பக்கங்கள்

வெள்ளி, 28 ஜூன், 2024

ஓட்டை வாளி.

 

ஓட்டை வாளியில் தண்ணீர் நிறப்புவது போல...

💫 நீங்கள் ஹிஜாப் அணிகிறீர்கள் ஆனால் வாசனை திரவியத்துடன் ..

💫 நீங்கள் சுன்னாவைப் பின்பற்றுகிறீர்கள் மற்றும் தாடியுடன் இருக்கிறீர்கள், ஆனால் அன்னிய பெண்ணிடம் உங்கள் பார்வையைத் தாழ்த்தவில்லை.

💫 நீங்கள் ஐவேளை தொழுகிறீர்கள் ஆனால் உங்கள் தொழுகையில் குஷு (அல்லாஹ்வைப்பற்றிய நினைப்பு) இல்லை.

💫 நீங்கள் மக்களிடம் நல்லவர் போல் பேசுகிறீர்கள், ஆனால் உங்கள் குடும்பத்தினருடன் கடுமையாக இருக்குறீர்கள். 

💫 உங்கள் விருந்தாளிகளை நன்றாக நடத்துகிறீர்கள், ஆனால் அவர்கள் வெளியேறிய பிறகு , அவர்களைப் பற்றி புறம் பேசுகிறீர்கள். 

💫 நீங்கள் ஏழைகளுக்கு நிறைய சதகா கொடுக்கிறீர்கள், ஆனால் நீங்கள் அவர்களிடம் அதை சொல்லிக்காட்டி அவமானப்படுத்தி காயப்படுத்துகிறீர்கள். 

💫 நீங்கள் பிறருக்கு பயான் செய்கிறீர்கள், ஆனால் பிறர் தம்மை நல்லவர்(பக்தியுள்ளவர்) என்று நினைப்பதற்காக செய்கிறீர்கள், அல்லாஹ்வைப் பிரியப்படுத்த அல்ல. 


😢உங்கள் நற்செயல்கள் அனைத்தையும் ஓட்டை வாளியில் சேகரிக்காதீர்கள். நீங்கள் அதை நிரப்ப சிரமப்படுகிறீர்கள் , ஆனால் ஓட்டையில் தண்ணீர் சிந்துவது உங்கள் கண்ணிற்கு தெரியவில்லையே 😔...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக