பக்கங்கள்

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) க்கு கூறிய உபதேசம்



அபூதரே!..... அல்லாஹ்வை பயந்து வாழ வேண்டுமென்று உமக்கு நான் உபதேசிக்கிறேன். நிச்சயமாக அது தான் எல்லாச் செயல்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது

அபூதரே! .... குர்ஆன் ஓதுவதையும், அல்லாஹ்வை திக்ரு செய்வதையும் கடைப்பிடித்து வருவீராக. அது வானலகில் உம்மைப் பற்றி நினைவு கூறப்படுவதற்கும், பூமியில் உமக்கு ஒளி (நூர்கிடைப்பதற்கும் காரணமாகும்

அபூதரே!....அதிகமான நேரம் மெளனமாக இருப்பீராக. நன்மையானவற்றை தவிர வேறு எதையும் பேச வேண்டாம். இது ஷைத்தானை விரட்டி, தீனுடைய வேலைகள் செய்வதற்கு உதவியாக இருக்கும்

அபூதரே!....அதிகமாக சிரிக்காதீர். இதனால் இதயம் இறந்துவிடும்
முகத்தின் ஒளி போய்விடும்

அபூதரே!.... ஏழைகளிடம் அன்பு கொண்டு அவர்களிடம் அதிகமாக
உட்கார்ந்து இருப்பீராக

அபூதரே!..... உலக விஷயத்தில் உம்மைவிட தாழ்ந்த நிலையிலிருப்பவர்களை கவனிப்பீராக. உம்மைவிட உயர்ந்த நிலையில் உள்ளவர்களை கவனிக்க வேண்டாம். உம்மைவிட உயர்ந்தவர்களை கவனிப்பது அல்லாஹ் உமக்கு அருளியுள்ள பாக்கியங்களின் மதிப்பை இழக்கச் செய்து விடும்

அபூதரே!...... கசப்பாக இருந்தாலும் சரியே, உண்மையைக் கூற பயப்படாதே

அபூதரே!.....அல்லாஹ்வுடைய விஷயத்தில் எவருடைய பழிப்பையும்
பொருட்படுத்தாதீர்

தொகுத்தவர்.
A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ மஸ்ஜித்.
அசநெல்லிக் குப்பம்.
அரக்கோணம்.
9952129706 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக