பக்கங்கள்

புதன், 9 நவம்பர், 2022

நாம் யாரோடு பழகுகிறோம்


 

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...

 

அல்லாமா அபுல் லைஸ் அஸ்ஸமர்கந்தீ

ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுவார்கள்:

================================================

 

எட்டு வகையான மனிதர்களோடு பழகுகிற மக்களுக்கு அந்த வகை மனிதர்களிடம் காணப்படும் குணநலன்களை அல்லாஹ் வழங்கிடுவான்.

 

1. செல்வந்தர்களுடன் பணக்காரர்களுடன் நெருங்கி பழகுகின்றவர்களுக்கு உலக ஆசையையும், மோகத்தையும் அல்லாஹ் அதிகப்படுத்தி விடுவான்.

 

2. ஏழைகளுடன் நெருங்கி பழகுகின்றவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதன் மீது திருப்தி படும் அழகிய பண்பாட்டையும், வழங்கிய நலவுகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் நற்பண்பையும் அல்லாஹ் அதிகப்படுத்தி விடுவான்.

 

3. ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளவர்களோடு நெருங்கி பழகுகின்றவர்களுக்கு பெருமையையும், உள்ளத்தில் கடுமைத்தன்மையையும் அல்லாஹ் அதிகப்படுத்தி விடுவான்.

 

4. பெண்களுடன் நெருங்கி பழகுகின்றவர்களுக்கு மனோ இச்சையையும், மடமைத்தனத்தையும் அல்லாஹ் அதிகப்படுத்தி விடுவான்.

 

5. சிறுவர்களுடன் நெருங்கி பழகுகின்றவர்களுக்கு விளையாட்டுத்  தனத்தையும், கேலிக்கூத்தான நடவடிக்கைகளையும் அல்லாஹ் அதிகப்படுத்தி விடுவான்.

 

6. பெரும் பாவிகளோடு நெருங்கி பழகுகின்றவர்களுக்கு பாவம் செய்வதன் மீது துணிவையும், தவ்பாவில் இருந்து தூரத்தையும்,  முந்திக்கொண்டு பாவம் செய்கிற பழக்கத்தையும் அல்லாஹ் அதிகப்படுத்தி விடுவான

 

7. நல்லோர்களுடன் நெருங்கி பழகுகின்றவர்களுக்கு வணக்க வழிபாடுகளின் மீதான ஆர்வத்தை அல்லாஹ் அதிகப்படுத்தி விடுவான்.

 

8. மார்க்க அறிஞர்களுடன் நெருங்கி பழகுகின்றவர்களுக்கு கல்வியறிவையும், பேணுதலையும் அல்லாஹ் அதிகப்படுத்தி விடுவான்.

 

நீங்கள் யாரோடு நெருங்கிப் பழக விரும்புகின்றீர்கள்?

அல்லாஹ் எதை அதிகப்படுத்தி தர வேண்டும் என பிரியப்படுகின்றீர்கள்?

 

என்பதை சிந்தித்து நாம் பழகும் நபர்களை தேர்ந்தெடுத்து நல்லோர்களின் வாழ்வை வாழக்கூடியவர்களாக வல்லோன் அல்லாஹ் நம் அனைவர்களையும் ஆக்கி அருள்புரிவானாக.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக