பக்கங்கள்

வெள்ளி, 7 ஜூலை, 2023

100 ஸஹாபாக்கள் பெயரும் அவர்களின் சிறப்புக்களும்.

இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்?


விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)


இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தோழர் யார்?


விடை :காலித் பின் வலீத் (ரலி)


 முதலில் இஸ்லாத்தை ஏற்ற பெண்மணி யார்?


விடை: கதீஜா(ரலி)


பிலால்(ரலி)அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டவர் யார்?


அபூ பக்கர் (ரலி)


ஹுதைபிய்யா உடன்படிக்கை சமயத்தில் குறைஷிகளிடமிருந்து வந்தகுதிரைப் படைக்குத் தலைமை வகித்தவர் யார்?


விடை: காலித் பின் வலீத்(ரலி)


இறை வசனங்கள் அருளப்படும்போது அதை எழுத அமைக்கப்பட்டகுழுவில் தலைமை வகித்தவர் யார்?


விடை : ஸைது (ரலி)


அகழ்ப் போரில் அகழ் வெட்டும் யோசனையளித்த நபித் தோழர் யார்?


விடை : ஸல்மானுல் ஃபாரிஸீ (ரலி)


நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தபோது உடன் சென்ற தோழர் யார்?


விடை : அபூபக்ரு(ரலி)


தொழுகைக்கு முதல் முதலாக பாங்கு சொன்ன நபித்தோழர் யார்?


விடை : பிலால்(ரலி)


முஹர்ரம் பத்து அன்று உயிர் நீத்த நபி (ஸல்) அவர்களின் உறவினர்யார்?


விடை : ஹுஸைன்(ரலி)


இஸ்லாத்தை ஏற்பதை மஹராக வழங்க சம்மதித்த நபித்தோழர் யார்?


விடை : அபூதல்ஹா(ரலி)


தனக்கு மிகவும் விருப்பமான தோட்டத்தை தர்மமாக வழங்கியவர் யார்?


விடை : அபூதல்ஹா(ரலி)


நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த முதல்கலீஃபா யார்?

விடை : அபூபக்ரு (ரலி)


 நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்துக்குமுன் மதீனாவுக்கு இஸ்லாத்தைஎத்திவைக்க அனுப்பப்பட்ட நபித்தோழர் யார்?


விடை : முஸ்அப் இப்னு உமைர்(ரலி)


 நபி (ஸல்) காலத்தில், இஸ்லாத்தை முதலில் ஏற்ற சிறுவர் யார்?


விடை : அலீ (ரலி)


 நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த இறுதிவேளையில் தொழவைத்தநபித்தோழர் யார்?


விடை : அபூபக்ரு(ரலி)


உஹதுப் போரில் முஸ்லிம்களையும், முஅத்தாப் போரில் எதிரிகளையும்கதிகலங்கச்செய்தவர் யார்?


விடை : காலித் பின் வலீத் (ரலி)


ஓர் ஆட்டையாவது வலிமாவாக வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள்கூறிய நபித்தோழர் யார்?


விடை : அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி)


இதில் எந்த நபித்தோழரைக் கஃபனிட முழுமையான ஆடைஇருக்கவில்லை?


விடை : முஸ்அப் (ரலி)


நபி (ஸல்) அவர்கள் சுவர்க்கத்தில் யாருடைய காலடியோசையைக்கேட்டார்கள்?


விடை : பிலால் (ரலி)


நபி(ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைப் போதிக்கநபித்தோழர்களோடு ஒன்றுகூடிய இடம் எது?


விடை : தாருல் அர்கம்


எந்தக் கலீஃபாவின் ஆட்சியில் ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது?


விடை: உஸ்மான்(ரலி)


ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வந்த நபி(ஸல்) முதலில் தங்கியிருந்தவீட்டின் அன்சாரி தோழர் பெயர் என்ன?


அபூ அய்யூப்(ரலி)


 நபி(ஸல்) அவர்களின் இறுதி நாட்களில், அவர்களை கைத் தாங்கலாகஅழைத்துச் சென்ற இரு நபித் தோழர்கள் யாவர்?


ஃபழ்ல் இப்னு அப்பாஸ் & அலீ(ரலி)


ஆயிஷா(ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்தஅடிமைப்பெண்ணின் பெயர்?


விடை: பரீரா(ரலி)


அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களின் தாயார் பெயர் என்ன?


விடை : ஸுமைய்யா(ரலி)


 நூறு ஒட்டகங்களுக்காக நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்யநினைத்தவர் யார்?


விடை : ஸுராக்கா(ரலி) 


 நபிப்பள்ளிவாயில் தூணில் கட்டி வைக்கப்பட்டு, பின்னர்இஸ்லாத்தைத் தழுவியவரின் பெயர் என்ன?


விடை : துமாமா(ரலி)


 நபி (ஸல்) காலத்தில், இஸ்லாத்தை முதலில் ஏற்ற சிறுவர் யார்?


விடை : அலீ (ரலி)


மிகச் சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்த இரண்டாவது கலீஃபா அவர்கள்பெயர் என்ன?

விடை : உமர் (ரலி)


வட்டி தடை செய்யப்பட்ட போது நபி (ஸல்) அதைத் தள்ளுபடி செய்துதுவக்கிய அவகளின் உறவினர் பெயர்?


விடை : அப்பாஸ் (ரலி)


முஸைலமாவினால் கைது செய்யப்பட்டு, அவர் அவையில்கொல்லப்பட்ட நபித்தோழர் யார்?


விடை : ஹபீப் (ரலி)


அபூஜஹலின் மகன் பெயர் என்ன?


விடை : இக்ரிமா (ரலி)


 முஸைலமா எனும் பொய்யன் யாரால் கொல்லப் பட்டான்?

விடை : வஹ்ஷி(ரலி)


 தொழுகைக்கும் ஜகாத்துக்கும் இடையில் வேறுபாடுகாண்பவர்களோடு போராடுவேன்"என்றவர் யார்?

விடை : அபூபக்கரு(ரலி)


 இதில் எந்த நபித்தோழரைக் கஃபனிட முழுமையான ஆடைஇருக்கவில்லை?

விடை : முஸ்அப் (ரலி)


 முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்ற ஆண் யார்?

ஹழ்ரத் ஆபூபக்கர் ஸித்தீக் (ரலி)


 முதன்முதலாக இஸ்லாத்தை ஏற்ற அடிமை யார்?

ஹழ்ரத் ஸைத் (ரலி)


 முதன் முதலாக இஸ்லாத்திலே ஷஹுதான பெண் யார்?

ஹழ்ரத் சுமையா (ரலி)


 முதன்முதலாக இஸ்லாத்திற்காக உயிர் துறந்த ஆண் தியாகி யார்?

ஹழ்ரத் அம்மார் பின் யாஸிர்(ரலி)


 600 பேரீத்த மரங்களைக் கொண்ட மிகப்பெரிய தமது தோட்டத்தையேஅல்லாஹ்வுக்கு கடனாக (கர்ளாக) வழங்கியவர் யார்?

அபுத்தஹ்தாஹ் (ரலி).


 பத்ருப் போர்களக் கைதியான தனது தந்தை அல்லாஹ்வின் தூதரைபுண்படுத்திய சுடுசொற்களைக் கேட்டு அவரை ஒரே வெட்டில் சாய்த்தார்ஒரு நபித் தோழர். அந்த வீரத் தோழர் யார்?


அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ் (ரலி).


ஸாஹிபு ஸிர்ரு ரஸூலில்லாஹ் (இறைதூதரின் அரகசியக் காப்பாளர்)எனக்கூறப்படுபவர் யார்?


ஹுதைபத்து இப்னுல் யமான் (ரலி).


ஸைய்யிதுஷ்ஷுஹதா ( தியாகிகள் தலைவர்) எனப் போற்றப்படுபவர்யார்?


ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் (ரலி).


மக்கத்துக் குரைஷியர் கொடுமைப்படுத்தி வாட்டி வதக்கி தண்ணீர் கூடகுடிக்கவிடாது ஒரு பெண்ணைத் தடுத்தனர். அப்போது அல்லாஹ்விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கினான்.அந்த மாண்புக்குரியபெண்மணி யார்?


உம்மு ஷரீக் அல் அஸதிய்யத்துல் அன்ஸாரிய்யா (ரலி). இவரேபெண்களிடையே


மக்கத்துக் குரைஷியர் கொடுமைப்படுத்தி வாட்டி வதக்கி தண்ணீர் கூடகுடிக்கவிடாது ஒரு பெண்ணைத் தடுத்தனர். அப்போது அல்லாஹ்விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கினான்.அந்த மாண்புக்குரியபெண்மணி யார்?


உம்மு ஷரீக் அல் அஸதிய்யத்துல் அன்ஸாரிய்யா (ரலி). இவரேபெண்களிடையே இரகசியமாக இஸலாமியப்பிரச்சாரம் செய்தவர்.


தமது இனிய குரலால் குர்ஆன் ஓதும்போது வானவர்கள்ஒளிவிளக்குகளாகப் பிரகாசித்து காது குளிரக்கேட்டு மகிழ்ந்தனர்.அந்த நபித் தோழர் யார்?

உஸைத் இப்னு குளைர் (ரலி) என்னும் அன்ஸாரித் தோழர்.


 ஹலால்,ஹராம் பற்றிய சட்டங்களை அதிகம் அறிந்த அறிஞர் யார்?

முஆத் இப்னு ஜபல் (ரலி).


வெளிப்டையாகவே மக்கத்துக் குரைஷிகளிடம் தாம் ஹிஜ்ரத்போவதாக உரத்துக் கூறிவிட்டு வெளியேறினார் ஒரு தோழர். அவரைத்தடுத்து நிறுத்த எவருக்கும் திராணி இருக்கவில்லை.அந்த மாபெரும்நபித் தோழர் யார்?


அரபு உலகத்தையே நடுங்க வைத்த மாவீரர் உமர் இப்னுல் கத்தாப் (ரலி)அவர்கள்.


ஸைபுல்லாஹ் (அல்லாஹ்வின் வாள்) என முஃத்தா போரின் போதுஅறிவிக்கப்பட்ட மாபெரும் தளபதி யார்?

காலித் இப்னுல் வலீத் (ரலி).


ஹுதைபிய்யாவில் நபி(ஸல்) அவர்களிடம் இருமுறை பைஅத்(உறுதிப்பிரமாணம் செய்தவர் யார்?

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).


அமீனுல் உம்மத் ( சமுதாயத்தில் நம்பிக்கைக்குரியவர்) எனப் புகழாரம்சூட்டப்பட்ட நபித் தோழர் யார்?

அபூ உபைதத்துல் ஜர்ராஹ் (ரலி).


நீண்ட ஆயுளும், செல்வப் பேறும், மக்கள் பாக்கியமும் அருள ஒருநாயகத்தோழருக்காக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.ஆவ்வாறே அடையவும் செய்தவர் யார்?

அனஸ் இப்னு மாலிக் (ரலி).


 ஒரு நாயகத் தோழரின் சாட்சி இருவர் சாட்சிகளுக்கு சமம் எனபெருமைப்படுத்தப்பட்டவர் யார்?

குஸைமத் இப்னு தாபித் (ரலி).


கைபர் போரின் போது அல்லாஹ்வும் பொருந்திக் கொண்ட ஒருவரிடம்போர்க்கொடி வழங்கப்பட்டது. அந்தத் தளபதி யார்?

அலீ இப்னு அபீ தாலிப் (ரலி)


சுவர்க்கத்தின் எல்லா வாசல் வழியாகவும் செல்பவர் எனபெருமானாரால் நற்செய்தி கூறப்பட்ட நபித் தோழர் யார்?

அபூ பக்ர் இப்னு அபீ குஹாஃபா (ரலி).


குர்ஆனில் பெயர் கூறப்பட்ட ஒரே நபித் தோழர் பெயர் என்ன?

ஸைத் ( இன்னு ஹாரிதா) (ரலி) அல் குர்ஆன்


கஸீலுல் மலாயிக்கத் ( வானவர்களால் குளிப்பாட்டப்பெற்றவர்) எனஅழைக்கப்படுபவர் யார்?

ஹன்ளலா இப்னு அபீ ஆமிர் (ரலி).


உஹதுப்போரில் பெருமானாரது பாதுகாப்பிற்காகப் போராடியநாயத்தோழரின் கைகள் சல்லடையாக்கப்பட்டன. அவர் யார்?


தல்ஹத்து இப்னு உபைதுல்லாஹ் (ரலி)


ரஜ்லுன் ஸாலிஹ்’ (நல்ல மனிதர்) எனப் புகழப்பட்ட நபித் தோழர் யார்?


அப்துல்லாஹ் இப்;னு உமர் (ரலி).


உம்முஹாத்துல் முஃமினீன்’(இறைநம்பிக்கையாளர்களின்அன்னையர்)களில் ஒருவர் ஸவ்வாமா- கவ்வாமா’ (மிக அதிகமாகநோன்பு நோற்பவர், நின்று தொழுபவர்) எனச் சிறப்பிக்கப்பட்டார். அவர்யார்?ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)


யாருடைய மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது ?ஸஃதுஇப்னு மஆத் (ரலி)


அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்களின் கணவர் யார்?அஸ்ஸுபைர்இப்னுல்; அவ்வாம் (ரலி)


கிஸ்ரா மன்னரின் முத்துப் பதித்த காப்புகளை அணியும் பேறுபெற்றவர் யார்?

ஸுராகத் இப்னு மாலிக் (ரலி). ( இவரே நூறு சிவப்பு ஒட்டகங்களைப்பரிசாக்பெறும் ஆசையில் ஹிஜ்ரத்தின் போது நபிகளைத் துரத்திவந்தவர். அவர்களை எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கமாட்டேன் எனவாக்குறுதி அளித்ததற்குப் பரிசாக பாரசீகத்தை வெல்லும் போது அந்தமன்னரின் காப்புகள் பரிசாக அணிவிக்கப்;படும் என முன்னறிவிப்புச்செய்யப்பட்டார். அவை பிறகாலத்தில அந்நாட்டை வென்றபோதுவழங்கப்பட்டன.)


நாயகத்தின் ஹவாரிய்யூன்கள்என்னும் தோழர்களில் ஒருவர் எனந்கூறப்பட்டவர் யார்?அஸ்ஸுபைர் இப்னுல்; அவ்வாம் (ரலி)


பெருமானார் (ஸல்) காலத்தில் இருபதிற்கும் குறைவான இளைஞர்ஒருவர் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டார்? அவர் யார்?உஸாமாஇப்னு ஸைத் ரலி)


உத்மான் இப்னு மள்வூன் (ரலி) யார்?நபி (ஸல்) அவர்களின் பால் குடிசகோதரர். உமர் (ரலி) மாமா மகன், மனைவி ஸைனப் (ரலி) யின்கணவர். முஹாஜிர்களில் மதீனாவில் முதன் முதலாக மரணித்தவர்.


அபஸ வத்தவல்லா அன் ஜாஅஹுல் அஃமாஎன்னும் 80-வதுஅத்தியாயம் யார் விசயமாக அருளப்பட்டது? அந்தகரான அப்துல்லாஹ்இப்னு உம்மி மக்தூம் (ரலி) விசயமாக.


உஹதுப் போர்களத்தில் பெருமானார் (ஸல்) அவர்களை அரணாகக்காத்து நின்றோரில் ஒரு பெண்மணியும் இருந்தார். அவர் யார்?

உம்மு உமாராஎன்னும் நுஸைபா பின்த் கஃபில் மாஸினிய்யா (ரலி)


தாத்துந் நிதாகைன்’ (இரு அரைக்கச்சையுடையவர்) என நபியால்போற்றப்பட்டவர் யார்?

அஸ்மா பினத் அபீ பக்ர் (ரலி)


தன் கணவர் விசயமாக நபிகளாரிடம் முறையிட்ட பெண்மணி யார்?

கவ்லா பின்த் தஃலபா (ரலி) (அல் குர்ஆன் 58:1)


உம்முல் மஸாகீன்’ ( ஏழைகளின் அன்னை) என அழைக்கப்பட்டவர்யார்?

உம்முல் முஃமினீன் ஸைனப் பின்த் ஜஹ்ஷ; (ரலி) ஆவார்.


பெருமானாரின் முஅத்தின் (முதல் முஅத்தின்) யார்?

பிலால் இப்னு ரபாஹ் (ரலி)


நபி(ஸல்) மதீனா சென்றதும் யாருடைய வீட்டில் தங்கினார்கள்?

ஆபூ அய்யூபில் அன்ஸாரி (ரலி) வீட்டில்.


''முஸ்தஜாபுத்தஃவா’ ‘துஆ (பிரார்த்தனைகள்) அங்கீகரிக்கப்படுபவர்என சிறப்பிக்கப்பட்ட நபித் தோழர் யார்?

ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி)


ஹிஜ்ரத்தின் போது வழியில் எந்த பெண்மணியின் இல்லத்தில் பால்அருந்தி களைப்பாறிச் சென்றார்கள்?

உம்மு மஃபத் (ரலி)அவர்கள்,

(‘ஷமாயிலுந்நபி)பெருமானார் தோற்றத்தைப்பற்றி தம் கணவரிடம்மிக அற்புதமாக வர்ணித்துக் கூறியவர். அவர்களின் சொல்லழகு அரபுஇலக்கத்தில் தனி இடம் பெற்றவளங்குகிறது.


பெருமானாரின் எந்த மனைவியர் தம் சமூகத்தரிடம் தனி மதிப்பும்மரியாதையும் பெற்றவர்”? 

உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா பின்த் ஹாரித் (ரலி)


ஜின்னால் கொலை செயயப்பட்ட நபித் தோழர் யார்?


ஸஃது இப்னு உப்பாதா (ரலி)


 எந்த நபித்தோழரைப் பார்த்து வானவர்களும் நாணமுறுவார்கள்?


உத்மான் இப்னு அஃப்பான் (ரலி)


ஸைய்யிதுல் குர்ராஃகாரிகளின் தலைவர் என சிறப்பிக் கப்படுபவர்யார்?


உபை இப்னு கஃபு (ரலி)


யாரிடம் குர்ஆனின் முதல் பிரதி (அல் முஸஹஃபுல் அவ்வல்)ஒப்படைக்கப்பட்டது?


ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)


 யாரிடம் குர்ஆனை ஒன்று திரட்டும் பணியை முதற் கலீஃபா அபூபக்கர்(ரலி) ஒப்படைத்தார்கள்?

ஸைத் இப்னு தாபித் (ரலி) . (இவரே பல மொழிகளைத் தெரிந்துமொழிபெயர்ப்பும் செய்தவர்)


அன்னை ஆயிஷா(ரலி) விசயத்தில் (இஃப்கு )அவதூறாகப் பேசப்பட்டநபித் தொழர் யார்?


ஸஃப்வான் இப்னுல் முஅத்தல் (ரலி). (பின்னர் இவர்கள் நிரபராதிகள்என இறைச்செய்தி வந்து அவதூறு கூறியோருக்கு கசையடிவழங்கப்படது)


துந்நூரைன் ( இரு ஒளிகளைப் பெற்றவர்) எனப் புகழப்பட்டவர் யார்?

உத்மான் இப்னு அஃப்பான் (ரலி). பெருமானாரின் பெண்மக்கள்ருகைய்யா(ரலி), உம்மு குல்தூம்(ரலி) ஆகிய இருவரை (ஒருவர்மரணத்திற்குப்பின் மற்றொருவரை) மணந்தவர்.


 'துந்நூரைன்ஒளிச்சுடரைப் பெற்றவர் என்னும் பேறு பெற்றவர் யார்?

அத்துபைல் இப்னு அம்ர் (ரலி)


 நபி(ஸல்) அவர்களின் அவைக் கவிஞர் யார்?

ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி)


குர்ஆனின் பல கிராஅத் முறைகளை ஒரே கிராஅத் முறையாக ஆக்கியவா யார்?

மூன்றாவது கலீபா உத்மான் இப்னு அஃப்பான் (ரலி)


அதிகமான நபி மொழிகளை அறிவித்தவர் யார்

அபூ ஹுரைரா (ரலி) .


கந்தக் போரில் அகழ் வெட்டுவதற்கு பரிந்துரைத்தவர் யார்?

ஸல்மானுல் பார்ஸி (ரலி)


ஏழுவானத்திற்கு மேலிருந்து குற்றமற்றவர் என இறைவனால் தீர்ப்பு வழங்கப்பட்டவர் யார்?

உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா ஸித்தீகா (ரலி)


இந்த சமுதாயத்தின் அறிவுக்கடல் ஹிப்ருல் உம்மத்எனச் சிறப்பிக்கப்பட்டவர் யார்?

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)


அர்ஷின் மேலிருந்து அல்லாஹ்வால் திருமணம் செய்விக்கப்பட்டவர் என தம் சக்களத்திகளிடம் பெருமைப்படும் பெருமானார் மனைவி யார்?

உம்முல் முஃமினீன் அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)


இறைவனுக்கு ஒரு ஸுஜூது கூட செய்யாமல் ஷஹீதான ஸஹாபி யார்?

அம்ரு இப்னு தாபித் இப்னு கைஸ் (ரலி)


நபி பெருமானாரிடம் பெண்களின் தூதுவராகச் சென்ற நபித் தோழியர் யார்?

அஸ்மா பின்த் யஸீது இப்னு ஸகன் (ரலி)


நஜ்ஜாஷ் மன்னரால் நபி (ஸல்) அவர்களுக்கு திருமணம் செய்வித்த பெண்மணி யார்?

உம்மு ஹபீபா, ரம்லா பின்த் அபீ ஸுஃப்யான் (ரலி)


நாயகத் தோழர்களில் இறுதியாக மரணமடைந்தவர் யார்?

அபுத் துபைல் ஆமிர் இப்னு வாதிலா (ரலி)


ஷஹீதத்துல் பஹ்ர் ( கடற்போரில் மரணமடைந்த) நாயகத் தோழியர் யார்?

உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி).இவர் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் சகோதரியாவார்.


கொடுங்கோலன் ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுபால் மக்காவில் கொலை செய்யப்பட்டு கழுகு மரத்தில் தொங்கவிடப்பட்ட நபித் தோழர் யார்?

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி). இவர் அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்களின் மகன்.


தமது நொண்டிக்காலால் சுவர்க்கம் புகுவார் என நபியால் கூறப்பட்ட நபித் தொழர் யார்?

உஹதுப் பொரில் ஷஹீதான அம்ருப்னுல் ஜமூஹ் (ரலி).


நபி யூஸுஃ ப் (அலை) அவர்களின் சந்ததியில் தோன்றிய நபித் தோழர் யார்?

அறிஞர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி)


மஸீஹுத் தஜ்ஜாலை பார்த்ததாக நபி மொழி கூறும் நபித் தோழர் யார்?

தமீம் இப்னு அவ்ஸ் அத்தாரமீ (ரலி)


வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் எந்த நாயகத் தோழரின் தோற்றத்தில் வருவார்கள்.?

திஹ்யத் இப்னு கலீஃபத்துல் கலபீ( ரலி) அவர்களின் தோற்றத்தில்


அய்யாமுல் ஜாஹிலிய்யா என்னும் அறியாமைக் காலத்தில் குழந்தைகளை உயிரோடு புதைத்தவர் யார்?

ஸஃது இப்னு நாஜியா (ரலி)


எந்த முஷ்ரிக்கும் (இணைவைப்பாளரும்) தன்னைத் தொடக்கூடாது. தானும் தொடமாட்டேன் என நேர்ச்சை செய்த நாயகத் தோழர் யார்?

ஆஸிம் இப்னு தாபித் (ரலி)


தமது சட்டையால் கபனிட்டு நபிகளால் அடக்கம் செய்யப்பட்ட பெண்மணி யார்?

அபூதாலிபின் மனைவி ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி). இவர் அலி (ரலி) அவர்களின் தாயார்.


அபூ பக்ர் (ரலி) அவர்களின் இயற் பெயரென்ன?

அப்துல்லாஹ் இப்னு அபீ குஹாஃபா (ரலி)


பத்ருப் போரில் தமது வாள் உடைந்தபோது நபி (ஸல்) ஒரு பேரீத்தர மரக்குச்சியைக் கொடுத்து நபித் தோழர் ஒருவரிடம் போராடச்சொன்னார்கள். உடனே அது ஒரு வாளாக மாறியது. போராடிய அந்தத் தோழர் யார்?

உக்காஷ் இப்னு முஹ்ஸின் (ரலி)


தபூக் போரில் கலந்து கொள்ளாது பின் தங்கிய மூன்று நாயத் தோழர்கள் யார்?

1.கஃபு இப்னு மாலிக் அஸ்ஸல்மீ அல் அனஸாரீ (ரலி), 2.மிராரத் இப்னு ரபீஃ அல்ஆமிரீ அல்அன்ஸாரீ ரலி), 3.ஹிலால் இப்னு உமய்யத் இப்னு ரபீஆ அல்-அன்ஸாரீ (ரலி). (பின்தங்கியவர்களை அல்லாஹ் மன்னித்துவிட்டதாகக்கூறுகிறான் (அல்குர்ஆன்-9:118)


தொகுத்த நூல்கள்


ரஹிக்

ஸஹாபாக்கள் வரலாறு

கலிபாக்கள் வரலாறு

ஹயாத்துஸ் ஸஹாபா

முஸ்லிம்

திரமிதி

நஸயீ

💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎



மதீனத்துல் முனவ்வரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக