பக்கங்கள்

ஞாயிறு, 30 ஜூன், 2024

அரைகுறை கல்வி ஆபத்தானது.(கதை)

 

ஒரு நாள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியாள் ஒருவன், விமான ஓட்டியின்  அறையை (Cockpit) சுத்தம் செய்யும்போது, "விமானம் ஓட்டுவது எப்படி - முதல் தொகுதி" என்ற புத்தகத்தை கண்டான்.


அவன் அந்த புத்தகத்தை பிரித்தான். முதல் பக்கத்தில், "இஞ்சினை ஸ்டார்ட் செய்ய சிகப்பு கலர் 🔴 பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது. அவன் விமானியின் இருக்கையில் அமர்ந்து சிகப்பு கலர் பட்டனை அழுத்தினான், இஞ்சின் ஸ்டார்ட் ஆகி விட்டது !


அவனுக்கு ஒரே குஷியாகி விட்டது.

இரண்டாவது பக்கத்தை புரட்டினான். "விமானத்தை நகர்த்துவதற்கு நீல நிற 🔵 பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது. அவனும் அப்படியே செய்தான். விமானம் நகர ஆரம்பித்து வேகமாக ஓட துவங்கியது.


இப்போது அவனுக்கு பறக்கும் ஆசை வந்தது. மூன்றாவது பக்கத்தை பிரித்தான். "விமானம் உயரே பறப்பதற்கு பச்சை கலர் 🟢 பட்டனை அழுத்தவும்" என்று இருந்தது.

அவனும் பச்சை கலர் பட்டனை அழுத்தினான். விமானம் மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது. அவனும் மிகவும் உற்சாகமாக 20 நிமிடங்கள் வானத்தில் பறந்தான்.


அவன் மிகவும் திருப்தி அடைந்தவனாக விமானத்தை கீழே இறக்க முடிவு செய்து புத்தகத்தின் 4 வது பக்கத்தை பிரித்தான். 

அவ்வளவுதான், அவனுக்கு மயக்கம் வந்து கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன.

காரணம், 4வது பக்கத்தில் எழுதி இருந்தது, "விமானத்தை எப்படி கீழே இறக்குவது என்பதை கற்றுக்கொள்ள இந்த புத்தகத்தின் இரண்டாவது தொகுதியை அருகிலுள்ள புத்தகக்கடையில் வாங்கி படியுங்கள்"!!!!


நீதி:

ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதில் இறங்காதீர்கள்.


அரைகுறை கல்வி ஆபத்தானது மட்டுமல்ல, அபாயகரமானதும் கூட⚠️

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக