பக்கங்கள்

புதன், 22 ஏப்ரல், 2020

வலிமார்கள்_வாழ்வினிலே


சிரியாவின் திமஷ்க் (டமாஸ்கஸ்) நகரில் ஸூல்தானக பதவி வகித்த  பெருந்தகை ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அண்ணவர்களை  கனவில் கண்டார்கள் அந்தக் கனவிலே இரண்டு கண்களை காண்பித்த கண்மணி நாயகம்  இந்த கண்களை விட்டு எம்மை பாதுகாப்பீராக என்று சொன்னார்கள்.


இதை கனவில் பார்த்த பெருந்தகைக்கோ கண்மணி நாயகம் ஈருல ரட்சகர் அவர்களை நாம் எப்படி பாதுகாக்க முடியும் என்று எண்ணி அமைதி காத்து விட்டார்கள் .

தொடர்ந்து இந்த கனவு மூன்று நாட்கள் வந்தது மூன்றாவது நாள் உங்களுடைய மந்திரியும் இதுபோன்று கனவு கண்டதாக  சொல்வார்கள் என்று கண்மணி நாய்கம் கூறி மறைந்த போது.. அடுத்தநாள் அந்த பெருந்தகையின்  மந்திரியும் தான் இதுபோல் ஒரு கனவை பார்த்ததாக சொன்னார்கள். 

அந்த கனவானது மேற்சொன்ன கண்மணி நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கனவிலே தோன்றி இரண்டு கண்களை காண்பித்து இந்த கண்களை விட்டு என்னை பாதுகாருங் என்று சொல்லியதாக சொல்ல..

இதன்பின் அந்தப் பெருந்தகை உடனே மதீனத்து மாநகர் சென்றார் சென்று இந்த மதினாவில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள் அனைவருடைய கண்களையும் நாம் எப்படி பார்ப்பது என்று யோசித்த அந்த பெருந்தகை 

ஒரு அறிவிப்பு செய்தார்கள் இன்று உணவு வழங்கப்படும் உணவை நம்முடைய அரசர் தம்முடைய கரங்களால் மக்களுக்கு வழங்குவார் ஆகவே மதினாவில் வாழக்கூடிய மக்கள் அனைவரும் இங்கு வாருங்கள் என்று அழைப்பு கொடுக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் பெரிய அளவில் உணவு தயார் செய்யப்பட்டு அந்த உணவுப் பொருளை அந்த பெருந்தகையே தங்களுடைய கரங்களால் மக்களுக்கு வழங்கினார் என்றாலும் 

இறுதிவரை அந்த கண்களுக்கு சொந்தக்காரர்கள் யாரும் வரவில்லை

இதை அறிந்த அந்த பெருந்தகை கேட்டார்கள் இங்கு உணவு வாங்குவதற்கு யாரேனும் மதினாவில் இருந்து வரவில்லையா என்று கேட்கப்பட்டபோது 

ஆம் இரண்டு நபர்கள் வரவில்லை என்று மக்கள் பதிலளித்தார்

ஏன் அவர்கள் வரவில்லை என்று அவர்கள் கேட்டபோது அவர்கள் மிகப்பெரிய வணக்கசாலிகள் எப்பொழுதும் இறைவணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்களே தவிர மக்களுக்கு எந்த நேரத்தில் எது கேட்டாலும் உடனே ஓடோடி வந்து உதவி செய்வார்கள் மக்களுக்கு அள்ளி தானதர்மங்கள் செய்ய கூடியவர்கள் என்று மக்கள் பதிலளித்தார் .

அப்பொழுது  பெருந்தகை அப்படியா அப்படி என்றால் நாம் அவரை பார்க்க வேண்டுமே என்று சொன்னார்.

வாருங்கள் என்று மக்கள் அந்த பெருந்தகையை அழைத்து அந்த இருவரின் இருப்பிடத்திற்கு அழைத்து சென்றார்கள் 

அங்கு அவர்கள் மிகவும் எளிமையாக ஒரு குடிலிலே வாழ்ந்து கொண்டிருந்தார்கள் 

அந்த இரண்டு நபர்கள் அழைக்கப்பட்ட பொழுது பெருந்தகை அவர்கள் அதில் தலைவராக இருக்கக் கூடிய அவருடைய கண்களை பார்த்தார்கள் 

அந்த கண்கள் கண்மணி நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு ஸல்லம் அண்ணவர் கனவில் காட்டிய கண்கள் 

இவர்தான் அந்த நபர் என்று முடிவுசெய்த பெருந்தகை தங்களிடம் வந்த காவலர்களிடம் சொன்னார்கள் உள்ளே சென்று ஏதேனும் இருக்கிறதா என்று பாருங்கள் என்று 

உள்ளே சென்று விட்டு வந்த காவலர்கள் சொன்னார்கள் அவர்களுடைய குடிழிலே ஒன்றுமே இல்லை என்றும் 

ஒரே ஒரு முசல்லா மட்டுமே இருக்கிறது தொழுகைக்காக வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது 

உடனே அந்த பெருந்தகையே குடிலுக்குச் சென்று உள்ளே பார்த்தபோது அங்கு எதுவுமே இல்லை 

ஒரே ஒரு தொழுகை விரிப்பு மட்டுமே விரிக்கப்பட்டடு இருந்தது அந்த முசல்லாவை எடுத்து பார்த்தபோதுதான் அதன் அடியிலே ஒரு சிறிய வழி ஒன்று இருந்தது அந்த  வழியாக இறங்கி சென்ற போது

அந்த வழியின்னுடைய முடிவு கண்மணி நாயகத்தின் உடைய பரக்கத்தான புனித உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ரவ்லா ஷரீப் எல்லை வரை சென்றது 

அதன்பின் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர் பெருந்தகை ஏன் இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள் 

அப்பொழுது அவர்கள் பதில் சொன்னார்கள் கண்மணி நாயகத்தின் உடைய ஒரு அருள் மொழி உண்டு அது அனைவருக்கும் பொருந்தக்கூடிய மொழி இறைவன் சொல்கிறான் நபிமார்களுடைய உடலை மண் தின்னாது என்று 

அந்த அடிப்படையில் இங்கு அடக்கமாக இருக்கக்கூடிய நபிகள் உடைய உடலை எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்துவிட்டு பின்பு முஸ்லிம்களிடம் நாங்கள் சவால் விடுவோம் 

உங்கள் நபி உண்மையாளர் என்றால் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அவருடைய உடல் இருக்குமே அப்படி அந்த உடல் அங்கு இருந்தால் அவரை நபி என்று ஏற்றுக் கொண்டு ஈமான் கொள்வோம்.

இல்லை என்றால்அவர் நபி இல்லை என்று உங்களுக்கு புரிய வைப்போம் அந்த அடிப்படையில் அங்கு தோண்டிப் பார்த்தால் பெருமானுடைய உடன் இருக்காது அதன் மூலம் மக்களை நாங்கள் வழிகெடுக்க நினைத்தோம் என்று குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள் 

அதன்பின் அந்த பெருந்தகை அந்த இருவருக்கும் மரண தண்டனையை உடனே நிறைவேற்றினார்கள்.

பின்னர் தான் ரவுழா ஷரீஃபைச் சுற்றி பெரிய அகழி வெட்டி அதில் ஈயம் பித்தளை இரும்பு உள்ளிவற்றை காய்ச்சி வேலி அமைக்கப்பட்டது.

இதை செய்த அந்த பெருந்தகை தான்

#ஈருலக_சர்தார்_ஸல்லல்லாஹூ_அலைஹிவஸல்லம்_புனித_ரவ்ழா_ஷரீஃபைப்_பாதுகாக்க_இரும்பு_வேலி_அமைத்த

#ஸூல்தான்_நூருத்தீன்_Zங்கி_ரஹ்மத்துல்லாஹி_அலைஹி_



மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக