பக்கங்கள்

வியாழன், 16 ஜனவரி, 2020

பாடம். 3



ஜனாஸா தொழுகை பற்றிய விபரம். (ஷாபிஈ).

ஜனாஸா தொழுகை என்றால் மனிதன் இறந்து பின்பு அவனை குளிப்பாட்டி கபன் செய்த பின் அவனது மறுஉலக வாழ்கைகாக துஆ செய்யப்படும் ஒரு வணக்கமாகும்.

இத்தொழுகை நான்கு தக்பீர்களை கொண்டது. ஒவ்வொரு தக்பீரையும் காதுவரை கைகளை உயர்த்திக் கட்ட வேண்டும்.

ஜனாஸா தொழுகையின் நிய்யத்.

اُصَلِّى الفَرْضَ عَلَى هَذَا الْمَيِّتِ اَرْبَعَ تَكْبِيْرَاتٍ لِلَّهِ تَعَالَى اَلله اَكْبَرْ
உஸல்லி பர்ள அலா ஹாதல் மய்யித்தி அர்பஅ தக்பீராத்தின் லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்.


முதல் தக்பீருக்கு பின்

அவூது பில்லாஹ்வுடன் பிஸ்மில்லாஹ் கூறி அல்ஹம்து சூரா ஓத வேண்டும்.

இரண்டாவது தக்பீருக்கு பின்

اللهم صلى على محمد وعلى ال محمد كما صليت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم وبارك على سيدنا محمد وعلى ال محمد كما باركت على سيدنا ابراهيم انك حميد مجيد

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி செய்யதினா முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம வபாரீக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.

மூன்றாவது தக்பீருக்கு பின்.

اَللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدْنَا وَغَائِبْنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَانَا  اَللَّهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الْاِسْلَامْ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى اِلايْمَانْ

அல்லாஹும் மஃபிர் லி ஹையினா, வமய்யிதினா, வஷாஹிதினா, வகாயிப்னா, வஸகீரினா, வகபீரினா, வதகரினா, வஉன்ஸானா,

அல்லாஹும் மன் அஹ்யய்தஹு மின்னா பஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவப்பைத்தஹு மின்னா பதவப்பஹு அலல் ஈமான்.

நான்காவது தக்பீருக்கு பின்.
اَللَّهُمَّ لَا تَحْرِمْنَا اَجْرَهُ  وَلَا تَفْتِنَا بَعْدَهُ وَاغْفِرْلَنَا وَلَهُ
அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா தஃப்திதின்னா பஃதஹு வஃபிர்லனா வலஹு.

பெருநாள் தக்பீர்

اَللهُ اَكْبَرْ  اَللهُ اَكْبَرْ  اَللهُ اَكْبَرْ  لَااَلَهَ اِلَّاالله وَاللهُ اَكْبَرْ اَلله اَكْبَرْ وَلِلَّهِ الْحَمْدُ .
الله اكبر الله اكبر الله اكبر  كبيرا  وَالْحَمْدُ لِلَّهِ كَثِيْرَا   وَسُبْحَانَ اللهِ  وَبِحَمْدِهِ بُكْرَةً وَاصِيْلَا .
لااله الاالله وَلَا نَعْبُدُ اِلَّا اِيَّاهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ.
لااله الاالله وَحْدَهْ وَصَدَقَ وَعْدَهْ وَنَصَرَعَبْدَهْ وَعَزَّ جُنْدَهْ وَهَزَمَ الْاَحْزَابَ وَحْدَهْ .
لااله الاالله والله اكبر الله اكبر  ولله الحمد

அல்லாஹு அக்பர்  அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்.
லாஇலாஹா இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்.
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.
3 தடவை.

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா
வல்ஹம்து லில்லாஹி கஸீரா வஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி புக்ரதவ் வாஸீலா....

லாஇலாஹா இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு முஹ்லிஸீன லஹுத்தீன். வலவ் கரிஹல் காபிரூன்.

லாஇலாஹா இல்லல்லாஹு வஃதா - வஸதக வஃதா -  வநஸர அப்தா  - வஅ அஸ்ஸா ஜுன்தா -  வஹஸமல் அஹ்ஸாப வஃதா.

லாஇலாஹா இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.

ஹஜ்ஜிக்கு செல்லும் போது சொல்லும் தல்பியா.

لَبَّيْكَ اَللَّهُمَّ لَبَّيْكَ  لَبَّيْكَ لَاشَرِيْكَ لَكَ لَبَّيْكَ
اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكْ لَا شَرِيْكَ لَكْ

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்.
லப்பைக லாஷரீக்க லக லப்பைக்.
இன்னல் ஹம்த வந்நிஃமத்த
லக வல்முல்க். லாஷரீக்க லக்.


நோன்பு

நோன்பு யார் மீது கடமை.

முஸ்லிமான பருவ வயதடைந்த உடல் நலமுள்ள ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு வைப்பது கட்டாய கடமையாகும்.

நோன்பு யார் மீது கடமையில்லை.

பருவமடையாத சிறுவர் சிறுமியர், பைத்தியக்காரன், தள்ளாத வயதுடைய முதியவர்கள், சுகமாகாத நோயாளி, மாதவிடாய் ஏற்பட்ட பெண், பயணம் செய்பவர்.

( மாதவிடாய் ஏற்பட்ட பெண், பயணம் செய்பவர் ஆகியோர் விடுபட்ட நோன்பை நோற்க வேண்டும். )

ஏழு வயதான குழந்தையை நோன்பு வைக்குமாறு ஏவ வேண்டும். பத்து வயதான பின் நோன்பு வைக்காவிட்டால் அடிக்க வேண்டும்.

நோன்பின் பர்ளு 2.

நிய்யத் வைப்பது.

நோன்பு இருப்பதை நினைவில் கொண்டு பகல் முழுவதும் உண்ணாமல், பருகாமல் இருப்பது.

நோன்பு வைக்கும் நிய்யத்.

نَوَيْتُ صَوْمَ غَدٍ عَنْ اَدَاءِ فَرْضِ رَمَضَانِ هَدِهِ السَّنَةِ لِلَّهِ تَّعَالَى

நவைத்து ஸவ்மகதின் அன் அதாஇ பர்ளி ரமலானி ஹாதிஹிஸ் ஸனத்தி லில்லாஹித் தஆலா.

இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத் செய்கிறேன். அல்லாஹ்வுக்காக.

நோன்பு திறக்கும் நிய்யத்.

اَلَّلَهُمَّ لَكَ صُمْتُ وَبِكَ اَمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَعَلَى رِزْقِكَ اَفْطَرْتُ فَتَقَبَّلْ مِنِّى

அல்லாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வ(அலை)க்க தவக்கல்த்து வஅலா ரிஸ்கிக்க அப்தர்த்து பதகப்பல் மின்னி.

யாஅல்லாஹ் உனக்காக நோன்பு வைத்தேன். உன் மீதே நம்பிக்கை வைத்தேன். உன்னுடைய உணவைக் கொண்டே நோன்பு திறக்கிறேன். எனது நோன்பை நீ ஏற்றுக் கொள்வாயாக.

நோன்பை முறிக்கும் காரியங்கள்.

1. உண்பது பருகுவது உடலுறவு கொள்வது.

2. வேண்டுமென்றே வாந்தியெடுப்பது.

3. காரல் சளி போன்றவை வாயில் வந்த பின் முழுங்குவது.

4. நோன்பு வைத்துக் கொண்டு நீரில் மூழ்கிக் குளிப்பது.

5. மாதவிடாய் நிபாஸ் ஏற்படுவது.

6. பைத்தியம் பிடிப்பது.

7. மதம் மாறுவது.

8. பகல் முழுவதும் மயக்கம் ஏற்படுவது.

நோன்பின் பலனை கெடுக்கும் காரியங்கள்.

1. பொய் சொல்வது.

2. புறம் பேசுவது.

3. கோள் சொல்வது.

4. இட்டுக் கட்டுவது.

5. பொய்சாட்சி சொல்வது.

6. பிறரை திட்டுவது.

7. வீணான காரியங்களில் ஈடுபடுவது. (உதாரணமாக  டீவி பார்ப்பது, சினிமா பாட்டு பாடுவது.

நோன்பை விடுவதற்கு அனுமதியுள்ளவர்கள்.

மோசமான வியாதியுள்ளவர்கள்.

நீண்ட பயணம் செய்யக்கூடியவர்கள்.

தாகத்தால் பசியால் உயிர் சேதத்தை பயந்தவர்கள்.

இந்த மூன்று நபர்களும் நோன்பை விடுவது கூடும், ஆனால் இவர்கள் ஒவ்வொரு இரவும் நோன்பை நிய்யத் செய்து கொள்ள வேண்டும். இடையில் கஷ்டம் ஏற்பட்டால் நோன்பை திறந்து கொள்ளலாம்.

விடுபட்ட நோன்பை இவர்கள் களா செய்ய வேண்டும். களா செய்ய முடியாது என்றிருந்தால் ஒரு நோன்புக்கு ஒரு முத்து அதாவது முக்கால் கிலோ அரிசி வீதம் பித்யா கொடுக்க வோண்டும்.

கர்பிணியான பெண்கள் நோன்பு வைத்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என பயந்தால், குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண் நோன்பு வைத்தால் பால் சுரக்காது என பயந்தால் நோன்பை விடலாம். ஆனால் இவர்கள் விட்ட நோன்பை களா செய்ய வேண்டும். அத்துடன் ஒரு நோன்புக்கு ஒரு முத்து வீதம் பித்யா கொடுக்க வேண்டும்.

(ஒரு முத்து என்பது நடுத்தரமான ஒருவருடைய இரு கைகள் நிறைய உள்ள தானியத்தை அளந்தால் வரும் எடையைக்குறிக்கும்.)

பித்ரா விபரம்

நோன்புப் பெருநாளைக்காக தயாரா கும் போது ஒவ்வொரு முஸ்லிமும் பித்ரா கொடுத்து தயாராகும் படி இஸ்லாம் கட்டளையிடுகிறது.

பித்ரா கொடுப்பதன் நோக்கம் :-

நோன்பின் போது ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் பெருநாள் தினத்தில் ஏழை எளியவர்கள் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது எனபதுவே இதன் நோக்கமாகும்.


நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகளிலிருந்து தூய்மைப் படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவு கிடைப்பதற்கும் நபி (صلى الله عليه وسلم) அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை (பித்ராவை) கடமையாக்கினார்கள் அறிவிப்பவர் இப்னு உமர் ((ரலி)) நூல்கள் அபூதாவூத், இப்னுமாஜா)

பணக்காரர்கள் மட்டுமல்லாமல் பெருநாளைக்கான செலவுகள் போக எவர்களிடம் (பணம், பொருள்) வசதி இருக்கிறதோ அவர்கள் அனைவரும் இந்த பித்ராவை கொடுத்தாக வேண்டும்.

முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறுவர், அடிமை,அடிமையல்லாதவர் ஆகிய அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீச்சம்பழம், தீட்டிய கோதுமை ஆகியவற்றில் ஒரு ஸாவு|| கொடுப்பதை நபி (صلى الله عليه وسلم) அவர்கள் கடமை யாக்கினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் ((ரலி)) நூல்கள் புகாரி முஸ்லிம்)

குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்காகவும், நோன்பு நோற்றவர்களுக்கும், நோன்பு நோற்க முடியாத நிலையிலுள்ள குழந்தைகள், சிறியவர்கள், முதியவர்களுக்காகவும், குடும்பத் தலைவன் ஒரு ஸாவு வீதம் பித்ரா கொடுக்க வேண்டும்.

எதை கொடுக்க வேண்டும் :-

மக்கள் எதனை பிரதான உணவாக உண்கிறார்களோ அதையே கொடுக்க வேண்டும்.

எந்தளவு கொடுக்க வேண்டும் :-

ஷாபிஃ மத்ஹபின்படி நபர் ஒன்றுக்கு இரண்டு கைகள் நிரம்ப அரிசி அல்லது கோதுமை மூன்று முறை அள்ளிக் கொடுக்க வேண்டும். அல்லது kg. 3.200. கிராம் அரிசி அல்லது கோதுமை கொடுக்க வேண்டும்.

ஹனபி மத்ஹபின்படி நபர் ஒன்றுக்கு kg 2.400 கிராம் அரிசி அல்லது கோதுமை அல்லது அதன் விலையை பணமாக கொடுக்க வேண்டும்.

எப்போது கொடுக்க வேண்டும் :-

பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன் அல்லது பெருநாள் தொழுகைக்கு முன்கொடுத்துவிட வேண்டும். சஹாபாக் கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் முன்ன தாகவே கொடுத்து விடுவார்கள்.|| அறிவிப் பவர் இப்னு உமர் ((ரலி)) நூல் புகாரி)

மக்கள் தொழுகைக்கு புறப்படுவதற்கு முன்பே பெருநாள் தர்மத்தை கொடுத்து விடுமாறு நபி (صلى الله عليه وسلم) அவர்கள் கட்டளையிட்டார்கள்|| அறிவிப்பவர் : இப்னு உமர் ((ரலி)) நூல் புகாரி முஸ்லிம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக