பக்கங்கள்

வியாழன், 9 ஏப்ரல், 2020

ஷஹீதுகளின் சட்டங்கள்.




முஃப்தி, மெளலவி, முஹம்மது ஃபாருக் காஷிஃபி.

கேள்வி: ஷஹீத் (போரில் வீரமரணம் அடைந்தவர்)களின் சட்டம்
என்ன...?


பதில்: ஷஹீத்களை குளிப்பாட்டாமல் - வெறும் கவசம், போர் வாள்
போன்ற உபரி உடைகளை மட்டும் நீக்கிவிட்டு - அணிந்துள்ள ஆடையுடன் கஃபன் அணிவித்து தொழவைத்து அடக்கம் செய்ய வேண்டும்

(ஷாஃபிஈ: குளிப்பாட்டாமலும், தொழவைக்காமலும் அடக்கம் செய்ய
வேண்டும்.)

கேள்வி: மதக் கலவரங்களின்போது, இறந்த முஸ்லிம்கள் ஷஹீத்களா..?

பதில்: ஆம்! அவர்களையும் மேற்கூறியதன்படி (ஹனஃபீ, ஷாஃபிஈ)
அடக்கம் செய்ய வேண்டும்

கேள்வி: முஸ்லிம்களுக்கும், மாற்றாருக்கும் இடையே போர் நடக்கும் போது வான் தாக்குதலில் மரணித்தவர்களின் சட்டம் என்ன...?

பதில்: அவர்களும் ஷஹீதுகளே அவர்களையும் குளிப்பாட்டாமல் தொழவைத்து அடக்கம் செய்ய வேண்டும்.

(
ஷாஃபிஈ: தொழவைப்பதும் கூடாது.)

கேள்வி: ஒரு மாற்றார் தனிப்பட்ட முறையில் பணம் பொருள் போன்ற விஷயத்திற்காக சண்டையிட்டு அது முற்றிப்போய் முஸ்லிமைக் கொன்றுவிட்டால் அம்முஸ்லிமின் சட்டம் என்ன...?

பதில்: கொல்லப்பட்ட முஸ்லிம் அநீதமாக கொல்லப்பட்டவராக இருப்பின், அதாவது அவரது உரிமைக்காக போராடிய சமயம் கொல்லப்பட்டிருப்பின், அவர் ஷஹீதாவார். அவருக்கு மேற்சொன்ன சட்டங்கள் வரும்

முஸ்லிமின் தரப்பில் அநீதம் இருப்பின், மாற்றார் தனது உரிமைக்காக போராடிய சமயம் இவரைக் கொன்றிருப்பின் இறந்த முஸ்லிம் ஷஹீதாக கருதப்படமாட்டார். எனவே, அவரைக் குளிப்பாட்டி, கஃபனிட்டு, தொழ வைத்து அடக்கம் செய்ய வேண்டும்

கேள்வி: இரு முஸ்லிம்கள் சண்டையிட்டு ஒரு முஸ்லிம்
கொல்லப்பட்டுவிட்டால் கொல்லப்பட்டவரின் சட்டம் என்ன..?

பதில்: கொல்லப்பட்டவர் அநீதமாக கொல்லப்பட்டவராக அதாவது
ன் உரிமைக்காகப் போராடிய சமயம் கொல்லப்பட்டால் அவர் ஷஹீத் ஆவார். மேற்சொன்னது போல் அவரை அடக்கம் செய்ய வேண்டும் மாறாக, அவர் அநியாயக்காரராக இருப்பின், அதாவது அவர் மற்றவரின் உரிமையை பறிக்க நினைத்த சமயத்தில் இவ்வாறு கொல்லப்பட்டால் அவர் ஷஹீதல்லர். அவரைப் பொதுவாக உள்ளது போல் குளிப்பாட்டி கஃபனிட்டு, தொழவைத்து அடக்க வேண்டும்

(ஷாஃபிஈ: இரு முஸ்லிம்கள் மத்தியில் உள்ள இவ்விரு நிலைகளிலும் கொல்லப்பட்டவர் உலகியல் சட்டத்தில் ஷஹீதாக கருதப்படமாட்டார் எனவே, அவரை குளிப்பாட்டி, கஃபனிட்டு, தொழவைத்து அடக்கவேண்டும். அவர் உரிமைக்காக போராடியவராக இருப்பின், மறுமையின் ஷஹீதாக அதாவது மறுமையில் ஷஹிதின் நன்மை கொடுக்கப்படுவார்.)

கேள்வி: ரயில், மோட்டார் வாகனங்களில் இருந்து விழுந்து அல்லது
விபத்து, பிரசவம், காலரா, வயிற்றுப்போக்கு, நீரில் மூழ்குதல் போன்றவற்றில் மரணித்தவரை ஷஹீத் என்கிறார்களே சரியா...?

பதில்: ஆம், அவர்களும் ஷஹீத்கள்தான். ஆனால், உலகியல் சட்டத்தில் இவர்களை ஷஹீத்களாக கருதப்படாது. எனவே, இவர்களைக் குளிப்பாட்டி கஃபனிட்டு, தொழவைத்து அடக்கம் செய்ய வேண்டும். இவர்கள் மறுமையின் ஷ ஹீதுகள். மறுமையில் இவர்களுக்கு ஷஹீதுகளின் நன்மை கொடுக்கப்படும்

விழுகட்டி மற்றும் பிறந்த குழந்தைகளின் சட்டம்

கேள்வி: விழுகட்டி, குழந்தைகளின் ஜனாஸாவின் சட்டம் என்ன

பதில்: 1. முழுதும் வெளிவந்த பின்னர், அல்லது அதிகமான பகுதிகள்
வெளிவந்த பின்னர் உயிர் இருப்பதற்கான அடையாளங்கள் உதாரணமாக வீறிடல், அசைதல் போன்றவை இருப்பின், குளிப்பாட்டி, கஃபனிட்டு தொழவைத்து அடக்கம் செய்ய வேண்டும்

2. அதிகமான பகுதிகள் வெளிவருவதற்கு முன்னரே உயிர் பிரிந்து
பிறந்தால், அதாவது கொஞ்ச பகுதிகள் மட்டும் வெளிவந்த சமயம் உயிர் இருந்து பின்னர் அதிக பகுதிகள் வெளிவரும் முன்னரே இறந்திருப்பின் குளிப்பாட்டி, கஃபனிட்டு அடக்கம் செய்ய வேண்டும். தொழவைக்கக்கூடாது

3. விழுகட்டியாக அதாவது மனித உரு இல்லாமல் சதைத் துண்டாக
இருப்பின், அதன் மீது தண்ணீர் ஊற்றி ஒரு துணியில் சுற்றி அடக்கம் செய்ய வேண்டும். முறையான குளிப்போ, கஃபனோ இல்லை. தொழுகையும் இல்லை

(ஷாபிஃஈ) 1. மனித உருவே இல்லாத வெறும் சதை பிண்டமாக இருந்தால் ஒரு துணியில் சுற்றி அடக்கம் செய்ய வேண்டும்


2. மனித உரு இருந்து உயிர் இருப்பதற்கான அடையாளங்கள்
காரணமாக வீறிடல், அசைவு போன்றவை இல்லாமல் பிறந்தால் குளிப்ட்டி, கஃபன் அணிவித்து அடக்கம் செய்ய வேண்டும். தெழவைக்கக் கூடாது.

மனித உருவுடன் உயிர் இருப்பதற்கான அடையாளங்கள் இருந்து
அது கொஞ்ச பகுதிகள் வெளிவந்த சமயத்தில் மட்டும் இருந்திருப்பினும் பிறந்தால் பெரியவர்களைப் போன்றே குளிப்பாட்டி கஃபனிட்டு தொழவைத்து அடக்கம் செய்ய வேண்டும்

கேள்வி: மய்யித்தை இறந்த ஊரைவிட்டு சொந்த ஊர் அல்லது வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லலாமா..?

பதில்: மரணம் எய்திய ஊரிலேயே மய்யித்தை அடக்கம் செய்ய
வேண்டும். ஒரு கிலோ மீட்டர், அரை கிலோ மீட்டர் எடுத்துச் செல்வது.

(மக்ரூஹின்றி) கூடும். ஆனால், நெடுந்தூரம் எடுத்துச்செல்வது ஆகுமானது அல்ல. மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும்
அஹ்ஸனுல் ஃபதாவா, பாகம் - 4, பக்கம் 218 - 221

(ஷாஃபிஈ: மரணம் ஏற்பட்ட ஊரிலேயே மய்யித்தை அடக்கம் செய்வது அவசியம். மய்யித் பேதகமாகவிடும் அளவு தூரமுள்ள வேறு ஊர்களுக்கு எடுத்துச்செல்வது ஹராம். மய்யித் பேதகமாகாத அளவு தூரமான ஊர்களுக்கு எடுத்துச்செல்வது ஹராமுக்கு நெருக்கமான குற்றமாகும்.)

கேள்வி: மய்யித்தை இறந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு எடுத்துச்
செல்ல வேண்டிய நிர்பந்த நிலையில் மரணம் ஏற்பட்ட ஊர்காரர்களின் கடமை என்ன...?

பதில்: ஊரிலிருந்து மய்யித்தை இறந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு
நிர்பந்தமாக எடுத்துச்செல்லும்போது, அவ்வூர்க்காரர்கள் மய்யித்தைக் குளிப்பாட்டி, கஃபனிட்டு தொழுவைப்பது அவசியம். இக்காரியங்களை செய்யாதவரை இவர்களின் கடமை நிங்காது

கேள்வி: மரணித்த ஊரில் மய்யித்திற்கு தொழுகை நடத்திய பின்
வேறு ஊருக்கு எடுத்துச் செல்லப்படும்போது அவ்வூர்வாசிகள் மீண்டும் ஜனாஸா தொழுகை நடத்தலாமா...?

பதில்: இறந்த ஊரில் நடைபெற்ற தொழுகையில் மய்யித்தின் வலீ கலந்துளாமல் இருந்து, எடுத்துச் செல்லப்பட்ட ஊரில் அவர் கலந்து கொண்டால் ஜனாஸா தொழலாம். இறந்த ஊரில் வலீ ஜனாஸா தொழுகையில் கலந்திருப்பின் எடுத்துச்செல்லப்பட்ட ஊரில் மறுமுறை ஜனாஸா தொழவைப்பது கூடாது

(ஷாஃபிஈ: வலி தொழுதாலும், தொழாமல் இருந்தாலும் எடுத்துச் செல்லப்பட்ட ஊரில் அம்மக்கள் மய்யித்திற்கு ஜனாஸா தொழவைப்பது கூடும். ஆனால், இறந்த ஊரில் தொழுகையில் கலந்துகொண்ட மக்கள் எடுத்துச்செல்லப்பட்ட ஊரில் இரண்டாம் முறை நடைபெறும் தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருப்பது ஏற்றம். எனினும், கலந்துகொண்டால் தொழுகை கூடும்.

கேள்வி: தீதார் - மய்யித்தைப் பார்ப்பதன் சட்டம் என்ன..?

பதில்: நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மய்யித்தைப் பார்ப்பது கூடும் உன்னதமான மனிதர் இறந்திருப்பின் அவரை நெற்றியில் முத்தமிடுவது கூடும். சுன்னத்துமாகும். மய்யித்தைப் பார்ப்பதில் பொதுச்சட்டம் என்னவெனில், உயிருடன் உள்ளபோது, எவர்களைப் பார்ப்பது கூடுமோ அவர்களையே மரணித்தபிறகும் பார்ப்பது கூடும். எனவே, மரணித்த ஆணை அந்நியப் பெண்ணோ மரணித்த பெண்ணை அந்நிய ஆடவரோ பார்ப்பது கூடாது

குளிப்பாட்டி, கஃபனிட்டு, தொழவைப்பதற்குமுன் பார்ப்பது தவறல்ல. ஆனால், தொழவைத்தபின், கப்ரில் வைத்து காட்டுவது, பார்ப்பது தவிர்க்க வேண்டியவையாகும்.

கேள்வி: தற்கொலை செய்துகொண்டவர்களின் ஜனாஸாவின் சட்டம் என்ன..?

பதில்: தற்கொலை செய்துகொண்டவரும் முஸ்லிமே. ஆனால், பாவியாவார். ஒவ்வொரு முஸ்லிமின் மீது (அவர் பாவியாக இருப்பினும்) ஜனாஸா தொழவைப்பது அவசியம். எனவே, தற்கொலை செய்துகொண்டவர்மீதும் ஜனாஸா தொழவைப்பது அவசியம்.


மனாருல் ஹுதா 2008 மே மாத இதழிலிருந்து...



மேலும் விபரங்களுக்கு...
A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக