பக்கங்கள்

சனி, 29 ஜூன், 2024

குடிகார கவிஞன்.

 

அபு நவாஸ் என்பவன் அப்பாஸிய பேரரசு காலத்தில் வாழ்ந்து வந்த, ஒரு குடிகார கவிஞனாவான். மதுவுக்கு அடிமைப்பட்டு 

மானக்கேடான கவிதைகளை பாடி வந்ததால் குடிகார கவிஞன் என்று அழைக்கப்பட்டான்.


அவன் பாடியதாக சொல்லப்படும் 

சில கவிதை வரிகளில்...


'பள்ளிவாசல்களுக்கு 

பக்திமான்கள் போகட்டும்...


குடித்து கும்மாளம் அடிப்போம்,

நீ வா! நம்மோடு மதுக்கூடத்துக்கு. 


உனதிறைவன், குடிகாரர்களுக்கு 

கேடு என்று சொல்லவில்லையே...!


அவன் சொன்னது, 

தொழுகையாளர்களுக்கு 

கேடு உண்டு' என்றுதானே...!"


இவனது அநாகரீகமான கவிதைகள் மன்னர் ஹாருன் அல்-ரஷீதின் காதுகளை எட்டிய போது அவனுக்கு மரண தண்டனை அளிக்க முடிவு செய்தார். ஆனாலும் சபையில் இருந்தவர்கள் "குடிகாரர்களின் பேச்சு விடிந்தால் போச்சு" என்ற கதையை மன்னரிடம் எடுத்துக் கூறினார்கள். மன்னரும் அவனை மன்னித்துவிட்டார். 


பின்னர் அவன் கடைசி காலத்தில் மனம் மாறி திருந்தியதாகவும் அவன் மரணித்த போது அவன் சட்டைப்பையில் ஒரு காகிதத் துண்டில் பின்வரும் கவி வரிகள் எழுதப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. 


'இறைவா.! நான் மகா பாவியாக 

இருந்த போதிலும், நீ மன்னிப்பதில் 

மகா வல்லவனாக இருக்கின்றாயே...!


இறைவா.! யோக்கியன் 

மாத்திரம் தான் உன் வாசல் 

நாட வேண்டும் என்றால் அயோக்கியன் எங்கு சென்று, யாரிடம் சொல்லி அழுவான். 


நான் ஏந்தும் கைகளை நீ தட்டிவிட்டால் 

எனக்கு யார்தான் கருணை காட்டுவான்.


றைவா.! நான் சுவனத்துக்கு 

தகுதி பெற்றவவனல்ல...!


நரக பாதாள நெருப்பை தாங்க 

சக்தி பெற்றவனுமல்ல...!


ஆதலால் நீ எனக்கு 

பாவமன்னிப்பை அருள் 

பாலித்து, என் பாவங்களை 

மன்னித்தருள்வாயாக...!


நீ யே பெரும் பாவங்களை 

எல்லாம் மன்னித்தருளும்

மாபெரும் தயாசீலனாவாய்...!


இந்த செய்தி இமாம் சாபிஈ அவர்களின் காதுகளை எட்டிய போது அவராக வந்து தொழுகை நடாத்தினார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


📖 நூல் /

 அல்- பிதாயா வன்னிஹாயா 

✍ தமிழாக்கம் / imran farook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக