பக்கங்கள்

திங்கள், 13 ஜூன், 2022

ஸலவாத்தின் சிறப்பு.

 


ஸலவாத்தின் சிறப்பு.

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ரசூலே கரீம்

 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் 

சொல்வது எந்தளவுக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று என்பதை சொல்ல 

நான் இங்கு வந்துள்ளேன்.

 

நமது வாழ்வில் கவலை, கஷ்டம், துன்பம் ஏற்படும் போது 

இவைகளிலிருந்து நிவாரணம் (விடுதலை) பெறுவதற்காக ஸலவாத் 

ஓதுவது சுன்னத் ஆகும்.

 

ஏனெனில் உபைய் இப்னு கஅப் رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள். 

அன்றொருநாள் இரவில் நான்கில் ஒரு பகுதி சென்ற பின்பு நபி (

அவர்கள் (தூக்கத்திலிருந்து) எழுந்து,

 

 மக்களே அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள். நிலநடுக்கங்களும் அதைத் 

தொடர்ந்து வரும் கஷ்டங்களும் வந்தே தீரும்.

 

மரணம் அதிலுள்ள சிரமங்களுடன் வந்தே தீரும்!என்று கூறினார்கள்.

அப்போது உபய் இப்னு கஅப் رضي الله عنه அவர்கள் நபியவர்களிடத்தில்  

கேட்டார்கள்.

 

யா ரசூல்லுல்லாஹ்! இரவில் மூன்றில் ஒரு பகுதியை உங்கள் மீது 

ஸலவாத் ஓத (ஒதுக்க)வா?”  என கேட்டார்கள். நபி () அவர்கள் 

இரவின் பாதிப்பகுதியை! ஒதுக்கு என்று பதிலளித்தார்கள்.

 

உபய் ரலியல்லாஹு திரும்பவும், “இரவில் பாதிப்பகுதியை ஸலவாத் ஓத 

(ஒதுக்க)வா?” என்று கேட்க நபி () அவர்கள்,

 

மூன்றில் இரு பகுதியைஎன்று பதிலளித்தார்கள். திரும்பவும் இரவு 

நேரம் முழுவதையும் ஸலவாத் ஓத (ஒதுக்க)வா?” என்று உபய் 

ரலியல்லாஹூ கேட்க, நபி () அவர்கள் பதிலளித்தார்கள்.

 

 அவ்வாறு நீங்கள் ஓதி வருவது உங்கள் கவலைகளுக்கு விடுதலையாக 

(நிவாரணமாக)வும், பாவத்திற்குப் பரிகாரமாகவும் அமையும்”, என்றார்கள்.

நூல் திர்மிதீ (2457) 549:4,

 

ஜஅபர் ஸாதிக் رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது தந்தையார் 

முஹம்மது பக்கர் رضي الله عنه அவர்களுக்குச் சிரமங்கள் ஏற்படும் 

போதெல்லாம் உளூ செய்து இரண்டு ரக்அத் தொழுவார்கள்.

 

தொழுது முடித்தவுடன் இப்படி துஆவை செய்வார்கள்.

யா அல்லாஹ்! ஒவ்வொரு துன்பத்திலும், சிரமத்திலும் எனக்கு 

ஆதரவாகவும், எனது நம்பிக்கைக்குரியவனாகவும் நீயே இருக்கிறாய்!

 

எனக்கு வந்து சேரும் எல்லாவற்றிலும் எனது நம்பிக்கையாகவும்,

 

எதிர்பார்ப்பாகவும் நீயே இருக்கிறாய்! உள்ளம் பலவீனமாகிற,

 

மதியும் செயல் இழந்துபோகிற, நண்பனும் விலகிப் போகிற,

 

விரோதியும் மகிழ்ச்சி அடைகிற எத்தனையோ சிரமங்களை உன்னிடம் 

முறையிட்டு இருக்கிறேன்..

 

அவைகளை உன்னிடமே இறக்கி வைத்தேன். அவைகளையெல்லாம் நீயே 

அகற்றி மகிழ்ச்சியை அருளினாய்.

 

எல்லா நிஃமத்துகளுக்கும் அதிகாரி நீயே, தேவைகளையெல்லாம் 

வழங்குபவனும் நீயே,

 

(சூரத்துல் கஹ்பில் நீயே கூறியது போல) யதீமான அநாதையான 

குழந்தைகளை அவர்களது பெற்றோர்களின் சீதேவித் தன்மையால் நீ 

பாதுகாத்து அருளினாய்.

 

அதே உனது பாதுகாப்பைக் கொண்டு எங்களையும் பாதுகாப்பாயாக!

 

அநியாயம் புரிந்த மக்களுக்கான சோதனையில் எங்களையும் 

ஆக்கிவிடாதே!

 

யா அல்லாஹ்! உனது வேதத்தில் எந்தத் திருநாமங்களைக் கொண்டு 

உனக்குப் பெயர் சூட்டிக் கொண்டாயோ,

 

உனது அடியார்களுக்கு எந்தத் திருநாமங்களைக் கற்றுக் கொடுத்தாயோ

எவைகளை உனக்காக உனது ஞானத்தில் தேர்ந்தெடுத்துக் கொண்டாயோ,

 

 அந்த ஒவ்வொரு திருநாமத்தின் பொருட்டாலும், உனது இஸ்முல் அஃளம் 

பொருட்டாலும் உனது தூதராகிய நபி () அவர்களின் மீதும்,

 

அவர்களின் கிளையார்கள் மீதும் ஸலவாத் அருள வேண்டுமென்றும்,

 

எங்களது தேவைகளை நிறைவேற்றித் தரவேண்டு மென்றும் உன்னிடம் 

வேண்டுகிறோம்...!! என்று துஆ செய்வார்கள்.

 

அல்லாஹ்வின் நல்லடியார்களே.....

அல்லாஹுத் தஆலா தனது அருள்மறையாம் குர்ஆனில் ஹபீப் நபி 

ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களைப்  பற்றி இவ்வறு புகழ்ந்து கூ

றுகிறான், நபியே! நாம் உங்களை அகிலஉலகத்தார் அனைவர்களுக்கும் "அருட்

கொடையாக" அன்றி அனுப்பவில்லை. (ஸூரா 21, ஆயத்:107). 

 

 எனவே அப்படிப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 

அவர்களின் மீது ்திகமாக ஸலவாத் கூறும் பாக்கியம் பெற்றவர்களில் 

ஒருவராக நம் ்அனைவர்களையும் அல்லாஹ் ஆக்குவானாக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக