாட்டேன். (காமெடி கதை)

 

பெரும் செல்வம் சேர்த்து வைத்தவன்,

ஒரு நாள் தன் மனைவியிடம் சொன்னான்


“நான் இறந்துவிட்டால் என்னுடைய பணம் முழுவதையும் என்னுடன் சேர்த்து புதைக்க வேண்டும் , என்னுடைய இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கு அந்த பணம் தேவை”


“சரி” என்றாள் மனைவி


“நீ எனக்கு சத்தியம் செய்து கொடு “ என்றான் கணவன். அவளும் பைபிள் மேல் வைத்து சத்தியம் செய்தாள்.

இந்த நிகழ்ச்சி நடக்கும் போது மனைவியின் தோழியும்

உடனிருந்தாள்.


திடீரென கணவன் இறந்துவிட அடக்கத்தின் போது ஒரு

சிறிய கவரை சவப்பெட்டியினுள் போட்டாள், பின்பு அடக்கம் முடிந்தது.


தோழி கேட்டாள் “உன் கணவன் சொன்னபடி நீ பணத்தை

போட வில்லையே”


“நான் கடவுள் நம்பிக்கை உள்ளவள், வாக்கு தவற மாட்டேன் நான் தான் சிறிய கவர் ஒன்னு போட்டேனே

பார்க்கலையா” என்று திரும்பி கேட்டாள்.


“உன் கணவன் நிறைய பணம் சேர்த்து வைத்திருந்தானே”


“ஆமாம் எல்லாவற்றையும் என்பேரில் ஒரு பேங்க் அக்கவுண்டில் போட்டு கணவரது பெயரில் செக் எழுதி

அந்த கவரில் வைத்து போட்டேன்“ என்றாள்


😳😳😳

தோழிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக