பக்கங்கள்

ஞாயிறு, 19 ஜூன், 2022

இன்ஷா அல்லாஹ்

 


நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரஸுலிஹில் கரீம்.

அம்மா பஃத் ........

 

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

நாம் வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய வார்த்தை இன்ஷா அல்லாஹ்.

 

ஒருவர் திருமணத்திற்கு அழைப்பு கொடுத்தால் இன்ஷா அல்லாஹ் வருகிறேன் என்று சொல்லுவோம்.

 

யாராவது ஒருவர் நம்மிடம் துஆ செய்யுங்கள் என்று சொன்னால் இன்ஷா அல்லாஹ் துஆ செய்கிறேன் என்றுதான் சொல்லுவோம்.

மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டாலும் இன்ஷா அல்லாஹ் சீக்கிரமே சரியாகி விடும் என்று கூறுகிறோம்.

நம்மிடம் கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் ஒரு வேலையை எப்போது முடியும் என்று கேட்டால் இன்ஷா அல்லாஹ் சீக்கிரமே முடியும் என்றுதான் கூறுகிறோம்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

இன்ஷா அல்லாஹ் என்பதை வெறும்வார்த்தைகளாக நாம் கூறிக்கொண்டு இருக்கிறோம்.

அதன் பின்னால் எவ்வளவு பெரிய அர்த்தம் நிறைந்து இருக்கிறது என்பதை புரியாமல் வார்த்தைக்கு வார்த்தை நாம் இன்ஷா அல்லாஹ் என்று கூறுகிறோம்.

ஆனால் இன்ஷா அல்லாஹ் என்பது வெறும் வார்த்தையல்ல  அதற்குள்தான் அனைத்துமே அடங்கியுள்ளது.

 

சரி இன்ஷா அல்லாஹ் என்றால் என்ன அர்த்தம் ?

 

இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தைக்கு பொருள் (அல்லாஹ் நாடினால்) என்பதாகும்.

 

அதாவது  நாம் இன்ஷா அல்லாஹ் என்று சொல்லும் போது முழுமையாக நமது இயலாமையை வெளிப்படுத்தி,

நாடக்கூடியவன் அல்லாஹ்தான் என்பதை மனதால் கூற வேண்டும். என்னால் எந்த ஒரு காரியமும் நடக்காது என்று மனதில் நினைத்து கூற வேண்டும்.

அதுதான் ஈமானின் அடையாளமாகும்.

வெறுமனே இன்ஷா அல்லாஹ் சொல்வது பெரிய விசயம் கிடையாது.

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

ஒரு நாள் நபினா தாவூத் அலைஹிஸலாம் தன்னுடைய கவச உடையை விற்பதற்காக பஜாருக்கு கிளம்பினார்கள் அவர்களிடம் அவர்களின் மனைவி இன்று கவசம் விற்று வரும் பணத்தை என்னிடம் தாருங்கள்என்று கூறினர்.

சரி தருகிறேன்என்று நபி நபினா தாவூத் அலைஹிஸலாம். என்று கிளம்பினார்கள்.

ஆனால் அன்று கடைத்தெருவுக்கு கவசத்தை எடுத்து சென்றபோது அவற்றை வாங்க யாருமே வரவில்லை.

கணவர் கவசத்தோடு திரும்பி வருவதை கண்ட மனைவிக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவே இல்லை.

பரவாயில்லைங்க இன்னிக்கி விக்காட்டா என்ன. நாளை வித்துரும்என்று மனைவிக்கு ஆறுதல் கூறினர் நபினா தாவூத் அலைஹிஸலாம்.

ஆனா அடுத்த நாளும் விற்கவில்லை. அதற்கடுத்த நாட்களும் அதே நிலைதான்.

இதை கண்ட நபினா தாவூத் அலைஹிஸலாம் அவர்களுக்கு பெரும் ஏமாற்றமும் வியப்பும் ஏற்பட்டது.

அவர்கள் அல்லாஹ்வை நோக்கி, “யா அல்லாஹ்! இதுவென்ன பெரிய சோதனையாக இருக்கிறது. நான் என்ன தவறு செய்தேன்என்று ஏக்கத்தோடு கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ், “நீங்கள் உங்கள் திறைமையை பெரிதாக எண்ணி எனது ஆற்றலை மறந்து இன்ஷா அல்லாஹ்என்று கூறாமல் உங்கள் மனைவியிடம் பதில் சொன்னீர்ங்கள்ள. அதனாலத்தான் அது விற்கவில்லைஎன்று அல்லாஹ் பதில் கூறினான்.

நபினா தாவூத் அலைஹிஸலாம் அவர்கள் அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டார்கள். அல்லாஹ்வும் மன்னித்து பின்னர் அவர்களின் தொழிலில் அபிவிருத்தி செய்தான்.

 

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

இன்ஷா அல்லாஹ் என்று சொல்லும் போது எனக்கென்று சுயமாக எந்த ஆற்றலும் இல்லை.

 

எல்லாம் அவனுக்கே சொந்தமானது.

அவன் நாடினால் தான் பேசமுடியும்,

அவன் நாடினால் தான் கண்களைக்கூட இமைக்கமுடியும்.

அவன் நாடினால் தான் அழுகமுடியும்,

அவன் நாடினால் தான் ஓட முடியும்,

அவன் நாடினால் தான் கொடுக்க முடியும்.

அவன் நாடினால் தான் வாங்க முடியும்.

அவன் நாட்டமில்லாமல் நான் ஒன்றும் இல்லை என்பதை விளங்கி  அவன்தான் அனைத்தையும் நாடக்கூடியவன் என்ற உணர்வை தன்னில் வெளிப்படுத்தி இன்ஷா அல்லாஹ் கூறும் போதுதான் இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தையின் மகத்துவம் நமக்கு புரியவரும்.

 

நாம் இன்ஷா அல்லாஹ் என்று கூறும் போது நமது உள்ளத்தில் அப்தியத் (அதாவது அடிமைத்தனம்) வெளிப்படவேண்டும்.

 

தன்னை முற்றிலுமாக நீக்கி நான் என்பதோ, நான் நாடக்கூடியவன் என்பதே இல்லாமல் அல்லாஹ்தான் நாடக்கூடியவன் அவனை அன்றி வேறு ஒன்றில்லை என்பதை வெளிப்படுத்தவேண்டும்.

எனவே இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்பதை சொல்லும் போது அதன் மெய்நிலையோடு சொல்லி உறுதியான ஈமான் கொண்வர்களாக இவ்வுலகில் வாழக்கூடியவர்களாக நம் அனைவர்களையும் வல்லோன் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக