பக்கங்கள்

சனி, 18 ஏப்ரல், 2020

கல்லும் சொல்லும் கல்வி.



கருங்கல் தனித்தனியே எத்தனை ஆண்டுகள் கிடந்தாலும், அது எந்த விளைவையும் தருவதில்லை கருங்கல் இன்னொரு கருங்கல்லில் உரசினால் தீப்பொறி வெளிப்படும். அத்திப்பொறியால், எத்தனையோ செயல்களைச் செய்யலாம். பயன்களைப் பெறலாம். சமைக்கலாம், வெளிச்சம்பெறலாம், குளிர் காயலாம்


இரண்டு கற்களும் தனித்தனியே எத்தனை ஆண்டுகள் கிடந்தாலும் அதில் தீப்பொறி வராது. அதே போலத்தான் மனித மூளையும் எத்தனை ஆண்டுகள் ஒருவரின் மூளை தனிமையில் இருந்தாலும் அது புதிய பயன் தராது. ஒருமூளையும் இன்னொரு மூளையும் உரசும் போது தான், அதாவதுஒருவர் சிந்தனையும் இன்னொருவர் சிந்தனையும் மோதும்போது தான் புதிய சிந்தனை பிறக்கும்

வாதமும் எதிர்வாதமும் இல்லையன்றால், புனர்வாசம் (புதிய சிந்தனை) வராது. எந்தவொன்றும் மற்றொன்றோடு சேராமல் தனித்து நின்றால், எங்கும் எதிலும்வளர்ச்சியும் இருக்காது. புதுமையும் பிறக்காது.

காடுகளிலும், மலைகளிலும் தனித்து வாழுகின்ற ஆதிவாசிகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அப்படியேதான் இருக்கின்றார்கள். ஆனால், கலந்து வாழும், கருத்துக்கள் மோத வாழும் மக்கள் அறிவால், ஆற்றலால், நாகரிகத்தால் சிந்தனையால், செயலால், வசதியால் வளர்ந்து கொண்டேசெல்கின்றனர்

உரசலும், மோதலும், இணைதலும், சேர்தலும், உலக வளர்ச்சிக்கும், புதுமைக்கும் அவசியம். ஆனால், அது ஆக்கத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். அழிவிற்கல்ல தீப்பொறி இரண்டிற்கும் பயன்படும். பயன்படுத்துகின்ற வரைப் பொறுத்தது.


மதிப்பிற்குரிய மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய சுற்றியுள்ளவை கற்றுத் தருபவை புத்தகத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு இச்செய்தியை பயன்படுத்திக் கொள்ளவும்.


மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக